You are on page 1of 23

கேள்வி : 1

ஒரு நாட்டின் கல்வி அமைப்பிலும், அனைத்து வகுப்பு நிலைகளிலும் சோதனை


முறை மிக மகத்தான பங்கினை வகிக்கின்றது. எந்த நாடாயினும் அதன் கல்வி, சிறப்பான
நோக்கத்தைப் பெறுகிறது. அதற்கான தேவைகேற்ப தனி நபரின் ஆளுமையை முழு அளவில்
மேம்படுத்துவதேயாகும். இந்த ஆளுமையைப் பல்வேறு மட்டங்களில் மதிப்பிடுதலே

சோதனையின் நோக்கமாகும். சோதனை என்பது ஒரு மாணவனின்

முழுமையான அடைவு நிலையை அளக்க பயன்படுத்து ஒரு

கருவியாகும். ஒரு மாணவனின் கல்வி அறிவு எப்படி உள்ளது

என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும் துணைப்புரிகிறது. மேலும்,

ஆசிரியர் கற்பிக்கும் பாடம் எந்த அளவிற்கு மாணவர்களின் மனதில்

பதிந்து உள்ளது என்பதனைப் பற்றியும் தெரிந்து கொள்ள சோதனை

உதவுகிறது எனலாம்.

கற்றல் கற்பித்தல் செயல் முறைகளினால் (LEARNING AND TEACHING


PROCESS) ஏற்படக்கூடிய கல்விப் பயன்களை (EDUCATIONAL VALUES) சோதனை
செய்வதுடன் அமையாது, கற்கும் முறைகள் (LEARNING METHODS) ஆகியன பற்றியும்

தொடர்ந்து சோதனை செய்வதைக் குறிப்பதாகும். சுருங்கக்கூறின் கற்றல்

கற்பித்தலினால் மாணவர்களிடம் ஏற்படுகின்ற மாற்றத்தை இறுதியில்

கண்டறிதல் என்றும் சோதனை குறிப்பிடலாம். மேலும், கல்வியில் இலக்குகளை

அடைவதில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை

அளந்தறியும் கருவியாகவும் சோதனை பயன்படுத்தப்படுகின்றது.

மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், சமுதாயத்தினர்

ஆகியோரை இணைத்து பங்குபெறும் வண்ணம் பள்ளியிலும்

வெளியிலும் இதன் குறிக்கோள் மாணவர்களது அடைவு நிலையை

இறுதியாக அளவிட்டு மதிப்பிடுவதையும் சோதனையாகும்.


சில அறிஞர்களின் பார்வையில் சோதனையின் வரையறையைக் காண்போம்.
ÓʨŠ´Õ ¸¡ðº¢, ¸ÕòÐ ãÄõ ºÃ¢Â¡ «øÄÐ À¢¨Æ¡ ±ýÚ ¬Ã¡öž¡Ìõ.
(þ.¬.¦Áí). ¬º¢Ã¢Â¢ý Óý§ÉüÈò¨¾Ôõ Á¡½Åâý Óý§ÉüÈò¨¾Ôõ «ÇìÌõ
¸ÕÅ¢ («ÒÀ¡ì¸¡÷ §¿¡÷Êý). ´Õ Á¡½Åâý «¨¼×¿¢¨Ä¨ÂÔõ
Óý§ÉüÈò¨¾Ôõ «ÇìÌõ ¸ÕÅ¢ மற்றும் சோதனை Á¡½Å÷¸Ç¢ý «¨¼¨ÅÔõ
Óý§ÉüÈò¨¾Ôõ «ÇìÌõ ¸ÕÅ¢. ¬º¢Ã¢Â÷ Á¡½Å÷¸Ç¢ý ÀÄÅ£Éò¨¾ «È¢óÐ
Á¡üÚ ¿¼ÅÊ쨸¸¨Çò ¾Â¡Ã¢ì¸ ¯¾×¸¢ýÈÐ (¦Á¡ì Ýý º¡í - Mok Soon
Sang). Á¡½Å÷¸û ÀûǢ¢Öõ ¦ÅǢ¢Öõ ¸üÈÅü¨È «ÇóÐ «È¢Å¾üÌô
ÀÂýÀÎòÐõ µ÷ «Çק¸¡ø என்கிறார் (¿.ÍôÒ¦ÃðÊ¡÷). சோதனைகள் ÌÈ¢ôÀ¢ð¼
¸¡Äò¾¢üÌ ¿¼ த்த ôÀðÎ Á¡½Å÷ Óý§ÉüÈò¾¢¨É §ÁüÀ¡÷¨Å¢¼ ¯¾×¸¢ÈÐ (Å
¢Â÷ஸ்Á¡). சோதனை ±ýÀÐ «¸¿¢¨Ä (subjektif) ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¡Ìõ. Á¾
¢ôÀ£ðÊý ÓÊ׸û ±¨¾ Á¾¢ôÀ£Î ¦ºö¸¢§È¡õ ±ýÀ¨¨¾ Å¢¼ ¡¨Ã Á¾¢ôÀ£Î
¦ºö¸¢§È¡õ ±ýÀо¡ý Ó츢Âõ என்கிறார் (STANLY). மேலும், ¸Õòи¨ÇÔõ
¦À¡Õû¸Ç¢ý ¾Ãò¨¾Ôõ ¾£÷Á¡É¢ôÀ§¾ Á¾¢ôÀ£Î. þò¾Ãò¨¾ Á¾¢ôÀ£Î ±ÉÄ¡õ,
«Ç× Å¨¸Â¢§Ä¡ «øÄÐ þÂøÀ¡¸§Ä¡ Á¾¢ôÀ¢¼Ä¡õ (BLOOM, 1956).
பி.இரத்தினசபாபதி சோதனை என்பது க üÀ¢ìÌõ ÓýÉÕõ, ¸üÀ¢ìÌõ §À¡Ðõ, ¸üÀ
¢ò¾ô À¢ýÉÕõ ¿¢¸úóÐÅÕõ ¦¾¡¼÷ ¿¢¸ú§Â ¬Ìõ. ¸üÈø ¸üÀ¢ò¾ø ¦ºÂÄ¢ø
¸ü§À¡Ã¢ý ¸üÈø §¾¨Å, §À¡ìÌ, §¾÷, §À¡ýÈ ÀÄÅü¨È «È¢Å¾üÌ ¯¾×õ
¸øÅ¢î ¦ºÂÖõ சோதனை எனப்படும்.

