You are on page 1of 32

FAKULTI PENDIDIKAN DAN BAHASA

___________________________________________________________________________

HBTL 3403

KESUSASTERAAN TAMIL II

SEMESTER SEPTEMBER 2020

___________________________________________________________________________

NO.MATRIKULASI : 890103595316001

NO.KAD PENGENALAN : 890103595316

NO.TELEFON : 0146256097

E-MEL : tuulasi6097@gmail.com

PUSAT PEMBELAJARAN : PPNS


BAHAGIAN A

கேள்வி 1 (அ)

புகழேந்தி புலவர் நளவெண்பா எழுதினார். நளவெண்பா மூன்று

காண்டங்களை உடையது. அவை, சுயம்வர காண்டம், கலிதொடர்

காண்டம், கலிநீங்கு காண்டமாகும். சுயம்வர காண்டம் முழுவதிலும்

நளன் மற்றும் தமயந்தியின் காதலும், இன்பமும், அழகியலும்

விவரிக்கப்பட்டுள்ளது. நளனும்,.நிடத நாடு மற்றும் விதர்ப்ப நாட்டின்

வளங்களை சிறப்பாகவும்  அழகாகவும் உவமைகள் மூலம் எடுத்துச்

சொல்லப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக,

           ‘நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக

            மைத்தடங்கண் செல்ல வயவேந்தர்’

எனும் பாடலில் பல உவமை சிறப்புகள் உள்ளன. பொற்றோடு நீல

நிறதோடாக மாறுவது, மன்னர்கள் தமயந்தியின் அழகை

கண்ணிமைகாமல் நோக்குவதைக் குறிக்கின்றது. மேலும்,

தமயந்தியின் பல அழகிய வார்த்தைகளால் விவரித்து அவளின்

வனப்பைக் கூட்டுவது அடுத்த சிறப்பாக அமைகிறது. தொடர்ந்து,

‘பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்

            கோதை மடமானைக் கொண்டணைந்த’

எனும் வரியின் மூலம் தமயந்தி சுயவர மண்டபத்திற்குள் வரும்

அழகை, அழகான மயில்கள் சூழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது பெண்

மான் வருவதற்கு ஒப்பிடுகின்றனர். மேலும், தமயந்தியின் எழிலைக்


கூற பயன்படுத்தப்பட்டுள்ள பல அழகிய சொற்கள் அவளின் அழகை

மேலும் கூட்டுவது அடுத்த சிறப்பாக அமைக்கின்றது.

தொடர்ந்து,                            

‘மன்னர் விழித்தா மரைபூத்த மண்பத்தே

            பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள்’

எனும் வரி மன்னரின் கண்களைச் செந்தாமரை மலர்களுக்கு

உவமைப்படுத்தப்படுள்ளது. அதுமட்டுமின்றி, தமயந்தியை வெண்ணிற

சிறகுகள் உடைய அன்னப்பறவைக்கு

உவமைப்படுத்தப்பட்டுள்ளது. தமயந்தி சுயம்வர மண்டபத்தினுள்

நுழைவதைத் தாமரை பூக்கள் குளத்தில் மிதந்து போவதற்குள்

உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

            ‘ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்

            தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே’

இவ்வரிகளில் பெற்ற குழந்தையின் முகம் கண்டு இரங்கி இனிய

பாலைச் சுரக்கும் தாயின் மார்பு போல உவமைப்படுத்தப்பட்டுள்ளது.

¿Ç¦ÅñÀ¡Å¢Öõ ¿õ Å¡úì¨¸ì¸¡É ¿¢¨È ¸ÕòÐì¸¨Ç Ò¸§Æó¾¢ ÒÄÅ÷ ¿ÁìÌ

±ÎòШÃòÐûÇ¡÷. புத்தி கூர்மையும் நளவெண்பாவில் காணப்படும்

பண்புகளில் ஒன்று. இப்பண்பு புகழேந்தி புலவரால் நன்கு

உணர்த்தப்பட்டுள்ளது. தமயந்தி நளன் மீ து வைத்திருந்த உண்மையான

காதலை உணர்ந்த விண்ணரசர்கள் சூழ்ச்சி செய்தனர்.

இந்திரன்,இமயன், வருணன் மற்றும் அக்கினி ஆகியவர்கள் நளன்


உறுவில் சுயவரமண்டபத்திற்கு வருகின்றனர். இதனை சற்றும்

எதிர்பாராத தமயந்தி சற்று அதிர்ந்தே போனாள்.

இருப்பினும் தன் நிலமையை சுதாகரித்துக் கொண்டு தனது புத்தி

கூர்மையால் நல்லதொரு யோசனையில் ஈடுப்பட்டாள். உண்மையான

நளன் யார் என்பதை அறிய பல முயற்சிகள் மேற்கொண்டு அதில்

வெற்றியும் பெற்றாள்.தேவர்கள் கண்களை இமைக்க மாட்டார்கள்;

அவர்களின் காலடி நிலத்தில் படாது; தேவர்களுக்கு சூட்டும்  வண்ண

பூக்கள் கொண்ட மாலையானது வாடாமல் புதிதாய் பூத்த மலர்ப்போல்

செழிப்பாக இருக்கும்.நளன் தேவர் குலத்தை சார்ந்தவன் அல்ல.

தேவர்களுக்கு கூறிய அனைத்தும் அவனுக்கு நிகர்மாறாக

இருந்தது.அதன் மூலமே தமயந்தி நளனை அடியாளம் கண்டு

கொண்டாள். விண்ணரசர்கள் இருந்தபோதும், அவர்களுக்கு மாலை

அணிவிக்காமல் தனக்கு பிடித்த மண்ணரசரான நளனுக்கு மாலை

அனிவிப்பதன் வழி தமயந்தியின் புத்தி கூர்மை மட்டுமல்லாது அவளின்

தூய்மையான காதலும் வெளிப்படுகிறது.

