You are on page 1of 5

தமிழ்ச்சினிமாப் பாடல்களின் அணியிலக்கணம் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தை ஊகித்தறிந்து

ஒவ்வொரு வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கொடுத்து விவரித்து 400 சொற்களில் எழுதுக.

1.0 முன்னுரை

“ ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… ” எனும் பாடல் வரியை
இசையின்றி வாசிக்கும் பொழுதே தானாக நம் சிந்தைனையில் அப்பாடலின் இசை காற்றைப்போல வீசி
நம்மை சிலிர்க்க வைக்கிறது அல்லவா ? ஆம் , இது தான் தமிழ்ச்சினிமாப் பாடல்களின் தனிச் சிறப்பாகும். “
ஒரு பாடலில் அணியைப் பார்ப்பது முக்கியமா? ” என்ற கேள்வி நிச்சியம் அனைவரின் எண்ணதிலும்
எழும். ஒரு பாடலில் அணியைப் பார்ப்பதன் மூலம் அப்பாடலை நாம் எந்த அளவிற்கு இரசித்து
இருக்கிறோம் என்று அறியலாம். இவ்வேறுபாட்டிற்கு காரணம் அணிகளே. உவமை அணி, உருவக
அணி சிலேடை, தற்குறிப்பெற்ற அணி, உயர்வு நவிற்சி அணி மற்றும் தன்மை அணி ஆகிவையையே
ஒரு பாடலுக்கு மேலும் அழகைச் சேர்க்கிறது.

1.1 உவமையணி

உவமையணி என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளும், பல பொருளோடு ஒரு பொருளும், ஒரு
பொருளோடு பல பொருளும் மற்றும் பல பொருளோடு ஒரு பொருளும் உவமை காட்டிச் சொல்லவது
உவமையணி.
வாசம் பூ மேடை போடுதம்மா

பெண்போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா ஆனந்தம்...

“ முள்ளும் மலரும் ” எனும் படத்தில் இடம் பெற்றுள்ள “செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது
மோதுதம்மா” , என்ற பாடலிம் வழி பாடலாசிரியரான கண்ணதாசன் “ பெண்போல ஜாடை பேசுதம்மா ”
என்னும் வரியில் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். பெண் குணத்தை ஜாடை பேசுவதாக அமைவதை
உவமையாக கூறியுள்ளார். அதாவது இப்பாடல் வரி விளக்குவது என்னவெனில் பூவாசம் மேடை போட்டி
அவை பெண்கள் போன்று ஜாடை பேசிகிறது என்பதுதான். பெண்களின் இயல்பான குணத்தைப் “போல”
என்னும் உவமை அனியின் மூலம் பூவைப் பெண்ணிற்கு உவமை செய்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

1.2 உருவக அணி.


உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு
தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற
இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும்.

பாடி பறந்த கிளி

பாதை மறந்ததடி பூ மானே

கிழக்கு வாசல் எனும் திரைப்படட்டில் வெளிவந்த பாடல் . இப்பாடல் வரிகளில் ஆசிரியர் உருவக
அணியைக் கையாண்டுள்ளார். கிளியை பெண்ணுக்கு உவமைப்படுத்தியிருந்தாலும் அதனை உவமையாக
கூறாமல் கிளி என்று உருதியாக எழுதியிருப்பது உருவக அணியை குறிக்கிறது. கிளியை சொல்வது போல்
ஒரு பெண்ணை கவிஞர் கூறுகிறார்

1.3 தன்மை அணி

தன்மை அணி என்பது தன்மை என்பது இயல்பு. ஒரு பொருளின் இயல்பை ‘ உள்ளது உள்ளப்படி’
‘நேரில் பார்த்தாற் போல’ விளங்குமாறு சொல்வது தன்மை அணியாகும். ‘அவ்வகைப்பட்ட
பொருளையும், அதன் உண்மைத் தன்மையை விளக்கும் சொற்களால் கூறுவது தன்மை அணி’ என்பது
இலக்கணம்.

மஞ்கள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருடுதே

பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே !

‘வேட்டை விளையாடு’ எனும் படத்தில் இடம் பெற்றுள்ள “வெள்ளி நிலவே வெள்ளி வெள்ளி
நிலவே,” என்ற பாடலின் வழி பாடலாசிரியரான தாமரை மஞ்கள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல
இருடுதே ..பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ! என்னும் வரிகளில் உவமை அணியைப்
பயன்படுத்தியுள்ளார். இப்பாடல் வரியானது மஞ்கள் நிறமுடைய வெயில் மாலை நேரம் ஆக ஆக
இருட்டுவதாகக் குறிப்பிட்டு உள்ளதை உள்ளவாறு கூறுவதால் இது தன்மை அணியாகும். அத்துடன்,
மாலையில் வேளையில் மெல்ல மெல்ல வெளிச்சம் குறைந்து இருள் சூழ தொடங்கும் என்று உயர்த்திக்
காட்டக்கூடிய அதிக வர்ணனைகள் இன்றி உள்ளதை உள்ளவாறு கூறுவதால் இவ்வரியிலும் தன்மை
அணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
1.4 சிலேடை அணி

ஒரு வகையாக நின்ற சொற்றொடர் பல வகையான பொருள்களின் தன்மை தெரிய வருவது சிலேடை
என்னும் அணி ஆகும்.

