You are on page 1of 24

TAKE HOME EXAMINATION

___________________________________________________________________________

SEMESTER SEPTEMBER 2020

HBTL 3203

KESUSASTERAAN TAMIL II

NO. MATRIKULASI : 890103595316001

NO. KAD PENGNEALAN : 890103595316

PROGRAM : BACHELOR OF TEACHING (PRIMARY

EDUCATION) WITH HONOURS

NO. TELEFON : 014-6256097

E-MEL : tuulasi6097@gmail.com

PUSAT PEMBELAJARAN : PPNS


BAHAGIAN A

கேள்வி 1 (a)

அவ்வையார், சங்க காலத் தமிழ் இலக்கியத்தின் புகழ்மிக்க பெண்

புலவர், மனிதர்கள் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை,

எளிய வகையில் பல நல்ல நெறிகளை உணர்த்திப் பாடுவது போல பல

நூல்களை இயற்றி இருக்கிறார், அவை பெரும்பாலும் சிறுவர்களுக்கு

சொல்லும் வண்ணம் அமைந்திருந்தாலும், அவற்றையெல்லாம் ஏற்று

நடந்தால், சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும்

நல்வாழ்வு அமையும் என்பதுதான், அந்த நூல்களின் சிறப்பு.

முதல் அடியில் உள்ள சிவபெருமானைக் குறிக்கும் கொன்றைவேந்தன்

எனும் முதல் சொல்லே, இந்த நூலின் பெயராக விளங்குகிறது. இந்த

நூல் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல அவ்வை இயற்றியது, இது

நமக்கு இல்லை என்று சொல்பவர்கள், ஒருமுறை இந்த நூலை

வாசித்தால், நமது அறியாமை ஒவ்வொன்றாக வெளிப்படும்.

கொன்றைவேந்தனின் பாடல்கள் ஒரு வரியில் இருந்தாலும், மிக

நுண்ணிய பொருள் கொண்ட அந்த அறிவுரைகளை எல்லோரும்,

எக்காலத்திலும் ஏற்று நடக்க முடியும், நடந்து நல்வழியில் வாழ்ந்து,

மற்றவருக்கும் வழிகாட்டியாகத் திகழலாம். எல்லா மூதுரைகளும்,

சொல்லும் முதல் அறிவுரை, பெற்றோரை மதித்து நடப்பது மற்றும்

கல்வி. இக்காலத்தில் அவசியம் தேவைப்படும் ஒரு முக்கியமான

விசயம்தான் பெற்றோரை மதிப்பது.


"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" "தாயிற் சிறந்த கோவிலும்

இல்லை" "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" இவை

கொன்றைவேந்தனில் உள்ள பெற்றோர் பெருமை சொல்லும் வரிகள்.

தெய்வங்கள் இருக்கும் இடங்கள் என்று உணர்ந்து கோவில்களில்

சென்று வழிபடும் முன்னரே, நம் கண்களின் முன் நமக்கு முதல்

தெய்வங்களாக விளங்குவது, பெற்றோர்களே என்பது இந்த வரிகளின்

விளக்கம்.

“ஏவா மக்கள், மூவா மருந்து! குடும்பத்தார் குறிப்பறிந்து செயல்படும்

பிள்ளைகள், பெரியவர்களை நெடுநாள் மகிழ்ச்சியாக வாழவைக்கும்

மருந்தாகத் திகழ்வார்கள், என்பது இதன் பொருள். உண்மைதானே,

நாம் ஒரு விஷயத்தை நினைத்திருக்கையில், நாளை அந்த விஷயமே,

நமக்காக வந்து காத்திருந்தால் எப்படி இருக்கும்? இது தான்

குறிப்பறிதல். இக்கால இளைஞர்களுக்கு மிகவும் தேவையான பொன்

எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தையும்

சொல்கிறார், அவ்வையார்.

பெற்றோர் எப்பொழுதும் தன் குழந்தைகளுக்கு நல்லதையே செய்வர். பெற்றோர்


குழந்தைகளிடம் ஒரு வேலை கூறினால் அவ்வேலையை விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும்
செய்திடல் வேண்டும். வேண்டா வெறுப்பாகவோ முணுமுணுத்துக் கொண்டோ செய்திடல்
கூடாது. இதை விட தாய் தந்தையர் வாய் திறந்து சொல்லும் முன்னே அவர்கள்
முகக்குறிப்பினை அறிந்து அவர்கள் விரும்பிகின்ற வேலையைத் தாங்களாவே செய்து முடிப்பர்.
அப்படி பெற்றோரின் குறிப்பறிந்து செய்யும் குழந்தைகள் கிடைப்பதற்கரிய தேவாமிர்தத்திற்கு
ஒப்பானவர்கள் என்கிறார் ஔவைப்பாட்டி.

