You are on page 1of 49

கற்பித்தல் முறை 

(Teaching method) 
• கற்றலைச் செயல்படுத்த ஆசிரியர்கள் பயன்படுத்தும்
கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது.

• இந்த உத்திகள் கற்பவரின் இயல்பின் அடிப்படையிலும்,


கற்பிக்கப்படும் பாடப்பொருளின் அடிப்படையிலும்.
அமைந்திருக்கும்.

• ஒரு குறிப்பிட்ட கற்பித்தல்முறை பொருத்தமானதாக


மற்றும் செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அது
கற்பவரின் தன்மையுடன் தொடர்புடையதாக இருக்க
வேண்டும்.

• கற்பவரின் இயல்பிற்கும், பாடப்பொருளின் தன்மைக்கும்


ஏற்ப கற்பித்தல்முறைகள் வடிவமைக்கவும்
தேர்ந்தெடுக்கவும் வேண்டும்.
வகுப்பறைக் கற்பித்தல் முறைகள்

ஆசிரியர் மையக் கற்பித்தல் மாணவர் மையக் கற்பித்தல்


முறைகள் முறைகள்

விரிவுரை முறை செயல்திட்ட முறை

குழுக் கற்பித்தல்முறை களப்பயணம்

பாத்திரமேற்று நடித்தல் பயிலரங்கம்

பிரச்சினை திர்த்தல் முறை தனிநபர் ஆய்வக முறை

செய்துகாட்டல் முறை இணைந்துக் கற்பித்தல் முறை

விரிவுரையுடன் கூடிய செய்துகாட்டல் முறை பிரச்சினை தீர்த்தல் முறை

ஆய்வக முறை கண்டறி முறை


கற்பித்தல் முறைகள் (Teaching methods)

1. விரிவுரை முறை (Lecture)


2. விரிவுரை கலந்தாய்வு (Lecture discussion)
3. கருத்தரங்கு (Seminar)
4. Symposium
5. Panel discussion
6. குழு கலந்தாய்வு (Group discussion)
7. தனிப்பயிற்சி (Tutorials)
8. பாத்திரமேற்று நடித்தல் (Role play)
9. Integrated teaching (horizontal and vertical)
10. Talking point sessions
11. பயிற்சிப் பட்டறை (Workshops)
12. மாநாடு (Conferences)
கற்பித்தல் முறை (Teaching method)
 ஆசிரியர் மைய முறையில் 
– ஆசிரியர்கள் முதன்மையானவர்கள்,மாணவர்கள்,  ஆசிரியர்கள் கூறுவதை
மெளனமாக கேட்டு கற்றலில் ஈடுபடுவர். ஆசிரியர்கள்
மைய கற்பித்தல்அணுகுமுறையில்,  ஆசிரியர்கள் அதிகார
மையங்களாக விளங்குகிறார்கள். தேர்வு (Test) மற்றும் மதிப்பீட்டின்
(Evaluation) மூலம் மாணவர்களின் கற்றல் அடைவுகள் சோதிக்கப்படுகிறது. 

 மாணவர் மைய முறையில் 
– ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் சமமாக
செயல்படுகின்றனர். மாணவர்கள் பாடப்பொருளை முழுவதுமாக புரிந்து
கொள்ள வைப்பதும் மற்றும் பாடப்பொருளை எளிதாக்குவதும் 
ஆசிரியரின் முதன்மைச் செயல்பாடாகும். நேரடியாக அல்லது
மறைமுகமாக மாணவர்களின் கற்றல்அளவிடப்படுகிறது. 

– ஆசிரியர்கள் இங்கே ஒரு பயிற்றுநராகவும் (Coach) ,வழிநடத்துபவராகவும்


(Facilitator) செயல்படுகிறார்.[மாணவர்களின் கற்றல் குழுச் செயல்பாட்டின்
மூலமும், மாணவனின் வகுப்பறை செயல்பாட்டின் மூலமும்
அளவிடப்படுகிறது.
விரிவுரை முறை
• கல்வியுலகில் பெரும்பாலானோரால் கையாளப்படும்
கற்பித்தல்முறை விரிவுரை முறையாகும்.

• மேநிலை, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இம்முறை


பின்பற்றப்படுகிறது.

• உயர்கல்வி மாணவர்கள் கல்வியறிவும் வயதுக்கேற்ற


பட்டறிவும் பெற்றவர்களாதலால் கூறும் கருத்துகளைக்
கற்பனை செய்யவும் விளங்கிக் கொள்ளவும் இயலும்
என்பதாலேயே விரிவுரை முறையைக் கையாளுகின்றனர்.

• இம் முறையின் வாயிலாகப் பெருங்குழுக்களுக்கு


எளிமையாகக் கற்பிக்கலாம்.

• நாற்பது மாணவர்கள்முதல் இருநூறு மாணவர்களுக்கு ஒரே


நேரத்தில் விரிவுரை முறையில் கற்பிக்கலாம்.
முன்னேற்பாடு

• ஒரு மணிநேரம் அல்லது ஒரு பாடவேளைக்கான விரிவுரை
தயாரிப்புக்குக் குறைந்தது நான்கு மணி நேரமாவது பாடுபட்டுத்
தலைப்பு / பாடப்பொருளுக்கேற்ற கருத்துகளைத் தொகுக்க
வேண்டும்.

• தேடித் தொகுத்தவற்றை, வகைப்படுத்தி, முறைப்படுத்தி,


முன்னுக்குப்பின் முரணில்லாமல் கோக்கவேண்டும்.

• விரிவுரைக்குத் தேவையான குறிப்புகளைக் கையடக்கத் தாளில்


எழுதிக்கொள்ளவேண்டும்.

• இக் குறிப்புகளைக்கொண்டு எச்சூழலிலும் சிறப்பாகக் கற்பிக்கலாம்.

