You are on page 1of 11

இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதும் திறத்தைப் ‘பஞ்சதந்திர

பெட்டக விளையாட்டு’ உத்தியின் மூலம் மேம்படுத்துதல்

நந்தகுமார் த/பெ தமிழ்ச்செல்வன்


தமிழ்த்துறை
nantha04-784@epembelajaran.edu.my

சாரம்

இச்செயலாய்வு இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதும் திறத்தைப் ‘பஞ்சதந்திர


பெட்டக விளையாட்டு’ உத்திமுறையின் மூலம் மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டது. இனவெழுத்துச்
சொற்றொடர்களை சரியாக உருவாக்கி எழுதும் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்கள்
இச்செயலாய்விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்செயலாய்வின் முதன்மை நோக்கமானது
இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதப் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு
உத்தியினைப் பயன்படுத்துதல் ஆகும். இவ்வாய்வு ‘கெர்ட் லெவின்’ மாதிரியம் (1946) அடிப்படையில்
செயலாக்க படிநிலைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வில், முன்னிலைச் சோதனை, பின்னிலைச்
சோதனை, நேர்காணல், உற்றுநோக்கல், வினாநிரல் ஆகிய ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாய்வின்மூலம், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மூன்று மாணவர்களும் இனவெழுத்துச்
சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுதும் திறனில் மேம்பாடு கண்டுள்ளனர்.
இம்மேம்பாடானது முன்னிலைச் சோதனையையும் பின்னிலைச் சோதனையையும் ஒப்பிடும்பொழுது
தரவுகள்வழி அறியப்பட்டது. முன்னிலைச் சோதனையில் ஒரு மாணவரின் சராசரி மதிப்பெண் 36%
ஆகும். பின்னிலைச் சோதனையில் ஒரு மாணவரின் சராசரி மதிப்பெண் 89% ஆகும். இவ்விரு
சோதனையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் 50% உயர்வைக் காட்டுகிறது. ஆகவே, பஞ்சதந்திர பெட்டக
விளையாட்டு உத்தியினை பயன்படுத்தி மாணவர்கள் இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக
உருவாக்கி எழுதும் திறத்தில் மேம்பாடு கண்டுள்ளனர்.

கருச்சொல்: பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு, இனவெழுத்துச் சொற்றொடர்

1
MENINGKATKAN KEMAHIRAN MENULIS FRASA MENGGUNAKAN
INAVELUTHU DENGAN MENGGUNAKAN KIT PERMAINAN PANJA THANTIRAM

NANTHA KUMAR A/L TAMIL SELVAN


UNIT PENGAJIAN TAMIL
nantha04-784@epembelajaran.edu.my

ABSTRAK

Kajian ini dijalankan untuk meningkatkan kemahiran menulis frasa ‘Inaveluthu’ dalam
kalangan murid tahun dua dengan menggunakan kaedah Kit Permainan ‘Panjathantiram’.
Tujuan kajian ini adalah mengatasi masalah menulis frasa ‘Inaveluthu’ murid tahun dua
dengan menggunakan kaedah kit permainan ‘Panjathantiram’, meningkatkan kemahiran
menulis frasa ‘Inaveluthu’ dalam kalangan murid-murid tahun dua dengan mempelbagaikan
penggunaan kaedah Kit Permainan ‘Panjathantiram’. Seramai tiga orang murid terlibat
sebagai peserta kajian. Model Kurt Lewin (1946) digunakan sebagai panduan asas kajian.
Pengkaji telah menjalankan kajian berdasarkan empat proses yang terdapat dalam model
iaitu, perancangan, tindakan, pemerhatian dan refleksi. Pengumpulan data telah dilakukan
melalui kaedah pemerhatian, pra intervensi, pasca intervensi, soal selidik dan temu bual.
Data yang dikumpul menerusi pra intervensi, pasca intervensi, soal selidik dan temu bual
telah dianalisis secara kuantitatif dan kualitatif. Hasil daripada dapatan kajian menunjukkan
purata peningkatan markah ujian pra kepada ujian pasca adalah sebanyak 86.3 %. Dapatan
kajian ini telah membuktikan bahawa penggunaan kaedah Kit Permainan ‘Panjathantiram’
amat berkesan dalam meningkatkan kemahiran menulis frasa ‘Inaveluthu’ murid-murid tahun
dua. Oleh itu, beberapa cadangan kajian lanjutan telah dikemukakan pada akhir kajian ini.

