You are on page 1of 3

முன்னோர்கள் அந்நாளிலேயே சங்கமாகக் கூடியிருந்து தமிழை ஆராய்ந்தது

மட்டுமில்லாமல் காலந்தோறும் பல்வகை இலக்கிய வடிவங்களைப் பெற்று வாழ்ந்தது நமது


வரலாறு. கி.மு. 500 முதல் கி.பி.200 வரையுள்ள காலத்தை சங்க காலம் என்றும் கி.பி. 100
முதல் கி.பி. 500 வரையுள்ள காலத்தை சங்க மருவிய காலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி
9 – 14 நூற்றாண்டுவரயானக் காலப்பகுதி சோழர் காலம் என்றும் இவை 400 ஆண்டுகால
ஆட்சி மற்றும் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம், காவியகாலம் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. 6 முதல் கி.பி. 9 (875-890)
வரையுள்ள காலமே பல்லவர் காலம் என அழைக்கப்படுகின்றது.

சங்க காலம் எட்டுத் தொகை நூல்களையும் பத்துப் பாட்டுகளையும் கொண்டது.


அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றன. சங்க
இலக்கியம் இயற்கை இலக்கியமாகும். இதில் அகநானூறு ஒரு பாகம் ஆகும். இதில்
நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என அழைக்கப்படுகிறது.
நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ளவை பல்வேறு
புலவர்கள்ளாள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு
பாடல்களும் 13-31 வரிகள் கொண்டவை. மொத்தம் 200 பாடல்கள் பாலைத் திணையிலும்,
80 பாடல்கள் குறிஞ்சித் திணையிலும், 40 பாடல்கள் முல்லைத் திணையிலும், 40 பாடல்கள்
நெய்தற் திணையிலும், 40 பாடல்கள் மருதத் திணையிலும் உள்ளன.

சங்க மருவிய காலத்தை ‘நீதி நூல் காலம்’ என்றும், ‘இருண்ட காலம்’ என்றும்
ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். இக்காலக் கட்டத்தில் நீதி இலக்கியங்கள் தோன்றின. இந்நீதி
இலக்கியங்கள் பெரும்பான்மையும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும்
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் தோன்றின. அவைகளில் இன்றும்
அனைவராலும் பேசப்படும் நூல் சிலப்பதிகாரம். இந்நூல் இளங்கோவடிகளால்
பாடப்பட்டவை. இந்நூலில் மூன்று உண்மைகள் உணர்த்தப் பட்டிருக்கின்றன. அவை,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர், அரசியல் பிழைப்பவருக்கு அறமே
குற்றாகும், மற்றும் உழ்வினை உருந்த வந்து ஊட்டும் என்பதாகும். சமன சமயச்
செய்திகளைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

பல்லவர் காலம் ஒரு பக்தி இலக்கிய காலம் ஆகும். தமிழ்நாட்டில் சைவ சமயப்
பெரியவர்களான நாயன்மார்களும், வைணச் சமயப் பெரியவர்கள் ஆழ்வார்களும் தோன்றி,
பக்தி பாடல்கள் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றிய காலமும் இதுவேயாகும்.
அந்தவகையில் திருமந்திரம் பெரும் பங்காற்றுகிறது. திருமந்திரம் என்பது திருமூலர்
எழுதிய நூல். இவர் மூவாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருமந்திரம் என்ற பெயருக்கு
எற்றப்படி மந்திரம்போல் சுருங்கிய சொற்களில் ஆழ்ந்த பொருள் திட்பமாக அமைந்த
பாடல்களும் மறைந்த நுட்பமான பொருள் உடைய பாடல்களும் இவற்றில் உள்ளன.
தத்துவக் கருத்துகள் முதல், யோகநெறி சித்த வைத்தியக் கருத்துகள் வரையில் பலவும்
செறித்த நூல் அது. மூவாயிரம் பாடல்களும் ஒரே வகையான செய்யுளில் ஒரே நடையில்
அமைந்தவை. ஆனால், பக்தி, யோகம், தவம், ஞானம், மருத்துவம் முதலான பலவகைப்
பொருள்களும் அவற்றில் உணர்த்தப்படுகின்றன.

சோழர் காலம் என்பது வரலாற்றில் ஒரு பொற்காலம் மற்றும் காவியகாலம் ஆகும்.


சோழர்கால இலக்கியங்கள் ஏழு வகை உண்டு. அவற்றில் காப்பியத்துறை ஒன்றாகும்.
காப்பியத்துறை மூன்று வகையாகும் அவை மாபெரும்,பெரும் மற்றும் சிறு காப்பியம்.
மாபெரும் காப்பியத்தில் ஒன்ரே கம்பராமாயணம். வடமொழியில் வால்மிகி என்ற புலவரால்
எழுதப்பட்ட இராமாயணத்தை கம்பர் தமிழில் மொழிப் பெயற்றதாலே இக்கப்பியம்
கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. கம்பரால் இக்கம்பராமாயணம் ஒரு வழி
நூலாகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில்
கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய
தமிழ்ச்சொற்ளைக் கம்பர் தனது காப்பியத்தில் கையாண்டுள்ளார். இக்காரணத்தாலே
கம்பரும் கம்பராமாயணமும் தொல்காப்பிய நெறிநின்றவை என்ற சிறப்பைக்
கொண்டவையாகும். கம்பராமாயணம் ஆறு வகையான காண்டங்களையும்,
நூற்றுப்பத்தொன்பது படலங்களையும் உடையது. தமிழிலக்கியதில் கம்பரின் காலத்திலெயே
காப்பிய வளர்ச்சி உச்சிநிலையை அடந்தது என்பர். கம்பராமாயணம்
பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை
ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு
தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது. இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின்
பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ‘தமிழுக்கு கதி’ என்பர்.

இத்தகைய இலக்கிய சுவைகள் கொண்ட நூல்களின் பயன்பாடு இவ் 21-ஆம் நூற்றண்டில்


குறைந்துக் கொண்டே வருகிறது. இக்கால சமுதாயத்திற்க்கு இந்நூல்களின் சிறப்பை
உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு கொண்டு வருவதும் அதை மீண்டும் பயன்பாட்டில்
கொண்டுவருவதும் மிக அவசியமான ஒன்றாகும்.

You might also like