கேள்வி (b)
‘தொழுதுண் சுவையின் உழுதுண்’ என்னும் பாடல் இன்றைய சூழலில் வேளாண்மை மிகவும்
போற்றப்படுகின்றது. ஒருவரின் சொல்லுக்குக் கீழப
் ்பட்டு வேலை செய்து கிடைக்கும் வருவாயில்
பொருள்களை வாங்கிச் சமைத்து உண்ணும் உணவு சுவை அற்றதாகும். இதை விடுத்து தானே
தனது உழைப்பில் பயிர்த் தொழில் செய்து அதில் கிடைக்கும் உணவைச் சமைத்து உண்ணும்
போது அதன் சுவை இன்னும் இனிமையானதாக இருக்கும் என்கிறார் நம் ஔவைப்பாட்டி.
இன்றைய சூழ்நிலையில் பார்க்கும்போது பிறரிடம் கைக்கட்டி வேலை செய்வதைவிட சுய
தொழில் செய்வதே மேல் என மறைமுகமாகவும் ஆணித்தரமாகவும் கூறுகிறார். இதனால், நாம்
உழைத்து சாப்பிட்டால்தான் வயிற்றிலும் மனதிலும் தங்கும் என்கிறார். எனவே,
மானிடர்களாகிய நாம் நன்கு யோசித்து உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

உழைப்பாளி இல்லாத நாடு தான்


எங்கும் இல்லேயா அர ஹோயா..
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்
எங்கும் இல்லேயா அர ஹோயா..

மேற்கண்ட பாடல் வரிகள் கூட மிக அழகாக சுட்டிக் காட்டுகின்றது. உழைத்தால் தான் நமக்கு
சோறு இல்லையென்றால் கஞ்சிதான் என்று நம் முன்னோர்கள் எப்பொழுதும் கூறுவதைக்
கேட்டிருப்போம். வேளாண்மை பிரச்சனைகளைப் பற்றி நாம் யோசிக்கமால் சிந்த்தித்து
செயல்பாட்டால் தமக்கான ஒரு வேலை கண்டிப்பாகக் காத்திருக்கும். மேலும்
அவ்வேளைகளைக் கையாளுவது நமக்கு எவ்வித பிரச்சனைகளையும் கிடையாது.

அதுமட்டுமா, ஒருவன் தன் செல்வத்தை உழைத்துப் பெற வேண்டும். அப்படி உழைத்துச்


சம்பாதித்த பொருளைக் கொண்டு வாழ்வதே மிகவும் சிறப்பாகும். உழைக்காமல் கிடைக்கும்
பணத்தில் வாழ்வது சிறப்பல்ல. ஆகவே உழைத்துப் பொருள் தேடி உண்பவனையே உலகம்
மதித்துப் போற்றப்படுவார்கள்.

கேள்வி 2 (a)

தமிழின் சிறந்த அற நூல்களுள் 'விவேக சிந்தாமணி' குறிப்பிடத்தக்கது.

அதன் எளிமை கருதியும், அது கூறும் மனங் கொள்ளத்தக்க சிறந்த

அறிவுரைகளாலும் எல்லோராலும் விரும்பிக் கற்கப் பட்டதனால் அது

பெருவழக்குப் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப்


பள்ளிகூடங்களில் விவேகசிந்தாமணி கட்டாயமாகப்

பயிற்றுவிக்கப்பட்டது. அதனால் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு

மட்டும் உடைய நாட்டுப்புற மக்கள், அச்சு வடிவம் பெற்ற அல்லி

அரசாணி மாலை, நல்லதங்காள் கதை போன்று மனப்பாடமாகக்

கூறுவர். 'மக்கள் இலக்கிய வரிசை'யில் 'விவேக சிந்தாமணி'க்கு ஒரு

நிச்சயமான இடம் என்றும் உண்டு.

விவேக சிந்தாமணி மிகவும் பிற்பட்ட காலத்தது. நாயக்கர் மன்னர்கள்

தமிழகத்தை ஆண்டபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரால்

பாடப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பே விவேக சிந்தாமணி. இதில்

பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்யுட்களும் பிற்காலத்தே பலர்

பாடிய தனிப் பாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலில் சாதாரண

நடைமுறை அறங்களும், வாழ்க்கை ஒழுங்குகளும், உயர்தர்ம

நெறிகளும் கதைகள், நகைச்சுவை, அவலம், வரம்,


ீ காதல் போன்ற

சுவைகளுடன் எளிய நடையில் சொல்லப் பட்டுள்ளன. தொடர்ந்து, விவேக

சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் கருத்துகளைக் காண்போம்.

01: கடவுள் வணக்கம்

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிக

மாமருணைக் கோபுரத்துள் வற்றிருக்கும்


ீ கணபதியைக் கைதொழுதக்

கால். 

