You are on page 1of 9

ஜவீனா டேவிட்

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி

நாள் / கிழமை 30.06.2021 (புதன்கிழமை)

ஆண்டு 3 அகத்தியர்
மாணவர் வருகை / 27
கருப்பொருள் இயற்கை
தலைப்பு சுற்றுச்சூழல்

நேரம் காலை மணி 8.30 – 9.30

மாணவர் முன்னறிவு மாணவர்கள் இதற்கு முன்பு வாக்கியங்களை எழுதியுள்ளனர்.

கற்றல் தரம் 5.4.6 தனி வாக்கியம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.


இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
பாட நோக்கம் அ) தனி வாக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கூறுவர்.
ஆ) கொடுக்கப்படும் சொற்களைத் துணைகொண்டு தனி வாக்கியம் அறிந்து எழுதுவர்.

6C ஆற்றல்

 ஆக்கச்சிந்தனை – மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து தனி வாக்கியம் எழுதுவர்.

தற்கால பயிற்றியல் நடைமுறை  தொடர்பாடல் – ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே இருவழி தொடர்பாடல் நடைபெறுதல்.

தகவல் தொழில்நுட்ப அறிவு

 நழுவப்படைப்பு, ‘குய்சீஸ்’ செயலி

மானுடவியல் திறன் வாழ்நாள் முழுவதும் கற்றல்


ஜவீனா டேவிட்

 அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சொற்களை மாணவர்கள் அறிவர்.

தொடர்பாடல் திறன்

 மாணவர்கள் கூகொள் கூடலின் வழியாக இருவழி தொடர்பாடலில் ஈடுபடுவர்

பயிற்றுத்துணைப்பொருள் கூகொள் கூடல், நழுவப்படைப்பு, ‘குய்சீஸ்’ செயலி (Quizizz app), நடவடிக்கை நூல்.

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

பீடிகை தலைப்பு: முறைதிறம்


சுற்றுச்சூழல் 1. ஆசிரியர் மாணவர்களின் நலம் விசாரித்தல்.
(±5 நிமிடம்)  வகுப்புமுறை
(இயங்கலை)
2. ஆசிரியர் மாணவர்களுக்குக் கூகொள் கூடலின்வைழ் படம் ப.து.பொ
படம்
ஒன்றனைக் காண்பித்தல்.
 படம்
3. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் படத்தை உற்று
நோக்குதல்.

4. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டல்.

காட்டு:

அ) படத்தில் அச்சிறுவன் என்ன செய்கிறான்?

ஆ) இந்த படத்தில் எத்தனை செயல்கள் இருக்கிறது?

இ) இப்படம் தொடர்பாக வாக்கியம் ஒன்றனைக்


ஜவீனா டேவிட்

கூறுங்களேன்

5. மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

6. ஆசிரியர் மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய


தலைப்பிற்கு இட்டுச் செல்லுதல்.

படி 1 தலைப்பு: 1. ஆசிரியர் கூகொள் கூடலில் நழுவப்படைப்பைப் பகிருதல். முறைதிறம்


சுற்றுச்சூழல்
(±20 நிமிடம்) 2. ஆசிரியர் நழுவப்படைப்பினைத் துணைகொண்டு தனி  வகுப்புமுறை
(இயங்கலை)
வாக்கியத்தினை அறிமுகப்படுத்தி விளக்கமளித்தல்
ப.து.பொ
நழுவப்படைப்பு
3. மாணவர்கள் ஆசிரியர் கூறும் விளக்கத்தினை நன்கு
 நழுவப்படைப்பு
செவிமடுத்தல்.
தற்கால பயிற்றியல்
4. ஆசிரியர் அதே நழுவப்டைப்பினைத் துணைகொண்டு சில நடைமுறை
வாக்கியங்களைக் காண்பித்தல்.
 6C ஆற்றல் –
5. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் வாக்கியங்களை உற்று தொடர்பாடல்