கேள்வி 1 (ஆ)

நிடத நாட்டின் மன்னன் நளன். அவனது மனைவி தமயந்தி நளனை

விரும்பி சுயம்வரத்தில் அவனை தேர்ந்தெடுத்து மணந்ததை இந்திரன்

மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள

வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனை பழிவாங்க முடிவு செய்வதும்,

அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி


குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டு, பின்னர் இழந்த அனைத்தையும்

திரும்பப்பெறுவதைக் கூறும் கதை .

நளனை சுயம்வர மண்டபத்தில் தமயந்தி கண்டிறியும் நிகழ்வினைப்

புகழேந்தி புலவர் தம் பாடலின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார் .

கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி

நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்

அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.

நளதமயந்தி திருமணத்தை

கணிமொழிந்த நாளிற் கடிமணமுஞ் செய்தார்

அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்

குற்றேவல் செய்யக் கொழும்பொன் னறைபுக்கார்

மற்றேவரும் ஒவ்வார் மகிழ்ந்து. என்கிறார் .

நளனும் பூவுலகில் இருக்கும் மன்மதனோ என்று கூறும் அளவுக்கு

அழகானவனாகவும், கல்வி, கேள்வி, சண்டை பயிற்சிகள் உள்ளிட்ட

சகலகலைகளிலும் வித்தகனாக திகழ்ந்தான். தமயந்தியும், தேவலோக

பெண்ணைப்போல அழகில் ஈடு இணையில்லாதவளாக வளர்ந்தாள்.

விதிவசத்தால், இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் என இருவரும்

அறிமுகமாகி, இருவரும் நேரில் பார்க்காமலே தங்களுக்குள் அன்பை


வளர்த்துக்கொண்டனர். இந்த சமயத்தில் நளன் தன்னுடைய

அந்தப்புரத்தில் இருந்த அழகான அன்னப்பறவை ஒன்றினை

தமயந்தியிடம் தூதாக அனுப்பினான். அன்னமும் நளனின் காதலை

சுமந்து சென்றது. தமயந்தி அன்னத்திடம் தன்னுடைய காதலையும்

சொல்லி நளனுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை சொல் அன்னமே

எனத் திருப்பி தூது அனுப்பினாள். இதே நேரத்தில் பருவ

வயதையடைந்த தன் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க ஆசைப்பட்டார்

தமயந்தியின் தந்தை. மகளுக்குண்டான சிறந்த வரனை அவளே

தேர்ந்தெடுக்க வேண்டி, சுயவரத்துக்கு நாள் குறித்து, எல்லா

தேசத்திற்கும் தூது அனுப்பினார். எட்டு திக்குமிலிருந்து மன்னர்கள்

விதர்ப்ப நாட்டிற்கு சுயம்வரத்திக்காக சென்று கொண்டிருந்த

வேளையில், நாரதர், பூலோகத்தில் உள்ள தமயந்தியின்

சிறப்புகளையும் அவளுக்கு நடக்கவிருக்கும் சுயம்வரத்தையும் பற்றி

தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நளன் திறம்பட ஆட்சி புரிந்து வந்தார். நிசத் அரசர் இறந்தவுடன், நளன்

அரசனானார். பல்வேறு ராஜ்யங்களை கைப்பற்றி புகழை அடைந்தார்.

தன் சகோதரனான குவாராவுக்கு இது பொறாமையை ஏற்படுத்தியது.

சூதாட்டம் தான் நளனின் பலவனம்


ீ என்பதை அவர் நன்கு

அறிந்திருந்தார். அதனால் நளனை தாய விளையாட்டுக்கு போட்டி

போடா அழைத்தார் குவாரா. இந்த போட்டியில் நளன் அனைத்தையும்

இழந்தார். இதனால் அரசனான குவாரா, நளனை அந்த ராஜ்யத்தை

விட்டே வெளியேற்றினார். இதனால் காட்டிற்கு செல்ல வேண்டிய

சூழலுக்கு தள்ளப்பட்டார் நளன். தன் குழந்தைகளை தன்னுடைய


வட்டில்
ீ விட்டு விட்டு, தமயந்தியும் நளனை பின் தொடர்ந்தார்.

நளனும் தமயந்தியும் காட்டை அடைந்தனர். மூன்று நாட்களுக்கு

அவர்களால் எதுவுமே உண்ண முடியவில்லை. சோர்வாக இருந்த

நளன் பசியில் வாடிய தமயந்தியை பார்த்து, தன்னை தனியாக விட்டு

விடும் படி கூறி, விதர்பாவை நோக்கி கைகளை காட்டினார். "உங்களை

என்னால் காட்டில் தனியாக விட்டு செல்ல முடியாது. நானும்

உங்களுடன் வருகிறேன். அனைத்து வித மன அழுத்தங்களுக்கும்

மனைவியே மருந்து", என தமயந்தி கூறினார். "நீ சொல்வது சரி தான்.

ஒரு ஆணுக்கு சிறந்த நண்பன் தன் மனைவி தான். என்னால் உன்னை

ஒரு போதும் விட்டு விட முடியாது. உனக்கு ஏன் அந்த சந்தேகம்? நான்

எப்போதும் உன்னுடன் இருப்பேன்", என நளன் அதற்கு பதிலளித்தார்.

"பின்னே எதற்கு விதர்பாவுக்கான வழியை என்னிடம் காட்டின ீர்கள்?

நான் என் வட்டிற்கு


ீ செல்வதை நீங்கள் விரும்பினால், நாம் இருவரும்

சேர்ந்து போய், அங்கே ஒன்றாக வாழலாம். உங்கள் வார்த்தைகள்

என்னை காயப்படுத்துகிறது. என்னை விட்டு நீங்கள் பிரிந்து

விடுவர்களோ
ீ என எனக்கு பயமாக உள்ளது." என தமயந்தி கூறினார்.

தமயந்தி தூங்கிக் கொண்டிருந்த போது, நளன் அவரை காட்டிற்குள்

விட்டு சென்றார். மறுநாள் எழுந்த தமயந்தியால் தன் கணவனை காண

முடியவில்லை. மனம் உடைந்த தமயந்தி பின்னர் சேடியை

அடைந்தார். ஆண்களுடன் பழக அவர் பழக மாட்டார் என்ற சில

நிபந்தனைகளோடு அவர் அங்கே வாழ தொடங்கினார்.


