You are on page 1of 17

இடுபணி 1:

அ. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மலேசியத்


தமிழ்க்கல்வி எதிர்நோக்கும் சவால்களைக்
களைவதில் மதிப்புயர்வு தரும் கூறுகள்
ஆற்றக்கூடிய பங்கினைப் பகுப்பாய்ந்து
சான்றுகளுடன் நியாயப்படுத்துக.

1.0 முன்னுரை

1
கல்வி என்பது எதிர்கால வாழ்வின் தயார்நிலையினது படிமுறை என்பது அன்றி வாழ்வியலின்
செய்முறையே ஆகும். கல்வி என்பது பொதுவாகக் கற்றல் என்பதுடன் இணைத்துக்
கூறப்படுகிறது (எஸ்.சந்தானம் & வி.கணபதி, 2010). பொதுமறையில் கல்விக்கென ஒரு
அதிகாரம் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. கல்வியெனும் பொக்கீஷத்தைக் களவாடுவது
முயற்கொம்பு. அதனை வாசித்து சுவாசித்து உட்கொணர்வதில்தான் பலன் உள்ளது.
அவ்வகையில் தமிழ்க்கல்வியின் அறிவு ஒருவனை நெறிப்படுத்தக்கூடிய ஒட்டுமொத்த
வேதமாக விளங்குகின்றது. பல நூற்றாண்டுகள் கடந்து இன்னமும் தன் மாண்பினை
இழக்காதிருக்கும் தமிழின் சிறப்பு பாராட்டத்தக்கது. இவ்விடுபணியில் மலேசியத் தமிழ்க்கல்வி
தொடர்பான விடயங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. முதற்கண்ணாக அதன் வரலாறு
இயம்பப்படுகிறது.

2.0 மலேசியத் தமிழ்க்கல்வி வரலாறு

1816 ஆம் ஆண்டிலேயே மலேசியாவில் தமிழ்க்கல்வி முறையாகக் கற்பிக்கப்படும் முயற்சி


தோன்றியுள்ளது ( ராஜேந்திரன், 2011). பினாங்கு இலவசப்பள்ளியினால் துவக்கி வைத்த
வரலாறு சில ஆண்டுகள் கழித்து 1850 இல் மலாக்காவால் தொடரப்பெற்றது. தமிழ்க்கல்வியின்
மீது அக்கறை கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சில. அக்கால அரசாங்கமோ தோட்ட
நிர்வாகமோ ஆதரவு தராத பட்சத்தில் தமிழ்க்கல்வியின் நிலை ஆட்டங்கண்டபடியே
இருந்தது. தகுதியான தமிழாசிரியர்கள் இல்லாத பட்சத்தில் ஓரளவு படித்தவர்கள்,பூசாரிகள்,
கங்காணிகள் போன்றவர்களினாலே தமிழ்க்கல்வி கற்பிக்கப்பட்டது.

தமிழ்க்கல்வி அடைவதற்கு இடவசதி கிடைப்பதிலும் இடர்பாடுகள் பல இருந்து வந்துள்ளன.


ஆசிரியருக்குரிய முழுநேரப் பயிற்சி வகுப்பு 1960 ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு தமிழாசிரியர்களையும் தமிழ் பாடசாலைகளையும்
தமிழ்க்கல்வி மலேசிய நாட்டிற்குப் படிப்படியக ஈட்டித் தந்துள்ளது. இன்று மொத்தம் 527 தமிழ்
பாடசாலைகள் உள்ளன. இந்நிலையில் அக்காலத்தினைக் காட்டிலும் இன்னும் பல
சவால்களைத் தமிழ்க்கல்வி சந்திக்கிறது என்பதை நாம் கண்கூடக் காணலாம். இந்நூற்றாண்டில்
தமிழ்க்கல்வியின் நிலை எவ்வாறு உள்ளதென்பதை ஒரு கண்ணோட்டமிடுவோம்.

3.0 இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மலேசியத் தமிழ்க்கல்வி

இருபத்தோறாம் நூற்றாண்டின் பொருளாதார வெற்றி புத்தாக்கத்தையும் அதிநவீன யுக்திகளின்


பயன்பாட்டையும் அதிகம் சார்ந்துள்ளது ( மோகன் & சுப்பிரமணியம், 2016). ஒரு
நாட்டினுடைய மனிதவள மேன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முதன்மையாய் நிற்பது

2
கல்வி. இந்நிலையில் தமிழ்க்கல்வியினை உற்று நோக்கும் போது அதற்க்கேற்ற
கலைத்திட்டத்தினை அமைத்து அதனை சீர்மைப்படுத்தி இன்றைய கற்றல் கற்பித்தலில்
இணைத்திருப்பது தெரிகிறது. இது தமிழ்க்கல்வியினை மிகுந்த பயனுள்ளதாகவும்
மகிழ்ச்சிகரமானதாகவும் அமைய வழிவகுக்கிறது. மாணவர்கள் அறிவாற்றல், ஆன்மிகம், உடல்,
உள்ளம் ஆகியவற்றில் சமவளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது (DSKP,
2016).

மலேசிய நாட்டின் விவேக கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2013-2025 இந்நூற்றாண்டின்


தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பற்பல திறன்களை அமைத்து அதனை அமலாக்கம்
செய்யப் பணித்துள்ளது. 11 அம்சங்களை கொண்ட இத்திட்டத்தினை முறையாக
அமலாக்கப்படுத்துவதில் வாயிலாக தமிழ்க்கல்வியின் நிலை அங்கீகரிக்கப்படும்.
இந்நூற்றாண்டின் தாரக மந்திரமாக நவீனத்தொழில்நுட்பமும் மந்திரத்தை ஜபிக்கும் மொழியாக
ஆங்கிலமும் சீனமும் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனை விடுத்து பற்பல
மாற்றங்களுக்கும் அனுசரனைக்கும் உட்படுத்தப்படும் இக்காலக்கோட்டின் விளிம்பில்
தமிழ்க்கல்வி எவ்வாறு சவாலுக்குட்படுத்தப்படுகிறதென்பதை அடுத்தப் பகுதிகளில்
காணப்பெறலாம். அதனூடே தமிழ்மொழிக் கலைத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள புதிய
நூற்றாண்டின் மதிப்புயர்வு தரும் கூறுகள் எப்படி அச்சவால்களைக் களைந்து
தமிழ்க்கல்வியினைத் தூய்மையாகவும் வளமையுடனும் வைத்திருக்கிறதென்பதையும்
சான்றுகளுடன் நியாயப்படுத்தப்படுகின்றன.