• அல்லது, நடைமுறைக்கேற்றவாறு ஒளியூடுருவுத் தாள், நழுவங்கள்,


காட்சிப் படங்கள், கருத்துப் படங்கள், வரைப்படங்கள், புள்ளி
விவரங்கள் முதலியவை கொண்டும் கற்பிக்கலாம்.
விரிவுரையாற்றும் முறை

• விரிவுரைமுறையில் மாணவர்களின்/கேட்போரின் வயது, மனநிலை,


பாடப்பொருள், ஆகியவற்றை மனத்திற் கொள்ளவேண்டும்.
• வகுப்பறைக்கேற்ற, அனைவரும் அறிந்த எளிமை யான சொற்களையே
பயன்படுத்தவேண்டும்.
• இடத்திற்கேற்பவும் கருத்துக்கேற்பவும் உள்ளூர் மொழிவழக்குகளைப்
பயன்படுத்தலாம்.
• விரிவுரை தங்குதடையில்லாமல் ஆற்றோட்டமாகவும் கேட்போரின்
ஏற்குந்திறனுக் கேற்றவாறும் இருக்கவேண்டும்.
• கவனச்சிதறல் ஏற்படாவண்ணம் விரிவுரையாற்றுவதும் கவனச் சிதறல்
ஏற்பட்டால் ஒருமுகப்படுத்துவதும் விரிவுரையாளரின் கடமையாகும்.
• ஒரு கருத்தை விளக்கிய நிறகே அடுத்த கருத்துக்குச் செல்லவேண்டும்.
விரிவுரைமுறையில் இடையிடையே ஐயங்களை எழுப்ப, வினாக்கள் கேட்க
இடந் தருவதோ அல்லது விரிவுரைக்குப்நின் இடமளிப்பதோ
விரிவுரையாற்றுபவரைப் பொருத்ததாகும்.
• எப்படியிருப்நினும் கற்போருக்கு/கேட்போருக்கு ஏற்படும் ஐயங்களையும்
வினாக்களையும் கேட்பதற்கான நேரத்தை ஒதுக்கவேண்டும்.
• இல்லையெவல், ீ அவர்களுக்கு மனநிறைவு ஏற்படாது. மேலும்,
விரிவுரையாற்றுபவர் கேட்போரின் கற்றலடைவையும்/ தான் கூறிய
கருத்தடைவையும் இதன்வழி அறிந்துகொள்ளலாம்.
நிறைகள்
• ஒரே நேரத்தில் அதிகமானோர்க்குக் கற்பிக்கலாம்.

• கல்வியறிவும் பட்டறிவும் மிக்கவரிடமிருந்து கற்பதால்


ஈர்ப்பும் வியப்பும் ஏற்படுகிறது.

• சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது.

• தேவையான விளக்கங்களைக் கேட்டுப்பெற


வாய்ப்பளிக்கப்படுகிறது.

• வினாக்கள், ஐயங்கள் கேட்க நேரம் ஒதுக்கப்படுகிறது.


குறைகள்
• அனைவரும் சிறப்பாக விரிவுரையாற்றுவர் எனக் கூற முடியாது.
• விரிவுரைக்கு முன்தயாரிப்புப் பதிகள் அதிகம். தேவையான நூல்கள்
கிடைப்பதரிது.
• அனைவரும் முன்தயாரிப்போடு சிறப்பாக விரிவுரையாற்றுவர் என
எதிர்பார்க்க முடியாது.
• விரிவுரைமுறை ஒருபோக்கினதாக அமைகிறது.
• பெருங்குழுக் கற்றலால் கேள்விகள் கேட்க அனைவருக்கும் வாய்ப்போ
நேரமோ இல்லை.
• குறிப்நிட்ட நேரத்திற்குள் விரிவுரையை முடிக்கவேண்டும் என்பதால், தான்
தொகுத்தவற்றை யெல்லாம் கூறிவிடவேண்டும் எனும் வேகத்தோடு
விரிவுரையாற்றுவர்.
• வினாக்கள், ஐயங்கள் கேட்கக் குறைந்த நேரமே ஒதுக்கப்படுவதால்,
அனைவருக்கும் வாய்ப்நில்லாமல் போகிறது.
• மின்சாதனத் துணைக்கருவிகளைப் பயன்படுத்தவியலா/செயல்படா நிலை
ஏற்படலாம்.

• அனைவருக்கும் கற்றல் சென்றடைந்தது எனக் கூற முடியாது.


• கவனச் சிதறலுக்கு வாய்ப்பு அதிகம். பெருங்குழுவாதலால் கட்டுப்படுத்துவது
கடினம்.
• ஒரு சிலரே முழு நிறைவோடு கற்றிருப்பர்.
• விரிவுரையாற்றுபவருக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது.
விரிவுரை சோதனை செய்து காட்டும் முறை
•இம் முறை விரவுரை முறை, சோதனை செய்து காட்டும் முறை ஆகிய இரு முறைகளின்
நற்பண்புகளையும் பெற்றுள்ளது.

•ஆசிரியர் வகுப்பறையில் சோதனைகளைச் செய்து காட்டிக்கொண்டே அவற்றைப் பற்றி


விளக்கங்களைக் கூறுவர். விரிவுரை முறையைப் போல் அன்றி இம்முறையில் மாணவர்கள் நிறைந்த
பங்கு பெறுகின்றனர்.

•இங்கு மாணவர்கள் உண்மையான பரிசோதனையைக் கண்கூடாகப் பார்த்துச் செய்யும்


முறையையும் காண்பதால் அவர்களுக்கு அவற்றைக் கற்க வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாகிறது.

•மாணவர்கள் கற்பனையில் கற்க வேண்டும் பொருட்களைப் பற்றிப் பேசுவது, சிறிது கடினமாகும்.


மாணவர்கள் அதைப் புரிந்துகொள்ளுதலும் இயலாததாகும்.

•நேரில் பார்க்கும் பொருள்களைப் புரிந்துகொள்வதும் எளிமையானதாகும். அதனால் இம் முறை


காட்சிப் பொருளிலிருந்து கருத்துப் பொருளுக்கு செல்வதால் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது.