§º¡¾¨É ±ÉôÀÎÅÐ Á¾¢ôÀ¢Î¾ø ÁüÚõ «ÇÅ¢ÎÅÐ ±ýÀ¨¾ì ¸¡ðÊÖõ


ÀÃó¾, Å¢Ã¢ó¾ ¦À¡Õð¦À¡¾¢ó¾ ¸Õò¦¾ ங்¨¸ì ¦¸¡ñ¼¾¡Ìõ. §ÁÖõ
சோதனையாÉÐ ¸üÈø ¸üÀ¢ò¾ø ¦ºÂøӨȸǢɡø ² ற்À¼ìÜÊ ¸øÅ¢ô
ÀÂý¸¨Ç Á¾¢ôÀ£Î ¦ºöŨ¾ì ÌÈ¢ôÀ¾¡Ìõ. ¦¾¡¼÷óÐ ¸üÈÄ¢ø சோதனை ±ýÀÐ
ÀûǢ¢ø «ùÅô§À¡Ð §º¡¾¨É¸¨ÇÔõ «Çó¾È¢¾¨ÄÔõ ¯ûǼ츢, «Å ற்È¢ý
ÜÚ¸û ÓÊ׸û ¡Åü¨ÈÔõ ¦¾Ç¢Å¡¸ì ¸¡ட்¼ÅøÄ µ÷ «õºÁ¡Ìõ. «ÄŨ¸î
§º¡¾¨É¸û «Ç× §¸¡û¸û, ºã¾Â «ÄÅ¢Âø ÑñӨȸû §À¡ýÈ ÀÄ Á¾¢ôÀ
¢ðÎì ¸ÕÅ¢¸û ÀûÇ¢¸Ç¢ø ¿¨¼Ó¨ÈôÀÎò¾ô¦ÀüÚ ÅÕ¸¢ýÈÐ. þý¨È ¸øŢ¢ý
º£Ã¢Â ÅÇ÷ìÌ Á¾¢ôÀ£Î ӨȸǢý Óý§ÉüȧÁ ¦ÀâÐõ ¸¡Ã½Á¡¸ þÕ츢ýÈÐ
±ýÈ¡ø «Ð Á¢¨¸Â¡¸¡Ð.
¬¸§Å, þùŨÉò¨¾Ôõ À¡÷ò§¾¡§Á¡ɡø சோதனை ±ýÀÐ
மாணவர்களின் ¸øÅ¢ÂÈ¢¨Å «ÇÅ¢Îŧ¾¡Î ÁðÎÁ¢øÄ¡Áø «Å÷¸Ç¢ý ¿¼ò¨¾,
Á¡üÈõ, ¯¼ø, ¯ûÇ, º¡÷À¡É ÅÇ÷, ¬÷Åõ, ¬Ù¨Á, ¾¢È¨Á Á§É¡Å¢Âø,
ÒÈôÀ¡¼ ¿¼ÅÊ쨸¸û, ºã¸Å¢Âø §À¡ýÈÅü¨È ¯ûǼ츢§¾¡Î «Åü¨È
«ÇÅ¢ÎÅÐ ±ÉôÀÎõ. சோதனை ±ýÀРŢ„Âí¸¨Çî §º¸Ã¢ìÌõ §¿¡ì¸¢ø, ¸øÅ¢
¦¸¡û¨¸ìÌ «øÄÐ À¡¼ò¾¢ð¼ò¾¢ü§¸üÀ Á¡½Å÷¸Ç¢ý ¿¼ò¨¾ ÁüÚõ ¸üÈø
¸üÀ¢ò¾Ä¢ø Á¡üÈí¸û ²üÀðÎûÇÉÅ¡ ±ýÀ¾¢¨Éì ¸ñ¼È¢Â ¨¸Â¡ÇôÀÎõ ¾
¢ð¼Á¢ð¼ ´Õ ¸ÕÅ¢ «øÄÐ ¿¼ÅÊ쨸 ¬Ìõ. Á¾¢ôÀ£Î ±ÉôÀÎÅÐ Á¡½Å÷¸Ç
¢ý ¸øÅ¢ «È¢×, ¿¼ò¨¾ Á¡üÈõ, ¯¼ø ¯ûÇõ º¡÷À¡É ÅÇ÷, ¬÷Åõ ÁüÚõ
ÒÈôÀ¡¼ ¿¼ÅÊ쨸¢¨É «ÇŢΞ¡Ìõ.

Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨Â «È¢Å¾üÌ சோதனை Á¢¸ Ó츢Âõ. ¬º¢Ã


¢Â÷¸û Á¡½Å÷¸ÙìÌì ¸üÚ ¾ó¾ À¡¼õ Á¡½Å÷¸û ±ó¾ «ÇÅ¢üÌô ÒâóÐ
¦¸¡ñ¼É÷ ±ýÀ¨¾ þó¾ ச் சோதனை ÅƢ¡¸ ¿¡õ ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ ÓÊÔõ. §ÁÖõ
¦¾¡¼÷ ¿¼ÅÊ쨸¸¨Ç ¿¼ó¾×õ þÐ ¯¾×¸¢ýÈÐ. ¬º¢Ã¢Â÷¸û, «Êì¸Ê ÅÌôÀ¢ø
¸üÀ¢ò¾ À¡¼ò¨¾¦Â¡ðÊ Á¡½Å÷¸¨Ç Á¾¢ôÀ£Î ¦ºöÂÄ¡õ. ¾í¸Ç¢ý À¡¼
§¿¡ì¸ò¨¾Ôõ, ¿¼ÅÊ쨸Ôõ Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä째üÀ Á¡üÈ¢
«¨Áì¸Ä¡õ. «§¾¡Î, Á¡½Å÷¸Ùõ ¾í¸û ¿¢¨Ä¨Â «È¢óÐ À¡¼ò¾¢ø þýÛõ
¸ÅÉõ ¦ºÖò¾Ä¡õ «øÄÐ «Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨Â ¯Â÷ò¾¢ì ¦¸¡ûÇ
§Áü¦¸¡ñÎ À¢üº¢¸û ¦ºöÂÄ¡õ. ¬¸§Å, Á¾¢ôÀ£Î Á¡½Å÷¸Ç¢ý «¨¼×
¿¢¨Ä¨Â «ÇÀ¾üÌõ, Á¡½Å÷¸Ç¢ý ¿¢¨Ä¸¨Ç «È¢Å¾üÌõ, «¾¨É ¾í¸û
¦Àü§È¡÷¸Ç¢¼õ ¦¾Ã¢Å¢ôÀ¾üÌõ Ш½î ¦ºö¸¢ÈÐ. சோதனை
±øÄ¡ Á¡½Å÷¸ÙìÌõ, À¡¼ò¾¢ý «ÊôÀ¨¼ì ¦¸¡ñÎ ¿¼ò¾Ä¡õ.

சோதனையின் வழி மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பல வகையான


நன்மைகளைப் பெற துணைபுரிகின்றது. சோதனையின் வழி கற்றல் கற்பித்தல் செயல்களை

மேம்படுத்த முடியும். அதாவது ஆசிரியர்கள் தாங்கள் கற்பித்தவைச் சரியானதா

அல்லது பிழையானதா என்பதை அறிந்து கற்பித்தலைச் சீர்படுத்துதல்.

