You are on page 1of 5

புதிய கற்பித்தல் முறைகள்

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு கற்பித்தலில் புதிய முறைகள் தோன்றின.   கற்பித்தலைச்


றப்பாக்குவதற்கும்

வெற்றிகரமாக முடிப்பதற்கும் முக்கியக் காரணியாக இருப்பது பாடங்களை முறையாகத்

திட்டமிடுதலாகும்.  எவற்றைக் கற்பிப்பது எவ்வாறு கற்பிப்பது என்பதையும் ஆசிரியர்


முன்கூட்டியே

தெளிவுபெற்றிருக்கவேண்டும்.   கால மாற்றத்தால் கற்பித்தல் முறைகளில் பல்வேறு


ாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒவ்வொரு மொழிக்கு எற்றவாறும் நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறும் மொழிக் கற்பித்தலின்


போக்கு

மாற்றம்பெற்றுவருகிறது. புதிய கற்பித்தல் முறைகளாக விளையாட்டு முறை, நடிப்பு


முறை, செயல்திட்ட

முறை, தனிப்பயிற்சி முறை போன்றவற்றைக் கல்வியாளர்கள் குறிப்பிடுவர்.


இவ்வகையில் புதிய கற்பித்தல்

முறைகளைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதையும்


ார்ப்போம்.

5.1 விளையாட்டு முறை

குழந்தைகளுக்கு, விளையாட்டில் ஆர்வமும், ஈடுபாடும் மிகுதி. அத்தகைய விளையாட்டு


மூலம் கற்பித்தால்,

குழந்தைகளுக்குக் கற்பதில் ஆர்வம் மிகும். களைப்போ, சோர்வோ தோன்றாமல் கற்றுச்


றப்பார்கள்.

விளையாடுவதால் உடல் வளர்ச்சியடைவதோடு, மகிழ்ச்சியும், மன நிறைவும், கூட்டுறவு

மனப்பான்மையும்,   ஆளுமைத் திறனும் குழந்தைகளிடம் ஏற்படும்.   மேலும்,   தம்


ண்ணங்களை எளிமையாக

வெளிப்படுத்துதல், ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல், திட்டமிடல், தலைமையேற்றல்,


ன்னுடைய முறை வரும்

வரை காத்திருத்தல் முதலிய பண்புகளை விளையாட்டின் வாயிலாக மாணவர்கள்


பெறுகின்றனர். பள்ளியில்

வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் விளையாட்டுகளை நடத்தலாம்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே!     மொழி பயிற்றுவித்தலில்,     பெரும்பாலும்


வகுப்பறை விளையாட்டுகளே

கடைப்பிடிக்கப்படுகின்றன. ‘எந்த விளையாட்டு, எல்லாக் குழந்தைகளும் ஒன்றாகச்


சேர்ப்பதோடு, ஒவ்வொருவரின்

தனித்திறன் வளர்ச்சிக்கு உதவுகிறதோ, அதுவே வகுப்பறைக்கு ஏற்ற விளையாட்டு’


ன்பதை நினைவில்

கொள்ளவேண்டும். வகுப்பறை விளையாட்டுகளின்வழி, சொல் விளையாட்டுகளை


வடிவமைத்தல், கேட்டல்,

பேசுதல், படித்தல், எழுதுதல், சொற்களஞ்சியம் பெருக்குதல் ஆகிய மொழித் திறன்களை


வளர்க்கலாம்.

விளையாட்டு முறையைக் கையாளும் படிநிலைகள்


 
பயிற்றுவிக்கும் பாடப் பொருள்,    பாட வேளை,    சூழல் முதலியவற்றிற்கு

ஏற்ப மொழி விளையாட்டுகளை ஆசிரியர் திட்டமிடல் வேண்டும்.

 
  விளையாடுவதற்குத் தேவையான பொருள்களைத் தொகுத்து

வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

  ஒவ்வொரு விளையாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட திறன்கள் வெளிப்பட்டாலும்


மொழித் திறனுக்கே முன்னுரிமை அளித்தல் வேண்டும்.

  விளையாட்டிற்கு ஏற்பவும் விளையாடுவோரின் எண்ணிக்கைக்கு ஏற்பவும்

விளையாடும் முறை, விளையாட்டிலிருந்து வெளியேறுதல்,    விளையாட்டின்

பயன்,    குழுத்தலைவர்,   மதிப்பெண் வழங்குபவர், நடுவர் என

விதிமுறைகளை வகுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

  சிந்திப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.

  சிக்கல்கள் ஏற்படும்பொழுது மட்டும் ஆசிரியர் நடுவராக இருந்து வழிகாட்டுதல்

வேண்டும்.

  விளையாடும் மாணவர்கள் தவறு செய்யும்பொழுது, அவர் வெளியேறும்போது,

தவற்றுக்கான காரணத்தைக் கூறி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுபவராகவும்

ஊக்கமூட்டக் கூடியவராகவும் ஆசிரியர் விளங்க வேண்டும்.

அடுத்து, தமிழ் கற்பித்தலுக்கான சில விளையாட்டு முறைகளைக் காண்போம்.

(அ) குறிப்பிட்ட எழுத்துகளை வட்டமிட்டுக் காட்டுதல்.