4.0 இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மலேசியச் தமிழ்க்கல்வி எதிர்நோக்கும் சவால்களும்


அதனைக் களைவதில் மதிப்புயர்வு தரும் கூறுகளின் பங்களிப்பும்

4.1 வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டு வருதல்

கற்றல் உளவியலின் அடிப்படைக் கூறாக, உயிர்ப்புத்தளமாக வாசிப்பு அமைகின்றது (சேகர்


நாராயணன், 2017).உயர்ந்த அறிவு, மன மற்றும் சமூக எழுச்சி ஆன்மிகத்துறை விருத்தி
போன்றவற்றிற்கு வாசிப்பு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இம்மொழித்திறன்
தமிழ்க்கல்வியில் அடங்கியுள்ளதை நாம் அறிந்திருப்போம். இந்த மொழித்திறனானது
மாணவர்கள் சரளமாகவும், சரியான உச்சரிப்புடனும் தொனியுடனும் வாய்விட்டு வாசித்தல்
என்று பொருளுணரப்படுகிறது. இன்றைய நூற்றாண்டில் துரித வளர்ச்சிக்குட்பட்டிருக்கும்
தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் கற்போர் மத்தியில் வாசிக்கும் பழக்கம் பெருமளவு
குறைந்துள்ளது (பரமேஸ்வரி, 2016).

3
பொழுதுபோக்கெனும் இயல்பைத் தாண்டி அறிவின் தேடலுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டியவர்கள் தொழில்நுட்பத்தின் அதீத தாக்கத்தினால் வாசிப்பதை குறிப்பாக
தமிழ்மொழியை வாசிப்பதை புறக்கணிக்கின்றனர். தமிழ்க்கல்வியின் நிரந்தரத்தன்மை
அதனை கற்றுக்கொள்ளும் மானுட வர்கத்தினைச் சார்ந்திருக்கிறது. தமிழறிவு
அடிப்படையில் இருந்தாலும் அதனைப் பயன்பாட்டிற்குட்படுத்துவதில் இன்னமும் சிரமம்
மேற்கொள்வது முறையான வாசிப்பின்மையே. அழகிய வரம்புகளுக்கு உட்படுத்தி
சீர்படுத்தப்பட்ட தமிழின் இனிமையை சுவைக்க மறுக்கும் சமூகம் உருவாகிக்
கொண்டிருப்பது தமிழ்க்கல்விக்கு பெருத்த சவால். வாசிப்பின்மையினால் பேச்சாற்றல்
முடங்கி போகும் அபாயமுள்ளது. இது தொடர்ந்தால் நாளடைவில் நம் தாய்மொழியே
அந்நிய மொழியினைப் போல் ஆகிவிடுமென்பது கவனத்திற்குள்ளா வேண்டிய விடயம்.

இதனைக் களைவதில் மதிப்புயர்வு தரும் கூறுகள் தனது பொறுப்பை ஏற்று தொண்டு


புரிந்து வருகிறது. சிந்தனைத்திறன், எதிர்காலவியல் போன்ற கூறுகளைக் கையாளுதல்
தமிழ்க்கல்வியின் கற்றல் கற்பித்தலுக்கு அவசியமாகிறது. எதை நோக்கி எதனால் நம் மொழி
சீர்மையை இழக்கிறதோ அதையே ஆயுதமாகக் கொண்டு அதனை மீட்கச் செய்வது
விவேகம். மாணவர்களுக்கு பாடவேளையில் வழங்கப்படும் வாசகங்களில் உள்ள முக்கிய
கருத்துகளை உணர்த்துவதை விடுத்து அதில் இக்கூறுகளை உட்புகுத்தி கற்பிப்பது
நல்லொழுக்கமும் நற்சிந்தனையும் மிக்க மாணவரை உருவாக்க முடிகிறது. ‘AUDA CITY’
போன்ற அணுகுமுறைகள் அவர்களின் உச்சரிப்பு தொனி போன்றவற்றை நிவர்த்தி
செய்கிறது. திரைப்பட மோகத்தில் அமிழ்ந்திருக்கும் மாணவர்களை அதன் மூலமாகவே
அதில் இடம்பெறும் காட்சிகளில் பாடத்திற்குரியதை தேர்ந்தெடுத்து அதனை வாசகமாக
அமைத்து அவர்களை வாசிக்கச் சொல்லி பின் தவறிருப்பின் அவ்வாசகம் அடங்கிய
காணொளியினைத் திரையிலிட்டு அதனை சரி செய்து விடுதல் நன்மை தரும்.

சிந்தனைத்திறனானது மொழித்திறன்கள் நடவடிக்கைகளின் வாயிலாகவும் வினாக்கள்


வாயிலாகவும் ஆக்கச் சிந்தனை வாயிலாகவும் கற்பிக்கப்படுகின்றன. வாசிப்பின் போது
சரிபார்த்தலுக்கு எழுப்பும் கேள்வி அவர்களை சிந்தனையில் ஆழ்த்துகிறது. ஒரு
தொடர்பாடலில் தொனியும் உச்சரிப்பும் எந்த அளவு இன்றியமையாயதென்பதை அவர்கள்
சிந்திக்க முற்படுவர். இதனால் நாளடைவில் தமிழில் பிறருடன் உரையாடும் போதும்
அல்லது எதிர்காலத்தில் தொழிலில் ஏற்படும் தொடர்பாடலின் போதும் சிந்தித்து சரியான
முறையில் இத்திறனைப் பயன்படுத்த முடிகிறது.