அதுமட்டுமின்றி கற்பித்தலின் குறைகளை அறிய சோதனையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி

கொள்ளலாம். ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களை மாணாக்கர் எந்த அளவு

புரிந்துள்ளனர் என்பதனையும் கற்பித்தலிலுள்ள குறைகளை அறிந்து


நீக்குதலுக்கும் கற்பிக்கும் முறைகள் மற்றும் நோக்கங்கள்

பயனளிக்கின்றனவா என்பதை மதிப்பிடலாம். இதன் வழி

மாணவர்களின் ஆளுமையை அளவிட முடிகின்றது.

மாணவர்களிடையே காணப்படும் தேர்ச்சி அடைவு,

பாடப்பொருளறிவு, நினைவாற்றல் ஆகியவற்றை அளவிடலாம்.

அதுமட்டுமின்றி மாணவர்களை வகைப்படுத்த முடிகின்றது.

மாணவர்களிடையே காணப்படும் திறமைகளையும் ஆற்றலையும்

கண்டறிந்து வகைப்படுத்தலாம். மேலும், மாணவர்களிடம்

காணப்படும் ஓவியம் வரைதல், கவிபுனைதல், நாடகம் எழுதுதல்

போன்ற தனியாற்றல்களின் வழி வகைப்படுத்தலாம். சோதனையின்

கருவிகளை மாற்றம் செய்யவும் சோதனை பயனளிக்கின்றது.

நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சிக்கேற்பவும், அறிவியல்

வளர்ச்சிக்கேற்பவும் கல்வித்துறையில் புதுமைப் போக்குகள்

ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சோதனை முறைகள்,

நுட்பங்கள் மற்றும் கருவிகளை மாற்றி அமைக்கலாம்.

சோதனையின் வழி ஒரு பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டின்

அடிப்படையில் பிறிதொரு பள்ளியுடன் ஒப்பிட முடிகின்றது.

சோதனைகள் அவற்றின் தன்மையின் அடிப்படையில் ஐந்து வகையாக


பிரிக்கப்பட்டுள்ளன. அவையானவை அறிதிறன் சோதனை, அக்கறையறிச் சோதனை,
முன்னறிச் சோதனை, அடைவுச் சோதனை மற்றும் குறையறிச் சோதனை ஆகும். அறிதிறன்
சோதனையைத் (Intelligence tests) தனியாள் சோதனைகள், குழு அல்லது கூட்டுச்
சோதனைகள் என இருவகையாகப் பிரிக்கலாம். தனியாள் சோதனைகள் அறிவு நிலையைச்
சரியாக அளக்கவல்ல அளவு கருவி என்றும் கூறலாம். இவ்வகைச் சோதனைகள்தாம் இன்று
மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ளன. சோதனையின் நீளம், பல்வேறு துலங்கல்களைக் காணல்,
ஒவ்வொருவரும் தனித் தனியாகக் குறிப்புகளை அறியும் முறை, தேர்வாளர்
ஒவ்வொருவரிடமும் வெளிப்படும் ஒவ்வொரு துலங்கலையும் காணும் வாய்ப்பு,
சோதனைகளைக் கையாளுவதில் தரப்படுத்தப்பட்ட முறைகள், திருத்தும் முறை ஆகிய
கூறுகள் இச்சோதனைகளைச் சிறந்த அளவுகோலாக்கியுள்ளன என்றால் அது மிகையாகாது.
பயிற்சியும் அனுபவமும் பெற்ற நிபுணரைக் கொண்டுதான் இவ்வகைச் சோதனைகளைக்
கையாள வேண்டுமேயன்றி சாதரண ஆசிரியர்களால் இவற்றைக் கையாள முடியாது. குழுச்
சோதனைகள் பினேயின் ஆய்வுகளைக் கையாளுவது கடினமாக இருப்பதாலும், அவற்றை
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாகக் கொடுக்க வேண்டியிருப்பதாலும் அவை
ஆசிரியர்களுக்குச் சிறிதும் நடைமுறையில் பயன்படவில்லை. ஆகவே, உளவியலாளர்கள் பல
குழந்தைகளுக்குச் சேர்ந்தாற்போல கொடுக்கவல்ல எழுத்து முறைச் சோதனைகளை ஆயத்தம்
செய்து அவறை தரப்படுத்தியுள்ளனர். இவற்றிற்கான குறிப்புகள், விடைகள், பொதுநிலை
அளவைகள் ஆகியவை உள்ளன. குறிப்புகளை மிக நன்றாக அறிந்து கொண்டு எவரும்

இவற்றை எளிதில் கையாளலாம். இவ்வகை சோதனையால் நம்பமுடியாத அளவிற்கு

முடிவுகள் பெறலாம். உதாரணமாக வகுப்பில் தோற்றத்தில்

மந்தமாகக் காணும் மாணவர்கள் சோதனையில் நல்ல

மதிப்பெண்களைப் பெறுதல்கூடும். நல்ல அறிவுள்ள அம்மாணவன்

ஏதோ ஒரு காரணத்தாலோ பள்ளி வேலைகளில் மந்த நிலையில்

காணப்படுகின்றான். அறிதிறன்கள் சோதனை இந்நிலையைத்

தெளிவாக்கும்.

அக்கறையறிச் சோதனைகள் வழி ஒருவர் எத்தொழிலில்

அக்கறை காட்டுகிறார் என்பதையறியலாம். இவற்றை தயாரித்த

அறிஞர் ‘அக்கறை’ என்பது பரம்பரை பண்பு அல்ல என்று

கூறுகின்றனர். அடிப்படையான மனப்போக்குகள் மிக

இளமையிலேயே ஒருவரிடம் நிலை பெறுகின்றன என்ற உளவியல்

உண்மையின் அடிப்படையில் இச்சோதனைகள் ஆயத்தம்

செயப்படுகின்றன. எனவே, இச்சோதனையின் வழி ஒருவர்


இயல்பாக விரும்பும் தொழில் துறையை அறிந்து விடலாம்.

இச்சோதனையின் வழி மாணவர்களின் ஈடுபாட்டினை அறிந்து

அவர்களுக்கு ஏற்ற பாடப்குதியினைத் தேர்வு செய்ய பக்கப்பலமாக

அமைந்துள்ளது.

பின்னைய வளர்ச்சியினைப் பற்றி முன்னரே தெரிந்து

கொள்ள உதவும் சோதனையே முன்னறிச் சோதனையாகும்

(Prognostic test). அதாவது எதிர்காலத்தில் எத்தகு வளர்ச்சியினை

ஒருவர் பெறுவார் என்பது பற்றி முன்னரே தெரிந்து கொள்ள

உதவும் சோதனைகள் முன்னறிச் சோதனைகள் என்று

அழைக்கப்படுகின்றது. இவை குழந்தைகள் எந்தத்துறையில்

முன்னுக்கு வர இயலும் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும்

என்று ஆய்வாளர கூறுகிறார். இவை குழந்தைகளின் தகுதியை

ஆராய்ந்து

எத்துறைகளில் முன்னுக்கு வருவார்கள் என்பதை கூறுகின்றது.