நளன் காட்டிற்குள் தனியாக சென்று கொண்டிருந்த போது உதவி நாடி

அழும் குரல் ஒன்று கேட்டது. "நளன், தயவு செய்து இங்கே வரவும்".

அழுகை கேட்ட திசையை நோக்கி நளன் சென்றார். காட்டின் ஒரு பகுதி

எரிந்து கொண்டிருந்ததை கண்டார் நளன். தன்னை அழைத்தது ஒரு

பாம்பு என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். "நான் தான்

கார்கொடகா, பாம்புகளின் அரசன். என்னை இந்த தீயில் இருந்து

காப்பாற்றவும்." என பாம்பு நளனிடம் கூறியது. கார்கோடகனை தீயில்

இருந்து காப்பாற்றினார் நளன். திடீரென நளனை பாம்பு கடித்தது.

பாம்பின் விஷம் நளனின் உடம்பில் ஏறியதால், அவர் உருக்குலைந்து

போனார். இதனால் அருவருப்பான தோற்றத்துடன் காட்சி அளித்தார்

நளன்.

தன் முதலாளியான சம்சுமரா அரசனுடன், நளன் சுயம்வரத்திற்கு

வந்தார். சுயம்வரத்திற்கு ஒரு நாளைக்கு முன்னால், கூன் விழுந்த

வேலைக்காரன் தோற்றத்தில் இருந்த நளனை தமயந்தி கண்டார். அவர்

உடனே தன் கணவனை கண்டு கொண்டார். நளனும் அந்த ஆடைகளை

அணிவித்து தன் சுய தோற்றத்தை மீ ண்டும் பெற்றார். சுயம்வரத்தில்

கலந்து கொள்ளுமாறு நளனிடம் தமயந்தி கேட்டுக் கொண்டார்.

சுயம்வரத்தின் போது நளனின் கழுத்தில் மாலை அணிவித்தார்

தமயந்தி. அவர்கள் மீ ண்டும் இணைந்தார்கள். அந்த 12 வருட பிரிவு

காலமும் முடிவுக்கு வந்தது. பீம அரசனின் படையோடு தன்

ராஜ்யத்தை மீ ண்டும் வென்றார் நளன். மீ ண்டும் அயோத்தியாவின்

மன்னரானார்.
நளனுக்கும் தமயந்திக்கும் புஷ்காரா என்ற மகன் பிறந்தான். அவனை

அரசனாக ஆக்கிய பிறகு, ஆன்மீ க ஞானத்தை தேடி அவர்கள்

அனைத்தையும் துறந்தார்கள்.

கேள்வி 3 (அ)

நாலடியார் பதினெண் கீ ழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த நீதி நூல்

ஆகும். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது

சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின்

தொகுப்பாகும். இதை நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம்

என்றும் வழங்குவர். வாழ்க்கையின் எளிமையான பொருட்களை

உவமையாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம்

பெற்று விளங்குகின்றது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும்

இரண்டும் சொல்லுக்குறுதி, சொல்லாய்ந்து நாலடி நானூறும் நன்கு

இனிது, பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில் என்னும் கூற்றுக்கள்

திருக்குறளுக்கு இணையாக நாலடியாரைப் போற்றுவதை உறுதி

செய்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாலடியார் புகட்டுகின்ற

அறத்தினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செல்வம் நிலையாமை

“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் கல்லாரோ டுண்க

அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்” (நா-2 ப. 6)


செல்வம் ஒருவரிடம் மட்டுமே நிலைத்து நிற்காமல் வண்டியின் சக்கரம்

போல் பலரிடமும் சுழன்று செல்லக்கூடியது. எனவே மக்கள் ஏர் பூட்டி

உழவுத்தொழிலால் நல்வழியில் உற்பத்தி செய்த செல்வத்தையும்

உணவையும் அனைவர்க்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் அனுபவிக்க

வேண்டும் என்று கூறுகிறது.

அறன் வலியுறுத்தல்

நம் வாழ்நாளில் இறுதி நாள் இன்றோ, நாளையோ, வேறு எந்நாளோ

என்று வணாகச்
ீ சிந்தித்துக் கொண்டு இருக்காமல் உன் உயிரைப்

பறிப்பதற்குக் காலன் காத்திருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து

இன்று முதலே தீய செயல்கள் செய்வதை விடுத்துப் பெரியோர்கள்

கூறிய அறச்செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகிறது. மேலும்,

சிறிய அளவிலான ஆலம் விதை தழைத்து எல்லையற்று விரிந்த

நிழலைத் தருவது போல அறச்செயல்களின் பயனாகிய புண்ணியமும்

செய்வது சிறியதாக இருந்தாலும் தக்கவரிடம் சென்று அடைந்தால்

வானமே சிறுத்துப் போகும்படி பெரிய புண்ணியப் பயனைத் தரும் என்று

கூறுகிறது.

சினம் இன்மை

“காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்

ஓவாதே தன்னைச் சுடுதலால்…” (நா. 63 ப. 39)

கோபம் கொண்டு ஒருவன் அடக்கம் கெட்டுக் கூறிய கோபச்சொல்


எக்காலத்திலும் சொன்னவனையே வருத்தும். எனவே, ஆராய்ந்து

தெளிந்த ஞானம் உடையவர்கள் அத்தகையக் கோப மொழிகளைக்

கூறமாட்டார்கள் என்கிறது. மேலும் கீ ழ்மக்கள் கொண்ட கோபமானது,

நீண்ட காலமானாலும் தனியாமல் பெருகிக்கொண்டே போகும். ஆனால்

சான்றோர்கள் கொண்ட கோபமானது, கொதிக்கும் போது வெப்பம்

அடைந்த நீர் பின்னர் தானே தணிந்து விடுவது போன்று தணிந்து விடும்

என்று கூறுகிறது.