Kata Kunci: ‘Inaveluthu’, Kit Permainan ‘Panjathantiram’

முன்னுரை

2
கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து என்ற மொழித்திறன்களோடு செய்யுளும் மொழியணியும்,
இலக்கணம் ஒருங்கிணைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது
(வேணுகோபால், 2006) எழுத்துத் திறனில் சொற்களையும், சொற்றொடர்களையும் உருவாக்கி
எழுதும்பொழுது சரியான சொல்லைக்கொண்டு உருவாக்கி எழுதுவதே சிறப்பு. எழுத்துத்
திறனை மையமாகக் கொண்டு மாணவர்களிடையே இனவெழுத்துச் சொற்றொடர்களைச்
சரியாக உருவாக்கி எழுதும் திறத்தை மேம்படுத்தும் ஆய்வே மேற்கொள்ளப்பட்டது.
பயிற்றுப்பயிற்சி வடமேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியில்
மேற்கொள்ளப்பட்டது. அங்குப் படிநிலை ஒன்றில் பயிலும் மாணவர்களான இரண்டாம்
ஆண்டு மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டது. இப்பயிற்சிக்
காலத்தின்பொழுது, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முதன்மை பாடமான
தமிழ்மொழிக் கற்பிக்கப்பட்டது. பயிற்றுப்பயிற்சியை மூன்று மாதக் காலம்
மேற்கொண்டபோது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இனவெழுத்துச் சொற்றொடர்களைச்
சரியாக உருவாக்கி எழுதும் திறத்தைக் கைவரப் பெறவில்லை என
அறிந்துகொள்ளப்பட்டது.
இச்சிக்கலை அடிப்படையாகக் கொண்டு செயலாய்வை மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டது. ஆய்வாளர் இச்சிக்கலைக் குறையறிச் சோதனை, பயற்சித்தாள்
போன்றவற்றின் மூலம் உறுதிபடுத்தினார். ஆகவே, இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே
இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுதும் திறத்தைப் ‘பஞ்சதந்திர
பெட்டக விளையாட்டு’ உத்தியின் மூலம் மேம்படுத்தினார்.

ஆய்வுக் குவியம்
இப்பயிற்சிக் காலத்தின்பொழுது, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முதன்மை பாடமான
தமிழ்மொழி கற்பிக்கப்பட்டது. நான் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் இரண்டாம்
ஆண்டு மாணவர்களிடையே இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவதில்
சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். இதனையே, கலைச்செல்வி (2017) என்ற ஆய்வாளரும்
தன் கற்றல் கற்பித்தலில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குறில் நெடில் எழுத்துகளைக்
கொண்டு சொற்றொடர்களைத் தவறாக எழுதுகின்றனர். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள
இந்தச் சிக்கலைக் களையாவிடில் மாணவர்கள் தங்கள் எழுதுப் படைப்புகளில் கூற வரும்
கருத்துகளைத் தெளிவாகக் கூற இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கணபதி (2013), இனவெழுத்துகளை அறியாமையாலும் சொற்பிழைகள்
ஏற்படக்கூடும் என்கிறார். அதாவது ‘த்’ என்னும் எழுத்தின் முன் அதன் இனமாகிய ‘ந்’
என்னும் எழுத்து வரும் என்று அறியாததால் ‘வந்தான்’ என்பதனை ‘வன்தான்’ எனப்
பிழைபட எழுதுகின்றனர் என்கிறார். இரண்டாம் வாரத்திலிருந்து நான், கற்றல் கற்பித்தலை
மேற்கொள்ளத் தொடங்கினேன். கற்றல் கற்பித்தலின்பொழுது கொடுக்கும் பயிற்சிகளில்,