•ஆசிரியர் செய்யும் சோதனைகளை மாணவர்கள் கூர்ந்து கவனிக்கும் தன்மையும், காரணம்


கண்டறியும் திறனும் ஏற்படுகின்றன.
• 

• 
•உயர்நிலைப் பள்ளி நிலையில் முதன் முதலில் அறிவியல் கற்பிக்கப்பட்ட போது மாணவர்களிடம்
கவர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி ஆசிரியர் சொல்லும்
கருத்துக்கள் உண்மையானவை என்பதை நிரூபிக்கத் தொடர்ச்சியான பல சோதனைகள் செய்து
காட்டப்பட வேண்டும் என்று உணரப்பட வேண்டும் என்று உணரப்பட்டது.

•இம் முறையினால் மாணவர்கள் பாடங்களை நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் பின்னர் பல


அறிவியல் வல்லுனர்கள் மாணவர்களே சோதனைகளைச் செய்தல் சிறப்பு வாய்ந்தது என்று
கருதினர். இம் முறைக்கே தனியாள் சோதனை முறை என்று பெயர்.

•இவ்விரண்டு முறைகளில் எது அதிக நன்மை தருவது என்று ஆராய்ச்சி செய்யப்பட்டது.


ஆராய்ச்சியின் முடிவில் இரு முறைகளுமே ஒரே வகையான முடிவத்தான் தருகின்றன என்று
கண்டுபிடிக்கப்பட்டது.

•ஆனால் இதில் காணப்படும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் செய்துகாட்டும் முறையில்


பயிலும் மாணவன் உடனே நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகிக்றான்.

•இவ்விரு முறைகளினால் ஏற்படும் முடிவுகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. அதனால்


இவ்விரு முறைகளில் ஒன்று மற்றொன்றைவிட உயர்ந்தது அல்ல என்று நிரூபிக்கப்பட்டது.
• 
• ஆசிரியர் நன்கு திட்டமிட்டு முன்னரே செய்து பார்த்து பின்னர் வகுப்பில் கடைபிடித்தால்
விரிவுரை சோதனை செய்துகாட்டும் முறை சிறந்த பயனைத்தரும். செய்துகாட்டும் சோதனை
சரியாக நடக்காவிட்டால் அது மாணவர்களிடம் விரும்பத்தகாத மாற்றங்களையும்
எண்ணங்களையும் உண்டாக்குவதோடு அறிவியல் மீதான நம்பிக்கையையும் இழக்கக் கூடும்.
• 
• ஆசிரியர் நன்கு திட்டமிட்டு முன்னரே செய்து பார்த்து பின்னர் வகுப்பில் கடைபிடித்தால்
விரிவுரை சோதனை செய்துகாட்டும் முறை சிறந்த பயனைத்தரும்.

• செய்துகாட்டும் சோதனை சரியாக நடக்காவிட்டால் அது மாணவர்களிடம் விரும்பத்தகாத


மாற்றங்களையும் எண்ணங்களையும் உண்டாக்குவதோடு அறிவியல் மீதான நம்பிக்கையையும்
இழக்கக் கூடும்.

• சோதனை நடத்துவதில் தோல்விகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் மாணவர்கள் ஆசிரியரிடம்


நம்பிக்கையை இழந்துவிடுவர்.

• ஆனால் சோதனை வெற்றிகரமாக முடிந்தால் அது மாணவர்களிடம் விரும்ப்பத்தக்க


மாற்றங்களை ஏற்படுத்துவதோடு அறிவியல் பயிற்றுவிப்பதின் நோக்கங்களையும் நிறைவேற்றும்.
நல்ல சோதனை செய்து காட்டும் முறையின் பண்புகள்
1) சோதனைகள் நன்கு திட்டமிடப்பட்டு முன்னரே செய்து
பார்க்கப்பட வேண்டும். அதனால் அச்சோதனையில் காணப்படும்
இடர்பாடுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கைகளையும் ஆசிரியர் உணர முடியும். இதனால்
சோதனை திட்டமிடப்படி நடத்தப்படும். திட்டமிடாமல்
சோதனைகள் செய்தால் மாணவர்களுக்குள் ஊக்கம் ஏற்படாது.
சோதனை செய்யும்போது தவறு ஏற்பட்டால் இது இப்படி நடந்திருக்க வேண்டுமே என்று கூறுதல்
மாண வர்
கள்ஆ சி
ரியர்
களின ்மீ
த ுவ ை
த் து
ள் ள நம்
பி
க்க ை ய ைஇழக் கச்ச ெ
ய்
யும்.

•2) ஆசிரியர் செய்யும் சோதனையின் நோக்கத்தைத் தெளிவாக உணரவேண்டும். சோதனை


செய்யும் முன்னரே ஆசிரியர் சோதனை செய்வதன் நோக்கத்தையும் அதன் பொதுப்
பண்புகளையும் மாணவர்களிடம் கூற வேண்டும்.

•3) சோதனை செய்துகாட்டுவதில் மாணவர்களும் பங்குகொள்வதாக இருத்தல் வேண்டும்.


ஆசிரியர் மாணவர்களைக் கொண்டே சோதனைக்கு வேண்டிய கருவிகளை அடுக்கவும்
அடிக்கடிக் கேள்விகள் கேட்டு மாணவர்கள் செயும் சோதனைகளை உணர்ந்து கொண்டனரா
என்பதை அறிய வேண்டும். சோதனையின் முக்கியமான கடினமான பகுதிகளை ஆசிரியர்
எளிமையாக்கி சுருக்கிச் சொல்வதோடு கரும்பலகையிலும் எழுதி வைத்தால் நாலமாகும்.
•4) சோதனைக்குத் தேவையான துணைக்கருவிகளை வரிசையாக அடுக்கி வைத்தல் நலம்.
சோதனைக்கும் பயன்பட வேண்டியவைகளை இடதுகை புறத்திலும், பயன்படுத்தி விட்டதை
வலதுகைப் புறத்திலும் வைக்க வேண்டும்.

•5) செய்யும் சோதனை மாணவர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டுமாதலால் மாணவர்களின்


மேசைகளைவிட சிறிதளவு உயரமானதாக செய்துகாட்டும் மேசை இருக்க வேண்டும்.