பொறையுடைமை

“அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி

உறுவ துலவெப்பச்செய்து- பெறுவதனால்

இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்

துன்புற்று வாழ்தல் அரிது” (நா. 74 ப. 45)

நன்கு கற்று அறிய வேண்டியதை அறிந்து, அடக்கம் உடையவராய்

பயப்பட வேண்டியதற்குப் பயந்தும், தமக்குத் தகுந்தவாறு உரிய

செயல்களை உலகம் மகிழுமாறு செய்து அதனால் அடையத்தகும்

பயனைப் பெற்று இனிமையோடு வாழ்பவர் வாழ்க்கையில்

எக்காலத்திலும் துன்பம் என்பதே இல்லை என்று கூறுகிறது.

பிறன்மனை நயவாமை

“அறம்புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்

பிறந்தாரம் நச்சுவார்ச் சேரா…” (நா. 82 ப. 49)


தருமம், புகழ், நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை

விரும்புவரிடம் சேராது. அத்தகையோரிடம் பகை, பழி, பாவம், பயம்

ஆகிய நான்கு தீயபண்புகள் தான் சேரும் என்கிறது.

ஈகை

தம்மிடம் பொருள் இல்லாத போதும், பிறர்க்கு இயன்ற அளவு பொருள்

உடையவர் போன்று பெரிதும் மகிழ்ந்து கொடைத்தன்மையோடு

விளங்கும் ஈகைக் குணம் கொண்ட மாந்தர்க்கு அடுத்தப் பிறவியில்

பேரின்பமாகிய வட்டுக்குச்
ீ செல்லும் கதவுகள் அடைப்படாமல் திறந்தே

இருக்கும் என்கிறன்றது. மேலும்,

“இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுத்துண்மின்…”(நா. 94 ப. 55)

இம்மியளவு அரிசியானாலும், உம்மை அடைந்தவர்க்கு நாள்தோறும்

கொடுத்து, அதன்பிறகு உணவு உண்ண வேண்டும். முற்பிறவியில்

யாருக்கும் கொடுக்காதவர்களாய் இருந்தவர்களே கடல் சூழ்ந்த

இவ்வுலகில் வறியவர்களாக இருக்கிறார்கள் என்று சான்றோர்கள்

கூறுவதாகக் கூறுகிறது.

சிறந்த அழகு

“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து


நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி யழகே அழகு”(நா. 131 ப. 74)

தலைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப்

பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவர்களாக

இருக்கிறோம் என்னும் உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்கம் தரும்

கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும்.

நல்லினம் சேர்தல்

“பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது

நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்…” (நா. 177 ப. 95)

பாலுடன் நீரைக் கலந்தால், நீரானது தன் நிறம் கெட்டுப் பாலின்

வெண்மை நிறமடையும். அதுபோல, கீ ழ்மக்கள் ஆனாலும்

பெரியோருடன் சேரும் போது பெருமை பெறுவர். மேலும், ஊரிலுள்ள

சாக்கடை நீர் கடல் நீரோடு சேர்ந்தால் அதன் பெயரும் மாறிப் புனிதம்

நிறைந்த தீர்த்தமாகிப் பெருமை கொள்ளும். அது போல நற்குலப்

பெருமை இல்லாதவரும், நல்ல மாட்சிமை உடையோரைச் சாரும்

போது அவர்களும் மலை போன்ற சிறப்பை அடைவார்கள் என்கிறது.

நட்பில் பிழை பொறுத்தல்

நெல்லில் உமியும், நீரில் நுரையும், பூவில் வாசனையற்ற புற இதழும்

ஆகிய வேண்டாப் பகுதிகள் இருக்கும். இவைபோலவே, நாம் நல்லவர்

என மிகவும் விரும்பி நட்புக் கொள்கின்றவரிடமும், சிறுசிறு குறைகள்


இருக்கும். இக்குறைகளைக் கண்டால் பொறுத்து, அவரை நம்முடனே

சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறது.

தன்மானம்

தன்மானம் உடையவர்கள் எலும்பு தேய்ந்து, தசை அழிந்தாலும்

நற்குணம் இல்லாதவரிடம் தங்களுடைய துன்பங்களைக்

கூறமாட்டார்கள். தம் வறுமை நிலையைத் தாம் உரைப்பதற்கு முன்பே

உணர்ந்து உதவ வல்ல அறிவுடையவரிடமே சென்று தம் துன்பத்தைக்

கூறி உதவி வேண்டுவர் என்கிறது.

கயமை

தனக்கு ஒரு நன்றியைச் செய்தவர்கள், பின்பு நூறு கெடுதல்களைச்

செய்தாலும் சான்றோர் பொறுத்துக் கொள்வர். ஆனால் கயவர்களுக்கு

எழுநூறு நன்மைகள் செய்து பின்பு ஒன்று கெடுதியாக அமைந்தாலும்

அவ்வெழுநூறு நன்மைகளும் மறந்து அவர்களால் தீமைகளாகவே

கருதப்படும் என்கிறது.

சான்றோர்களின் பட்டறிந்த உண்மைகளே அறக்கருத்துகளாக

நாலடியார் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவ்வறக்

கருத்துக்களை மக்கள் மனதில் நன்கு உள்வாங்கிக் கொண்டு

வாழ்வினை வாழ முற்பட்டால் அவர்களின் வாழ்வும் சமுதாயமும்

மேன்மையடையும்.
கேள்வி 3 (ஆ)

நாலடியாரில் மேன்மக்களைப் பற்றி மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறார்கள்.


அவை :-

அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்


திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின். 151

அழகிய இடத்தினையுடைய வானத்தில் விரிந்த நிலவினைப் பரப்பும்

சந்திரனும் மேன்மக்களும் பெரும்பாலும் தம்முள் ஒப்பாவார். ஆனால்,

திங்கள் தன்னிடமுள்ள களங்கத்தைப் பொறுத்துக்கொள்ளும்;

மேன்மக்களோ அதனைப் பொறார். அவர்கள் தமது ஒழுக்கத்தில் ஒரு

சிறிது தவறு நேர்ந்தாலும் வருந்தி மெலிவர்.