3
மாணவர்கள் இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுத முடியாததைக்
கவனித்தேன்.
தொடர்ந்து, நடைபெறும் கற்றல் கற்பித்தலில் மாணவர்கள் குறிப்பிட்ட சிக்கலை
எதிர்நோக்குவதை உறுதிபடுத்தினேன். எனவே, இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும்
என்ற எண்ணம் சிந்தையில் ஆழமாகப் பதிந்தது. அந்த எண்ணமே என் செயலாய்வாகத்
திகழ்கிறது. இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே இனவெழுத்துச் சொற்றொடர்களைச்
சரியாக உருவாக்கி எழுதும் திறத்தை மேம்படுத்துவதற்குத் தகுந்ததொரு அணுகுமுறையை
அடையாளம் காணவேண்டும் என்ற நோக்கில், ஆய்வாளர் என்ற முறையில் நான் அகன்ற
வாசிப்பை மேற்கொண்டேன். புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வேடுகள், இணையம்
எனப் பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களைத் திரட்டினேன்.
இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே கண்டறியப்பட்ட இனவெழுத்துச்
சொற்றொடர்களைப் பிழையாக உருவாக்கி எழுதுதல் என்ற சிக்கலைக் களைவதற்குத்
தகுந்த உத்திமுறையாகப் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்திமுறை
தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலில் மாணவர்கள் தொடு உணர்வின் மூலம் மேற்கொள்ளக்கூடிய
வகையில் பெட்டகத்தில் பல்வேறு விளையாட்டுகள் தயார்செய்து உட்புகுத்தப்பட்டது.
நூருல் ஹனிசா (2017), மலாய் மொழிப் பாடத்தில், குறைநீக்கல் வகுப்பில் பயிலும்
மாணவர்கள் வாசிப்புத் திறனில் குறிப்பாக் கதைகளை வாசிப்பதில் மாணவர்கள் சிக்கலை
எதிர்நோக்குவதாக அவர் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிக்கலைக்
களையக்கூடிய வழிமுறையாக ஆய்வாளர் கதை வாசிப்புப் பெட்டகத்தைத்
தேர்ந்தெடுத்துள்ளார். அப்பெட்டகத்தில், கதை புத்தகங்கள், மின்னட்டைகள், வாசிப்புத்
தொடர்பான விளையாட்டு அட்டைகள் போன்றவற்றை இணைத்துள்ளதாகவும் ஆய்வாளர்
குறிப்பிட்டுள்ளார். இந்தப் பெட்டகத்தின் பயன்பாடு மாணவர்களின் வாசிப்புத் திறனில்
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுதும் திறத்தை
மேம்படுத்துவதற்குப் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியே என் செயலாய்வாகத்
திகழ்கின்றது. இந்த ஆய்வு தமிழ்மொழி கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்குத்
தேவையான ஓர் ஆய்வாக இருக்கும் என நான் கருதுகிறேன். இதன்வழி,
மாணவர்களிடையே வாக்கியம் எழுதும் திறத்தை நிச்சயமாக மேம்படுத்த முடியும்.

ஆய்வு வினா & ஆய்வு நோக்கம்


ஆய்வு வினா
1. இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதும் திறத்தை எந்த உத்திமுறை
மூலம் மேம்படுத்தலாம்?

4
2. இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதும் திறத்தை மேம்படுத்துவதற்குப்
பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியினை எவ்வாறு கையாளலாம்?
3. இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதும் திறத்தை மேம்படுத்துவதற்குப்
பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தி எத்தகைய விளைப்பயனைத் தரவல்லது?
ஆய்வு நோக்கம்
1. இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதப் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு
உத்தியினைப் பயன்படுத்துவர்.
2. இனவெழுத்துச் சொற்றொடர்களை எழுத்துப் பிழையின்றி உருவாக்கி எழுதப் பஞ்சதந்திர
பெட்டக விளையாட்டு உத்தியினைப் பலவகைப் பயன்பாட்டின் வழிப் பயன்படுத்துவர்.
3. இனவெழுத்துச் சொற்றொடர்களை எழுத்துப் பிழையின்றி, பொருளுணர்ந்து சரியாக
உருவாக்கி எழுதும் திறத்தைப் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியின் மூலம் பெறுவர்.

ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள்
அட்டவணை 1
ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள்
எண் மாணவர் வகுப்பு பால் தரம்
1 S1 2 ஆண் இடைநிலை
2 S2 2 பெண் இடைநிலை
3 S3 2 பெண் கடைநிலை

ஆய்வுச் செயல்திட்ட அமலாக்கப் படிநிலைகள்


கெர்ட் லெவின் மாதிரியத்தின் அடிப்படையில் செயலாக்கப் படிநிலைகள்
மேற்கொள்ளப்பட்டன. ‘கெர்ட் லெவின்’ மாதிரியம் கல்வியில் ஏற்படும் சிக்கலைக் களைய
தகுந்த அணுகுமுறைகளைப் பரிந்துரைக்கின்றது. சிக்கலை அடையாளம் காணும் வகையில்
முன்னிலைச் சோதனை நடத்தப்பட்டது. படங்களுக்கேற்ற இனவெழுத்துச் சொற்றொடர்களை
உருவாக்கி எழுதும் பணியே முன்னிலைச் சோதனையாக நடத்தப்பட்டது. முன்னிலைச்
சோதனையை முடித்தவுடன் செயலாக்கப் படிநிலைகள் திட்டமிட்டப்படியே நடத்தப்பட்டன.
படிநிலை ஒன்றின் முதல் நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்னர், மாணவர்களுக்குப்
பஞ்சதந்திர பெட்டக விளையாட்டினை பயன்பாடு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.
முதல் படிநிலையின் முதல் நடவடிக்கையானது பெட்டகத்தில் காணப்படும் எழுத்து
அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களைச் சுயமாக இனவெழுத்துகளை
அடையாளம் காணச்செய்தல். இரண்டாவது நடவடிக்கையாக, மாணவர்களின் அறிதலையும்,
புரிதலையும் மையமாகக்கொண்டு இனவெழுத்துத் தொடர்பான அடிப்படை விளக்கங்கள்
தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் ஆழமாகக் கற்பிக்கப்பட்டன. பெட்டகத்தில் காணப்படும்
எழுத்து அட்டைகள், சொல்லட்டைகள் போன்றவற்றின் துணையுடன் இனவெழுத்துத்
தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