•6) செய்யும் சோதனை எளிமையும் வேகமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். நேரங்கழித்து முடிவு
தெரியும் சோதனைகளும் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட சோதனைகளும்
மாணவர்களின் ஊக்கத்தைக் குறைக்கும். அவற்றைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

•7) செய்யும் சோதனை தொடர்ச்சியாக இருப்பதோடு மாணவர்களின் வாழ்க்கையோடு


தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
•8) சோதனை செய்யும்போது பிற கற்பிக்கும் கருவிகளையும் பயன்படுத்தி அது
உண்மையானது என மாணவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

•9) செய்துகாட்டும் சோதனையின் மூலம் மாணவர்கள் மனதில் பிரச்சினையை


உண்டாக்கி அதைத் தீர்க்கும் வழிகளையும் காட்ட வேண்டும். இது அறிவியல் முறைக்குப்
பயிற்சி அளிப்பதாக அமையும்.

•10) நடிப்பதன் மூலமோ அல்லது வேறு சில செயல்களின் மூலமோ ஆசிரியர்


மாணவர்களின் மனத்தைக் கவர வேண்டும்.
நல்ல செய்துகாட்டும் முறைக்குத் தேவையானவை
•செய்து காட்டும் சோதனையின் வெற்றிக்குப் பல காரணங்கள் அடிப்படையாக உள்ளன. அவற்றை
ஆசிரியர் கடைப்பிடிக்க வேண்டும்.
•1)போதுமான வெளிச்சம் உள்ளதும் மாணவர் அனைவரும் பார்க்கத்தக்க வகையிலும் செய்து
காட்டும் மேசை உள்ளதுமான விரிவுரை செய்துகாட்டும் அறை இருக்க வேண்டும்.
•2) சோதனை செய்துகாட்வதற்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் பெரியதாகவும், சரியானதாகவும்
இருக்க வேண்டும்.
•3) சோதனை செய்யும்போது சில கருவிகள் உடைந்துவிட்டால் அதைத் தீர்க்கத் தனியான
கருவிகள் சிலவற்றையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
•4) விதிகளை எழுதுவதற்கும், சோதனை முறைகளையும் படங்களையும் வரைவதற்கு
செய்துகாட்டும் மேசைக்குப் பின்புறம் பெரிய கரும்பலகை இருக்க வேண்டும்.
•5) கருவிகளைக் கையாளுவதில் திறமை உள்வராகவும், குறைகளை நிறைவு செய்பவராகவும்
ஆசிரியர் இருப்பாரேயானால் அவரது திறமையைக் காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
•6) சோதனையின் முக்கியப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றைக் கரும்பலகையில்
எழுதுவது நல்லது.
•7) கருமபலகையில் எழுதும் குறிப்புகளை மாணவர்கள் எழுதிக்கொள்ள நேரம் கொடுக்க
வேண்டும்.
சோதனை செய்துகாட்டுதலை நடத்துதல்
•1)திட்டமிடுதலும் தயார் செய்தலும்
•செய்துகாட்டும் முறையைப் பின்பற்றுவதற்கு ஆசிரியர்தகுந்த முறையில் தயார் செய்துகொள்ள
வேண்டும். தயார் செய்யும்போது கீழ்க்கண்ட கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
•அ) பாடப்பொருள்
•ஆ) பாடத்திட்டத்துடன் கேட்க வேண்டிய கேள்விகள்
•இ) தேவையானக் கருவிகளைச் சேகரித்து வைத்து அவற்றை அடுக்கி வைத்தல்.
•ஈ) பரிசோதனைகளைத் தனியாகச் செய்து பார்த்தல்.

•2) பாடத்தை அறிமுகம் செய்தல்


•மாணவர்கள் மனத்தைப் பொருத்தமான முறையில் ஆயத்தம் செய்யாமல் பாடத்தைத்
தொடங்குவது பயனற்றதாகும். ஒரு பிரச்சினை வடிவில் பாடம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் மாணவர்களின் ஆர்வம் தூண்டப்படும். ஒரு ஆசிரியர் மாணவர்களின்
ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் தூண்டிவடுவாரேயானால் பாதிக் கற்பித்தல் முடிந்ததாகக்
கருதப்படும்.
•3) பாடப்பொருளை எடுத்துக்கூறுதல்
•எடுத்துக்கூறப்பட வேண்டிய பாடப்பொருள் எப்படி இருப்பினும் அதனைக் கூட்டியோ குறைத்தோ
ஆசிரியர் தன் விருப்பப்படி மாற்றி மாணவர்களுக்குக் கவர்ச்சி ஏற்படக்கூடிய வகையில் கற்பிக்க
வேண்டும். அவருடைய அறிவிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் அதற்கத் தேவையான
எடுத்துக்காடுகளைக் கூறவேண்டும். கற்பிக்கப்பட வேண்டிய பாடம் உயிரியல் தலைப்பாக
இருந்தாலும் சிறந்த அறிவு பெற்ற ஆசிரியர் மற்ற அறிவியல் பிரிவுகளிலிருந்து அதனுடன்
தொடர்புடைய கருத்துக்களை எடுத்துக்கூறலாம். அதனுடன் கூடுமான இடங்களில் சிறந்த
அறிவியல் வல்லுநர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் வாழ்க்கை, வெற்றி, அடைவு
போன்றவை மாணவர்களின் கவனத்தைக் கவரும் தன்மை வாய்ந்தவையாகும்.