நோக்குதல்,  தகவல்
தொழில்நுட்ப அறிவு
6. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகளை வினவுதல்
மானுடவியல் திறன்
காட்டு:
 வாழ்நாள் முழுவதும்
அ) மாணவர் (A) வாசித்த வாக்கியத்தில் எத்தனை செயல்கள் கற்றல்
இருக்கிறது?  தொடர்பாடல் திறன்
ஜவீனா டேவிட்

ஆ) மாணவர் (A) வாசித்த வாக்கியத்தில் பறித்தாள் எனும்


சொற்றொடர் என்னவாகம்? ஒரு வாக்கியத்தில் செயலைக்
குறிக்கும் சொல்லை என்னவென்று கூறுவோம்?

இ) “யார் பூங்காவில் பூக்களைப் பறித்தாள்?” என்னும்


கேள்விக்கு பதில் கிடைத்ததேயானால் அது என்னவாகும்?

ஈ) தனி வாக்கியத்தில் எத்தனைப் பயனிலை இருக்கலாம்?

7. மாணவர்கள் ஆசிரியர் வினவும் கேள்விகளுக்குப்


பதிலளித்தல்.

8. ஆசிரியர் மாணவர்கள் கூறும் பதில்களைக் கூகொள்


கூடலில் கலந்துரையாடி சரிபார்த்தல்.

படி 2 தலைப்பு: 1. ஆசிரியர் கூகொள் கூடலில் ‘குய்சீஸ்’ புதிர் முறைதிறம்


சுற்றுச்சூழல் விளையாட்டைப் பகிருதல்.
(±15 நிமிடம்)  தனியாள் முறை
(இயங்கலை) 2. ஆசிரியர் சில மாணவர்களைத் தெரிவுசெய்தல்.
ப.து.பொ
‘குய்சீஸ்’ செயலி 3. தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் ‘குய்சீஸ்’ செயலில்
காண்பிக்கப்படும் தனி வாக்கியம் தொடர்பான புதிர்  ‘குய்சீஸ்’ செயலி
(Quizizz app)
கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிவித்தல்.
தற்கால பயிற்றியல்
4. ஆசிரியர் மாணவர்கள் கூறும் பதில்களை அழுத்துதல்.
நடைமுறை
5. மாணவர்கள் கூறும் பதில்களை ஆசிரியர் அவ்வபோது
‘குய்சீஸ்’ செயலியின் துணைகொண்டு சரிபார்த்தல்.  6C ஆற்றல் –
தொடர்பாடல்
 தகவல்
ஜவீனா டேவிட்

தொழில்நுட்ப அறிவு

மானுடவியல் திறன்

 வாழ்நாள் முழுவதும்
கற்றல்
 தொடர்பாடல் திறன்

மதிப்பீடு தலைப்பு: 1. ஆசிரியர் மாணவர்களை நடவடிக்கை நூலில் பக்கம் 50, முறைதிறம்


பழங்கள் 51 இல் இருக்கும் பயிற்சிகளைச் செய்ய பணித்தல்
(±15 நிமிடம்)  தனியாள் முறை
(முடக்கலை) 2. மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைக்கிணங்க முடக்கலையில்
ப.து.பொ
நடவடிக்கை நூல் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சியைச் செய்தல்
3. அப்பயிற்சிகள் யாவும் கொடுக்கப்படிருக்கும் சொற்களைக்  நடவடிக்கை நூல்

துணைகொண்டு தனி வாக்கியம் அமைப்பதன் தற்கால பயிற்றியல்


தொடர்பானதாக அமைதல். நடைமுறை
4. மாணவர்கள் செய்த பயிற்சியைப் படமெடுத்து புலனம்வழி
 6C ஆற்றல் –
ஆசிரியருக்கு அனுப்புதல்
தொடர்பாடல்
5. பின்னர், ஆசிரியர் மாணவர்களின் பதில்களைச் சரிப்பார்த்து
சரியான பதில்களை மாணவர்களுக்கு அனுப்புதல் மானுடவியல் திறன்
ஜவீனா டேவிட்