5
மூன்றாவது நடவடிக்கையானது, மாணவர்கள் இணையர் முறையில் ஒருவர் எழுத்து
அட்டைகளில் ஒவ்வோர் எழுத்துக்களாகக் காண்பித்தல், மற்றொருவர் அவ்வெழுத்துக்கான
இனவெழுத்தைக் கூறுதல் என்ற நடவடிக்கை ஆகும். நான்காம் நடவடிக்கையானது தாயம்
விளையாட்டு. மாணவர்கள் தனியாள் முறையில் தாயத்தை உருட்டி அவர்களுக்குக்
கிடைக்கப்பெறும் எண்ணுக்கேற்ற அட்டையைத் திறந்து, இனவெழுத்தின் அடிப்படையில், அந்த
அட்டையில் உள்ள எழுத்துக்கு ஏற்ற சரியான இணையைக் கண்டு பிடிப்பர்.
ஐந்தாம் நடவடிக்கையானது, மாணவர்கள் பெட்டகத்தில் காணப்படும் காலியான
வெண்ணட்டைகளில் இனவெழுத்துகளைச் சுயமாக எழுதுவர் என்பது ஆகும். இரண்டாம்
படிநிலையின் முதல் நடவடிக்கையானது ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள் படங்களின் துணையுடன்
இனவெழுத்துச் சொற்களையும், சொற்றொடர்களையும் உருவாக்கி எழுதக் கற்றுக்கொள்வதே
ஆகும். மாணவர்களின் புரிதலை மையமாகக்கொண்டு ‘பிலிப்புக்’ (FlipBook) என்ற செயலியின்
துணையுடன் இனவெழுத்துச் சொற்களையும், சொற்றொடர்களையும் எவ்வாறு சரியாக
உருவாக்கி எழுதவேண்டும் என்ற உத்திமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து, ‘சதுரங்களை இணை’ என்ற விளையாட்டு நடத்தப்பட்டது. இந்த
விளையாட்டினை இயங்கலை வழி மேற்கொள்ளவேண்டி மாணவர்கள் இணைந்து கற்றல்
அணுகுமுறையின் வழியே இந்த விளையட்டினை விளையாடினர். ஒவ்வொரு நழுவத்திலும்
மாணவர்கள் இணையர்களாக, சிறு சிறு துண்டுகளாக இணைக்கப்படாமல் காணப்பட்ட
சதுரங்களைச் சரியான இனவெழுத்துகள், இனவெழுத்துகளுக்கேற்ற படங்கள்,
இனவெழுத்துகளுக்கேற்ற சரியான சொற்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து முழுமையான
சதுரங்களாக உருவாக்கினர்.
மூன்றாம் நடவடிக்கையானது, ‘வோர்ட் சேர்ச்’ (Word Search) என்ற விளையாட்டாகும்.
இந்த விளையாட்டு இணையம் வழி ‘வோர்ட் சேர்ச’் (Word Search) என்று செயலியின் வடிவில்
உருமாற்றம் செய்யப்பட்டன. மாணவர்கள் இந்த விளையாட்டினைச் சுயமாக மேற்கொண்டனர்.
மாணவர்களுக்கு இணைய வடிவிலான சொற்புதையலும் படங்களும் ஒளிபரப்பப்பட்டவுடன்
சுயமாகப் படங்களை உற்றுநோக்கித் தங்களால் இயன்ற வரையில் சரியான சொற்களைக்
கண்டுபிடித்து எழுதினர். நான்காம் நடவடிக்கையானது, மாணவர்கள் சுயமாக இனவெழுத்துச்
சொற்களை உருவாக்கி எழுதுவர் ஆகும்.
இறுதி நடவடிக்கையாக மாணவர்களுக்கு ‘ கண்டுபிடி! கண்டுபிடி!’ என்ற விளையாட்டு
நடத்தப்பட்டது. இந்த விளையாட்டில் மாணவர்கள் வாசிப்புப் பகுதியை வாசித்து இனவெழுத்துச்
சொற்றொடர்களை அடையாளம் கண்டு எழுதுவர் என்பதே ஆகும். மூன்றாம் படிநிலையின் முதல்
நடவடிக்கையானது ‘ காகிதத் தட்டை இணை’ என்ற பெட்டகத்தில் இணைக்கப்பட்ட
விளையாட்டே ஆகும். இந்த விளையாட்டும் மின்னியல் வடிவில் ‘விண்வெளிப் பந்தயம்’ என்று
உருமாற்றம்செய்யப்பட்டது. இந்த விளையாட்டினை வழி மாணவர்கள் சரியான இனவெழுத்துச்
சொற்களைக்கொண்டு சொற்றொடர்களை நிறைவுசெய்வர் என்பதாகும்.
இரண்டாம் நடவடிக்கையானது, எழுத்துப்புதையலிலிருந்து மாணவர்கள்
இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்குதல் ஆகும். இந்த விளையாட்டும் ‘ஹேங் மேன்’
(HangMan) என்ற இணையச் செயலியின் வழி உருமாற்றம் செய்யப்பட்டது. மாணவர்கள் இந்தச்

6
செயலியின் வழி ஒளிபரப்பப்படும் எழுத்து அட்டைகளைக்கொண்டு இனவெழுத்துச்
சொற்றொடர்களைச் சுயமாக உருவாக்கினர். மூன்றாம் நடவடிக்கையானது, மாற்றீட்டு
அட்டவணையைக்கொண்டு இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவதே ஆகும்.
நான்காம் நடவடிக்கையானது, பரமபத விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டினைத் தனியாள்
முறையிலே மேற்கொண்டனர். ஒளிபரப்பப்படும் இனவெழுத்து அல்லது படம் ஒன்றினை
துணையாகக்கொண்டு இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதினர்.
இறுதி நடவடிக்கையானது, பெட்டகத்தில் காணப்படும் வெண்ணட்டைகளைக்கொண்டு
மாணவர்கள் இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சுயமாக உருவாக்கி எழுதுதல் என்பதே
ஆகும். இந்த நடவடிக்கைக்குத் தேவைப்படும் படங்கள் யாவும் மின்னியல் வடிவில்
உருமாற்றம்செய்யப்பட்டு நழுவம் வழி மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டன. இந்த
நடவடிக்கையின் வழி மாணவர்களின் இனவெழுத்துச் சொற்றொடர் உருவாக்கி எழுதினர்.