திருவண்ணாமலை கோவிலில் எழுந்தருளியிருக்கும் கணபதியை

கைகளை கூப்பி வணங்கினால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.


சஞ்சிதகர்மம், பிராரப்தகர்மம், ஆகாமிகர்மம் அனைத்தும் தொலைந்து

போகும். (ஸஞ்சித கர்மம் - எஞ்சுவினை - செயலுக்கு வராமலிருக்கும்

பழையவினைப்பயன்கள். பிராரப்த கர்மம் - நிகழ்வினை - இப்பிறவிக்கு

காரணமாக இருக்கும் வினைப்பயன்கள். ஆகாமிகர்மம் - வருவினை -

இப்பிறவியில் செய்யும் புதியவினையின் பயன்கள்.)

02: பயன்படாதவை

ஆபத்துக் குதவாப்பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்; தாபத்தைத்

தீராத் தண்ணர்;
ீ தரித் திரமறியாப் பெண்டிர்; கோபத்தையடக்கா

வேந்தன்; குருமொழி கொள்ளாச்சீடன்; பாபத்தைத் தீராத் தீர்த்தம்

பயனில்லை யேழுந் தானே.

இவை ஏழும் இருந்தும் பயனற்றவை: அருகில் இல்லாத பிள்ளை,

பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ண ீர், கணவனின்

வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி,

கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன், குருவின்

உபதேசத்தைக் கேளாத சீடன், புனிதம் (தூய்மை) இல்லாத நீர்நிலை.

03: அன்பே தலை

ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மைபேசி, உப்பிலா

கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும், முப்பழமொடு பாலன்ன

முகங்கடுத்து இடுவராயின், நப்பிய பசியினோடுகடும்பசி யாகுந்தானே.

மனம் ஒப்பி, மலர்ந்த முகத்துடன் உபசரித்து, உண்மை பேசி,

உப்பில்லாத கூழ் கொடுத்தாலும் அது அமிர்தமாக இருக்கும். மா, பலா,

வாழை முக்கனிகளோடு பாலன்னத்தை அன்பில்லாமல் முகம் கடுத்துக்


கொடுப்பாரானால் அது பசியை அதிகமாகுமேயன்றி தணிக்காது. (

மனதிற்கு நிறைவைத் தராது). (கொடுப்பதை அன்போடு கொடு.

அன்போடு கொடுப்பதை மட்டுமே பெறு.)

04: உலக இயல்பு

ஆலிலை பூவுங்காயும் இனிதரு பழமும் உண்டேல், சாலவே

பட்சியெல்லாந் தன் குடி யென்றே வாழும், வாலிபர் வந்துதேடி

வந்திப்பர் கோடாகோடி, ஆலிலை யாதிபோனால் அங்குவந்து

இருப்பாருண்டோ.

ஆலமரத்தில் இலை, பூ, காய், இனிமையான பழம் இருந்தால்

மிகுதியாக பறவைகள் இது தமது இருப்பிடம் என கூடிவாழும். இலை

முதலானவை நீங்கி மரம் பட்டு நின்றால் ஒரு பறவையும் அங்கு இராது.

அதுபோல செல்வமானது மிகுந்திருந்தால் பலர் வந்து வந்தனம் செய்து

உறவுகள் என கூடி இருப்பார். செல்வம் இல்லை என்றால் ஒருவரும்

எட்டியும் பார்க்க மாட்டார். (ஆகவே பணத்தினைப் பெருக்கு.)

05: கற்றவரே அறிவார்

தண்டாமரையினுடன் பிறந்தே தண்டேனுகரா மண்டுகம்,

வண்டேகானத் திடையிருந்து வந்தேகமல மதுவுண்ணும், பண்டே

பழகியிருந்தாலு மறியார் புல்லோர் நல்லோரைக், கண்டே

களித்தங்குறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே.


தன்னுடன் பிறந்து வளர்ந்த தாமரையின் இனிய தேனை தவளையானது

அறியாது. காட்டிலிருந்து வரும் வண்டுகள் அந்த தேனை உண்டு

மகிழும். அருகில் இருந்தாலும் கற்றோரின் பெருமையை மூடர்கள்

அறியார். எங்கிருந்தோ வரும் அறிஞர் அந்த நல்லவரைக் கண்டு

அன்புகொண்டு உறவாடி அறிவிற்கலந்து இன்புறுவர். (கற்றாரைக்

கற்றாரே காமுறுவர்)

06: ஈனருக்கு உரைத்திடாதே

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம், தானொரு நெறிசொலத்

தாண்டிப் பிய்த்திடும், ஞான மும் கல்வியும் நவின்ற நூல்களும்,

ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.