 வாழ்நாள் முழுவதும்
கற்றல்

முடிவு தலைப்பு: 1. ஆசிரியர் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல் செய்தல். முறைதிறம்


பழங்கள் 2. மாணவர்கள் ஆசிரியரின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
(±2 நிமிடம்)  வகுப்பு முறை
(இயங்கலை) காட்டு:
அ) வாக்கியம் எத்தனை வகைப்படும்?
ஆ) நாம் இன்று அறிந்துகொண்ட வாக்கியவகை என்ன?
இ) தனி வாக்கியம் என்றால் என்ன?
ஈ) தனி வாக்கியத்தில் இரண்டு பயனிலைகள் இருக்கலாமா?
3. ஆசிரியர் சில மாணவர்களைத் தனி வாக்கியம் ஒன்றனைக்
கூறச் சொல்லுதல்.
4. மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைக்கிணங்க தனி வாக்கியம்
ஒன்றனைக் கூறுதல்.
5. ஆசிரியர் மாணவர்கள் கூறும் வாக்கியங்களைச் சரிபார்த்தல்.
6. மாணவர்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருப்பின் ஆசிரியர்
அதனைத் தீர்த்து வைத்தல்
7. ஆசிரியர் இன்றைய பாடத்தை நிறைவுக்குக் கொண்டு
வருதல்
ஜவீனா டேவிட்

தொடர் தலைப்பு: வளப்படுத்தும் நடவடிக்கை முறைதிறம்


நடவடிக்கை பழங்கள்  ஆசிரியர் மாணவர்களுக்குப் படம் ஒன்றனை வழங்கி
 தனியாள் முறை
(முடக்கலை) அதற்கேற்ப ஆறு தனி வாக்கியங்களை எழுதப் பணித்தல்.
(வீட்டுப்பாட
குறைநீக்கல் நடவடிக்கை
ம்)
 ஆசிரியர் மாணவர்களுக்கு சொற்களை வழங்கி, அதனைப்
பயன்படுத்தி நான்கு தனி வாக்கியங்களை எழுதப்
பணித்தல்.

சிந்தனை மீட்சி:

அ) இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடைந்த மாணவர்கள் (17/27)

 இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடைந்த மாணவர்களின் எண்ணிக்கையானது பதினெட்டு ஆகும். இப்பதினேழு
மாணவர்களும் கூகொள் கூடலில் நிகழ்த்திய வகுப்பிற்கு வருகையளித்தனர். கற்றல் கற்பித்தல் மீதான இம்மாணவர்களின்
ஈடுபாடானது சிறப்பாகவே அமைந்தது. பீடிகையின்போது, மாணவர்களிடம் படம் ஒன்றனைக் காண்பித்தேன். அப்படம் தொடர்பாக
ஜவீனா டேவிட்