வெண்ணிலா வெளியே வருவாயா

இருளிலே வெளிச்சம் தருவாய ?

”வெண்ணிலா வெளியே வாருவாயா ,” என்ற பாடலின் வழி பாடலாசிரியரான கவிப்பேரரசு


வைரமுத்து “வெண்ணிலா வெளியே வருவாயா..இருளிலே வெளிச்சம் தருவாய ? ” என்னும் வரிகளில்
சிலேடை அணியைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர். இப்பாடலில் வரும் வெண்ணிலா என்ற சொல்
வானில் உலா வரும் நிலவையும் மற்றும் வெண்ணிலா என்ற பெயருடைய பெண்ணையுமே குறிக்கிறது.
இரு பொருளை அழக்கக சித்தரிக்கும் சொல்லைக் கொண்டிருப்பதால் இப்பாடல் வரியும் சிலேடை
அணியைச் சாரும் .

1.4 உயர்வு நவிற்சி அணி

உயர்வு நவிற்சி அணி ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்தி, அளவுக்கு மேல் மிகுத்துக் கூறுவது. அதாவது
இரசனையுடன் உயர்த்திக் கூறுவது.

வானவில் உரசியே பறந்ததும்

இந்த காக்கையும் மயில் என மாறியதே !

“ போய்ஸ் ” எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற “ எகிறி குதித்தேன் வானம் இடித்தது ” என்ற பாடலில் ”
வானவில் உரசியே பறந்ததும்ன் இந்த காக்கையும் மயில் என மாறியதே ” எனும் பாடலில் உயர்வு நவிற்சி
அணி பயன்படுத்தப்பட்டுள்ளது. கருமை நிறத்தோடு இருக்கும் காகம் வானவிலுடன் உரசியதும் மயிலாக
மாரது. ஆயினும் , தன் கர்ப்பனையால் காதலால் ஒருவன் தன்னை அழகாக பார்ப்பான் என்பதை உயர்வு
நவிற்சி அணியின் மூலம் அருமையாக வர்ணித்துக் கூறியுள்ளார் பாடலாசிரியர்.

1.5 தற்குறிப்பேற்ற அணி


தற்குறிப்பேற்ற அணி. தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன்
குறிப்பை ஏற்றுவதாகும். ஆக இயல்பாக நிகழும் ஒரு பொருளின் செயலுக்கு ஒரு காரணத்தைக் கூறுவது
தற்குறிப்பேற்ற அணியாகும்.இன்று வரை திரை இசைப்பாடல்களில் தற்குறிப்பேற்ற அணி இருந்து தான்
வருகிறது.

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்

ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவை கேட்டேன்

முதலாவதாக, சத்தம் இல்லாத தனைமையைக் கேட்டதாக்கவும், சண்டைகள் இல்லாத உலகம்


கேட்டதாகவும் உடலில் என்று வேகமும் ரகசியங்கள் இல்லாத நண்பர்களையும் துன்பம் கொடுக்காத
உறவுகளையும் வேதனை செய்யாத வார்த்தைகளையும் சரியான வாழ்க்கை முறையையும் தாங்கள்
சொல்லாத பாசத்தையும் கேட்டதாக கவிஞர் எழுதியுள்ளார். இப்பாடலில் அனைத்து வரிகளுமே
கவிஞர் கேட்பதை போலவே அமைந்திருக்கும். எனவே, தன் குறுப்பினை இவ்வர்களில் ஏற்றி
தற்குறிப்பேற்ற அணியினை அசாதரணமாய் கையாண்டுள்ளார் கவிப்பேரரசு.

1.6 முரண் அணி

ஒன்றுக்கு ஒன்று மாறுபடக் கூறுவது முரண் அணி ஆகும். அதாவது நன்மை, தீமை என்பன போல்
முரணான சொற்களை ஒரு செய்யுளில் அமைப்பது முரண் அணி ஆகும்.

காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்

அது எப்போதுமே போதையான நிலவரம்..


ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் என்ற சொற்களும் காதலைக் கண்ணாமூச்சிக்கு ஒப்பிடுவதையும்
நாம் காணலாம். இதில் கண்ணாமூச்சி காதலுக்கு உவமானமாக அமைவதைக் காணலாம். அன்றைய
திரையிசை பாடல்களில் காதலை எதற்கெல்லாமோ ஒப்பிட்டு இருந்தனர். ஆனால், இன்றைய
திரையிசை பாடல்களில் எதற்கு ஒப்பிட்டு எழுதியுள்ளனர் என்று பார்க்க இயலுகின்றது.

1.7 சிலேடை அணி

ஒரு வகையாக வரும் தொடர் அல்லது சொல் பலபொருள் தருமாறு அமைவது சிலேடை என்னும்
அணியாகும். பெரும்பாலும் ஒரு தொடருக்கு இரண்டு பொருள் வரும். அரிதாக ஒரு தொடருக்கு
இரண்டுக்கு மேற்பட்ட பொருள் வருவதும் உண்டு.

போறாலே பொண்ணுத்தாய்

போகிற போக்கில் மனசை விட்டு

இப்பாடலிலோ பொண்ணுத்தாய் என்ற சொல் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.


பொண்ணுத்தாய்... பொன்னைக் கொண்டுச் செல்லும் தாய் (பெண்) என்பதைக் காணலாம்.

You might also like