தரவுகள் சேகரிக்கும் முறைமை


தரவு சேகரித்தல் என்பது ஆய்வு விடயம் தொடர்பாகத் தகவல்களைத் திரட்டும்
செயல்முறையினைக் குறிக்கும். இந்த ஆய்வில் இரண்டு அணுகுமுறைகளைப் பயன்படுத்தித்
தரவுகள் சேமிக்கப்பட்டன. ஒன்றாவதாக, அளவுசார் அடிப்படையிலான தரவுகள் ஒப்பீட்டுச்
சோதனை வாயிலாகவும் வினாநிரல் மூலமும் திரட்டப்பட்டது. அடுத்ததாக, பண்புசார்
அடிப்படையிலான தரவுகளைத் திரட்ட உற்றுநோக்கலும் நேர்காணலும்
பயன்படுத்தப்பட்டன.
மாணவர்களிடையே இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதும்
திறனை அளவிட முன்னிலைச் சோதனை நடத்தப்பட்டது. தொடக்கக்கட்டத் தரவுகளைச்
சேமிப்பதன் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் அடைவுநிலை
குறித்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, செயலாக்கப் படிநிலைகளை மேற்கொண்ட பிறகு,
மாணவர்களின் சிக்கலை ஒட்டிய மதிப்பீடு பின்னிலைச் சோதனையாக
மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே இந்தச் சிக்கலை
உறுதிப்படுத்துவதற்காக நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, இனவெழுத்துச்
சொற்றொடர்கள் உருவாக்கி எழுதும் திறத்தில் மாணவர்களின் அடைவுநிலை
அறிந்துகொள்வதற்கு ஆசிரியருடன் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தி மாணவர்களுக்கு எந்த அளவிற்குப்
பயனையும் புரிதலையும் தந்தன என்பனவற்றைத் தெரிந்துகொள்ள வினாநிரல் ஆய்வுக்குப்
பின் வழங்கப்பட்டது. நாட்குறிப்பும் உற்றுநோக்கலில் பயன்படுத்தப்பட்டது. ஆய்வின்
செயலாக்கப் படிநிலைகள் நடத்தப்படும்பொழுது பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை
மீட்டுணர்ந்து குறிப்புகளாக நாட்குறிப்பில் எழுதி வைக்கப்பட்டது.

தரவுகள் பகுப்பாய்வு முறைமையும் விளக்கப்படுத்துதலும்

7
ஆய்வுக் கருவிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த
ஆய்வில் கிடைத்தப் பண்புசார் அடிப்படையிலான தரவுகள் உண்மைகளிலிருந்து
பெறப்பட்ட விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து விளக்கமாக எழுதி பகுத்தாயப்பட்டது.
அளவுசார் அடிப்படையிலான தரவுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு, புள்ளி விவரங்கள்
நுட்பத்தைப் பயன்படுத்திப் பகுத்தாயப்பட்டது. காட்டாக, முன்னிலைச் சோதனையின்
அடைவுநிலை, பின்னிலைச் சோதனையின் அடைவுநிலையோடு ஒப்பீடு செய்யப்பட்டது.
அந்த அடைவுநிலைகள் யாவும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் விழுக்காட்டில் கணக்கிடப்பட்டுக்
குறிவரைவாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்றுநோக்கலின் வழி
பெறப்பட்ட அனைத்து தரவுகளும் பகுப்பாய்வுச் செய்யப்பட்டு எழுத்துப்
படிவமாக்கப்பட்டன. மேலும், நேர்காணல் வழியாகப் பெறப்பட்ட அனைத்துத் தரவுகளும்
காணொலி பதிவுகளின் வழியாகச் சேமித்து வைக்கப்பட்டு எழுத்துப்படிவங்களாக
மாற்றப்பட்டன. ஆய்வுக்குப் பின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்ட
வினாநிரலிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் வெவ்வேறு முறையிலான
குறிவரைவுககளைக்கொண்டு பகுப்பாய்வுச்செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
அட்டவணை 2

முன்னிலைப் பின்னிலைச் சோதனையின் முடிவும் அடைநிலைவும்

முன்னிலைச் பின்னிலைச்
சோதனை சோதனை
மாணவர் மதிப்பெண் மேம்பாடு
மதிப்பெண்
புள்ளி புள்ளி (%)
(%) (%)
S1 5/12 42/100 11/12 92/100 50
S2 6/12 50/100 12/12 100/100 50
S3 2/12 17/100 8/12 67/100 50