ஒரு குரங்கானது மழையில் நனைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை

பார்த்த (முன்னரே கூடுகட்டி வசிக்கும்) தூக்கணம் பறவை ஒன்று,

தன்னைப்போல் ஒரு இருப்பிடம் அமைத்து பாதுகாப்பாக

வாழக்கூடாதா? என்று கேட்க, கோபம் கொண்ட குரங்கு குருவியின்

கூட்டை பிய்த்தெறிந்தது. கீ ழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு

கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால்

அது துன்பத்தை உண்டாக்கும்.  (கேளாமல், தகுதி பாராமல் எதையும்

சொல்லாதே)

07: சிற்றினம் சேராதே

கற்பகத் தருவைச்சார்ந்த காகமும் அமுத முண்ணும், விற்பன

விவேகமுள்ள வேந்தரைச் சேர்ந்தார் வாழ்வார், இப்புவி


தன்னிலொன்று இலவுகாத்திடுங்கிளிபோல், அற்பரைச்

சேர்ந்தார்வாழ்வு அரிதரிதாகுதம்மா.

கற்பக மரத்தில் அமரும் காகமும் அமுதம் உண்ணும், மிகுந்த அறிவு

படைத்த அரசனை சேர்கின்ற எளியவரும் நல்வாழ்வை பெறுவர்,

இலவம் மரத்தின் காய் 'பழுக்கும் பழுக்கும்' என்று காத்திருக்கும்

கிளியை போல, அற்பமான அறிவையுடையவரைச் சேர்ந்து வாழ்பவர்

வாழ்வு வணாகும்.
ீ (ஆகவே, சேரிடம் அறிந்து சேர்)

08: தரம் தாழாதே

சங்குவெண் தாமரைக்குத் தந்தைதாய் இரவி தண்ண ீர், அங்கதைக்

கொய்துவிட்டால் அழுகச்செய் தந்நீர் கொல்லும், துங்கவன் கரையிற்

போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான், தங்களின்நிலைமை

கெட்டால் இப்படித் தயங்குவாரே.

சங்கு போன்ற வெண்மையான தாமரை பூவுக்கு சூரியனும் தண்ண ீரும்

தந்தையும் தாயும் ஆவர். ஆனால் அம்மலரைப் பறித்து தண்ண ீரில்

போட்டால் அந்நீரே அதை அழுகச் செய்து கொன்றுவிடும். தரையில்

போட்டால் சூரியன் காயவைத்துக் கொன்றுவிடுவான். அதுபோல

ஒருவர் தன் நிலை தவறினால் இப்படி அழிவை அடைவார். (ஆகவே,

பணத்தினாலோ குணத்தினாலோ சொல்லாலோ செயலாலோ தரம்

தாழ்ந்து விடாதே.)

09: நன்றே செய்க இன்றே செய்க

அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ, கரும்பு கோணிடிற்


கட்டியும் பாகுமாம், இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்,

நரம்பு கோணிடில் நாமதற் கென் செய்வோம்.

பூவின் அரும்பு கோணலாக இருந்தாலும் மலர்கின்ற பொழுது அதன்

மணம் குறையாது; கரும்பு கோணலாக இருந்தாலும் அதன்

சுவையானது குறையாது; இரும்பை வளைத்து கோணல் ஆக்கி

அங்குசம் செய்தால் யானையை வெல்லலாம்; ஆனால் உடம்பில் நரம்பு

கோணலானால் (இழுத்துக்கொண்டால்) யார் என்ன செய்ய முடியும்?

(ஆகவே அன்றறிவாம் என்னாது அறம் செய்க).

10: மாறும் விதி மாறாதது

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,

மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்,

தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம்,

மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்)

ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும்

வலியவன் வதைப்பான்.  அவ்வலியவனை எமன் கொல்வான்.

இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த

கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து

கொள்வாயாக!

11: விலகியே இருத்தல் நலம்


தேளது தீயில் வழ்ந்தால்
ீ செத்திடாது எடுத்த பேரை, மீ ளவே கொடுக்கி

னாலே வெய்யுறக் கொட்ட லேபோல், ஏளனம் பேசித் தீங்குற்

றிருப்பதை எதிர்கண் டாலும், கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற

மாமே.

தேளானது தீயில் விழுந்த போது அதை இறந்து விடக்கூடாது என்று

காப்பாற்றி எடுத்தவரை அது கொடுக்கினாலே கொட்டுவது போல, கேலி

பேசியும் கலகம் செய்தும் வாழ்கின்ற கோணல் புத்தி உள்ள

ஒருவருக்குச் செய்கின்ற நன்மையானது செய்பவருக்கே துன்பமாக

ஆகும். (ஆகவே துஷ்டனைக் கண்டால் தூர விலகு.)

12: ஈவதே உயர்வு

மடுத்தவர் வாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க் கெல்லாம்,

கொடுத்தவர் வறுமை யுற்றால் கொடாது வாழ்ந் தவர்யார் பூமேல்,

எடுத்து நாடுண்ட நீரும் ஈயாத காட் டகத்து நீரும், அடுத்த கோ

டையிலே வற்றி அல்லதிற் பெருகுந் தானே.