இவற்றை கொண்டு கணிதம், மொழி, இசை முதலிய துறைகளில்

முன்னுக்கு வரக்கூடுமா என்பதனை ஆராயலாம். ஆனால் இவ்வகை

சோதனை நடைமுறையில் இவற்றை அதிகமாகப்

பயன்படுத்துவதில்லை. காரணம் இந்த அளவு கருவிகளில் மக்கம்

இன்னும் அதிக நம்பிக்கை வைக்கவில்லை; அவர்கள் நம்புகின்ற

அளவுக்கும் அவை இன்னும் செம்மையடையவில்லை.

கல்வி நிலையங்களின் மூலம் மாணவர்கள் பெறும்

அறிவினை அளந்தறியவல்ல சோதனைகளைத்தான் அடைவுச்


சோதனைகள் (Achievement test) என்று குறிக்கின்றனர். மாணவனின்

கல்வி அடைவினை அளந்தறிய உதவும் சோதனைகளே அடைவு

சோதனைகள் ஆகும். இச்சோதனைகளை யார் எத்தனை முறை

அளந்து அறிந்தாலும் ஒரே மதிப்பெண்ணைத் தருபவை.

மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் பற்றி ஆசிரியர்கள் அறிந்து

கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அடைவுச் சோதனைகளின்

மூலம் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் திறனைத் தாங்களே

அறிந்துக்கொள்ளவும் முடிகின்றது.

பயன்படும் நோக்கத்திற்கேற்றவாறு இவை மாறுபடுகின்றன.

எனவே, ஒரு திட்டமான நோக்கத்தின் அடிப்படையில் பல

வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஒவ்வொரு துறையிலும்

பொதுவான அறிவு நிலையினை அளந்தறிய வல்ல ‘கணக்கெடுப்புச்

சோதனைகள்’ (survey test) ஒரு வகையாகும். இதேபோல், கற்ற

பகுதிகளில் தகவல்களை மட்டிலும் ஆராய வல்ல ‘தகவல்

சோதனை’ (Information test) மற்றொரு வகையாகும். பெரும்பாலும்

இவை வயதிற்கு ஏற்ப அமையாமல் வகுப்பிற்கு ஏற்ப

அமைந்திருக்கும். கல்வித் துறையில் தரப்படுத்திய

இச்சோதனைகளின் பயன் அளவற்றது. மாணவர்களின் பொது அறிவு

நிலையை ஆராயவும், தனிப்பட்டோரின் குறைகளை ஆராயவும்

மாணவர்களைத் தர வாரியாகப் பிரிக்கவும், ஒரு குழுவின் திறனை

மற்றொரு குழுவின் திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், கற்பிக்கும்

முறைகளின் திறன்களை ஆராயவும் இவை இன்று உதவுகின்றது.


அடைவுச் சோதனைகள் இரண்டு வகைப்படும்.

அவையாவன: ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவு சோதனை

மற்றும் தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை என்பனவாகும்.

ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவு சோதனை என்பது

வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட பாடப்பொருள்களை மட்டும்

கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் வினாக்களைப் பயன்படுத்துவர்.

இவ்வினாக்கள் கட்டுரை வினாவாகவோ அல்லது சிறு விடை

வினாவாகவோ இருக்கும். நம்பகத்தன்மை, ஏற்புடைமை ஆகிய

சிறப்பியல்புகளைக் கொண்டதாகவோ அல்லது இல்லாமலோ

இருக்கும்.

தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை வகுப்பறையில்

மட்டுமல்லாது எங்கு வேண்டுமானாலும் இத்தகைய

சோதனைகளைப் பயன்படுத்தலாம். இச்சோதனைகள் நன்கு

உருவாக்கப்பட்டவை. ஏற்புடைமை, நம்பகத்தன்மை ஆகிய

சிறப்பியல்புகளைக் கொண்டதாக இருக்கும். இத்தகைய அடைவுச்

சோதனைகள் ஒரு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து

மாணவர்களுக்கும் பொருத்தமானதாக அமையும்.

அடைவுச் சோதனைகள் நடத்துவதால் பல நன்மைகளை

அடையலாம். அதாவது இத்தகைய சோதனையின் மூலம்

மாணவர்களின் அடைவுத் தேர்ச்சி, மதிப்பெண் வாயிலாக

வெளிப்படுத்தப்படுகிறது. இச்சோதனைப் பல்வகைச் சோதனை

உருப்படிகளைக் கொண்டு, பாடப்பகுதிகள் அனைத்தையும்

சோதிக்கின்றது. மேலும், ஒவ்வொரு பாடக்கருத்துக்கும் ஒரு வினா


என்ற வகையில் அடைவுச் சோதனை வினாக்கள் அமைந்திருக்கும்.

வினாக்களின் கடினத்தன்மை அதிக வச்சு


ீ கொண்டு காணப்படும்.

மாணவர் அளிக்கும் விடைகளுக்கு மதிப்பெண் அளித்து, கற்றல்

தேர்ச்சி அளவிடப்படும். அடைவுச் சோதனைக்குக் கால வரையறை

உண்டு. அடைவுச் சோதனையின் விளைவாக மாணவர்களைத் தரம்

பிரிக்கவோ, அடுத்த உயர் வகுப்புக்கு மாற்றிடவோ முடியும்.

குறையறிச் சோதனை கற்றல் கற்பிப்பதில் உள்ள

குறைகளைக் காணவல்ல சோதனைகளைக் குறையறி சோதனைகள்

என்று முறை வல்லார் குறிப்பிடுவர். கற்பித்தல் துறையில்

இவ்வகைச் சோதனைகளின் தேவை இன்றியமையாதது. நவன


கல்வி முறையில் இவற்றின் அவசியம் மிகவும்

வற்புறுத்தப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின்

குறைநிறைகளை அளந்தறியவல்ல சோதனைகள்

தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கட்டுரைத்துறையில்

இத்தகைய சோதனைகள் மாணவர்களின் வாக்கிய அமைப்பில்

குறைகள், கட்டுரைப் பொருள்களைக் கோவையாக அமைத்தலில்

குறைகள், தெளிவான சிந்தனையின்மை ஆகியவற்றைக் காட்டுதல்

கூடும்.