ஆய்வுக் கண்டுபிடிப்பு

பட்டைக்குறிவரைவு 1. முன்னிலைப் பின்னிலைச் சோதனைகளின் அடைவுநிலைகள்

8
முன்னிலைச் சோதனையின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்கையில், S1 42% மதிப்பெண்களே
பெற்றுள்ளார். மாணவர் S2 50% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மாணவர் S3 17%
மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இந்தச் சிக்கல் அம்மூவரிடமும் இருப்பதை இங்கு உறுதி
செய்ய முடிகிறது. பின்னிலைச் சோதனையைப் பார்க்கையில் மாணவர்களிடையே
இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுதும் திறத்தில் மேம்பாடு
காணப்பட்டது. முன்னிலைச் சோதனையில் இனவெழுத்துகளைக் கொண்டு தவறாகச்
சொற்றொடர்களை உருவாக்கி எழுதிய மாணவர்களுக்குப் பின்னிலைச் சோதனையில்
இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுத முடிந்ததைக்
கண்காணிக்கப்பட்டது. பின்னிலைச் சோதனையின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்கையில்,
மூவருமே அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மேலும், இந்தத் தரவுகளின்
வாயிலாக, இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுதும் திறத்தில்
ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள் மேம்பாடு அடைந்துள்ளதைக் காண முடிகிறது.
இந்த ஒப்பீட்டு அடைவுநிலையைப் பார்க்கையில் ஆய்வுக்கு முன் மாணவர்களுக்கு
இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுதுவதில் சிக்கல் உள்ளது எனத்
தெளிவாகப் புலப்படுகிறது. ஆய்வுக்குப் பின், அதாவது செயலாக்கப் படிநிலைகளை
முடித்து, பின்னிலைச் சோதனையை மேற்கொண்டு பார்க்கையில் இந்தச் சிக்கல்
களையப்பட்டுள்ளது. எனவே, இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி
எழுதும் சிக்கலில் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியின் பயன்பாடு விளைபயனை
ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆய்வில்
மேற்கொள்ளப்பட்ட வினாநிரல், நேர்காணல், உற்றுநோக்கல் ஆகியவற்றின் மூலம்
பெறப்பட்ட தரவுகள் இச்செயலாய்வு விளைபயனைக் கொடுப்பதாக அமைந்துள்ளதை
உறுதிப்படுத்துகின்றன.

சிந்தனை மீட்சி
மாணவர்களிடையே காணப்படும் இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதும்
திறத்தை மேம்படுத்தப் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டுச் சிறந்த உத்திமுறையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே இனவெழுத்துச்
சொற்றொடர்களை உருவாக்கி எழுதும் திறம் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியின்
மூலம் மேம்பாடடைந்தது என்பது இந்த ஆய்வின் இறுதியில் உறுதியாகின்றது.
மாணவர்களிடையே பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியின் மீதான
ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஆக்கம், புத்தாகச் சிந்தனையின் வாயிலாகப்
பெட்டகத்தில் வண்ணப் படங்கள், சொல்லட்டைகள் போன்றவைகளும் இணைக்கப்பட்டன.
அவ்வகையில் ஆய்வுக்குக் குவியத்தில் குறிபிட்டப்பட்டிருக்கும் நூருல் அனிசா (2017),
நூருல் ஜனா (2018) என்ற ஆய்வாளர்கள் அவர்கள் கண்டாய்ந்த கற்றல் கற்பித்தல்

9
சிக்கலைக் களைவதற்கு விளையாட்டுப் பெட்டகங்களையே சிறந்த உத்திமுறையாகப்
பயன்படுத்தியதாகவும் தங்களின் செயலாய்வுகளில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் பெட்டக விளையாட்டு உத்திமுறையின் மூலம் மாணவர்களிடையே காணப்பட்ட
கற்றல் கற்பித்தல் சிக்கலும் சுலபமாகவும், விளைப்பயன்மிக்க வகையில் களைந்துள்ளதாகவும்
தக்க சான்றுகளின் வழி குறிப்பிட்டிருந்தனர். அவ்வாறே இந்தச் செயலாய்வில்
பயன்படுத்தப்பட்ட பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்திமுறை மாணவர்களிடையே
அடையாளம் காணப்பட்ட இனவெழுத்துச் சொற்றொடர்களைச் சரியாக உருவாக்கி எழுதும்
திறத்தை மேம்படுத்தியுள்ளது.