4
எதிர்காலவியல் அடிப்படையில் மாணவர்கள் நடந்தவற்றிலிருந்து நடக்கவிருப்பதை
அனுமானித்து அதன் விளைவை ஊகித்து தயார்படுத்திக் கொள்ளுதல் ஆகும்.
எதிர்காலவியலைக்கண்டிப்பாக எல்லா பாடத்திலும் ஆசிரியர் தொடர்பு படுத்த வேண்டும்
(சேகர் நாராயணன், 2017). காட்டாக, வாசிப்புத்திறனை வளப்படுத்தும் போது நன்னெறிப்
பண்பைப் போற்றும் வகையில் வாசிக்கப்பெறும் வாசகங்களில் நன்னெறி பண்பினை
உட்புகுத்தி முறையாக வாசிக்கப் பணித்து அதனை பிற்காலத்தில் பயன்படுத்த வேண்டிய
சூழல்களையமைத்து அதில் அவர்களை ஈடுபடச் செய்வது விளைப்பயன் தரும். அதோடு
மட்டுமின்றி வாசிப்பு பழக்கத்தைக் கூட்டிட அறிவியல் கதைகளை கொடுப்பது அவர்களின்
சிந்தனையை தூரநோக்கிற்குக் கொண்டு விடும். இதனால் கற்பனையாற்றல் வளர்வதோடு
வாசிப்பில் ஆர்வமும் ஏற்படுகிறது. இவ்வகை மதிர்ப்புயர்வு தரும் கூறுகள் தமிழ்க்கல்வியின்
சவால்களைத் தூர வீசியெறிகிறது.

4.2 இன்னமும் பழைய அணுகுமுறைகளும் உத்திமுறைகளும் பயன்படுத்தப்படும்


நிலை

வைத்தியநாத தேசிகர் ‘பழையன கழித்தலும் புதியன புகுத்தலும்’ என விளக்கமளித்துள்ளார்


(வேணுகோபால், 2006). அதுபோல காலத்தின் மாற்றங்களுக்கும் புதுமைகளுக்கும்
ஈடுகொடுத்துச் செல்லும் வகையில் பழைய படிமுறைகள் அல்லது செய்முறைகளை
மூட்டைக் கட்டிவிட்டு புதிய செயல்முறைகளை அமலாக்கம் செய்வது அவசியம். இன்னமும்
‘chalk and talk’ என்கிற பழங்கால அணுகுமுறை பின்பற்றப்படுவது ஆதரிக்கக் கூடியதாக
இல்லை.

மாணவர் மையக் கற்றலினை அடிப்படையாகக் கொண்ட இந்நூற்றாண்டின் கல்வியிலலில்


இன்னும் ஆசிரியர் மையக் கற்றலின் ஆதிக்கம் முரண்பாடாக விளங்குகிறது.
தமிழ்க்கல்வியின் அறிவுடைமை மாணவர்கள் விரும்பி ஏற்பதில் உள்ளது. அதற்கு புறம்பாக
செயல்படும் போது அம்முயற்சி தோல்விக்குள்ளாகுகிறது. மாணவர்களிடம் தற்பெருமை
தம்பட்டம் இருத்தல் கூடாதென சேகர் நாராயணன்,(2017) அவர்கள் கருத்துரைக்கின்றார்.
மாணவரின் சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காமல் சர்வாதிகாரம் செய்வது மன
உளைச்சலையும் தமிழ்க்கல்வியினை நோக்கிய வெறுப்பினையும் சம்பாதித்துக் கொள்கிறது.
இதனைக் களைவதில் பல்வகை நுண்ணறிவு, எதிர்காலவியல் போன்ற மதிப்புயர்வு தரும்
கூறுகள் உதவி புரிகின்றன.

5
பல்வகை நுண்ணறிவு மிக்க மாணவர்களுக்குத் தமிழ்க்கல்வியை சுவையூட்டும் வகையினில்
போதிக்க, கற்றல் கற்பித்தல் மையமாகவும் இருவழித்தொடர்பாகவும் அமைவது மாணவனை
தேசியகல்வி கோட்பாடு அடிப்படையிலே முழுமை பெற்றமாந்தனாக உருவாக்க உதவும்
என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை ( ரூபனா தர்ஷினி, 2016). மொழித்திறன், ஏரணம், இசை,
இயக்கம், இடம், தன்னறி, சமூகம் போன்ற நுண்ணறிவுகளில் எதாவதொன்றில் மாணவர்கள்
சிறந்து விளங்குவதை அடையாளங்கண்டு அவற்றிகேற்ப விளைப்பயனான கற்றல்கற்பித்தல்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மொழித்திறன் மற்றும் ஏரணத்தை மட்டும்
உயர்வாகப் பார்ப்பதை விடுத்து மாணவர்களுள் எழும் பிற நுண்ணறிவுகளையும்
அதற்கீடாக நினைத்து மதிப்பது அவசியமென அதனை உருவாக்கிய ஹோவர்ட் காட்னர்
எடுத்துரைக்கிறார்.

மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியதும் அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதும்


மிக முக்கியமான செயல். அவர்களின் கேள்விகள் கேட்கும் திறனை முடக்காது ஆதரிப்பது
அவர்களின் அறிவு தரத்தைக் கூட்டும். தமிழ்க்கல்வி வெறும் மொழித்திறனில் மட்டும்
கற்பிப்பதை விடுத்து இசை மூலமாகவும் இயக்கங்களைக் கொண்டும் கற்பிப்பது
மிகச்சிறப்பு. பாடவேளையில் வகுப்புகளில் மட்டும் இருந்துவிடாமல் வெளியே சென்று
உடலியக்கத்துடன் தமிழ்க்கல்வியினைக் கற்பிக்கத் தூண்டும் வகையில் உடலசைவின் மூலம்
பந்துகளை இசைக்கேற்ப எறிந்து இசை நிற்குமிடத்தில் பந்தைக் கொண்டவர் தமிழ்ச்சார்ந்த
கேள்விகளுக்கு விடையளித்தல் இதில் அடங்கும். இதுபோன்ற வேளைகளில் மாணவர்களின்
விவேகத்தின் வேகம் கூட்டப்படுகிறது.