மாணவர்களின் கருத்துகளைப் பெற, அவர்களிடம் சில கேள்விகளை வினவினேன். மாணவர்களும் நான் கேட்கும் கேள்விகளுக்குச்
சரியான பதில்களையே கூறினார்கள். மாணவர்களின் பதில்களைக் கொண்டு என்னால் இன்றைய பாடத் தலைப்போடு இணைத்து
அடுத்த நடவடிக்கைக்குச் செல்ல முடிந்தது. ஆனாலும், பீடிகையிலுள்ள நடவடிக்கையை நான் மேலும் மெருகூட்டிருக்கலாமென
எண்ணம் கொண்டேன். காரணம், மாணவர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவிற்கு உற்சாகம் இல்லை. அடுத்து படிநிலை ஒன்றில்,
நழுவப்படைப்பினைக் கூகொள் கூடலில் படைத்து, மாணவர்களுக்குத் தனி வாக்கியம் தொடர்பான தகவல்களை விளக்கமளித்தேன்.
தனி வாக்கியத்தில் இருக்க வேண்டிய கூறுகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினேன். மாணவர்களிடம் கேள்விகளை
எழுப்பிக்கொண்டே நான் விளக்கமளித்ததால் மாணவர்கள் எனது கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்துக்கொண்டே இருந்தனர்.
அந்நேரத்தில் அவர்களின் புரிதலையும் என்னால் சோதிக்க முடிந்தது. ஆனாலும், சில மாணவர்கள் இரண்டு பயனிலைகளைக் கொண்ட
வாக்கியத்தையும் தனி வாக்கியம் என்றனர். அவர்களுக்கென்று நான் மீண்டும் தனி வாக்கியம் கூறுகள் தொடர்பாக விளக்கி, கூடுதல்
காட்டுகளையும் எடுத்துக் கூறினேன். அதன் பிறகு, சில வாக்கியங்களைக் கூறி தனி வாக்கியத்தை அடையாளம் காண பணித்தபோது
மாணவர்கள் சரியான முறையில் தனி வாக்கியத்தினை அடையாளம் கண்டு அதனுள் இருக்கும் எழுவாய் பயனிலையையும்
குறிப்பிட்டனர். தொடர்ந்து படிநிலை இரண்டில், ‘குய்சீஸ்’ செயலியின்வழி மாணவர்களுக்குப் புதிர் கேள்விகளை வழங்கியபோது
ஆர்வமுடன் மாணவர்கள் ஈடுபட்டனர். தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் காண்பிக்கப்படும் கேள்விகளுக்குப் பதில்களைக் கூற,
அதனை அழுத்தி சரிபார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு கேள்விகளுக்கும் இம்மாணவர்கள் சரியான பதில்களையே கூறினார்கள். அதன்
பிறகு, மதீப்பீடு நடவடிக்கையாக மாணவர்கள் முடக்கலையில் நடவடிக்கை நூல் பக்கம் 50, 51 இல் பயிற்சிகளைச் செவ்வனே செய்து
அதனைப் படமெடுத்து கூகொள் வகுப்பறையில் பதிவிட்டனர். மாணவர்களுக்குக் கூடுதல் புரிதலுக்காக தனி வாக்கியம் தொடர்பான
காணொலி ஒன்றனைத் தயார்செய்து அதனையும் கூகொள் வகுப்பறையில் பதிவிட்டேன். இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக
அடைந்த மாணவர்களுக்கு வளப்படுத்தும் நடவடிக்கை வழங்கப்படும்.

ஆ) இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடையாத மாணவர்கள் (10/27)

 இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடையாத மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பத்து ஆகும். இப்பத்து மாணவர்களில்
ஒருவர் மட்டுமே கூகொள் கூடலில் நடந்தேறிய கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் கலந்துகொண்டார், ஆனால் இணையக் கோளாரின்
காரணமாக அவரால் முழுவதுமாகக் கவனம் செலுத்த இயலவில்லை. கொடுக்கப்பட்ட நடவடிக்கையையும் இம்மாணவர் முழுமையாகச்
ஜவீனா டேவிட்

செய்துமுடிக்கவில்லை. இம்மாணவன் பாட நோக்கங்களை அடையாததன் முக்கியக் காரனம் இணையக் கோளாறு என்று நான்
கருதுகிறேன். மீதமுள்ள ஒன்பது மாணவர்கள் கூகொள் கூடலில் கலந்துகொள்ளவில்லை. இவர்களின் நலன்கருதி தனி வாக்கியம்
தொடர்பான காணொலி ஒன்றனைத் தயார்செய்து அதனைக் கூகொள் வகுப்பறையில் பதிவிட்டேன். பிறகு, அக்காணொலியின்
துணைகொண்டு பயிற்சிகளைச் செய்யப் பணித்தேன். ஆனாலும், இவர்களிடமிருந்து எந்தவொரு பயிற்சியும் எனக்கு வரவில்லை.
இம்மாணவர்களுக்குக் குறைநீக்கல் நடவடிக்கை வழங்கப்படும்.

You might also like