You are on page 1of 5

கவிஞர் வைரமுத்துவின் ஒரு புதுக்கவிதையும் ஒரு மரபுக்கவிதையையும் தேந்தெடுத்து,

அக்கவிதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யாப்பியலையும் அணியியலையும் மதிப்பீடு


செய்து 400 சொற்களில் எழுதுக.

1.0 முன்னுரை

வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த


பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும்
திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி
2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர்.
ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

1.1 உவமையணி

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா

மெல்போன் மலைப்போல் மெல்லிய மகளா

டிஜிட்டிலில் செதுக்கிய குரலா

எலிசபெத் தெய்லர் மகாளா

இப்பாடலில் வழி கவிஞர் வைரமுத்து அவர்கள், பெண்ணுடைய சிரிப்பு டெலிபோன்


மணிப்போல இனிமையாக சிரிப்பவள் போன்றும், அவளுடைய உடல் அமைப்பு, குரல் வளம்,
அதியசமான நங்கை போல பாடலில் உவமைப்படுத்தியுள்ளார்.

1.2 உருவக அணி

“காலையில் தினமும் கண் விழித்தால் நான்


கைதொழும் தேவதை அம்மா”.

“நிறை மாத நிலவே வா வா”

இவ்வரியின் மூலம் அம்மா என்பவர் தேவதையைப் போன்றவர் என்றும் அன்பு என்றாலே அம்மா
என்றும் உருவக அணியைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. மேலும் பார்த்தோமானால்
“நிறை மாத நிலவே வா வா” என்ற இவ்வரியின் மூலம் கர்ப்பாமாணப் பெண்கள் நிறை மாதத்தில்
இருக்கும் நிலவைப் போன்றவர் என்று கூறுகின்றனர். அடுத்ததாக, கர்பப்பிணிகள் மயக்கம்
கொள்ளும் பொழுது வாழைத் தண்டைப் போன்றவர் என்று உருவக அணியின் மூலம் கூறுகிறான்
கவிஞர்.

1.3 தன்மை அணி

 மேகங் கருக்குது
மழை வர பார்க்குது ;
வீசியடிக்கது காற்று
இளங்காற்று

இப்பாடலில் மேகங் கருக்குது மழை வர பாக்குது. அதாவது மேகங்கள் கருத்தால் தான் மழை
வரும் எனும் அதன் தன்மையை அழகாக விளக்கியுள்ளது. அடுத்த வரியாக வீசியடிக்கது
காற்று இளங்காற்று. அதாவது மழை வரும் முன்னே காற்று பலமாக வீசும் என்பதை அழகாக
விளக்கியுள்ளது கவிஞர் வைரமுத்து அவர்கள்.

1.4 சிலேடை அணி

கொடிகொண்ட அரும்பு மலர்வதற்கு

கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை

பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம்

மரங்கள் தந்தியொன்றும் அடிப்பதில்லை

இப்பாடலின் வழி, காதலியின் மனவுணர்வினை சிலேடையாக கூறியுள்ளார் கவிஞர்.


கொடியோடு அரும்பு மலர்வதற்க்கு கொடியிடம் அரும்பு அனுமதி கேட்பத்தில்லை. பழங்கள்
தான் பழுத்துவிட்டதாக பறவைகளுக்கு கூறுவத்தில்லை. ஆகையால் ‘ என் மனதில் கொண்ட
காதலை நான் கூறாமலேயே காதன் நீ புரிந்துக்கொள் ’ என்கிறார் கவிஞர்.

1.5 உயர்வு நவிற்சி அணி


ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..

சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை

அண்ணன் தங்கை பாடலாக பல அண்ணன்களும் தங்கைகளும் பாடி வருகின்றனர்.


இப்பாடலில் தங்கையை அண்ணன் எவ்வாறு உயர்த்தி பாடுகிறார் என்பதே சிறப்பாகும்.
தங்கையை தங்கையாக மட்டும் எண்ணாமல், வெறும் பெண்ணாக மட்டும் எண்ணாமல்
உயிருக்கும் மேலாக சொந்தத்திற்கு மேலாக பெற்றோருக்கு மேலாக உயர்த்து எழுதியுள்ளார்
கவிஞர்.

1.6 தற்குறிப்பேற்ற அணி

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

‘இளைய நிலா பொழிகிறத’ என்ற பாடலின் வழி பாடலாசிரியரான வைரமுத்து“ முகிலினங்கள்


அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ.. முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது
மழையோ ” என்னும் வரிகளில் தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியுள்ளார். மேகங்கள்
முகவரியைத் தொலைத்து விட்டு அலைந்து திரிந்து அழுகின்றதால் வருகின்ற கண்ணீர்தான்
மழையா ? என்று தன் குறிப்பினை இவ்வரிகளில் ஏற்றி தற்குறிப்பேற்ற அணியினை
அசாதரணமாய் கையாண்டு உள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

1.7 முரண் அணி

நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?

வேட்டையாளனை வென்றிடும் மானா

உன்னை நேசித்த காதலன் நானா?


இப்பாடலைக் கேட்கும் போது மிகவும் இனிமையாகவே இருக்கின்றது என்றால் மிகையில்லை.
இப்பாடல் வரிகளில் முரணணியைக் காண முடிகின்றது. தூண்டில் காரனை மீன் தின்றிடுமா?
வேட்டையாளனை மான் வென்றிடுமா? ஆனால், இப்பாடல் வரிகளில் மிகவும் அழகாகவே
இம்முரண் அணி கையாளப்பட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து அவர்கள் எனலாம்.

2.0 யாப்பு ( மரபுக்கவிதை )

யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல்


கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களை
ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள். எனவே இந்த
யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

உயிர் பிழிந்து எழுதுவான்


சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்

- கவிஞர் வைரமுத்து

2.1 ஓரசைச்சீர்

சீர் அசை வாய்பாடு

உயிர் நிரை மலர்

2.2 ஈரசைச்சீர்

சீர் அசைபிரிப்பு அசை வாய்பாடு பெயர்

பிழிந்து பிழிந்/து நிரை+நேர் புளிமா மாச்சீர்

எழுதுவான் எழு/துவான் நிரை+நிரை கருவிளம் விளச்சீர்


மொழிக்கு மொழிக்/கு நிரை+நேர் புளிமா மாச்சீர்

2.3 மீவசைச்சீர்

சீர் அசைபிரிப்பு அசை வாய்பாடு பெயர்

சுடர்விட்ட சுடர்/விட்/ட நிரை+நேர்+நேர் புளிமாங்காய் காய்ச்சீர்

சொல்லெடுத்து சொல்/லெடுத்/து நேர்+நிரை+நேர் கூவிளங்காய் காய்ச்சீர்

ஒளியூட்டுவான் ஒளி/யூட்/டுவான் நிரை+நேர்+நி புளிமாங்கனி கனிச்சீர்


ரை

You might also like