தொடர் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள்


இந்த ஆய்வு வெற்றியினைக் கண்டதால், இச்செயலாய்வின் தொடர் நடவடிக்கைகளுக்கான
சில பரிந்துரைகளையும் மேற்கொள்ள ஆய்வாளர் விரும்பியுள்ளார். முதலில், பள்ளி
அளவில் பார்க்கும்பொழுது தமிழ்மொழிப் பணித்திற மேம்படுக்குழு பள்ளிக்கூடத்தில்
தமிழ்மொழிக்கென்று நாடிக் கற்றல் மையம் ஒன்றினை உருவாக்கி பெட்டகத்தை அந்த
நாடிக் கற்றல் மையத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக வைக்கலாம்.
பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியினைப் பயன்படுத்துவதற்கான முறையான
பயனர் கையேட்டினையும் தயார்செய்து நாடிக் கற்றல் மையத்தில் மாணவர்களுக்குத்
துணையாக வைக்கலாம். இதன் மூலம் மாணவர்கள் ஆசிரியர்களின் துணையின்றி
இப்பெட்டகத்தைச் சுயமாகவே பயன்படுத்தி இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி
எழுதப் பயன்படுத்தலாம். தொடர்ந்து, மாவட்ட அளவில் தமிழ்ப்பள்ளிகளில்
தமிழ்மொழியினைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தப் பஞ்சதந்திர பெட்டக
விளையாட்டு உத்தியினை கொண்டு மாணவர்களிடையே காணப்பட்ட இனவெழுத்துச்
சொற்றொடர்களை உருவாக்கி எழுதும் திறம் எவ்வாறு மேம்பாடடைந்து தொடர்பான
கருத்தரங்கு ஒன்றினையும் மேற்கொள்ளலாம்.
இதன் வாயிலாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு
உத்தியின் பயன்பாடு மட்டுமின்றி, அவர்களின் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில்
மாணவர்கள் இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவதில் எம்மாதிரியான
சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர் என்பதனை அறிந்து இப்பெட்டகத்தை மறுவடிவாக்கம்
அல்லது இன்னும் சில சிறிய மாற்றங்களுக்கு உட்படுத்தி வகுப்பறையில் பயன்படுத்தலாம்.
மேலும், மாநில கல்வித் திணை களம் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு
உத்தியினைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தேசிய பள்ளியில் தமிழ்மொழியினைக்
கற்கும் மாணவர்களும் பயன்படுத்த ஆசிரியர்களுக்குக் கருத்துரைக்கலாம். தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் மட்டுமின்றி தேசியப்பள்ளி மாணவர்களும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில்
பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். காட்டாக, தேசியப் பள்ளி மாணவர்கள்

10
இலக்கணத்தில் பால் வகையை அறிந்து சரியாகப் பயன்படுத்தும் திறத்தை மேம்படுத்தவும்
ஆசிரியர்கள் இந்தப் பஞ்சதந்திர பெட்டக விளையாட்டு உத்தியினைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்

கணபதி, ஜெயராமன், விஜயா. (2013). பாடப்பொருள் மற்றும் தமிழ் கற்பித்தல்


பொதுத் தமிழ். சென்னை

கலைச்செல்வி. (2017). இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே ‘விரலைச் சொடுக்கு’


அணுகுமுறையின் வழி குறில் நெடில் சொற்றொடர்களைச் சரியாக எழுதும்.
ஆய்வடங்கள்

வேணுகோபால். (2006). சிறப்புத்தமிழ் கற்பிக்கும் முறைகள். சென்னை

Nurul Haniza Samsudin. (2017). Penggunaan kit asas membaca bahasa melayu untuk
kanak-kanak pemulihan khas. Degree thesis. Universiti Malaya

Nurul Jannah Bosini. (2018). Penggunaan “kit landasan puzzle warna” membantu murid
menghafal bacaan tahiyat awal. Degree thesis.

11

You might also like