மாணவர்களின் ஆராய்ந்து பார்க்கும் முறையில் குறைகள்,

ஒரு குறிப்பிட்ட துறையில் உற்று நோக்கியறிதலில் குறைகள்

போன்றவற்றை அளந்தறிய வல்ல சோதனைகளும் ஆயத்தம்

செய்யப்பெற்றுள்ளன. ஆசிரியர்கள் கற்றலில் உள்ள தம்

குறைகளைத் தெளிவாக அறிந்து செயல்பட முடியும். மேலும்


ஆசிரியர்களும் கற்பித்தலை எவ்வகையில் திறமையாக

மாற்றியமைக்கக்கூடும் என்றும் தாம் கையாண்ட முறைகளின்

என்னென்ன குறைகள் உள்ளன என்றும் அறியலாம். சிறந்த

பாடப்பொருள், தேர்ந்த கற்பித்தல் முறை, மிகச் சரியான ஆசிரியர்

அணுகுமுறை, அத்துணைக்கும் பொருத்தமான கற்றல்

உபகரணங்கள், கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்காகவே

குறையறி சோதனை பயன்படுத்தப்படுகின்றது. எந்த மாணவன்

அல்லது மாணவி, எதிர்பார்த்த கற்றல் அனுபவங்களைப்

பெறவில்லையோ அவரை இனம் கண்டு, அதற்கானக் காரணத்தை

அறிந்து, பதிலீட்டு முறைகளை நடைமுறையில் பின்பற்றி அந்த

மாணவருக்கும் புதியதாகக் கற்றல் அனுபவங்களைத் தரக்கூடிய

குறையறிச் சோதனை முறையைப் பயன்படுத்தும் ஆசிரியர்

முழுமையான கற்றல் அனுபவங்களை அந்த மாணவர் பெறும்வரை

கற்பித்தல் முறைகளை மாற்றி முயன்று தன்னிடம் கற்பித்தலில்

குறை இருப்பின் சரி செய்து, திரும்ப கற்பித்தல் செயல்பாடுகளை

வழங்கி, எத்தனை செயல்களை செய்து ஆய்வில் ஈடுபடுபடுவதைக்

காட்டுகின்றது.

இச்சோதனையின் வழி ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போதே

மாணவர் எத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள் என்பதைக்

கண்டறிய உதவுகின்றது. மாணவர்களின் திறமை ஆர்வம், தரம்,

அடைவுநிலை போன்றவற்றைத் தனியாள் முறையிலோ, குழு

முறையிலோ அல்லது வகுப்பு முறையிலோ மதிப்பிடலாம்.

கற்பிக்கப்படும் திறனில் காணக்கூடிய குறைகளை அளந்தறிய உதவி


புரிகிறது. குறிப்பிட்ட கற்றல் சிக்கல்களைக் கண்டறிய உதவுகிறது.

தனி நபர், குழு, வகுப்பு முறை கற்பித்தலில் எந்த அளவிற்குச்

சீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்பதை அறிய உதவுகிறது.

கேள்வி : 2

“மாறத பொருளெதுவும் வளர்வதில்லை வையத்தின்

விதியிதற்கு மாற்றமில்லை” (வா.செ.குழந்தைசாமி) என்பவர்

அறிவியல் அறிஞர் குலோத்துங்கன் (தமிழ் நிமிடங்கள், 2011).

தற்போது நாட்டில் எல்லாத் துறைகளிளும் பல வகையான

மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமாக இருகின்றது என்பதில் எள்ளளவும்

ஐயமில்லை. அவ்வகையில் கல்வி உலகிலும் அவ்வப்போது பல

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மாற்றங்களுக்கு

ஏற்ப கற்றல் கற்பித்தலை முறையாக நடத்துவது ஒவ்வொரு

ஆசிரியரின் முக்கிய கடமையாகும்.

எவ்வத் துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வத் துறைவது அறிவு

என்ற திருவள்ளுவரின் கூற்றின் படி கற்றல் கற்பித்தலும்

உலகத்தோடு பொருந்திய வகையில் செயல்படுகின்றது காரணம்

தற்போது உலகம் தொழில்நுட்ப தொடர்புடன் பின்னிப்


பிணைந்திருக்கின்றன. அதுபோல கற்றல் கற்பித்தலிலும்

தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. அக்காலத்தில் கற்றல்

கற்பித்தலில் வெண்கட்டியும் புத்தகங்களும் மட்டுமே துணையாக

இருந்தன. ஆசிரியர் மைய முறையில் ஆசிரியர்கள்

முதன்மையானவர்கள். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை

மெளனமாகக் கேட்டு கற்றலில் ஈடுபடுவர். ஆனால், தற்போது

ஆசிரியர்கள் அதே முறைகளில் கற்றல் கற்பித்தலில் ஈடுபட

முடியாது. தற்போது வகுப்பறையில் தொழில்நுட்பம்தான் முதலிடம்

வகிக்கின்றது. இன்றைய மாணவன், மடிக்கணினி, காணொளி, பட

வில்லைகள், நீர்மப் படிக உருகாட்டி இல்லாத வகுப்பறையைக்

கல்வி கற்கும் இடமாக நினைத்துக்கூட பார்ப்பதில்லை. ஆகவே,

தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களையும்

தயார்படுத்திக்கொண்டும் சமுதாயத்தையும் தொழில்நுட்ப

மாற்றங்களுக்கு ஏற்ப தயார்படுத்தும் பொறுப்பில் ஆசிரியர்கள்

இன்று நிறுத்தப்பட்டுள்ளனர் என்றே கூற வேண்டும்.

கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத் தொடர்பு மூலம் கற்றல்

என்றால் என்ன?

இன்று நம் வாழ்க்கையில் எங்கு திரும்பினாலும்

தொழில்நுட்பம் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்றைய

உலகம் தொழில்நுட்பத்தால் இயங்கிக் கொண்டிருக்கின்ற

சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு குழந்தை பிறப்பது முதல்

இறப்பது வரை அதன் வாழ்க்கையில் தொழில்நுட்பம்

இன்றியமையாத ஒன்றாக திகழ்கின்றது. தொழில்நுட்பம் என்பது


பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும்

அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு ஆகும். வெவ்வேறு வகையான

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு

மூலம் பிறருக்கு அணுப்புதல், சேமித்தல், புதிதாக உருவாக்குதல்,

வெளிப்படுத்துதல், பரிமாறிக் கொள்ளுதலே - தகவல் தொடர்பு

நுட்பம் என்பதாகும். இந்த நுட்பத்தில் வானொலி, தொலைக்காட்சி,

படக்காட்சி, தொலைபேசி, கைப்பேசி, திறன்பேசி, செயற்கைக் கோள்,

கணிணி மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் ஆகிய

அனைத்தும் அடங்கும். மேலும், படக்காட்சி மூலம் கலந்தாய்வு,

மின்னஞ்சல், வலைப்பதிவுகள் உள்ளிட்ட கருவிகள், சேவைகளும்

இதில் அடங்கும்.

“ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய நவன


கருவிகளைக் கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை

நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு

நலியும்” என்னும் வா.சே குழந்தைசாமியின் கருத்து

தொழில்நுட்பத்தின் தேவையைப் பறைசாற்றுகின்றது. தொழில்

நுட்பம் என்பது வெறும் கருவிகளைச் சார்ந்த விடயமல்ல. அது

ஏடல்களையும், செயல்பாடுகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும்.

அறிவு, நல்லொழுக்கம், நுட்பத்தன்மை ஆகியவற்றை

மையமாகக் கொண்டு கற்போரின் நடத்தை, நம்பிக்கை, மனோபாவம்

ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவதே கல்வியாகும்.

இதன் அடிப்படையில் கல்வியின் வழி ஒரு தலைச்சிறந்த

மாந்தனை உருவாக்க இயலும். கல்வியின் இலக்கும் அதுவாகவே


கருதப்படுகின்றது. கல்வியுலகில் தொடர்பு தொழில்நுட்பம் என்பது

மனிதர்கள், ஏடல்கள், கருவிகள், செயல்பாடுகள், அமைப்புகள் என

அனைத்தும் உள்ளடக்கிய ஒன்றாகும். இக்காலக்கட்டத்தில் கற்றல்

கற்பித்தல் தொழில் நுட்பத்தின் பங்கு இல்லாமல் நடைபெற

இயலாது என்ற அளவிற்கு சூழ்நிலை வந்துவிட்டது. ஆக, கற்றல்

கற்பித்தலின் தொழில்நுட்பத்தில் பங்கு அளப்பரியது.

இதன் அடிப்படையில் தொழில்நுட்பத்தின் வழி கற்றல்

கற்பித்தலில் திட்டமிட்ட இலக்கை அடைய வழிவகுக்குகின்றது.

கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பப் பயன்பாடு மூன்று முக்கியக்

கூறுகளில் காணலாம். முதலாவதாக, கற்பித்தலில் மேலாண்மையும்,

அடுத்து கற்பித்தலை விரிவாக்கம் செய்வதையும், தொடர்ந்து கற்றல்

வல்லமைகளையும் மையப்படுத்துதல் என மூன்று நிலைகளில்

இயங்குகின்றது.

தொழில்நுட்பமானது கற்றல் கற்பித்தலின் தேவையை நிறைவு

செய்ய முக்கிய பங்காற்றுகின்றது. இத்தொழில்நுட்பத் துறையின்

பயன்பாட்டால் கற்றல் கற்பித்தலைத் தெளிவாகவும்,

துல்லியமாகவும் திட்டமிட உதவுகின்றது. மேலும், கற்பித்தல்

அணுகுமுறைகளான போலச் செய்தல், செய்முறை அறிதல்,

தேவைக்கேற்ப பயிற்றுத் துணைப் பொருள்களை உருவாக்குதல் என

எல்லா பரிமாணத்திலும் தொழில்நுட்பம் மேலோங்கி நிற்கின்றது.

இதன் வழி கற்றல் கற்பித்தலை மாணவர்களின் ஆக்க மற்றும்

ஆய்வுச் சிந்தனைக்கு ஏற்ப அன்றாட வாழ்வுடன் கற்றதைத்

தொடர்புப்படுதும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.


அடுத்து, தொழில்நுட்ப பயன்பாட்டின் வழி மாணவர்களின்

ஆர்வத்தைக் கற்றல் கற்பித்தலில் தூண்ட முடிகின்றது. பொதுவாக

பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களின்

கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ப்பது அதைப் பாடவேளை

முழுவதிலும் தக்க வைப்பதும் பெரிய சவாலாக அமைகின்றது.

உதாரணமாக மடிக்கணினி, காணொளி, படங்கள், ஒலி ஒளி

சேர்க்கை, பட வில்லைகள், நீர்மப் படிக உருகாட்டி போன்ற

தொழில்நுட்பங்களை வகுப்பறையில் மாணவர்களின் சத்தங்களைக்

குறைத்து அவர்களின் கவனத்தை ஈர்த்தும் மேலும் அவர்களை

கற்றல் கற்பித்தலில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும்

தூண்டுகின்றது. ஊடகங்களைப் பயன்படுத்தும் போது

மாணவர்களிடம் உள்ள ஆர்வம் கற்றல் கற்பித்தல் முழுவதிலும்

மேலோங்கி இருப்பதைக் காண முடிகிறது. ஆனால்,

பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தும் போது அவர்களிடையே

சலிப்புத்தன்மை ஏற்படுகின்றது. பாடப்புத்தகத்தை மின்நூலாகத்

தரப்படும்போது பாடத்தில் ஆர்வமாக இருப்பதோடு இல்லாமல்

ஈடுபாட்டோடும் செயல்படுகின்றனர். படிப்பில் ஆர்வம் இல்லாத

மாணவர்கள் கூட தொழில்நுட்ப பயன்பாட்டின் வழி கற்றல்

கற்பித்தலில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். தொழில்நுட்பம் கற்றல்

கற்பித்தலில் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றது.

உலகையே வகுப்பறைக்குள் கொண்டுவரும் வலிமை

தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மட்டுமே உள்ளது என்றால் அது

மிகையாகது. காரணம் மாணவர்களுக்கு உலகெங்கும் நடக்கும்


செய்திகளைக் கற்றல் கற்பித்தலில் இணைத்து பல பொது அறிவு

தொடர்பாகச் செய்திகளைத் தக்க ஆதாரத்துடனும் தெரிவிக்க

முடியும். தொடர்ந்து, தொழில்நுட்பம் ஒரு கருத்தை விளக்கமாகவும்

தெளிவாகவும் கூற இயலும். இதன் வழி கற்றல் கற்பித்தலில் நேரம்

போன்றவற்றை மீ தப்படுத்தி நல்ல வழியில் செலவிட உதவுகின்றது.

எடுத்துக்காட்டாக, தொழில்நுட்பப் பயன்பாடின்றி பல கூறுகளை

விளக்க ஆசிரியர்கள் பட விளக்க அட்டைகள் போன்ற

துணைப்பொருட்கள் செய்ய நேரிடும். ஆனால், கற்றலுக்குச்

சம்பந்தமான பல பயிற்றுத்துணைப் பொருட்கள் இணையத்தில்

தேவைக்கும் ஏற்ப அதிகமாகவே உள்ளது. இதன் வழி, மாணவர்கள்

மிகச் சுலபமாக பாடத்தினைக் கற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப

பயன்பாட்டின் வழி கற்கும் கல்வியானது மாணவர்களின் மனதில்

பசுமரத்தாணிப் போல பதிந்து விடும் என்பதில் எள்ளளவும்

ஐயமில்லை. அதுமட்டுமின்றி, ஆசிரியர்களின் வேலைப்பளுவும்

குறைகின்றது. அக்காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் பலவேளை

நேரங்களைச் செலவு செய்து பயிற்றுத்துணைப்பொருட்கள் செய்த

சூழல் உருவாகியிருந்தன. ஆனால், இப்பொது ஒவ்வொரு

பாடவேளைக்கும் பயிற்றுத்துணைப் பொருள்கள் உருவாக்கும்

தேவை இல்லாமல் போகின்றது.

