You are on page 1of 4

“நுண் திற ஆற்றல் எனப்படுவது ஒன்று அல்லது அதற்கு மேம்பட்ட சமுதாயத்தில் ஏற்றுக்

கொள்ளக்கூடிய வகையில் சிக்கல்களைக் களையும் திறன்இ அல்லது ஒன்றை உருவாக்கும்


திறனைக் கொண்டிருப்பதாகும்”. .இது ஹாவர்ட் கார்ட்னர் என்பவரால்
வரையறுக்கப்ப்பட்டது.ஹாவர்ட் கார்ட்னர் வரையறுத்திருக்கும் பல்வகை நுண்ணறிவுக்
கோட்பாடு 8 வகையிலுள்ளது. அவை :-

I. மொழியியல் நுண்ணறிவு
II. தர்க்க முறையிலானா கணித நுண்ணறிவு
III. இடை நிலையிலான நுண்ணறிவு
IV. உடலியக்கம் தொடர்பான நுண்ணறிவு
V. இசைத் தொடர்பான நுண்ணறிவு
VI. சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு
VII. தான் செயல்பாடுவதில் திறமையாக இயங்குவதற்கு உரிய நுண்ணறிவு
VIII. இயற்கையினை புரிந்து கொள்ளும் நுண்ணறிவு

உதாரணத்திற்கு தர்க்க முறையிலானா கணித் நுண்ணறிவு கொண்ட மாணவர்கள்


பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், தகவல்களை வகைப்படுத்துதல், தனித்த விவரங்களில்
உள்ள ஒற்றுமையைக் காணுதல், , வெவ்வேறு விடிவங்களுடன் செயல்முறை செய்தல் ஆகிய
திறன்களை கொண்டிருப்பர்.இத்திறன்கள் அவர்களை கணித சார்ந்த துறைகளில் தனியிடம்
பிடிக்க துணைப்புரிகிறது. நீண்ட தொடர்புடைய செய்திகளைப் புரிந்து அடுத்த நிலையை
அறிதல், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் இயற்கையின்
விநோதங்களை வியந்து கேட்டல் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு காணுதல்

மேலும் இடம் சார்ந்த திறனை கொண்ட மாணவர்கள் புதிர்களை உருவாக்குதல், வாசித்தல்,


எழுதுதல், கிரா/ப்களையும் வரைபடங்களையும் புரிந்துகொள்ளுதல், திசைகளை அறியும்
திறன், தீட்டுதல், வரைதல், உருவக மற்றும் ஒப்புமை காட்சிகளை உருவாக்குதல்,
காட்சிப்படங்களின் திறனறிதல், பயன்பாட்டுப் பொருட்களை வடிவமைத்தல், பொருத்துதல்
போன்றவற்றில் திறமையாக இருப்பர்.
தொடர்ந்து மொழியியல் நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் கவனித்தல், பேசுதல், எழுதுதல்,
கதை சொல்லுதல், விவரித்தல், கற்பித்தல், துணுக்குகள் கூறுதல், சொல்லின் பொருள் மற்றும்
மொழிபயன்பாடு பற்றி அறிந்திருத்தல், தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளல்,  மொழிப்
பயன்பாட்டை அறிதல் போன்ற திறன்களைக் கொண்டிருப்பர்.

மேலும் தர்க்கவியல் சார்ந்த திறன் கொண்ட மாணவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு


காணுதல், தகவல்களை வகைப்படுத்துதல், தனித்த விவரங்களில் உள்ள ஒற்றுமையைக்
காணுதல், நீண்ட தொடர்புடைய செய்திகளைப் புரிந்து அடுத்த நிலையை அறிதல்,
கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், இயற்கையின் விநோதங்களை
வியந்து கேட்டல், சிக்கலான கணக்குகளுக்கு தீர்வு காணுதல், வெவ்வேறு விடிவங்களுடன்
செயல்முறை செய்தல். போன்ற திறன்களைக் கொண்டிருப்பர்.

உடலியக்கம் தொடர்பான நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் நடனம், உடல் ஒத்திசைவு,


விளையாட்டு, நேரடி சாகசம், உடலசைவு மொழிகளைப் பயன்படுத்துதல், கைவினைப்
பொருட்கள் செய்தல், நடித்தல், போலச் செய்தல், கைகளைப் பயன்படுத்தி வேலைசெய்தல்,
உணர்ச்சிகளை உடல் வழியே வெளிப்படுத்துவ்ர்.

இசைத் தொடர்பான நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் பாடுதல், விசிலடித்தல்,


இசைக்கருவியை மீட்டுதல், இசையமைத்தல், இசைத்தொனியில் உள்ள வேறுபாடுகளை
உணர்தல், மெல்லிசைகளை நினைவில்கொள்ளுதல், பூச்சிகளின் ரீங்காரம் மணியோசை
குழாயிலிருந்து ஒழுகும் நீரின் ஓசை … போன்ற சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலியின் அமைப்பு
மற்றும் சந்தநயங்களை உணர்தல்.போன்ற திறமைகளைக்கொண்டிருப்பர்.

சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு கொண்ட மாணவர்கள் ஒரு விஷயத்தை அடுத்தவர்


கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் திறன் (இரட்டைக் கண்ணோட்டம்), கவனித்தல், பிறரின்
எண்ண ஓட்டங்களையும் சிந்தனைகளை அறியும் திறன். கருத்துரை வழங்குதல்,
குழுக்களுடன் இணைந்து செயல்படுதல், மக்களின் மன நிலையை அறிதல், ஊக்கப்படுத்துதல்,
வார்த்தைகளுடனும் வார்த்தை இல்லாமலும் தகவல்பறிமாறுதல், நம்பிக்கையை உருவாக்குதல்,
அமைதியான வழியில் பிரச்சணைகளுக்கு தீர்வுகாணுதல், மக்களுடன் நேர்மறையான உறவு
முறையைப் பேணுதல். போன்றவற்றில் சிறந்து விளங்குவர்.
சுயதிறமையை உணரும் திறன் கொண்ட மாணவர்கள் தங்களின் பலம் பலவீனங்களை
அறிதல், தங்களைப் பற்றிய பகுத்தாய்வு, உள்ளுணர்வுகளை அறிதல், ஆசைகள் மற்றும் 
கனவுகள், தன் சிந்தனைகளை மதிப்பிடுதல், பிறருடன் உள்ள தொடர்பில் தங்களுக்குள்ள
பங்கினை அறிதல் ஆகிய திறமைகளைக் கொன்டிருப்பர்.

«Åâý பல்வகை நுண்ணறிவு பயன்பாடு மாணவர்களை கல்வியில் மேம்பாடு அடையச்


செய்கின்றது என்றாலது மிகையாகாது.தொடர்ந்து ஒவ்வொரு மாணவரும் தனித்தன்மை
வாய்ந்தவர்கள்; வெவ்வேறு வழிகளில் கற்கின்றனர். ஆகவே அவர்களது ஒற்றுமை ஏற்றுக்
கொள்வது பல்வகை நுண்ணறிவு அவசியமாகிறது. ..மாணவரிடம் காணப்படும் பல்வேறு
நுண்ணறிவுகளை அடையாளம் கண்டுஆசிரியர் அவற்றிற்கேற்ப விளைபயன்மிக்க கற்றல்
கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி தத்துவத்திற்கும்
மாணவர் தேவைக்கும் ஏற்ப முழுமையான கற்றலை ஊக்குவிப்பதற்கும் இது பயன்படுகிறது
மேலும் முழு வளர்ச்சிக்கான வாய்ப்பினை உணர்ந்து அவர்களது பல்திற ஆற்றலை
மேலோங்கச் செய்வதற்கும் பல்வகை உறுதுணையாகிறது.
இதன்வழி மாணவனின் தேவை ஆர்வம் மற்றும் திறன்களைச் சார்ந்து உண்மையான கல்வி
பயில வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.  இங்கு வகுப்பறை என்பது மெய்யான உலகத்தைப்
போன்றது. புத்தக ஆசிரியரும் அதனைப் பயன்படுத்துவோரும் சம அளவில்
கண்டுபிடிப்பாளர்களாக இருக்கின்றனர். மாணவன் அதிக விழிப்புடனும் ஆர்வமுடனும்
இருக்கின்றனர். அதனைத்தவிர்த்து இப்பள்ளிகளில் பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தின்
பங்களிப்பு அதிகரிக்கும். ஏனெனில்இ இங்கு மாண்வர்கள் தாங்கள் கற்றதை குழுக்கள் மற்றும்
பார்வையாளர்கள் மத்தியில் செய்து காண்பிக்கின்றனர். தொழில் பழகுமுறை என்ற
செயல்முறை மூலம் கல்வி பயில்விப்பதில் சமுதாயத்தில் உள்ளவர்களும் அங்கம்
வகிக்கின்றனர்.

பல்வகை நுண்ணறிவாற்றல் வழி மாணவர்கள் தங்கள் வலிமையை வெளிப்படுத்தவும் பகிர்ந்து

கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய தனிதிறன்களை வளர்த்துக் கொள்வதால்

அவன் நிபுணத்துவம் பெற ஊக்கப்படுத்தப்படுகிறான். இது அவனின் சுயமரியாதையை

அதிகரிக்கும். மேலும் எதையும் புரிந்துகொள்வதற்காக பயில்வித்தால் அது நேர்மறையான


கல்வி அனுபவமாகும். அது மாணவனுக்கு வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும்

திறனைக் கொடுக்கும்.

எனவே பல்வகை நுண்ணறி ஒரு மாணவனை கலவியில் மேம்பாடு அடையச்

செய்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

You might also like