தன்னை அடைந்தவர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஏழைகளுக்கும்,

வேதம் படித்தவர்களுக்கும், தானம் செய்ததால் வறுமை அடைந்தவர்

பூமியில் யார் உள்ளார்? யாருக்கும் எதையும் கொடாது புகழடைந்தவர்

யாரும் உலகில் உண்டோ? அனைவருக்கும் பயன்படும் ஊருக்கு நடுவே

இருக்கும் நீர் நிலையும், யாருக்கும் பயன்படாமல் கானகத்தே இருக்கும்

நீர்நிலையும் கோடையில் வற்றி மீ ண்டும் அடுத்த மழைக்காலத்தில் நீர்

நிரம்பிப் பெருகும் தானே! (ஆகவே, செல்வம் வருவதும் போவதும்

இயல்பு; அதை அனைவருக்கும் பயன்படுமாறு ஈவதே உயர்வு)


13: காமம் வலியது

உணங்கி யொருகால் முடமாகி ஒருகண் ணிழந்து செவியின்றி,

வணங்கு நெடுவால் அறுப்புண்டு வயிறும் பசியால் முதுகொட்டி,

அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வாயோடு கழுத்தேந்திச், சுணங்கன்

முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்.

ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை,

வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு

ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு

ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி

இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய் ஒரு பெண்ணாயைக் கண்டதும்

காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான்

காமன்(ம்) துன்புறுத்த மாட்டான். (ஆகவே எச்சரிக்கையாயிரு.)

மேற்கண்ட அனைத்து பாடலிலும் மனித வாழ்க்கையின் பல்வேறு தத்துவங்களைப்


போற்றுகின்றன.

கேள்வி 2 (b)

பதினெண் சித்தர்களுள் பட்டினத்தார் தலைச்சிறந்த தகைமையாளர்.

இவர் தமிழ் உலகிற்குப் படைத்தளித்த நூல்களுள் ‘திருவேகம்பமாலை’

காஞ்சி மாநகரத்தில் உள்ள ஏகம்பம் என்னும் ஊரில் கோயில்

கொண்டுள்ள ஏகாம்பநாதனைப் [சிவபெருமானை] புகழ்ந்து பாடியது.

இந்நூல் 41 பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் சித்திரிக்கப்பெற்றுள்ள

நிலையாமைச் சிந்தனைகளை விளக்குவதே இக்கட்டுரையின்

நோக்கமாகும்.
உலக உயிர்கள் நிலையற்றவை. உலகத்துத் தோன்றும் எவ்வுயிரும்

நிலைபெற்றுத் தங்குவதில்லை. நிலையாமை என்பதற்கு “அநித்தியம்,

உறுதியின்மை” என்று பொருள் (பி.இராமனாதன், கழகத்தமிழ் அகராதி,

ப.610) ‘Instability’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான

தமிழ்ச்சொல்லே நிலையாமை என்பதாகும். தமிழ் இலக்கியங்கள் அக,

புற மற்றும் அறக்கருத்துகளோடு நிலையாமைச் சிந்தனைகளையும்

மக்களுக்கு எடுத்துரைத்தன. நிலையாமையைத் தொல்காப்பியர்

புறத்திணையியலில்,

“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்

நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள்.புறத்.76)

என்று கூறுவர்.

இதனால் இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற தொல்காப்பியரின்

கருத்தை உணர முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியரான

இளம்பூரணரின் கருத்துப்படி நிலையாமை மூவகை என்பதனை,

“காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப்

புறனாம். அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும்

நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது. நிலையாமை

மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை,

யாக்கை நிலையாமை என இவற்றுள்” என்ற கூற்றினால் அறிய

முடிகிறது [தொல்.பொருள்.இளம் பூரணாரின் உரை, பக்.125-126]

வள்ளுவர் நிலையில்லாதவற்றை நிலையானதாகக் கருதுவதனைப்

‘புல்லறிவாண்மை’ என்று கூறுவதனை, “நில்லாத வற்றை நிலையின


என்றுணரும் புல்லறி வாண்மைக் கடை” (திருக்குறள்: 331) என்ற குறள்

விளக்குகிறது.

மனித வாழ்க்கையில் வசந்த காலமாகக் கருதப்படுவது இளமைப்

பருவமாகும். எப்பருவமும் நிலைத்து நிற்பதில்லை. இளமை

நிலையாமையைத் தொல்காப்பியர், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக்

காட்டிய முதுமை” (தொல். பொருள்.புறத்.77) என்று கூறியுள்ளார்.