இதனையடுத்து எதிர்காலவியலானதில் இயற்கையை நேசித்தல், பாதுகாத்தல் போன்ற


கருத்துருக்கள் காணப்படுகின்றனர். நடைமுறையில் உள்ள இயற்கை சார்ந்த நிகழ்வுகளை
தமிழ்க்கல்வி மூலம் மாணவர்களுக்கு புகட்டி இயற்கை வளத்தின் வளமையையும் அதனைப்
பேணி காப்பதன் அவசியத்தையும் உட்புகுத்தல் வேண்டும். இதற்கு வகுப்பில் அமர்ந்து
கற்பதைக் காட்டிலும் பள்ளிப் பூங்காவில் இணையராக பூக்கள் அல்லது செடிகளின்
வகைகளை வகைப்படுத்தியும் அதன் தன்மையையும் நன்மையையும் விவரித்து தமிழில்
எழுதச் செய்தல் சிறப்பு. இதனால் காட்சி வழி கற்கும் வாய்ப்பை அவர்கள் பெறுகின்றனர்.
மேலும் இதுபோன்ற வகுப்பை விடுத்து நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் அவர்கள்
அறிவு நுகர்ச்சியின் வேட்கையைக் கூட்டி தமிழை மேலும் படிக்கத் தூண்டிவிடுகிறது. இந்த
மதிப்புயர்வு தரும் கூறுகள் வழி புத்தம்புதிய அணுகுமுறைகளையும் உத்திமுறைகளையும்
கையாளச் செய்வது சவால்களை நொறுக்கி விடுகிறது.

6
4.3 காலப்போக்கில் குறைந்து வரும் தமிழ்ச்சார்ந்த பயன்பாடுகள்

இவ்விருபத்தோறாம் நூற்றாண்டில் தமிழின் பயன்பாட்டு நிலை இன்னமும் கேள்விக்குறியாக


இருக்கிறது. தமிழ்க்கல்வியின் கிளைகளில் அது பாடத்தில் மட்டும் அதிகமாகக்
காணப்படுகின்றதே ஒழிய வாழ்வியலின் பயன்பாட்டில் மிகக் குறைந்த நிலையிலே உள்ளது.
மேற்கல்விக் கூடங்களில் தமிழ்க்கல்வியினைத் தொடர்ந்து படிக்க வாய்ப்புகள்
எல்லைக்குட்பட்டனவாக இருப்பதும் தமிழ்க்கல்வியைப் பயின்றும் அதனை
நடைமுறைக்குட்படுத்தப்படாததும் இன்றைய நிலையாக இருக்கிறது. குறிப்பாக
தொடக்கக்காலத்தில் தமிழை வகுப்பினில் மட்டும் பயன்படுத்திவிட்டு வெளியுலகில் வேற்று
மொழியினை அதீதமாகப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. பல்லின மக்கள்
வாழும் நாட்டினில் நாமிருப்பதால் மொழிக்கலப்பு ஏற்படுவது இயல்பு. ஆங்கிலத்தைக் கற்க
வேண்டியது நூற்றாண்டின் தேவை. எனினும், அதற்காக தமிழ்க்கல்வி மூலம் பெற்ற தமிழைப்
புறக்கணித்தும் அதனை மொழிச்சிதைவுக்குள் ஆழ்த்துவதும் சரியன்று.

தொழிற்துறையில், குறிப்பாக வணிகம் சார்ந்தவற்றில் தமிழின் பயன்பாடு தொலைந்து


போய்விட்டது. அறிவுக்கு அறிவுச் சேர்க்க நாடுகின்ற தகவல்கள் கொண்ட தரவுகளும்
ஆவணங்களும் இயல்பாக வேற்று மொழியிலேயிருப்பது தமிழ்க்கல்விக்கு இடர்பாடாக
அமைகிறது. சிறந்த படைப்புகளை காலத்திற்கேற்ற தகவல்களை மொழிப்பெயர்ப்பு
செய்வதில் தமிழ் கற்றோர் தவறி விடுவதால் அதன் விளைவு மோசமாக விளைகிறது.
சோம்பேறித்தனமும் அலட்சியமும் கலந்த செயற்பாட்டினால் பாதிப்புறுவது தமிழ்க்கல்வி
என்பது இங்கு கவனத்திற்குரியது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் தமிழின் மீது
முழு ஈடுபாட்டினைக் காட்டாது கடமைக்கெனவும் கட்டாயத்தின் பெயரிலும் கற்க
முற்படுகின்றனர். சிலர் இதனால் தமிழ்க்கல்வியே வேண்டாம் என்று முடிவுக்கு வந்து பள்ளி
மாற்றலாதலும் நிகழந்தபடி வருகிறது.

இதனைக் களையும் விதமாக வாழ்நாள் முழுவதும் கற்கும் திறனும் தொழில்முனைப்புத்


திறனும் பெரும் பங்காற்றுகிறது. வாழ்க்கை முழுதும் கற்கும் பழக்கத்தை ஏற்படுத்தி
விடுவதால் காலத்திற்கேற்ப அறிவை வளப்படுத்திக் கொள்வதோடு விரைவான மாற்றத்தை
அடைந்துவரும் உலகியல் சவால்களை எதிர்கொள்ளும் திறனை இவர்கள் பெறுவர்.
தமிழ்க்கல்வியில் சேர்க்கப்படும் தற்கால தொழில்நுட்ப சொற்களஞ்சியங்களை
அவ்வப்போது பாடவேளையில் சொருகி அதனை விதைப்பது தேவையாக இருக்கிறது.
நல்ல படைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அதனால் ஒரு
துலங்குதலைப் பெற்று பிற்கால வாழ்வில் அதனை நாடியபடி அவர்கள் செல்வது

7
இக்கூற்றிற்கு வலு சேர்க்கிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்படைப்புகளை படைத்திட
முனைந்திடும் கற்றோர் தமிழ்த்தொடர்பான புத்தம் புதிய தரவுகளைப் பெறுவதில் அதிக
நாட்டம் காட்டி அதனை அடைய முற்படுவர். நாளைய பேச்சாளராக விளைய
நினைப்போருக்கு அத்துறைச் சார்ந்த தமிழ் தகவல்களை பாடவேளையில் கொடுத்தளித்தும்
அதனை மேலும் பெருவதற்கான வழிவகைகளை கலந்துரையாடுவதும் நன்மை தரும்.

