You are on page 1of 1

இலக்கியம் பற்றிய அறிஞர்களின் கூற்று :

1. தேவநேயப் பாவாணர் - "இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம். இலக்கு-குறி;குறிக்கோள்.


சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது,இலக்கியம்.சிறந்த மொழிக்
குறிக்கோளான அமைப்பை எடுத்துக் கூறுவது இலக்கணம். இலக்கணத்திற்கு அணங்கம் என்றும்
இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு.

2. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் - இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக்


கொண்டது.மனிதனின் சிந்தனைக்கும்,உணர்வுக்கும்,கற்பனைக்கும் விருந்தாக அமைவது;மனிதனின்
மொழியோடு தொடர்புடையது;சொற்கோலமாக விளங்குவது;குறிப்பிட்ட ஒரு
வடிவினை;செய்யுளாலோ,உரைநடையாலோ உடையது;கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும்
இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது;இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும்
ஆற்றலை உடையது என்று எடுத்துரைப்பார்.

3. பிளேட்டோ - தெய்வீக அகத்தூண்டுதலால் இலக்கியம் உருவாக்கப்படுவதாக


எடுத்துரைப்படுகின்றது.தெய்வீக அகத் தூண்டுதல் பொதுவாகக் கலைப் படைப்பிற்கும் சிறப்பாக
இலக்கியப் படைப்பிற்கும் உந்துதல் சக்தியாக அமைகிறது.

4. அறிஞர் நா.சஞ்சீவி – இலக்கியம் என்பது

1.புதுமை

2.பெருமை

3.பொதுமை

4.பொருண்மை ஆகியனவாகும்.

5. ஜெயமோகன் - இலக்கியம் என்பது மனிதர்கள் தங்களுக்கு நிகழும் வாழ்க்கைக்கு மேலதிகமாக


விரிந்த வாழ்க்கையை மொழியினூடாக கற்பனை செய்து அறிவது. ஒருவரின் வாழ்க்கை அளிக்கும்
அனுபவங்கள் எல்லைக்குட்பட்டவை, இலக்கியம் பல்லாயிரம் பேரின் அனுபவங்களை ஒருவர்
அடைய வழிவகுக்கிறது. காலத்தால் கடந்துபோன வாழ்க்கையை நாம் வாழவும் நாளை
நிகழவிருக்கும் வாழ்க்கையை சென்றடைந்துவிடவும் உதவுகிறது. எல்லா பால்நிலைகளிலும் எல்லா
நிலங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லாவகை இக்கட்டுகளிலும் எல்லா வகை பரவசங்களிலும்
நாம் சென்று வாழ்வதற்கான வழியே இலக்கியம் என்பது. வாழ்க்கை அளிக்கும் அனைத்தையும்
இலக்கியமும் அளிக்கும்.

இலக்கியம் ஒரு மெய்யறிதல்வழி. மெய்யைச் சென்றடைய மூன்றுவழிகள். தர்க்கம், கற்பனை,


உள்ளுணர்வு. இலக்கியம் கற்பனையை முதன்மையாகக்கொண்ட அறிவுப்பாதை. உள்ளுணர்வும்
தர்க்கமும் அதற்கு உடன்வருபவை. பல்லாயிரமாண்டுகளாக மானுடன் அடைந்த மெய்மைகள்
அனைத்தும் இலக்கியமாகவே சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றை அறியாதவனால் எதையும்
உணர்ந்துகொள்ளமுடியாது

You might also like