இசையும் எனினும் இசையா தெனினும்


வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்? 152

விரைவோடு நா¢யின் மார்பைப் பிளந்து சென்ற அம்பைவிட, சிங்கத்தை

நோக்கிவிடப்பட்ட குறி தவறிய அம்பு உயர்ந்ததாகும். அதனால்

முடிந்தாலும் முடியாவிட்டாலும் சான்றோர் பழியற்ற செயல்களையே

எண்ணிச் செய்வர்.

நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர் 153

குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா


உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.

நரம்புகள் மேலே தோன்றுமாறு உடல் மெலிந்து வறுமையுற்ற போதும்,

மேன்மக்கள் நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து இரத்தலாகிய

குற்றத்தை மேற்கொண்டு பிறா¢டம் செல்லார். அவர்கள் தம் அறிவைப்

கவறாகக் கொண்டு முயற்சி என்னும் நாரினால் மனத்தைக் கட்டி

(இரத்தல் என்னும் தீய நினைவை அடக்கி) தம்மிடம் உள்ள பொருளுக்கு

ஏற்ப நற்செயல்களைச் செய்வர். (கவறு-பிளவுள்ள பனமட்டை;

ஒன்றைப் பிடித்து இறுக்கிக் கயிற்றால் கட்ட உதவுவது).

செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்


தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி. 154

நல்ல மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! மேன்மக்கள்

தாம்போகும் வழியில் ஒருவரை ஒருநாள் கண்டாலும், பல நாள்

பழகியவர் போல் அன்பு கொண்டு விரும்பி அளவளாவி அவரை

நட்பினராக (அல்லது உறவினராக)க் கொள்வர். சில நாள் காலடிப் பட்டு

நடந்து சென்றால், கல் மிகுந்த மலையிலும் தேய்ந்து வழி உண்டாகும்.

(பல நாள் பழகிப் பின் நட்புக் கொள்வதில் என்ன பெருமையிருக்கிறது?

மேன் மக்கள் ஒரு நாள் பழகினும் நண்பராவர்).

புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி 155

கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி


நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.

கல்வியறிவு இல்லாத பயனற்ற வணர்


ீ அவையில் நூல்களைக் கல்லாத

ஒருவன் பொருத்தமில்லாமல் உரைப்பனவற்றையும் (அறிவுடையோர்)

அவனது குற்றங்களைச் சுட்டிக் காட்டினால், அவன் பல்லோரிடை

அவமானப்பட நோ¢டும் என்பதற்காக இரங்கி, மனம் வருந்தினாலும்

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பர்.

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி


இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து. 156

கரும்பைப் பல்லால் கடித்தும், கணுக்கள் நொ¢யுமாறு ஆலையிலிட்டுச்

சிதைத்தும், உரலில் இட்டு இடித்து அதன் சாற்றைக் கொண்டாலும்,

அச்சாறு, இனிய சுவையுள்ளதாகவே இருக்கும். அதுபோல, மேன்

மக்களின் மனம் புண்ணாகுமாறு பிறர் எவ்வளவு தான்

இகழ்ந்துரைத்தாலும் அம் மேன்மக்கள் தம் வாயால் தீயன சொல்லார்.

கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ


எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர். 157

குற்றமற்ற அறிவுடைய மேலோர் திருடார்; கள் அருந்தார்;

விலக்கத்தக்க தீயனவற்றை விலக்கித் தூயராகி விளங்குவர்; பிறரை


அவமதித்து இகழ்ந்து உரையார்; மறந்தும் தம் வாயால் பொய் கூறார்.

ஊழ் வினையால் வறுமையுற்றாலும் அதற்காக வருந்தவும் மாட்டார்.

பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து


ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. 158

ஒழுக்கத்தின் மேன்மையை யுணர்ந்து, ஒருவன் பிறருடைய

இரகசியங்களைக் கேட்பதில் செவிடனாகவும், அயலார் மனைவியைக்

காண்பதில் குருடனாகவும், பிறர் இல்லாதபோது அவரைப் பற்றிப்

பழித்துப் பேசுவதில் ஊமையாகவும் இருப்பானானால் அவனுக்கு

வேறெந்த அறமும் கூற வேண்டியதில்லை.

பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை


என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு. 159

நற்பண்பு இல்லாத கீ ழ் மக்கள் தம்மிடம், ஒருவர் பல நாட்கள் வந்து

கொண்டிருந்தால், (இவர் எதையோ விரும்பி இங்கு வருகிறார்) என்று

கருதி அவரை அவமதிப்பர். ஆனால் நற்குணம் நிறைந்த மேன்

மக்களோ தம்மிடம் வருபவர் எதையாவது விரும்பினாலும் 'நல்லது'

என்று கூறி மகிழ்ந்து நாள் தோறும் அவர்க்கு நன்மையே செய்வர்.

உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக் 160

கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய


பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.

இவர் செல்வம் உடையவர்' என்று மதித்து, கீ ழ் மக்கள் பின்சென்று

அவர் தருவன பெற்று வயிறு வளர்ப்பர் பெரும்பாலோர், அவர்களுக்கு

நற்குணம் மிக்க மேன்மக்களின் தொடர்பு கிடைக்குமானால் பொருள்

நிறைந்த ஒரு சுரங்கமே கிடைத்தது போல் இருக்குமல்லவா?

BAHAGIAN B

கேள்வி 1

அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10 குறள்கள் கொண்ட ஒரு

அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர். மேலும் அறி,

அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா,

அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான்,

அறியேன், அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர்

போன்ற அறிவு குறித்த 50 க்கும் மேற்பட்ட சொற்களை (54 சொற்கள்),

100 க்கும் மேற்பட்ட முறை (163 முறை) அறிவின் இன்றியமையாமை,

அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைக் குறித்து

அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார். இவற்றில்

அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும்

அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின்

தேவை குறித்து வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி

மேலும் பல அதிகாரங்களிலும் தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார்.


பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421), மனதை

அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க

உதவுவது அறிவு (422), சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம்

ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க

அறிவுறுத்துவது அறிவு (425), அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை

ஒட்டி நடக்கச் செய்வது அறிவு (426), தனது செயலினால் விளையக்

கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு (427), அஞ்ச

வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428),

எதிர்கொள்ளக்கூடிய துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை

அறியச் செய்வது அறிவு (429), இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு

அறிவே எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று

அறிவின் சிறப்பை குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார்

வள்ளுவர்.

மேலும், அந்த அறிவை எவ்வாறு அடைவது என்பதையும்

அறிவுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள் மூலமும், மெய்யுணர்தல்

அதிகாரத்தின் குறள் ஒன்றின் மூலமும் விளக்குகிறார். வள்ளுவர் தரும்

இந்த விளக்கங்கள் பகுத்தறிவு பாசறை கூறி வந்துள்ள கருத்துகளாக

அமைந்துள்ளன.குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம் :

   எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

   மெய்ப்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 423)

எந்தவொரு பொருள் குறித்து யார் என்னதான் சொன்னாலும், அதை

அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டு விடாமல் அது உண்மைதானா என


ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின்

பொருள்.

தான் சொல்வதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று

அறிவுரை கூறிய சிறந்த வழிகாட்டி புத்தர். தங்கத்தின் மாற்றை உரசிப்

பார்த்து ஆராய்ந்து அறிவது போல அவர் அறிவுரைகளையும் மதிப்பிட்டு,

தக்க அறிவுரையாக இருந்தால் மட்டுமே ஏற்கச் சொன்னார். மற்றவர்

அவர் மேல் கொண்ட அன்பினாலோ அல்லது மதிப்பினாலோ அவர்

கூறியவற்றை எல்லாம் பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு

இருந்திருக்கவில்லை. அவரது இந்தக் கருத்தினால் கவரப்பட்ட

இக்கால மனிதர்களுள் ஒருவர், சமூக சீர்திருத்தவாதி ஈ. வெ. ரா.

பெரியார். அவரும் தனது சொற்களைப் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ள

வேண்டும் என்றுதான் வலியுறுத்தினார். ‘பகுத்தறிவால் ஆராய்ந்து பார்’

என்று அறிவுரை கூறிய மற்றொருவர் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். ‘ஏன்’

என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறி எதையும் கேள்வி

கேட்காமல் ஏற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.

மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு எனப் பகுத்தறிவு வழிகாட்டிய

இக்குறள் சென்ற 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மேலை நாட்டுப்

பகுத்தறிவாளர் ராபர்ட் இங்கர்சால் அவர்களையும் கவர்ந்த குறளும்

ஆகும்.

உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவுடைமை என வள்ளுவர்

அறிவுறுத்துவதால், வள்ளுவரின் கூற்றையும் மதிப்பிட்டே நாம் ஏற்றுக்

கொள்ள வேண்டும் என்பதையும் இதனால் அறிகிறோம். பகுத்தறிவு

கருத்து கூறும் அறிவுடைமை அதிகாரத்தின் மற்றொரு குறள்.


   எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

   நுண்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 424)

நாம் சொல்ல விரும்புவதைக் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில்

எளிமையாகச் சொல்லி, பிறர் சொல்லிய கருத்தில் அவர் நேரடியாகச்

சொல்லாதவற்றின் உட்பொருளையும் (சொன்னதும் சொல்லாமல்

விட்டதுமான) நுட்பமான கருத்துகளையும் ஆராய்ந்து உணர்வது

அறிவுடைமையாகும் என்று கூறுகிறது இக்குறள். ஆகவே, ஒன்றைக்

கூறியவரின் நோக்கத்தையும் அவரது சொற்களின் வழியாக எடை

போடுவதும் தேவை.

இவ்வாறான ஒரு கருத்தை ஒருவர் ஏன் நம்மிடம் சொல்கிறார்,

அவ்வாறு அவர் சொல்ல வேண்டிய தேவை என்ன? இதனால் என்ன

பயன்? யாருக்குப் பயன்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் எழுப்பி

நுட்பமாக ஆராயத் தொடங்கினால் பல மூடநம்பிக்கைகளையும்,

அவற்றைக் கூறுபவர்களையும் காணாமல் போக்கிவிடலாம். எடுத்துக்

காட்டாக; இக்காலத்தில் கேட்க வேண்டிய கேள்வி, யாரோ

சொன்னார்கள் என்று விளக்கேற்றி பட்டாசு வெடித்து “கோ கொரோனா,

கோ கொரோனா கோ” என்று கைதட்டிக் கூவிக் கொண்டிருந்தால்

கொரோனா வைரஸ் மறைந்துவிடுமா? என்பதாக இருக்க வேண்டும்.

குளத்தில் போட்ட ஒரு உடைந்த சிலையை வெளியில்

எடுத்துக்கொண்டு வந்து அலங்காரம் செய்து காட்சிப் படுத்தினால், நாம்

அங்குப் போய் உண்டியலில் பணம் போட்டுவிட்டு வந்தோமே, அது


இப்பொழுது போர்க்கால நடவடிக்கையில் கொரோனா பாதிப்பிற்கு நிதி

திரட்டப்படுகையில் எந்த வகையிலாவது பரிதவிக்கும் மக்களுக்குப்

பயன்படுகிறதா? அதனால் பயன் பெற்றவர் யார் யார்? என்று கேள்வி

கேட்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதுதான்

எந்த ஒரு நிகழ்வின் பின்னணியிலும் மறைந்துள்ள நோக்கத்தை

நுட்பமாகப் புரிந்து கொண்டு அறிவுடையவராக ஒருவரை மாற்றும்.

இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முனைந்த மணக்குடவர்; பிறர்

சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர்

சொல்லாமல் தானே காண்பது என்று விளக்கமளிக்கிறார்.