அதனையடுத்து, தொழில்முனைப்புத் திறனைக் தமிழ்க்கல்வியின் கற்றல் கற்பித்தலில்


உட்புகுத்துவது அத்தியாவசியமாகிறது. அன்றாட வாழ்க்கையில் வழக்கப்படுத்திக்
கொள்வதோடு தொழில் முனைவருக்கு இருக்க வேண்டிய தொழில் முனைப்புச் சிந்தனை,
வாணிப நிர்வாகத்திறன் போன்றவற்றை அளிக்கும் விதமாக கற்றல் கற்பித்தல்
நடைபெறுதல் அவசியம். இதனுடைய பயன்பாட்டு நிலையினைக் பெருக்கெடுக்க புறப்பாட
நடவடிக்கைகளில் தமிழ்க்கல்வியினை ஒருமித்தருள்வது விளைப்பயன் தரும். பள்ளியின்
புறப்பாடக்கல்வி நம்முடைய தமிழ்ப்பள்ளிகளிலெ மாணவர்களின் 21 ஆம் நூற்றாண்டுத்
திறன்களை அதிகம் மேம்பாடடையச் செய்துள்ளது (மோகன் & சுப்பிரமணியம், 2016).
இதன் வாயிலாக தமிழ்க்கல்வியின் தரம் ஓங்குமென்பது நிச்சயம். அறிவியல் போட்டிகள்,
பேச்சு மேடைகள், தேவாரப்போட்டிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால்
அதன் பயன்பாட்டு நிலை அதிகரிக்கின்றது. எதிர்கால தமிழ்த்துறையின் கதவுகளின் முகவரி
இங்கிருந்தே தெரிகிறது. வாணிபத்திற்காக சிற்றுண்டி தினத்தின் போது மாணவர்கள்
உணவுகளை தமிழ் பேசி வணிகம் செய்வதனால் தமிழ்க்கல்வி தன் பயனை
பிரதிபலிக்கின்றது. ஆதலால், இவ்விரு மதிப்புயர்வு தரும் கூறுகள் தமிழ்க்கல்வியின்
சவால்களை எதிர்கொண்டு பீடுநடை போடுகிறது என்பது நியாயமான கூற்றாகவே
அமைகிறது.

4.4 தொழில்நுட்பத்திறனை இன்னமும் கற்றல் கற்பித்தலில் பயன்பாட்டிற்குட்படுத்தாத


நிலை

தமிழ்க்கல்வி போதனை புரியும் ஆசிரியர்களுக்கு இந்நூற்றாண்டு விடுக்கும் சவாலாக


திகழ்வது தகவல் தொழில்நுட்பமே. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மானிட
சமுதாயம் பெற்றுள்ள ஓர் ஒப்பற்ற மின்னியல் சேவை இணையம் ஆகும் (ரூபனா
தர்ஷினி, 2016). இதனை தமிழ்க்கல்விக்குள் புகுத்தி அதனை விளைப்பயன்மிக்கதாக்குவதில்
ஆசிரியர்களும் அதனை உள்வாங்குதலில் மாணவர்களும் கொண்டிருக்கும் நிலையினை
யூகிப்பது இங்கே தேவையாய் இருக்கிறது. அவ்வகையில் தமிழ்க்கல்வியாசிரியகள் தங்களின்

8
கற்பித்தல் நடவடிக்கையில் கரும்பலகையினை இன்னமும் அதிக விழுக்காடு
பயன்படுத்துவது தவறாகவே கருதப்படுகிறது.

புதிய நூற்றாண்டின் வளர்ச்சிக்கும் புதுமைக்கும் ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதில்


சிரமம் ஏற்கொள்கின்றனர். அதோடு மட்டுமின்றி அதனை பயன்படுத்தும் முறையும் தவறாக
இருப்பது தெரிய வருகிறது. வெறுமனே எழுத்துப் படிவங்களை படவில்லைக்காட்சியின்
மூலமாக காட்டி கற்பிப்பது எவ்வகையிலும் பயனளிக்காதென்பது இவர்கள் உணர்வதில்லை.
தமிழ்க்கல்வியில் இடம்பெறும் செய்யுள் வகைகள் மற்றும் மொழியணி சார்ந்த செய்திகளும்
பொருட்பெயர்ப்பும் ஏட்டினில் உள்ளதைப் போல இணையத்திலும் திரையிலும் இருப்பது
எந்தவொரு மாற்றத்தையும் கொடுக்காது. மாறாக, மேலும் சலிப்புணர்வை தூண்டும்
விதமாகவே அமையும்.

இச்சவாலினை வீழ்த்த பல்வகை நுண்ணறிவு, தொழில்முனைப்புத் திறன் போன்ற


மதிப்புயர்வு தரும் கூறுகள் தத்தம் வேலைப்பாடுகளை செய்து வருகிறது. இதனை
உய்த்துணரும் தமிழ்க்கல்வியாசிரியர் மாணவர்களின் சிந்தனைக்கும் அடைவு நிலைக்கும்
விருப்பத்திற்கேற்றவாரும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை திட்டமிடுவது
நடைபெறுகிறது. மாணவர்கள் இசையின் மூலமாகவோ பாடல்களின் மூலமாகவோ
கற்பிக்கப்படும் உத்திமுறைகளில் ஈடுபடும்போது தமிழ்க்கல்வி சரியான முறையில்
சேர்க்கப்படுகிறது. செய்யுள்களை இக்கால திரைப்பட பாடல்களின் மெட்டோடு இணைத்து
கொடுப்பதன் மூலம் அதனை முழுமையாய் உள்வாங்கும் தன்மையை மாணவர்கள்
அடைகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, தொழில்முனைப்பு திறன் மூலமாக மின்னியல் சார்ந்த


ஊடகங்களோடு தமிழ்க்கல்வியையும் மாணவர்களையும் இணைப்பது நல்லதொரு
பயனையளிக்கும். கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்யக் கூடிய தமிழ் செயலிகளைப்
பயன்படுத்தியும் மாணவர்களுக்குப் பயன்படுத்த வாய்ப்பளித்தலும் தொழில்நுட்பத்தின் துரித
வளர்ச்சி ஈடுகட்டும் வண்ணம் தமிழ்க்கல்வி கமழும். ‘EXE’ எனும் தொழில்நுட்ப
பாடப்பொருளின் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் தலைப்பை விளக்கியும் அதன்
தொடர்பான பயிற்சிகளும் கூடுதல் பயிற்சியாக விளையாட்டு ரீதியில் அமைந்தனவாகவும்
அமைத்து அமலாக்கம் செய்ய தொழில்முனைப்புத் திறன் தூண்டுகிறது.