•4) பரிசோதனைகள் செய்தல்


• செய்துகாட்டும் மேசையிடத்தில் செய்யும் வேலை மாணவர்கள் பார்த்துச் செய்யும் வகையில்
தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அது சுத்தமானதாகவும் ஒழுங்காகவும் இருக்க
வேண்டும். பரிசோதனைகள் சரியான முறையில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள்
ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருக்க வேண்டும். பரிசோதனைகள் எளிமையானதாகவும்
வேகமானதாகவும் இருக்க வேண்டும். தேவையான கருவிகளை அதிகமாக எடுத்து
வைத்துக்கொள்ள வேண்டும்.
•5) கரும்பலகை வேலை
•விரிவுரை சோதனை செய்துகாட்டும் முறையில் கருமபலகை மிகவும் பயனுள்ளதாகும். அவை
முக்யிமாகப் பயன்படும் நேரங்களாவன,
•அ) சுருக்கமான வடிவத்தில் பரிசோதனை முடிவுகளையும் கொள்கைகளையும் எழுதும்போது
•ஆ) தேவையானப் படங்களை வரையும்போது.
• 
•6) மாணவர் எழுதுதலும் மேற்பார்வையும்
•செய்துகாட்டும் சோதனை முடிந்தவுடன் கரும்பலகையில் எழுதியுள்ள சுருக்கத்தையும்
படங்களையும் மாணவர் எழுதிக்கொள்ள ஆசிரியர் நேரம் கொடுக்க வேண்டும். இவற்றை
வைத்துக்கொண்டு மாணவர்கள் மேலும் தங்களுக்குத் தேவையான செய்திகளுக்கான
மேற்கோள் நூல்களைத் தேடலாம்.
நன்மைகள்
•1)இம்முறை பொருளாதாரச் சிக்கனம் வாய்ந்தது. ஏனெனில் இதன் மூலம் பணமும் நேரமும்
மிச்சப்படுத்தப்படுகின்றன. ஆசிரியரே செய்வதால் வேகமாகப் பல சோதனைகளைக் குறைந்த
நேரத்தில் செய்து முடிக்கலாம்.
•2) இது உளவியல் முறைப்படி ஒரு சிறந்த முறையாகும். ஏனெனில் மாணவர் எதையும் கற்பனையில்
காண வேண்டியதில்லை. அனைத்தையும் நேரடியாகக் காண்கின்றனர்.
•3) பயன்படுத்தப்படும் கருவிகள் அதிக விலையுள்ளவையாக இருக்கும்போதும் எளிதில்
உடையும்போதும், மாணவர் கையாண்டால் உடையக் கூடியதாக இருக்கும் போதும் இம்முறை
சிறந்ததாகும்.
•4) ஆபத்து / அபாயம் நிறைந்த பரிசோதனைகளுக்கும், சில திறமைகள் தேவைப்படுகின்ற
பரிசோதனைகளுக்கும் இம்முறை சிறந்ததாகும்.
•5) இது மாணவர் மைய முறையாக இல்லாவிட்டாலும் மாணவர் அனைவரும் உற்றுநோக்குவதிலும்,
குறிப்புகள் எடுப்பதிலும், கேள்விகளுக்கு விடையளிப்பதிலு, படங்கள் வரைவதிலும் சில நேரங்களில்
பரிசோதனைக்குத் தேவையான கருவிகளைக் கையாளுவதிலும் பரிசோதனை செய்வதிலும்
தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.
•6) இம்முறை மீத்திறம் பெற்ற, சராசரி, குறைந்த மதிப்பெண் பெறுவர் ஆகிய எல்லா நிலை
மாணவர்களுக்கும் ஏற்ற முறையாகும்.
குறைகள்
•செய்து கற்றல் என்னும் கல்வியின் முக்கியக் குறிக்கோளும் கற்றதின் உளவியல்
அடிப்படையும் இம்முறையில் இடம் பெறவில்லை. அது ஒன்றுதான் இம்முறையின் பெரும்
குறை.
குழுக் கற்பித்தல்
• குழுக் கற்பித்தல் என்பது இரண்டு / அதற்கு
மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து இரண்டுக்கு
மேற்பட்ட வகுப்புகள் அடங்கிய மாணவர்களுக்கு
கற்பித்தலைக் கறிக்கும்

• ட்ரம்ப் திட்டம் எனவும் அழைக்கலாம்


• (இரண்டிற்கு மேற்பட்ட வகுப்புகளை ஒன்று சேர்த்து
இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று கூடி
ஒற்றுமையுடன் செயல்பட்டு, தங்களிடம் உள்ள
திறமைகளை வெளிக்கொணர திட்டமிட்டு,
கற்பித்து, மதிப்பீடு செய்யும் முறை – லியிட்
டிரம்ப்)

• சில ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து முறையாக


நோக்கத்ப் பகிர்ந்து திட்டமிட்டு பல வகுப்பு
மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற எந்த ஒரு
கற்பித்தல் முறையும் குழு கற்பித்தல் - டேலிங்
குழுக் கற்பித்தலின் நோக்கம்
• ஒரு ஆசிரியர் குழுவைப் பயன்படுத்திக்
கற்பித்தலில் வளர்ச்சி காண வேண்டும்

• ஆசிரியர்களின் தனித்திறன்களையும்,
ஆர்வங்களையும், கற்பித்தல் திறனையும்,
நேரத்தையும் சக்கிதயையும் சிறப்பாகப்
பயன்படுத்திக் கொள்கிறது.

• பாடத்திட்டம், கருவிகள், துணைக் கருவிகள்


போன்றவற்றைப் பயன்படுத்தி ஊக்குவித்தலையும்
சிறந்த கற்பித்தல் சூழ்நிலைகளையும்
உருவாக்குகிறது.
குழு அமைப்பு

• ஆசிரியரின் அனுபவம், திறன், தனித்தன்மை


ஆகியவற்றை கருத்தில் கொண்டு குழுக்கள்
அமைக்கப்படும்.

• அனைத்து ஆசிரியர்களுக்கும் பங்கும் பொறுப்பும்


உண்டு.

• 75 முதல் 240 வரை உள்ள மாணவர் குழுக்களுக்கு


3 முதல் 8 வரை ஆசிரியர் குழுக்கள் கற்பிக்கும்
பொறுப்பை ஏற்குக்கொள்கின்றனர்.

• குழுக்களின் தேவைகளை நிறைவு செய்ய


அலுவலர்களும் இதில் இடம் பெறுவர்.
குழுக்களின் வகைகள்
• ஒரு பாட குழுக்கள் – ஒரே பாடம், குறிப்பிட்ட
பாடவேளை, ஒரே வகுப்பு

• பல பாட குழுக்கள் – பல பாடங்களை சார்ந்த


ஆசிரியர் குழு

• ஒழுங்கு முறை குழுக்கள் – மூத்த ஆசிரியர்,


ஆசிரியர், உதவியாளர், எழுத்தர் என்றிருப்பர்.