பகுத்தறிவு கருத்து கூறும் மேலும் ஒரு குறள் மெய்யுணர்தல்

அதிகாரத்தில் இடம் பெறுகிறது.

   எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

   மெய்ப்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: 355)

காட்சிப்படுத்தப்படும் ஒரு தோற்றம் கண்டு மயங்காமல், ஒரு

பொருளின் உண்மையான இயல்பை அறிவதே அறிவுடைமையாகும்.

மாயையில் விழாமல் இருப்பது என இதற்குப் பொருள் கொள்ளலாம்.

இங்கு அறிவியல் நோக்கில் ஆராய்வதே உண்மையை வெளிப்படுத்தும்.

பிள்ளையார் சிலை பால் குடிப்பது, இரத்தக் கண்ண ீர் விடும் மேரி

மாதாவின் சிலை, வெறும் கையில் விபூதி வரவழைப்பது என

ஆன்மீ கத்தின் பெயரில் மக்களை அடிமுட்டாளாக்கும் நோக்கில்

செப்பிடுவித்தை மற்றும் கண்கட்டு வித்தைகள் நிகழ்த்தி மக்களின்

அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றும் உலகம் இது. இக்காலத்தில்


நாசா விண்கோள் வெளிப்படுத்திய அதிசயம் என்று சமூக வலைத்தள

உதவியுடன் அறிவியல் துணை கொண்டே ஏமாற்றும் செய்திகளுக்கும்

குறைவில்லை. எப்பொருள் எத்தன்மை கொண்டதாகத்

தோன்றினாலும் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக்

காண்பதே மெய்யுணர்தல் என்று கூறும் குறள் கருத்தே எதிலும்

உண்மைத்தன்மையை அறிய விரும்புவோருக்கு நினைவில் நிற்க

வேண்டும்.

அறிவுடைமை அதிகாரத்தில் மட்டுமின்றி மெய்யுணர்தல் (குறள் 355,

356), அருளுடைமை (குறள் 249), இகல் (குறள் 857) ஆகிய

குறட்பாக்களிலும் வள்ளுவர் “மெய்ப்பொருள் அறிவது” குறித்துக்

குறிப்பிடுகிறார். மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய

இயலாதவர்கள் அறிவு மங்கியவர்கள் என வள்ளுவர் உண்மை

என்னவென்று அறிய இயலாதவரை விவரிக்கிறார் (857). வாழ்வு குறித்த

மெய்யியல் ஞானம் பெறுவதையும் மெய்ப்பொருள் என்றுதான்

குறிப்பிடுகிறார் வள்ளுவர் (குறள்கள் 249 மற்றும் 356), இதே கருத்தை

‘செம்பொருள்’ அறிவது என்று மற்றொரு குறளிலும் குறிப்பிடுகிறார்

(358).

அறிவைப் பெறுவதற்குக் கல்வி தேவை, தோண்டத் தோண்ட

மணற்கேணியில் நீர் ஊருவது போல, கற்கக் கற்க

அறியவேண்டியவற்றை அறிந்து கொள்ளும் அறிவும் பெருகும் (396)

என்று கூறும் வள்ளுவர், அறிவுடையார் செயல் எவ்வாறு இருக்க

வேண்டும் என்பதையும் கூறத் தவறவில்லை. அறியவேண்டியவற்றை

அறிந்து, விலக்க வேண்டியவற்றை விலக்குவது அறிவார்ந்த செயல்,


இவ்வாறு செய்யாவிடில் அந்த அறிவால் பயனில்லை (175). அற்ப

எண்ணம் கொண்ட மக்களுடன் உறவு கொள்ளாமல் (சிற்றினம்

சேராமை) அவர்களின் கெடுமதியைத் தானும் தனது இயல்பாக்கிக்

கொள்ளாமல் இருப்பதும் அறிவுடைமைதான். பழகும் கூட்டத்தின்

அறிவே ஒருவரிடம் தாக்கம் செலுத்தும் என்பதால் குணமற்றவர்

தொடர்பை விட்டொழிப்பது இன்றியமையாதது (சிற்றினம் சேராமை

குறள்கள்:452, 454) என அறிவுடையோராக இருப்பதற்கு வள்ளுவர்

அறிவுரைகள் பல கூறியுள்ளார்.

கேள்வி 2

சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல்

சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப்

பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின்

ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம்

செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும்

உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும்

கூறுகின்றன. கொடைமடம் என்றால் சற்றும் யோசித்து பாராமல்

பகுத்தறியாது மடமையோடு கொடை செய்வது ஆகும்.

அ) பேகன்

இவர் பொதினி மலைக்குத் தலைவர். தற்போது இந்த இடம் பழனி

மலை என்று அழைக்கப்படுகிறது. மழை வளம் மிக்க அந்த மலையின்


காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து

கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி

அகவியது என்று பேகன் நினைத்தார். மயில் குளிரில் இருந்து

காத்துக்கொள்ள தான் அணிந்திருந்த போர்வையை அம்மயிலுக்குப்

போர்த்தினார். மயில் போர்வையைப் போர்த்திக் கொள்ளுமா எனச்

சிறிதும் யோசித்துப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே

‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

பரணர் பாடியது.

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,

உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,

வரையா மரபின் மாரிபோல,

கடாஅ யானைக் கழல் கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது,

படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.

(புறம் 142)

மழையானது நீர் இல்லாத குளத்தில் பொழியும், அகன்ற வயலில்

பொழியும், காயும் இடத்தில் பெய்யாமல் விளையாத களர் நிலத்திலும்

பெய்யும், இது சரிதானா? இப்படி வரையறை இன்றி எங்கும் பொழியும்

மழை போல யானை மேல் வரும் பேகன் வழங்குவான் இப்படிக்

கொடை வழங்குவதில் மடத்தனமாக நடந்துகொள்வானே தவிர, படை

வந்து தாக்கும்போது மடங்கமாட்டான் (வளைந்து கொடுக்க மாட்டான்)

ஆ) பாரி
பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும்

வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த

முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத்

தனது பெரிய தேரையே அளித்தார். முல்லைக்குத் தேர் தந்த பாரி

வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில்

வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்த போது

அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின்

நண்பரான புலவர் கபிலர் என்றும் கூறப்படுகிறது.