9
இதனால் தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாடு பெருகுகிறது. அதுமட்டுமில்லாமல்,
இணைப்பிலுள்ள மெய்நிகர் கற்றல் சூழல் சார்ந்த இணையத்தள வகுப்புகளை
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதனுள் ஈடுபடச் செய்து அதன் மூலம் காணொளிகள்,
ஒலிச்சார்ந்த தமிழ் தகவல்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து வீட்டிலிருக்கும்
பொழுதிலும் அதனை அணுகிய வழியமைப்பது தமிழ்க்கல்விக்கு வெற்றி மாலை
சூட்டுகிறது. எனவே தொழில்முனைப்பு திறனெனும் மதிர்புயர்வு தரும் கூறு தமிழின்
வளர்ச்சிக்கு வித்திடுவது அம்பலமாகிறது.

5.0 முடிவுரை

கல்வியின் வேர்கள் கசப்பானவை; அதன் கனி இனியது என அரிஸ்ட்டாட்டல் குறிப்பிடுகிறார்


(சேகர் நாராயணன், 2017). தமிழ்க்கல்வியும் அதனைப் போலவே. அதனை அணுகுதல் சில
சமயங்களில் கடினமாகப்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாது அல்லது மாற்றுவழியினை
கண்டுகொண்டு அதன் கனிச்சுவை அடைய வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாக
விளங்குகிறது. இந்நூற்றாண்டில் நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் சவால்களைக் கண்டு அஞ்சாது
துணிந்து அதனைப் போராடி வீழ்த்துவதில் நமக்குண்டான ஆயுதமாகவும் கேடயமாகவும்
விளங்குவது தமிழ்க்கல்வி கலைத்திட்டத்தில் புதிய நூற்றாண்டிற்கான மதிப்புயர்வு தரும் கூறுகள்.
இதனை. ஆசிரியர்கள் தமிழ்க்கல்வியின் கற்றல் கற்பித்தலில் ஒருங்கிணைத்து அதன் மூலம்
தமிழறிவினை போதிப்பது மட்டுமின்றி இந்நூற்றாண்டின் திறன்களில் மாணவர்களைச் சிறப்புறச்
செய்திடமும் வேண்டும். அறியாததை அறிய வைப்பவனே ஆசிரியர்; அவ்வாசிரியர் அறிய
வைப்பதற்கான திறன்களையும் கூறுகளையும் அறிந்திருப்பது அவசியம்; அப்படி அறிந்து
செயற்படுத்துவதால் தமிழ்க்கல்விக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படா.

10
இடுபணி 1

ஆ. தொடக்கப் பள்ளிகளுக்கான தமிழ்மொழிப்


பாடத்திட்ட உள்ளடக்கத்தின்
மொழித்திறன்களின் பொருள்பெயர்ப்புக்கேற்ப
ஆக்கப்பூர்வமான புத்தாக்கச்சிந்தனை மிகு
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளையும்
சமகால சவால்களுக்கேற்ப விளைபயன்மிக்க
மதிப்பீட்டையும் உருவாக்கி எழுதுக.

1.0 முன்னுரை

11
பேராசிரியர் வி.கணபதி மற்றும் பூ.ஜெயராமன் (2010), மாணவர்கள் தமது சூழ்நிலையுடன்
தகுந்த பொருத்தப்பாட்டைப் பெற்று, உடல் நலத்துடனும் உளநலத்துடனும் வாழ அவர்களுக்கு
உதவுவதே கல்வி என செப்புகின்றனர். இக்கல்வியை முறைப்படுத்தி மாணவர்களிடத்தில்
விதைப்பதன் வேலையைத் தர ஆவண கலைத்திட்டம் பொறுபேற்றுக் கொள்கிறது.
இப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய கல்வி தத்துவத்திற்கொப்ப இறைநம்பிக்கை, இறைவழி
நிற்றல் எனுமடிப்படையில் அறிவாற்றல், ஆன்மிகம், உள்ளம், உடல் ஆகியவை ஒன்றிணைத்துச்
சமன்நிலையும் இயைபும் பெறத் தனிமனிதரின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்தும் ஒரு
தொடர் முயற்சி நடத்தப்படுகிறது (DSK KSSR, 2016). இதனை வகுப்பறையில்
ஆக்கப்பூர்வமான புத்தாக்கச்சிந்தனை மிகு கற்றல் கற்பித்தலின் மூலமும் சமகால
சவால்களுக்கேற்ப விளைப்பயன்மிக்க மதிபீட்டின் மூலமும் படைத்திடலாம். இம்மாதிரியான
கற்றல் கற்பித்தல் நடவடிக்கையையும் மதிபீட்டையும் விளக்குவதே இவ்விடுபணி எனக்கிட்ட
கட்டளை.

2.0 ஆக்கப்பூர்வமான புத்தாக்கச்சிந்தனை மிகு கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளையும்


சமகால சவால்களுக்கேற்ப விளைபயன்மிக்க மதிப்பீட்டையும் உருவாக்குதல்

தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் கேட்டல்-பேச்சு, வாசிப்பு எழுத்தாகிய மொழித்திறன்களும்


இலக்கணம், செய்யுள் மற்றும் மொழியணி போன்ற துணைத்திறன்களும் இடம்பெறுகின்றன.
அதனை கற்றல் தரம் மூலம் பாகுபடுத்தப்பட்டு மாணவர்களுக்குரிய வழியில்
கற்பிக்கப்படுகிறது. ஒவ்வோரு உள்ளடக்கத் தரத்திற்கேற்ப தரமான கற்றல் அடைவுநிலை
உறுதி செய்வதே கற்றல் தரமாகும் (DSK KSSR TAHUN 1, 2015). இவ்விடுபணிக்கு நான்
தேர்ந்தெடுத்துக் கொண்டது எழுத்துத் திறனாகும்.