இத்துறைக்கு ‘முதுகாஞ்சி ’ என்று பெயர். திருவேகம்பமாலையில்

பட்டினத்தார் காஞ்சியுள் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே, இந்த

உலகத்தில் தோன்றி பேரின்பத்தை மறந்து, நிலையாமையை உடைய

காம இன்பத்தில் மயங்கி, அதனை அனுவிப்பதன் பொருட்டு,

மாதிரிடையே கிடந்து வருந்தி, பொருளைத் தேடி அவர்களுக்கு

அளித்துப் பின் முதுமை வந்து சேர்வதால் தடுமாற்றம் அடைந்து நோய்

மிகப் பெற்று வாழ்நாள் வணாகப்


ீ போனதனை எண்ணி வருந்தியதனை,

“பிறந்து மண் மீ தில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்து சிற்

றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்குள் பறந்து உழன் றேதடு

மாறிப் பொன் தேடியப் பாவையர்க் கீ ந்து இறந்திட வோபணித் தாயிறை

வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை பா.30) என்ற பாடலில்

சுட்டியுள்ளார்.

மேற்குறித்த பாடலுள் இளமைப் பருவம் எப்பயனும் இன்றி வணேக்


கழிந்து முதுமைப் பருவம் எய்திற்று என்ற கருத்தினால் இளமை

நிலையாமை பற்றிய சிந்தனை கூறப்பெற்றது.


நிலையாமை வகையுள் செல்வ நிலையாமையும் ஒன்று “உயிரைப்

போலவே செல்வமும் நிலையில்லாதது. கூத்து அரங்கத்துக்குள்

ஒருவர் ஒருவராக உள்ளே நுழைவது போல் செல்வம் வருகிறது.

ஆனால் கூத்து முடிந்து வெளியேறும் மக்களைப் போல் எல்லாமே

ஒட்டு மொத்தமாக வெளியேறி விடுகிறது” (கவிஞர் குடந்தையான்,

தமிழர் பண்பாடு அன்றும் - இன்றும் ப. 171) “செல்வம், சகடக்கால்

போல்வரும்” என்று நாலடியார் குறிப்பிடுகிறது.

சக்கரம் நிலையில்லாது சுழலுவது போல செல்வமும்

நிலையில்லாதது. இவ்வுலகில் பிறக்கும் போது எவரும் செல்வத்துடன்

பிறப்பதில்லை. வறுமையுள் பிறந்து பெரிதும் முயன்று ஈட்டிய

செல்வத்தை இறக்கும் போதும் எவரும் கொண்டு செல்வதில்லை

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உண்டானதாக எண்ணப்படும்

செல்வம் நிலையற்றது என்பதனை, “பிறக்கும் பொழுது கொடுவந்தது

இல்லை பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை”

(திருவேகம்பமாலை- 7: 1- 4) என்ற பாடலடிகளில் பட்டினத்தார்

குறிப்பிட்டுள்ளார்.

பரந்துபட்ட உலகில் பொன்னைச் சிறந்த பொருள் என்று எண்ணித்

தேடுபவர் பலர் இருக்கின்றதனை, “பொன்னை நினைத்து வெகுவாகத்

தேடுவர்” (திருவேகம்பமாலை- 38:1- 2) என்ற அடிகள்

மெய்ப்பிக்கின்றன. மேற்குறித்த பாடல்களால் செல்வம் நிலையற்றது

இருக்கின்ற காலத்தில் இரப்பார்க்கு ஈவதும் இறையை நினைப்பதுமே

நிரந்தரமானது என்பது உணரப்படுகிறது.


நிலையாமைக் கூறுகளுள் யாக்கை நிலையாமையும் ஒன்று.

உலகத்தில் தோன்றிய உயிர் இறந்துபடும் என்பதே உறுதி, யாக்கை

நிலையாமையை, “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது

போலும் பிறப்பு”(திருக்குறள்: 339) என்று வள்ளுவர் சுட்டுவர்.

“உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு என்பது முட்டை ஓட்டுக்கும்

குஞ்சுக்கும் உள்ள உறவைப் போன்றது” (கவிஞர் குடந்தையான், தமிழர்

பண்பாடு அன்றும் - இன்றும் ப.171) உடம்பைத் தனியாக விட்டு விட்டு

உயிர்ப்பறவை பறந்தோடி விடும். இதனை, “குடம்பை தனித்தொழியப்

புள்பறந் தற்றே உடம்பொ டுயிரிடை நட்பு” (திருக்குறள் : 338) என்று

குறள் கூறுகிறது. திருவேகம்பமாலை, “பொய்யான உடலைப்

பாதுகாக்கும் பொருட்டு உணவு தேடும் கவலை பெரிது” (8) என்று

சுட்டுகிறது.