கபிலர் பாடியது,

பாரி பாரி’ என்று பல ஏத்தி,

ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;

பாரி ஒருவனும் அல்லன்;

மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.

(புறம் 107)

ஒரு புலவர் பாரி பாரி என்று சொல்லி அவனை மட்டுமே

புகழ்ந்துகொண்டிருக்கிறார். பாரி ஒருவன் மட்டுந்தானா கொடையாளி?

மழையும் இருக்கிறதே. அதாவது மழைபோல் வேள் பாரி கொடை

வழங்குபவன் என்பது பொருள்.

இ) காரி

திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி

புரிந்தவர் இவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின்

தென்கரை அடங்கிய பகுதியே “மலாடு” ஆகும். இவர் மலையமான்


திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான்

என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.

கொடை கேட்டு வருபவர்களிடம் எப்போதும் அருள் நிறைந்த

சொற்களைப் பேசும் இயல்பு உடையவன். ‘தலையாட்டம்’ என்ற

அணியைத் தலையிலும், ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் அணிந்து

ஆடுகின்ற குதிரையையும் மற்றும் ஏனைய செல்வங்களையும் இனிய

மொழிகளுடன் கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது

அல்ல வழங்கினான்.காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான

கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள்

புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

ஈ) ஆய்

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு

ஆட்சி செய்தவர். இவனை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும்

அழைத்தனர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் (நஞ்சுடைய

கொடிய பாம்பு) ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம்.

நாகம் அளித்த ஒளிமிக்க ஆடையை இவன், ஆலமரத்தின் கீ ழிருந்த

செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தானாம்.

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும்

புறநானூற்றில் உள்ளன.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.


களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்

பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,

களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,

கான மஞ்ஞை கணனொடு சேப்ப,

ஈகை அரிய இழை அணி மகளிரொடு

சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்;

சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்

பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,

உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய

முரைசு கெழு செல்வர் நகர் போலாதே

(புறம் 127)

ஆய் யானைகளைப் பாணர்க்கு வழங்குவான். அதனால் அவன்

அரண்மனை முற்றத்தில் யானை இல்லை. யானை கட்டியிருந்த

வெளில் என்னும் கட்டுத்தறியில் காட்டு மயில் கூட்டம் திரிகிறது.

அவனது மனைவிமார் பிறருக்குத் தர முடியாத தாலியுடன் உள்ளனர்.

“ஈகை அரிய இழை அணி மகளிரொடு சாயின்று” இதுதான் ஆய் அரசன்

அரண்மனை நிலைமை.

இவன் வாழும் அரண்மனை, முரசு முழங்கும் செல்வம் படைத்த

செல்வர் வாழும் மாளிகை போல் இல்லை. சுவைக்கு இனிதாகத்

தாளித்த உணவை, ஈவு இரக்கம் இல்லாமல் தன் வயிற்றுக்கு மட்டும்

உண்ணும் செல்வர் வாழும் மாளிகை போல் இது இல்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது


மன்றப் பலவின் மாச் சினை மந்தி

இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்

பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,

அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,

கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் 5

ஆடுமகள் குறுகின் அல்லது,

பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.

(புறம் 128)

ஆய் மன்னனைப் பாடிக்கொண்டு அவன் அரண்மனை செல்லும்

இரவலர் (கொடை கேட்டு செல்பவர்) தம் முழவினை (முரசு)

முழக்குவர். பின்னர் முழவினை பொதியமலையில் இருக்கும் பலா

மரத்தின் கிளைகளில் தொங்க விடுவர் இரவலர் முழக்கும்போது பார்த்த

பெண்குரங்கு அந்த முழவினைப் பலாப் பழத்தைத் தட்டிப் பார்ப்பது

போலத் தட்டும். அந்த ஓசையைக் கேட்டு அங்குள்ள நீர்க்கரையில்

அன்னச் சேவல் எழுந்து குதித்து ஆடும்.

மழை மேகம் தவழும் இந்தப் பொதியில் நாட்டு அரசன் ஆய். இந்த

நாட்டில் ஆடிக் காட்டும் மகளிர் தடையின்றிச் செல்வர். பெருமை மிக்க

மன்னராயினும் யாரும் போரிட நுழைய முடியாது.

உ) அதியமான்

அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான், அஞ்சி எனப் பல

பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக்

கொண்டு ஆண்ட குறுநில மன்னர். இவர் ஒரு நாள் தன் நாட்டு


மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின்

அருங்கனி ஒன்றைப் பெற்றார். அந்த அருநெல்லியை உண்டால்,

உண்டவரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும்

வலிமை உடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து

தம்மைக் காண வந்த நல்லிசைப் புலவர் ஒளவையார்க்கு தந்து அழியாத

அறப்புகழ் பெற்றார். அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப்

புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில்

காணப்படுகின்றன.

ஊ) நள்ளி

அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன்

என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும்

அழைத்தனர். நள்ளி, கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று

கூறாது அள்ளி வழங்கினார். மேலும் பின்னர் அவர் வேறு ஒருவரிடம்

சென்று கொடை கேட்காத அளவிற்கு கொடை அளித்தார். நள்ளியைப்

போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில்

காணலாம்.

எ) ஓரி

சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். ஓரி

விற்போரில் வல்லவர். அதனால் இவரை “வல்வில் ஓரி” என்றும்

அழைப்பர். ஓரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற

நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட

சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக்


கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம்

பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத்

தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும்

ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து

போயினராம் ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப்

புறநானூற்றில் காண்கிறோம்.

இந்த கடையெழு வள்ளல்களின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடல்களில்

மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற சங்க கால

இலக்கியங்களிலும் நாம் காணலாம்.

You might also like