இதில் மாணவர்கள் எழுத்துப்பிழையின்றி, இலக்கண அமைதியுடன் நல்ல கையெழுத்தில்


எழுதுவர். மேலும், சிந்தனைத்திறன்களைப் பயன்படுத்தித் தங்களுடைய எண்ணங்களையும்
கருத்துகளையும் கற்பனை வளத்துடன் படைப்பரென தர ஆவண கலைத்திட்டம் (2015)
விளக்கமளிக்கிறது. தொழில்நுட்ப யுகத்திலுள்ள நாம் தட்டச்சு செய்யப் பழகி விட்ட போதும்
ஏட்டெழுத்தினைக் கைவிடாதிருப்பது அவசியமாகும். அதனடிப்படையில், 3.3.19 கற்றல்
தரத்திலுள்ள ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்
என்பதை தெரிவு செய்து அதன் தொடர்பான நடவடிக்கைகளையும் மதிப்பீட்டையும்
வடிவமைத்துள்ளேன்.

எந்தவொரு பாடத்தினைத் துவங்கும் முன்பு மாணவர்களைத் தயார்நிலைப்படுத்துவது


தேவையாகவுள்ளது. அத்தயார்நிலைக்குப் பீடிகை அவசியமாகிறது. இதன் மூலம்

12
மாணவர்களைத் தூண்டி அவர்களைப் பாடத்தை நோக்கி ஈர்த்து நன்முறையில் ஆசிரியரின்
கற்பித்தலுக்குக் கவனம் செலுத்துவோராகச் செய்வது பீடிகையின் நோக்கமாக இருக்கிறது என
ஹஃயிஸ் (2010) கூறுகிறார். ஆசிரியர் “எண் எழுத்து” அட்டையை மாணவர்களின் பார்வைக்கு
முன் வைப்பர். மாணவர்கள் அட்டையின் துணையுடன் கணிதத்தைப் பூர்த்தி செய்து
விடைகளைக் கண்டறிவர். கண்டறிந்த சொற்களிடையே இருக்கும் ஒற்றுமையினை சுயமாக
ஊகித்துக் கூற அதனை ஆசிரியர் பாடத் தலைப்புடன் தொடர்புப்படுத்தி பின் பாடத்தினுள்
நுழைவது மாணவர்களின் தயார்நிலையினை உறுதிப்படுத்தி அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு
செல்கிறது.

தொடந்து முதல் படியில் மாணவர்கள் “தொழில்” எனும் சிறுவர் பாடலை ஆசிரியரின்


துணையுடன் வாசிப்பர். மாணவர்கள் சிறுவர் பாடலில் இடம்பெற்றுள்ள ணகர, நகர, னகர
சொற்களைக் கண்டறிந்து கோடிடுவர். அதனையடுத்து அச்சொற்களை வகைப்படுத்தி
கொடுக்கப்படும் சிந்தனை வரிப்பட கருவியில் எழுதிடுவர். தனியாள் முறையில் நடத்தப்படும்
இப்படியில் பயிற்றுத்துணைப்பொருள்களாகச் சிறுவர் பாடலும் வட்ட வரிப்பட் கருவியும்
இடம்பெறுவது சிறப்பான அம்சம் எனலாம். நல்ல பாடலின் தாக்கம் மாணவர் மனதில் நீண்ட
காலத்திற்கு நிலைக்கச் செய்திடும் ( விட்த்ஸ் லேங்குவேஜ் ஸ்கூல், 2018). நடவடிக்கைகளில்
மாணவர்கள் ஈடுபடவும் கற்பிப்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவை துணை புரிகின்றன.
சிந்தனைத் திறனான வகைப்படுத்துதலும் இருப்பதனால் கற்றல் தரம் தொடர்பான அறிதலை
இது ஊக்குவிக்கிறது.

அதனையடுத்து, இரண்டாவது படியினில் மாணவர்கள் இணையர் முறையில் இணைக்கப்பட்டு


கொடுக்கப்படும் பயிற்சித்தாளைக் சக மாணவருடன் கலந்துரையாடுவர். கொடுக்கப்பட்ட
தாளைக் கொண்டு மாணவர்கள் சரியான ணகர, நகர, னகர எழுத்தைப் பயன்படுத்திச்
சொற்களை நிறைவு செய்வர். காட்டாக, மிதிவண்டி எனுமெழுத்தில் உள்ள ‘ண’கரத்தை விளக்கி
அதனை மாணவர்கள் இணையராகக் கலந்துரையாடி சரியான எழுத்தை நிரப்பிடுவர். எழுதிய
விடைகளை ஆசிரியர் சரி பார்த்துத் தவறிருப்பின் திருத்திடுவர். ஒத்துழைப்பு எனும்
பண்புக்கூறு ஈண்டு இடம் பெறுகிறது. இப்படியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
மாணவர்களின் புரிதலை திடப்படுத்தி விடுகிறது. மேலும் கற்றல் தரத்தில் அழுத்தம்
கொடுக்கப்படும் எழுத்துகளை உரிய வரிவடிவத்துடன் எழுதிப் பழகிட இப்படி வாய்ப்பு
வழங்குகிறது.

மேலும், மூன்றாவது படியில் அதே இணையரோடு மாணவர்கள் செயற்படுவதாக


அமைக்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்குச் ‘சொற்களை உருவாக்கு’ எனும் மொழி
விளையாட்டை ஆசிரியர் அறிமுகம் படுத்துவர். “Exe” எனும் பாடப்பொருளினைப்(courseware)

13
பயன்படுத்தி இவ்விளையாட்டு வடிவமைக்கப்படுகிறது. “Hangman” எனும் ஏட்டு மற்றும்
கரிக்கோல் மூலம் விளையாடப்படும் விளையாட்டினைத் தொழில்நுட்பத்தில் இணைத்து
ஆக்கப்பூர்வமான புத்தாகச் சிந்தனையோடு படங்களை இணைத்துப் போதிய துப்புகளையும்
கொடுத்துக் கோடிடப்பட்டுள்ள காலியிடங்களைச் சரியான எழுத்துகளுடன் நிரப்புவர்.
இப்படியில் கொடுக்கப்பட்டப் படத்தையும் துப்பையும் துணையாகக் கொண்டு மாணவர்கள்
சரியான ணகர, நகர, னகர எழுத்துக் கொண்ட சொல்லைக் கூறுவர். அதனை ஆசிரியர்
கணிப்பொறியில் இணைக்கப்பட்டிருக்கும் சுட்டெலி மூலம் எழுத்து விசைகளைச் சொடுக்கி
நிரப்புவர். அதேவேளையில், அச்சுப்பிரதி எடுத்துக் கொடுக்கப்பட்ட அம்மொழி விளையாட்டின்
காலியிடங்களில் மாணவர்கள் கூறிய பதில்களை எழுதுவர். சரியான பதிலளிக்கும்
மாணவர்களுக்குப் பரிசுகளை ஆசிரியர் வழங்குவர். இவ்விடத்தில் விரவிவரும் கூறான
ஆக்கமும் புத்தாக்கமும் இடம்பெற, சிந்தனைத்திறனான ஊகித்தறிதலும் நடந்தேறுகிறது.