சில சமயங்களின் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் பல

விளக்கங்ளையும் எடுத்துக்காட்டுகளையும் கூறி மாணவர்களுக்குப்

புரியும் வகையில் கற்றலை நடத்த வேண்டும். இருப்பினும், ஒரு

சில மாணவர்களுக்குப் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக


இருப்பதால் கற்றல் கற்பித்தலை முழுமையாக ஒரு மணி

நேரத்திற்குள் நடத்தி விட முடியாமல் செய்கிறது. ஆனால்,

தொழில்நுட்ப பயன்பாட்டின் வழி ஆசிரியர்கள் அதிக நேரத்தைச்

செலவிட்டு விளக்க தேவையில்லை காரணம் இணையத்தில்

கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற பல காணொளிகள் உள்ளன.

இக்காணொளிகளின் வழி மாணவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள

முடிகின்றது.

ஆசிரியர்கள் பயன்படுத்தும் பயிற்றுத்துணைப் பொருள்கள்

பெரும்பாலும் காகிதத்தால் செய்கின்றனர். ஆனால், அவ்வட்டைகள்

ஒரு ஆசிரியரால் அடுத்தப் பாட வேளையில் மீ ண்டும்

பயன்படுத்துவது சாத்தியமற்றது. அப்படிப் பயன்படுத்தினாலும்

மீ ண்டும் எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பது

கேள்விக்குறியே. ஆனால் தொழில்நுட்ப பயன்பாட்டில் இப்பிரச்சனை

ஏற்படாது. எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் பயன்படுத்தக்கூடிய

வல்லமை பெற்றது தொழில்நுட்பம். ரசிடே நோர்மான் (2013),

எழுத்துகளை மட்டும் காட்டிக் கற்பிப்பதைக் காட்டிலும் படங்களைக்

காட்டிக் கற்பிப்பது மாணவர்களின் ஞாபக சக்திக்கு அழுத்தம்

தருவதாய் அமையும் என்கிறார்.

கற்றல் தரத்திற்கு ஏற்ற தொழில்நுட்பப் படைப்பை

ஆசிரியர்கள் பயன்படுத்தலாம். சொற்செயலி, திறமுனைச் செயலி,

இணையம், செயலிகள் போன்றவை மூலம் கற்றல் கற்பித்தலில்

ஆசிரியர் மாணவர்களின் தரத்திற்கு ஏற்ற படைப்புகளைச் செய்து

பயன்படுத்தலாம். அதுமட்டும்மல்லாமல், பிற ஆசிரியர்களின்


தொழில்நுட்ப கற்பித்தல் படைப்புகளை பதிவிறக்கம் செய்தும்

கற்றலை நடத்த தொழில்நுட்பம் துணைப்புரிகின்றது. அதே

வேளையில், தொழில்நுட்பத்தால் ஆசிரியர்கள் தம் சுய படைப்பைப்

பதிவேற்றம் செய்வதால் மற்ற ஆசிரியர்களோடும் பகிர்ந்து

கொள்ளலாம்.

இணையத்தில் ஏராளமான அகப்பக்கங்களில் கற்றல்

கற்பித்தலுக்கு ஏற்ப பல விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்து

கற்றல் நோக்கங்களை அடைய பக்கபலமாக அமைக்கின்றது.

மாணவர்களின் அடைவு நிலைக்கேற்ப பல நிலைகளும்

இவ்விளையாட்டுகளை தயாரித்துள்ளனர். ஆக, கற்றல் கற்பித்தலில்

இது போன்ற விளையாட்டுகள் மாணவர்களின் ஆர்வத்தை

அதிகரித்து அவர்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்கின்றது. ஜோன்

டுவேய் (1859) மகிழ்ச்சியாக இருப்பது மாணவர்களின் உரிமை,

அதனைக் கற்றல் கற்பித்தலில் விளையாட்டின் மூலம்

பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார். உதாரணமாக, பழமையான

விளையாட்டு (classical games), மொழி விளையாட்டு, சாகச

விளையாட்டு (adventure games), பந்தய விளையாட்டு (racing game), புதிர்

விளையாட்டு (puzzle games), பலகை விளையாட்டு (board games), சீட்டு

விளையாட்டு (card games) போன்றவை ஆகும். மேலும், தொழில்நுட்ப

வசதியின் வழி ஆசிரியர்கள் தங்களின் கற்றல் கற்பித்தலுக்கு

ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதாவது

இவ்விளையாட்டினை ஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலுக்கு


ஏற்றவாறு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து கொள்ளவும்

தேவையற்ற விவரங்களை நீக்கவும் முடிகின்றது.

அதுமட்டும்மின்றி, தொழில்நுட்பம் மாணவர்களிடையே

தன்னளவு கற்றல் (self-phased learning) எனும் கோட்பாட்டிற்கேற்ப

வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தங்கள்

விரும்பும் வகையில் கற்பதற்குத் தொழில்நுட்பம் வாய்ப்பினை

வழங்குகின்றன. இதற்கு காரணம் மாணவர்கள் விரும்பும் வகையில்

கற்க பல வகையான கற்றல் கற்பித்தலை ஒரே நேரத்தில்

பயன்படுத்தலாம். ஒலி, எழுத்து, காட்சி, அசைவுப்படம், நிகழ்படம்

போன்றவை அனைத்தும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு

சுலபமாக அமைத்துக்கொள்ளலாம். தொழில்நுட்பத்தின் வழி

தொழில் நுட்பத்தின் பயன்பாடு மாணவர்களின் கற்றல் திறமையும்

தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றன. தொழில்நுட்பம் பல வகை

கற்றல் திறன்களை அதிகரிக்கின்றது. உதாரணத்திற்கு, மையக்கற்றல்

கற்பித்தல், மனமகிழ்ச்சியுடன் கற்றல், சவால் நிறைந்த கற்றல்

சூழல் போன்றவை ஆகும். தொழில்நுட்பத்தின் வழி கற்றல்

கற்பித்தலுக்குத் தொடர்பான பல கற்றல் வல்லமைகள்

வலைத்தளங்களில் உள்ளன. அவற்றின் வழி பலவகையான கற்றல்

தகவல்களைப் பெறுவதோடு இல்லாமல் பொது அறிவுள்ள

மாணவனாக இயங்குவதற்கும் உறுதுணையாக அமைக்கின்றது.

மேலும், தொழில்நுட்ப பயன்பாட்டின் வழி ஒரு

மாணவனின் மொழி வளமையை அதிகரிக்க முடிகின்றது.