• குழு கற்பித்தலுக்கான வசதிகள்


– பெரிய அறைகள்,
– இருக்கை வசதிகள்,
– அதிக நேரமுள்ள பாடவேளை
நிறைகள்

• அதிக கற்றல் வாய்ப்புகளை அளிக்கிறது.


• நேகிழ்வு தன்மை கொண்டது.
• பல ஆசிரியர்களின் பல்வேறு திறமைகளை
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
• மூத்த ஆசிரியரிடமிருந்து இளைய ஆசிரியர்கள்
பாடம் கற்பிக்கும் திறமைகளை அறிந்துகொள்ள
வாய்ப்பளிக்கிறது.
• காட்சிக் கேள்வி கருவிகளை சிறப்பாக
பயன்படுத்துகிறது.
• பள்ளி வளங்களை முறையாக பயன்படுத்துகிறது.
• ஆசிரியர்களின் திறன்கள் முழுமையாக வெளிப்பட
வாய்ப்பளிக்கிறது.
குறைகள்
• அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்களை ஒரு
குழுவாக அமர்த்திக் கற்பிப்பதால் தனிக் கற்பித்தல்
தவிர்க்கப்படுகிறது.
• திறமையற்ற திட்டமிடலினால் கற்பித்தல் சிறப்பாக
அமைவதில்லை.
• ஆசிரியர்களின் குழு உணர்ச்சியைத்
தோற்றுவிப்பது கடினம்.
• குழுவிற்கு தலைவராகச் செயலாற்றக் கூடிய
ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு.
• அனைத்துப் பாடங்களுக்கும் பொருந்தாது.
• பள்ளிகளில் வளம் குறைவாக உள்ளது.
• ஆசிரியர்களிடையே போட்டி, பொறாமை
உணர்ச்சியை வளர்க்கிறது.
கருத்தரங்கம்
• ஒரு தலைப்பு / பிரச்சினை தொடர்பான பல்வேறு
கருத்துகளை பல நபர்களிடமிருந்து பெறப்பட்டு பாட
வல்லுநர்களால் மதிப்பிடப்பட்டு செயல்படுத்துவதற்கு
பரிந்துரை செய்யப்படும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட குழு
விவாதமே கருத்தரங்கம்.

• தேசிய அளவிலான கருத்தரங்கம்


• பன்னாட்டுக் கருத்தரங்கம்
• மாநில அளவிலான கருத்தரங்கம்
• மாவட்ட அளவிலான கருததரங்கம்
• துறை சார்ந்த கருத்தரங்கம்
• வகுப்பறை கருத்தரங்கம்
கருத்தரங்கத்தின் படிநிலைகள்

• திட்டமிடல்

• தயாரித்தல்

• செயல்படுத்துதல்

• மதிப்பிடுதல்
திட்டமிடுதல்

• ஒரு புதிய பிரச்சினை / பாடத்தோடு தொடர்புடைய


பிரச்சினை முன்கூட்டியே தேர்ந்தெடுத்தல்

• பன்னாட்டுக் கருத்தரங்கமா, தேசிய கருத்தரங்கமா


என்பதை தீர்மானித்தல்

• நிதியுதவி, காலம், பாட வல்லுநர்கள், சிறப்பு


விருந்தினர்கள், அனுமதி, இடவசதி
போன்றவற்றை திட்டமிடுதல்
•  
தயாரித்தல்

• பிரச்சினையின் உட்கூறுகள் / உட்பிரிவுகள்,


பாட எல்லைகள், கருத்துகளின் அளவு,
கருத்தாளர்களின் பட்டியல், பாட
வல்லுநர்களை தேர்வு செய்தல்,
அரங்குகளை ஏற்பாடு செய்தல்
செயல்படுத்துதல்

• கருத்தரங்க தலைப்பின் உட்பிரிவிற்கு


ஏற்ப பல அரங்கங்களாக பிரிக்கப்பட்டு,
வல்லுநர்கள் முடிவு செய்வது, சிறப்பு
பேச்சாளரின் உரை, கருத்தாளர்களுக்கு
கருத்துகளை வழங்க நேரம்
வழங்குதல்
•  
மதிப்பிடுதல்

• கருத்தாளர்களின் கருத்துக்களை
தொகுத்து இறுதியில்
வல்லுநர்களால் மதிப்பிடப்பட்டு
புத்தகம் வடிவம் பெறுகிறது.
நிறைகள்

• மாணவர்கள் பல்வேறு வகைகளில் செய்திகளை /


தகவல்களை சேகரிப்பதற்கும் பல நூல்களை
படிப்பதற்கு வாய்ப்பும் அளிக்கிறது.

• மாணவர்களின் பங்கேற்கும் திறன், செய்திகளை


வெளிப்படுத்தும் திறன், தன்னம்பிக்கை வளர்கிறது.

• பல்வேறு வல்லுநர்கள், கருத்தாளர்களிடையே


கருத்துப் பரிமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கிறது.
குறைகள்
• கருத்தரங்கு நடத்த அதிக நேரம், பணம், இடவசதி,
பொருள் வசதி தேவை.

• அனைத்துப் பாடக் கருத்துக்களையும் இம்முறையில்


நடத்த இயலாது.

• பாடத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலாது.