கற்றல் தரத்தினை அடையும் வகையிலும் பாட நோக்கம் நிறைவேறும் சாத்தியப்பாடுகள்


அறியும் வகையிலும் மதிப்பீடு நடத்தப்படுகின்றன. மதிப்பீடு என்பது கற்றல் கற்பித்தலில்
முதன்மை பங்கினை வகிப்பதோடு சேகரித்தல், பொருள் விளக்கமளித்தல், அறிக்கையிடல்
மற்றும் ஆவணப்படுத்தல் எனும் கூறுகளை உள்ளடக்கிய தொடர் படிமுறையாக இருந்து
மாணவர்களின் அடைவு நிலையினைக் கண்டறிந்து, சிக்கலிருப்பின் அதனைக் களைய
ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைக்குண்டான ஏடல்களைப்
பிரசவிக்கிறது (பூன் போங் யிங், லீ லெஹ் ஹோங் & லாரண்ஸ் ஏரியா, 2017). இதனை
கருத்தில் கொண்டு சமகாலத்திற்கேற்ற விளைப்பயன்மிக்க மதிப்பீடு உருவாக்கப்படுகிறது.

படி மூன்றினையடுத்து மதிப்பீடுக்காக ஆசிரியர் ‘சவாலை சமாளி’ எனும் மொழி


விளையாட்டினை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஆசிரியர் மாணவர்களுக்குப்
பயிற்சித்தாள்களை வழங்குவர். அதனையடுத்து படவில்லைக் காட்சியின் மூலம் வாக்கியங்கள்
ஒளிபரப்பப்படும். மாணவர்கள் வாக்கியங்களில் விடுப்பட்ட காலியிடங்களில் சரியான ணகர,
நகர, ன்கர எழுத்துக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து கூறுவர். சரியாகப் பதிலளிக்கும்
மாணவர்களுக்குப் பாராட்டினை ஆசிரியர் வழங்குவர். அதற்குப் பின், மாணவர்கள்
கொடுக்கப்பட்ட பயிற்சித்தாளில் சரியான விடைகளை எழுதுவர். விரவி வரும் கூறான
தொழில்நுட்பம் இங்கு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மதிப்பீட்டின் இறுதியில்
நோக்கத்தை அடைந்த மாணவர்களின் விழுக்காட்டினை ஆசிரியர் சுலபமாகத் தெரிந்து
கொள்ளலாம். பின் தங்கியுள்ள மாணவர்களுக்குக் குறைநீக்கல் நடவடிக்கைகளும் அறிவு
கூர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வளப்படுத்தல் நடவடிக்கைகளும் உருவாக்க இம்மதிப்பீடு
தூணாய் விளங்குகிறது.

14
3.0 முடிவுரை

இருபத்தோறாம் நூற்றாண்டின் தேவைகள் பெருகிய வண்ணமுள்ளன. அதன் தேவைக்கேற்ப


நாம் பரிணாமித்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது. அந்த வகையில் தமிழ்மொழி
பாடத்திட்ட உள்ளடக்கத்தின் மொழித்திறன்களை ஆக்கப்பூர்வமான புத்தாகச்சிந்தனையுடன்
சிந்தித்துப் பொருள்பெயர்த்து அதற்குரிய நடவடிக்கைகளையும் விளைப்பயன்மிகு
மதிப்பீட்டையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஆற்றல்மிக்க ஆசிரியரால் மட்டுமே இதை
மேற்கொள்ள முடியுமென்பதில் சந்தேகமில்லை. இவ்விடுபணிக்கு வடிவமைத்த இக்கற்றல்
கற்பித்தல் நடவடிக்கை கேள்வியின் தரத்திற்கேற்ற விடையினை அளித்திருக்கும் என்
நம்புகிறேன்.

மேற்கோள் நூல்கள்

15
சந்தானம்.எஸ், கணபதி.வி. (2010). கல்வி சார் அறை கூவல்கள். சென்னை: சாந்தா
பப்ளிஷர்ஸ்.
மலேசிய மொழித்துறை மற்றும் மொழியியல் சார்ந்த மொழி மற்றும் மொழியிய
ஆசிரியர்க்குழு. (2011). மலேசியப் பன்மொழிச் சூழலில் தமிழ். கோலாலும்பூர்:
சம்பூர்னா பதிப்பகம்.

மோகன், சுப்பிரமணியம். (2016). தமிழ்க்கல்வி ஆய்விதழ். கோலாலும்பூர்: உமா பதிப்பகம்.


Kurikulum Standard Sekolah Rendah, Bahasa Tamil (SJKT) Tahun 2, (2016) Bahagian
Pembangunan Kurikulum, Kementerian Pelajaran Malaysia.
சேகர் நாராயணன். (2017). மதிப்புமிகு ஆசிரியர்களே (A Great Teacher). கோலாலும்பூர்:
உமா பதிப்பகம்.

வேணுகோபால்.இ.பா. (2006). கல்வியில் புதுமைகள். சென்னை:கெளரா ஏஜென்ஸீஸ்.

ரூபனா தர்ஷினி. (2016). தமிழ்க்கல்வி ஆய்விதழ். கோலாலும்பூர்: உமா பதிப்பகம்.

டயாளன்.வி. (2017). மலேசியாவில் தமிழ்க்கல்வி. எடுத்தாளப்பட்டது பிப்ரவரி 24, 2018


http://morsmal.no/ta/morsmal-tamil/ungdomstrinnet-morsmal-tamil/8195-2017-05-
07-18-54-45
Campbell.B. (2016). Multiple Intelligences In The Classroom. எடுத்தாளப்பட்டது பிப்ரவரி
25, 2018 https://www.context.org/iclib/ic27/campbell/

16
பின்னிணைப்
பு

17

You might also like