எடுத்துக்காட்டாக, வரிவடிவத்தை ஒலியாக்கும் மென்பொருள் (Text to


speech), பேச்சொலியை வரிவடிவமாக மாற்றும் மென்பொருள் (speech

to text), பிறமொழிகளைத் தமிழுக்கும் தமிழைப் பிறமொழிகளுக்கும்

தானியங்கி முறையில் மொழி பெயர்க்கும் மென்பொருள் (translation)

போன்றவற்றின் மூலம் மாணவர்களின் பேச்சு திறன்களை

அதிகரிக்க முடிகிறது. இது போன்ற தொழில்நுட்பங்கள் கண்டிப்பாக

வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின் போது பயன்படுத்தினால்

மாணவர்களின் கேட்டல் பேச்சு திறனில் முன்னேற்றத்தைக்

காணலாம்.

ஆசிரியர்களிடையே மடலாகக் குழுக்கள் வழி கற்றல்

கற்பித்தல் வல்லமைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு

உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களோடு பகிர்ந்து கொள்ளவும்

கருத்துப் பரிமாற்றமும் செய்ய முடிகின்றது, ஒருவரோடு ஒருவர்

தொடர்புக் கொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம்

செய்யவும், நிகழ்ப்பட கலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி

தகவல்களைத் பரிமாறவும் வாய்ப்புகள் உள்ளன. இத்தொழில்

நுட்பமானது தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய

தகவல்களை அறிந்து கொள்ளவும், தேவையற்ற விவரங்களை

நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச் செய்து கொள்ளவும்

வழிவகுக்குகின்றது.

மின்னஞ்சல், மடற்குழு போன்றவை வழியாகவும் முகநூல்,

புலனம், கீ ச்சகம், தொலைவாரி போன்ற சமூக வலைத்தளங்கள்

வழியாகவும் கற்றல் கற்பித்தல் தொடர்பான செய்திகள்,

பாடக்குறிப்புகள், பாடப்பொருள்கள், படங்கள், அசைவுப்படங்கள்,


நிகழ்ப்படங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும்

பரிமாறி கொள்ள முடியும். தமிழில் செயல்படும் மின்நூலகம்,

மின்நூல்கள், கலைக்களஞ்சியங்கள், மின்னகராதிகள் ஆகியனவும்

இவ்வகையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன.

இன்று பலரும் தங்களுக்கென தனி இணைய இதழ்கள்,

வலைப்பூக்கள் என வைத்திருக்கின்றனர். தனி நபர்கள் தினசரி எழுது

கட்டுரைகளை வாசிக்கும் வாசகன் உடனடியாகாகத் தனது

விருப்பமான எழுத்தாளனோடு கடிதம் மூலமும், குரல் மூலமும்

தொடர்பு கொள்ளும் வசதிகள் இணைய வழியில் உள்ளன.

மின்னூட்கங்கள் வழியாக விவாதங்களைத் தொடரலாம் கூகுள்

(google) என்ற இணைய தளம் உலக அறிவு அனைத்தையும்

கணினிக்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியைச் செய்து

வருகிறது. கற்றலில் தொழில்நுட்ப பயன்பாட்டின் வழி தொழில்நுட்ப

அறிவையும் மாணவர்களிடையே சேர்க்க முடிகின்றது. இதன் வழி

மாணவர்கள் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்வதன் மூலம்,

ஒவ்வொரு விடயத்தையும் அறிந்து கொள்வதற்கும், சேமித்து

வைப்பதற்கும் ஒவ்வொரு தகவலையும் பதிவு செய்வதற்கும்

கற்றுக்கொள்கின்றனர்.

21-ஆம் நூற்றாண்டான இக்காலக்கட்டத்தில் தொடர்பு

தொழில்நுட்பமானது அனைத்து துறைகளிலும் மிகவும் துரிதமாகத்

தனது வளர்ச்சியையும் பங்கையும் காட்டி வருகின்றது என்று

கூறினால் அது மிகையாகது. அவ்வகையில் நமது கல்வித்

துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்பொழுது கல்வி கற்பிக்கும்


முறையிலும், கல்வி கற்கும் முறையிலும் பல்வேறு புதிய

நுட்பங்களும் நுணுக்கங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பத்தில் பாடங்களைப் புகுத்திக் கற்பிப்பது அதிவேகமாக

வளர்ந்து வருகின்றது. கல்வித்துறையில் தகவல் தொடர்பால்

தொழில்நுட்ப முறைமையானது நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று

வருகிறது. தொழில்நுட்பம் மாணவர்களை வெற்றிப்பாதையில்

நகர்த்திச் செல்கின்ற ஒன்றாக உள்ளது. ஆகவே, ஆசிரியர்கள்

நகமும் சதையும் என்பது போல் இன்று பள்ளிகளில் ஆசிரியரும்

தொழில்நுட்பமும் இருப்பதால் கற்பித்தல் எளிதாக, சிறப்பாக, தரமாக

மாறி வருகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மேற்கோள் நூல்கள்

«,¸¢ ÀÃó¾¡Á¡É¡÷ ±õ.² (2005), ¿øÄ ¾Á¢ú ±Ø¾ §ÅñÎÁ¡?, À¡Ã¢ ¿¢¨ÄÂõ.

இ.பா. வேணுகோபால். (1954). பைந்தமிழ் கற்பிக்கும் முறைகள்,

சென்னை, அஸோஸியேஷன் பப்ளிஷீங்


இரவிந்தரன் தனபால், சரஸ்வதி கண்ணன், லெட்சுமி சுப்பையா, 2006, தமிழ் ¦Á¡ழி பாட நூல்

ஆண்டு 5, Multi Educational Book Enterprise, மலேசியா.

பா.வரப்பன்,
ீ (2004). தொடக்க நிலை தமிழ் கற்பித்தலில் புதிய

அணுகுமுறைகள். சென்னை, அம்சா பதிப்பகம்.

பேராசிரியர் சுப்புரெட்டியார்.நா (2003), தமிழ் பயிற்றும் முறை, மெய்யப்பன் பதிக்கம்.


பேராசிரியர் சுப்பு ரெட்டியார், (2006). தமிழ் பயிற்று முறை. சென்னை :

சாந்த பதிப்பகம்.

வி. கணபதி (2005). நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் (பகுதி 2) சென்னை :

சாந்தா பதிப்பகம்

பா.வீரப்பன் (2004), தொடக்க நிலை தமிழ் கற்பித்தலில் மதிப்பீடு, சென்னை அம்சா பதிப்பகம்.
தொடக்க நிலை தமிழ்மொழி தர ஆவணம், தேசிய கல்வி அமைச்சு.

தொடக்கப் பள்ளிகளுக்கான இலக்கண இலக்கிய விளக்கவுரை, தமிழ்மொழி பிரிவு,


கலைத்திட்ட மேம்பாடு வாரியம்.

You might also like