• கருத்தரங்கை தலைமையேற்று நடத்துபவர்


திறமைமிக்கவராக இல்லாதபட்சத்தில் நோக்கம்
நிறைவேறாது.
பயிலரங்கம் / பணிப்பட்டறை
• கலந்துரையாடலும் செயல்முறையும் இணைந்த
ஒரு கற்பித்தல் முறையே பயிலரங்கம்

• மாணவர்களின் அறிவையும், கோட்பாடுகளையும்,


கருத்துகளையும் பயன்படுத்தி ஒரு புதிய
திறனை கற்பதற்கு வாய்ப்பு அளிப்பதே
பயிலரங்கின் நோக்கமாகும்.
பயிலரங்கின் படிநிலைகள்
• தற்போதுள்ள கல்வி சார்ந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்

• பிரச்சினையை வரையறுத்தல்

• பிரச்சினை தேர்ந்தெடுத்தலின் தேவையையும்


முக்கியத்துவத்தையும் கூறுதல்

• பிரச்சினையின் குறிக்கோள்களை வரையறுத்தல்

• பிரச்சினைகளின் உட்பிரிவுகள் பகுக்கப்பட்டு பல குழுக்களாக


பிரித்தல்

• பிரிச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு குழுக்கள் செயல்படல்

• ஒவ்வொரு குழுவும் தங்களின் முடிவை வெளியிடுதல்


• முடிவுகளை திறனாய்வு செய்தல், முடிவு காணல்.
• பிரச்சினைகளின் முடிவு பற்றி அறிக்கை தயாரித்தல்
வரைகலை
• சொற்களைவிடப் படங்கள் சக்தி
வாய்ந்தவை. பக்கம் பக்கமாய் எழுதி
விளக்குவதைவிட ஒரு படத்தின் மூலம்
எளிதாய் விளக்கிவிட முடியும். ஒரு
பெரிய அட்டவணையில் தரவுகளை
நிரப்பி விளக்கும் ஒரு கருத்தை ஒரு
வரைபடத்தின் மூலம் மிக எளிதாய்
உணர்த்திவிட முடியும்.
• மின்சார ரயிலில் பெண்களுக்குத் தனிப்பெட்டி
உண்டு.

• அதைக் குறிக்க அப்பெட்டியில் பெண்ணின்


படத்தை வரைந்திருப்பர். அதே போலக்
கழிப்பறைகளில் ஆண், பெண் படங்களைக்
காணலாம்.

• பெரும்பாலான மக்கள் படிக்காதவர்கள்


என்பதற்காகவா இவ்வாறு படங்கள்
வரைந்துள்ளார்கள்? இல்லை.

• படித்த மக்களாயினும் அவசரமான வேளைகளில்


எழுத்துகளைவிடப் படமே மூளைக்குக் கருத்தை
உடனே உணர்த்தும்.
• தகவல் வழங்கலில் படங்கள் (Pictures), படிமங்கள்
(Images), வரைபடங்கள் (Graphs), நிரல்படங்கள் (Charts),
வரைகலை (Graphics) ஆகியவை இன்றியமையாத
பங்கு வகிக்கின்றன.

• “ஒரு சிக்கலான சூழ்நிலையில், கிடைக்கும் தகவல்


குவியலிலிருந்து சாரங்களைப் பிழிந்தெடுத்து,
அச்சாரங்களைப் பயனாளர் புரிந்துகொள்ளும்
வகையில் தெளிவாக அழகியல் வெளிப்பாட்டோடு
வழங்க வேண்டியது தகவல் கட்டுமானியின்
கடமை” என உர்மன் வலியுறுத்துகிறார்.
• அவரே ஓர் ஓவியக் கலைஞராகவும் சிறந்த
வரைகலை வடிவாக்கக் கலைஞராகவும் இருந்த
காரணத்தால் தன் தகவல் வெளிப்பாடுகளில்
வரைகலையின் வல்லமையை உணர்த்தியுள்ளார்.
நாடகமுறை கற்பித்தல்
• நாடகமுறை கற்பித்தல் என்பது இயல்பாக மாணவரிடையே
காணப்படும் நடிப்பாற்றலை கற்றலில் பயன்படுத்துவதாகும்.

• நடிப்பு என்பது ஒன்றைப்போலவோ ஒருவரைப்போலவோ செய்யும்


ஓர் உயர்ந்த கலையாகும். குழந்தைகளின் உலகம் கற்பனை
உலகமாகும். பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர் போல் நடித்தல்,
யானைபோல் நடத்தல், முயல்போல் குணித்தல், சிங்கம்போல்
முழங்குதல், நாய்போல் குரைத்தல், காகம்போல் கரைதல்
முதலியனவற்றைச் செய்து காட்டுவதில் பேரின்பம் அடைவர்.

• வகுப்பு நிலைக்கேற்ப விலங்குகள், பறவைகள், தலைவர்கள், நாடக


உறுப்புனர்கள், மானிடர்கள்போல் உடலசைவுகளோடு,
குரலேற்றத்தாழ்வோடு நடிக்கும்போது அவர்கள் திறன் பெறுவதோடு
பார்ப்பவர்களின் உணர்ச்சிகளையும் தூண்டுவதாய் நடிப்புமுறை
அமைகிறது.
• நடிப்புமுறையைப் பயன்படுத்திக் கற்றலை எளிமையாக்கலாம்.
பாடப்பொருள், திறனுக்கேற்பக் கதை மாந்தர்களாக மாணவர்களை
ஆசிரியர் நடிக்கச் செய்து கற்றலை மேம்படுத்தலாம்.
நாடகமுறை படிநிலைகள்
• நடிப்பதற்கு ஏற்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல்

• நடிப்பதற்கு ஏற்ற முறையில் வடிவமைத்தல்

• நாடகமாக நடித்துக் காட்டுதல்

• நடிப்பதற்கு ஏற்ற பகுதிகள்


• உலகத்தில் பற்பல பகுதிகளில் வாழும் மக்கள் தொகை
• அரசியல் சபைகள், அரசியல் ஆலோசனைக் கூட்டங்கள்
• பெரிய தலைவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள்

• நடிக்கக் கூடாத பகுதிகள்


• சண்டைக் காட்சிகள், போர்நிகழ்வுகள், இறக்கும் காட்சிகள்,
படுகொலைகள், தூக்கிலிடுதல், மனித உருவ அமைப்பை
கேலி செய்தல் போன்றவை நடிக்கக் கூடாத பகுதிகள்
நாடகமுறைக்கான வழிகாட்டுதல்
• பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட
பகுதியை தேர்ந்தெடுத்து வகுப்பறையில் படித்து
காண்பித்து, வசனங்களை எழுதச் சொல்ல
வேண்டும். ஓரங்க வசனமாகவும் அமையலாம்.