“நாறும் உடலை நரிப்பொதி சோற்றினை நான் தினமும் சோறும்

கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம் கூறும் மலமும்

இரத்தமும் சோரும் குழியில் விழாது ஏறும்படியருள் வாய் இறை

வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை : பா.எ.34) என்ற பாடல் வழிப்

பட்டினத்தார் விளம்பியுள்ளார். உடல் நன்றாக இருக்கும்

காலத்திலேயே அறச்செயலைச் செய்தல் இறையின்பத்தை அடைதல்

இன்றியமையாதவை என்பது புலனாகிறது.

பதினெண் சித்தர்களுள் பட்டினத்தாரும் ஒருவர். சித்தர்களின் முக்கியக்

குறிக்கோள்களான உலக நிலையாமை, இறையருளே உண்மை

என்பதற்கேற்பப் பட்டினத்தார் திருவேகம்பமாலையில் அவற்றைக்


குறிப்பிட்டுள்ளார். இதில் இளமை, செல்வம், யாக்கை

நிலையாமைகளை உணர்ந்து, வாழும் காலங்களில் இரப்பவர்க்கு

ஈவதும் அறச்செயல்களைக் காலந்தாழ்த்தாமல் இயற்றுவதும்

இறையின் இன்றியமையாமையை உணர்வதும் பட்டினத்தாரின்

நிலையாமை குறித்த சிந்தனைகளாய் இருந்ததனை ஆயும் வழி

அறிதற்கிடனாகிறது.

BAHAGIAN B

கேள்வி 1

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த

இணையற்ற கவிஞர். பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி

விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் கவிஞராக மட்டும்

அடையாளம் காணப்படுபவரில்லை. மொழிபெயர்ப்பாளர், ஏட்டுச்

சுவடிகளின் தொகுப்பாளர், ஆய்வாளர், நூலாசிரியர் என்று இவருடைய

வேறு சில சிறப்புகளும் இவருக்கு உண்டு. இவர் எழுதிய பாடல்கள்

அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கிக் கிடக்கவில்லை.

இவரது கவிதைப் படைப்புகள் பரந்து விரிந்த கவிதை உலகில் பக்திப்

பாடல்கள், இயற்கைப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள், குழந்தைப்

பாடல்கள், வரலாற்றுப் பாடல்கள், வாழ்வியல் போராட்டப் பாடல்கள்,

சமூகப் பாடல்கள், தேசியப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள்,

கையறுநிலைப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் மற்றும் பிற


மொழியைத் தழுவி எழுதிய மொழிபெயர்ப்புப் பாடல்கள் என்று

பல்வேறு வகைப்பாடுகளில் பல விழுதுகளைக் கொண்டு

பன்னெடுங்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி வேரூன்றி

இருக்கின்றன.

கவிமணியின் பாடல் சிறப்புக்கு அவரது பாடலில் அமைந்துள்ள

எளிமையான சொல்லாடல், எளிமையாக விளக்கும் தன்மை, எவரும்

அறிந்து கொள்ளும் அமைப்பு என இவரது பாடல்கள் அனைத்துமே

அகராதி தேடாதவை. எக்காலத்திற்கும் ஏற்றவை. அவருடைய

பாடல்களை நாம் முழுமையாக இங்கு ஆய்வு செய்யப் போவதில்லை.

அந்தப் பாடல்களில் சில துளிகளை எடுத்துச் சுவைத்துப் பார்க்கப்

போகிறோம். தேனின் சில துளிகள் நாக்கை இனிப்பாக்கி உடலைக்

குளிர்ச்சியாக்கி விடும். கவிமணியின் சில பாடல்களைப் படித்தாலோ

அல்லது கேட்டாலோ போதும், நமக்கு அதன் சுவை நம் மனதை

நிறைவாக்கி விடும்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இறைவழிபாட்டுக்கான பல்வேறு

பாடல்களை எழுதியிருக்கிறார். இறைவழி நம்பிக்கை மனதில்

மிகப்பெரும் நம்பிக்கையை உருவாக்கும் என்று எளிமையான

முறையில் தன் கவிதைகளின் வாயிலாக மன அமைதிக்கும், ஆன்மிக

நம்பிக்கைக்கும் வழிகாட்டுகிறார். இப்பாடல்களில் “கோவில் வழிபாடு”

எனும் பாடலை நாம் இங்கு எடுத்துக் கொள்வோம். இப்பாடல் இரு

தோழியர்கள் பேசிக் கொள்வதாகப் பாடப்பட்டிருக்கிறது. இரு

தோழிகளுள் ஒருவர் கோயில் வழிபாடு பல செய்தும் கடவுளைக் காண

முடியவில்லை என்கிற செய்தியைச் சொல்கிறார்...