(ஆ) விடுபட்ட எழுத்தை நிரப்பச் செய்தல்.

(இ) படங்களையும் பெயர்களையும் பொருத்தச் செய்தல்.

(ஈ) பொருள்களுக்கான பெயர் எழுதச் செய்தல்.

பொருத்துதல். [உறுப்புகள்-அணிகலன்கள்; உறுப்புகள்-பயன்கள்


(உ)
போல்வன]
(ஊ) மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி அமைத்தல்.

(எ) எழுத்துக் கூட்டல்.

ஓர் எழுத்தைச் சேர்த்து அல்லது நீக்கிப் புதிய சொல்


(ஏ)
உருவாக்குதல்.

இரட்டைக் கொம்பு சேர்த்துச் சொல்லாக்குதல். [சாறு-சோறு; தாள்-


(ஐ)
தோள்]

இவற்றிற்கு அடுத்த நிலையில்,

(அ) சொற்களை முறைமாற்றிக் கொடுத்து வாக்கியமாக்குதல்.

(ஆ) வினாக்களுக்கு விடை கூறுதல் விளையாட்டு.

(இ) எதிர்ச்சொல் கூறுதல்.

(ஈ) ஒரே ஒலியில் அமைந்த சொற்களைக் கூறச் செய்தல்.

(உ) கதை அமைத்தல்.

(ஊ) பொருந்தாதவற்றை அல்லது அந்நியனைக் கண்டுபிடித்தல்.

(எ) படம் காட்டித் தலைப்புக் கூற வைத்தல்.

(ஏ) ஆத்தி சூடி அல்லது திருக்குறள் கூறச்செய்தல்.

பாதி சொல்வேன்; மீ தி கூறு! (இவ்விளையாட்டில் பாதிக் கதையை


(ஐ)
ஆசிரியர் கூறி மீ தியைக் கூற வைத்தல்)

(ஒ) இரு பொருள் தரும் சொற்களைக் கூறுதல்

(ஓ) விடுகதைகள் கூறுதல்

மாணவர்களின் தரம், வாழ்க்கைச் சூழல், ஆசிரியர் தம் தனித்திறன் முதலானவற்றிற்கு


ற்ப மொழி
நடிப்பு முறை
 
நடிப்பு முறை விளையாட்டு முறையை அடிப்படையாகக்

கொண்டது;  மனத்தின்
விளையாட்டுகளைப் ஆற்றல்களில்
பெருக்கவும் முக்கியமானதாகிய
சுருக்கவும் செய்யலாம். கற்பனையின்

விளைவாக நடைபெறுவது.    கற்பனை ஊற்றுப் பெருக்கு இல்லையென்றால்

எந்தக் கலையும் வளர்ச்சிபெற இயலாது. கற்பனை சக்தியினால்தான் குழந்தைகள்

அரிதான செயல்களை எளிதாக நிறைவேற்றுகின்றனர்;     ஊனக் கண்ணால் காண

முடியாதனவற்றையெல்லாம் மனக் கண்ணால் காண்கின்றனர்;  முன்னர்க்

கண்டவற்றைக் திரும்பவும் நினைத்துப் பார்க்கின்றனர்.

 
குழந்தைகளின் விளையாட்டு உலகில் உண்மைக்கும் பாவனைக்கும் அதிக

வேற்றுமை இல்லை. பாவனையின் ஆற்றல் எல்லையற்றது. குழந்தைகளின்

பாவனை உலகில், ஒரு சிறு கம்பு மோட்டாராகும்; மரக்கட்டைகள்

வண்டியாகும்.   குழந்தைகள் பெற்றோராகவும் ஆசிரியராகவும் அரசனாகவும்

ஆண்டியாகவும் கடைக்காரனாகவும் பால்காரனாகவும் வண்டி ஓட்டியாகவும்

நடிப்பதில் பேரின்பம் அடைகின்றனர்.   சாதாரணமாக வடுகளில்


ீ ஆண்

குழந்தைகள் இவ்வாறு நடிப்பதையும் பெண் குழந்தைகள் சிறு சோறு

சமைத்தல்,   சிற்றில் புனைதல்,   பொம்மைத் திருமணம் போன்ற

விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் காண்கின்றோம்.

 
4.5.2.1 ஆசிரியருக்குச் சில குறிப்புகள்
 
குழந்தைகளிடம் காணப்படும் இந்த நடிப்பு உணர்ச்சியைப் பயனுள்ள

வழிகளில் திருப்புவதுதான் ஆசிரியரின் கடமை;  அதில்தான் அவர் திறமை நன்கு

புலனாகும்.  தமிழ் கற்பிப்பதில் வாய்மொழிப் பயிற்சி,     எழுத்து ஆகிய

இரண்டிற்கும் வகுப்பில் நடிப்பதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளிடம்

ஒரு திருத்தமான நாடகத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை; எதிர்பார்த்தாலும்

தவறு. நாடகத்தை உருவாக்கல்,   நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகள் பேச்சுகள்

தயாரித்தல் நாடகப் பாத்திரங்களைத் தீர்மானித்தல், பாத்திரங்களுக்கு வேண்டிய

உடைகள் தயாரித்தல், ஒத்திகை வைத்தல் ஆகிய செயல்களால்தான்

You might also like