• நாடகங்களில் உள்ள பாடத்தொடர்பான


நிகழ்வுகளைப் படித்துக் காட்டலாம்.

• வரலாற்று உரையாடல்களைப் படிக்கச் செய்து,


அவைகளில் அடங்கியுள்ள வரலாற்று
உண்மைகளை எழுதச் சொல்லலாம்.

• பாடங்களை அறிமுகப்படுத்த நடித்துக் காட்டலாம்.


இது மாணவர்களின் உள்ளங்களை பாடத்தின்பால்
கவரும்.
நடிப்புமுறையைக் கையாளுதல்
• நல்ல குரல்வளமும் குரலேற்றத் தாழ்வும் உணர்ச்சி வெளிப்பாடும் உடல்மொழியும்
தங்குதடையற்ற சொல்லாட்சியும்கொண்டு ஆசிரியர் நடித்துக் காட்டவேண்டும்.

• வகுப்பறைக் கற்பித்தலில் கருத்திற்கேற்ற உடைகளோ ஒப்பனைகளோ இல்லையென்றாலும்


காட்சிப்படுத்தும் ஆற்றலோடு கருத்தை வெளிப்படுத்திக் கற்பிக்கவேண்டும்.

• பல்வேறு மொழித்திறன்களை ஒருங்கே வெளிப்படுத்த நடிப்புமுறையைவிடச் சிறந்தமுறை


வேறெதுவும் இல்லை யெனலாம்.

• நடிப்பில் மொழித்திறன்கள் பல வெளிப்படுவதால் ஒவ்வொரு மாணவனுக்கும் ஏதேனும் ஒரு


கருத்தைக் கொடுத்து நடிக்க வாய்ப்பளிக்கவேண்டும்.

• அச்சம், கூச்சம், மேடைப்பயம் போக்கிக் கொள்ள இந் நடிப்புமுறைக் கற்பித்தல் பேருதவி


புரியும்.
நடிப்புமுறையில் எழுத்துத்திறன் வளர்ச்சி


நாடகத்தை அறிவிப்பதற்கான முன்னுரை எழுதுதல், நாடகப்பகுதிக்கான
உரையாடல்கள் எழுதுதல், காட்சி விளக்கம் எழுதுதல், பாடல்கள் எழுதுதல்
ஆகியவற்றில் மாணவரை எழுத ஊக்குவிக்க வேண்டும்.

• நடிப்புமுறையில் பேசுதல் திறன் வளர்ச்சி நாடக உறுப்பினர்


நிலைக்கு ஏற்பக் குரல் ஏற்றத்தாழ்வுடன் பேசுதல், கோபம்,
வியப்பு, இரக்கம் முதலிய உணர்ச்சிகளுக்கு ஏற்பப் பேசுதல்,
வினா, வியப்பு வாக்கியங்களை அவற்றிற்குரிய ஒலிப்புடன்
பேசுதல் முதலியவற்றில் மாணவர் ஈடுபடுவதால் பேசுதல்
திறன் வளர்ச்சி பெறும்.
நடிப்புமுறையில் மனப்பாட ஆற்றல்
வளர்ச்சி

• நாடக உறுப்பினர் பேசும் உரையாடல்களையும் பாடும்


பாடல்களையும் மாணவர் மனப்பாடஞ் செய்து
நடிப்பதில் பங்கேற்பர். அதனால், அவர்களது மனப்பாட
ஆற்றல் வளரும்.
நடிப்புமுறையில் சொற்களஞ்சியப்
பெருக்கம்
• நடிப்புக்காக மாணவர் நாடக உறுப்பினர் பேசும்
உரையாடல்களை மனப்பாடஞ் செய்து கூறுவர்.

• அவ்வாறு கூறுங்கால் அச்சொற்களை,


தொடர்களைத் தகுந்த இடமறிந்து கூறுவர்.

• சொற்களும் தொடர்களும்
அவர்களுடையதாகின்றன. இதனால், அவர்களது
சொற்களஞ்சியம் பெருகும்.
நிறைகள்
• நடிப்புமுறையினால் நினைவாற்றல், குரல் வளம் பெறுகின்றனர்.
• பலர் முன்னிலையில் ஆடிப்பாடி நடிப்பதால் அச்சம் கூச்சம் விலகிக்
கதை மாந்தரோடு ஒன்றி நடிக்கும் ஆற்றலை மாணவர்கள்
வளர்த்துக்கொள்கின்றனர்.
• மாணவர்கள் தாமே ஏற்று நடிப்பதால் பாடப்பொருளிலும் திறனிலும்
கற்றலடைவு உறுதியாகிறது.
• கதையோடு ஒன்றிவிடுவதாலும் கதை உறுப்பினராகவே மாறிச்
செயல்படுவதாலும் மனவெழுச்சிகளையும் உணர்ச்சிகளையும்
தேவையான இடத்தில்வெளிப்படுத்தும் ஆற்றலும் திறனும்
மாணவர்களுக்கு ஏற்படுகின்றன.
• உணர்ச்சியோடு நடிப்பதால் மாணவர்களுக்குச் சொற்றொடர்கள்
மனத்தில் பதிந்து நிலைபெற்று விடுகின்றன.

• குரலேற்றத்தாழ்வு, உணர்ச்சிகளுக்கேற்ற குரல்வளம், மெய்ப்பாடுகள்,


உடலசைவுகள், நடை, உடை, செயல்களனைத்தும் மாணவனின்
எதிர்கால முன்னேற்றத்திற்கும் ஏற்றதாக அமைகின்றன.

• மாணவர்தம் மனப்பாட ஆற்றலையும் சொல்லாட்சித் திறனையும்


மொழியாற்றலையும் மொழியாளுமையையும் மொழிவளத்தையும்
வெளிப்படுத்த உதவும்.
•  
குறைகள்
• எல்லாப் பாடப்பொருள்களையும்
நடிப்புமுறையில் கற்பிப்பது
இயலாவொன்று.

• முயற்சியும் பயிற்சியும் காலமும்


செலவினமும் அதிகமாகும்.

• மாணவர்கள் அனைவரையும் ஈடுபடுத்துவது


கடினம்

You might also like