கோவில் முழுதுங் கண்டேன் - உயர்

கோபுரமேறிக் கண்டேன்

தேவாதி தேவனை யான் - தோழி

தேடியும் கண்டிலனே

தெப்பக் குளங் கண்டேன் - சுற்றித்

தேரோடும் வதி
ீ கண்டேன்

எய்ப்பில் வைப்பா மவனைத் - தோழி

ஏழை நான் கண்டிலனே

சிற்பச் சிலைகள் கண்டேன் - நல்ல

சித்திர வேலை கண்டேன்

அற்புத மூர்த்தி யினைத் - தோழி

அங்கெங்குங் கண்டிலனே

பொன்னும் மணியுங் கண்டேன் - வாசம்

பொங்கு பூ மாலை கண்டேன்

என்னப்பன் எம்பி ரானைத் - தோழி

இன்னும் யான் கண்டிலனே

தூப மிடுதல் கண்டேன் - தீபம்

சுற்றி எடுத்தல் கண்டேன்

ஆபத்தில் காப்பவனைத் - தோழி

அங்கே நான் கண்டிலனே


தில்லைப் பதியுங் கண்டேன் - அங்கு

சிற்றம்பலமுங் கண்டேன்

கல்லைக் கனி செய்வோனைத் - தோழி

கண்களாற் கண்டிலனே

இப்பாடலில் கோயில், கோயிலைச் சுற்றி இருக்கும் வளாகங்கள்,

குளங்கள், தேரோட்டம் கண்ட தெருக்கள், கோயிலில் அழகூட்டப்பட்ட

சிலை, அச்சிலைக்குச் செய்யப்பட்ட சில வழிபாடுகள் என்று

அனைத்தும் கண்டு விட்டேன். ஆனால், எந்த இடத்திலும்

இறைவனைக் காணவில்லை என அவள் வருத்தமுற்றுப் பாடுகிறாள்.

இதைக் கேட்ட அவளது தோழி

கண்ணுக் கினிய கண்டு - மனதைக்

காட்டில் அலைய விட்டுப்

பண்ணிடும் பூசை யாலே - தோழி

பயனொன் றில்லையடி.

உள்ளத்தி லுள்ளானடி - அது நீ

உணர வேண்டு மடி

உள்ளத்தில் காண்பாய் எனில் - கோவில்

உள்ளேயும் காண்பாயடி.
என்று அவளுக்கு பதிலளிக்கிறாள்.

கண்ணிற்கு இனிமையாய்க் காட்சி தரும் வெளிக்காட்சிகளைக் கண்டு

மயங்கி விடுகிறாய். அதையே மனதில் கொண்டு, மனதை அலைய


விட்டு அதன் பிறகு செய்யப்படும் வழிபாட்டினால் பயன் எதுவும்

இல்லை. இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்திலுமிருக்கிறான். அதை

முதலில் உணர வேண்டும். அப்போதுதான் கோயிலிலுக்குள்ளே குடி

கொண்டிருக்கும் இறைவனைக் காணமுடியும் என்று மற்றொரு தோழி

பதிலளிப்பதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாற்றமடைந்து விடக்கூடாது.

உள்ளுக்குள்ளும், உள்ளத்திற்குள்ளும் இருக்கும் இறைவனை

நினைத்தே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அதுதான்

இறைவனைக் காண்பதற்கான வழி என்று கவிமணி தனது பாடலில் மிக

எளிமையாக விளக்கியிருக்கிறார். இந்தப் பக்திப் பாடல்களைப் போல

கவிமணி, பல பக்திப் பாடல்களில் இறைவனைத் தேடும்

முறையையும், வழிபடும் நடைமுறையையும் விளக்கிக்

காட்டியிருக்கிறார்.

கேள்வி 2

'வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே!'

திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே

'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும்


மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். இப்படி

காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக்

கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.

குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம் என்ற தீர்க்க

தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர். மகாகவி பாரதியாருக்குப்

பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில்

வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை

மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு

என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது

வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு,

டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும்

வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ்

கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும்

பணியாற்றினார்.

வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25 வது

வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை

எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை

ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார்.

அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.பொதுவுடமைக்

கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான

அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல


திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி, 

சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று

விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி,

சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・

சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா ・ திருடாதே பாப்பா...

திருடாதே ・ தூங்காதே தம்பி... தூங்காதே ・ போன்ற பாடல்கள் மிகப்

பிரபலமானவை.

தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல

உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை

மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில்

கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின்

எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும்

காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற

காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும்

பொருந்திப் போகிறவை.        

உதாரணமாக சமீ பத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு

விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு

தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால்

தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீ ழே பட்டுக்கோட்டையின்

வரிகள்: 
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு

பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!   

(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)

எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை

தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த

தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு

பாடல்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி

தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்

திருந்த மருந்து சொல்லடா!-

இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு

பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது

பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை

இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை

தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும்

நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள்

மகத்துவமானதாக மாற்றலாம்.

You might also like