You are on page 1of 5

தமிழாசிரியர் ஒருவர் கைவரப் பெற்றிருக்க வேண்டிய மொழியியல் கூறுகளின் ஒன்றனைத்

,
தேர்ந்தெடுத்து அவ்வறிவினை ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய முக்கியத்துவத்தை நிறுவிடுக .

1.0 முன்னுரை

“வாழ்வு என்பது எளிய கட்டமைப்பு கொண்டதல்ல அதனை எதிர்கொண்டு கற்க வேண்டும்”, என்று
ஆசிரியராகப் பணியாற்றிய திரு. மன்மோகன் சிங் கூறுகிறார். மாணவர்களிடையே என்றும் இணக்க
சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும்
உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது. ஆக, ஓர்
ஆசிரியர் தன் மாணவர்களின் வளர்சச் ியை மேம்படுத்த வேண்டுமானால், போதுமான மற்றும் ஆழமான
அறிவை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வகையில், ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் முக்கிய கருவியாக விளங்குவது மொழியே.


அம்மொழியை நன்கு உய்தது ் ணர்ந்தால் மட்டுமே ஓர் ஆசிரியரால் நல்ல மாணவ சமுதாயத்தை
உருவாக்கும் வழிக்குச் செல்ல முடியும். மொழி எனப்படுவது விசாலமான ஒன்றாகும். அதில், ஆசிரியர்கள்
கைவரப் பெற்றிருக்க வேண்டிய கூறுகளில் உச்சரிப்பும் ஒன்றாகும் [ CITATION Iku15 \l 1033 ].

1.1.1 மாணவர்களின் திறனையும் இயலாமையையும் அறிய முடியும்

ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்கள் பல திறன்களையும் இயலாமையையும் கொண்டிருப்பார்கள்.


அவ்விரண்டையும் வெளிக்கொண்டு வருவதே ஓர் ஆசிரியரின் கடமையாகும் (Speech-Language and
Audiology Canada, 2019). ஓர் ஆசிரியர் உச்சரிப்பு அறிவைப் பெற்றுக் கொள்வதால் ஒலித்தல்
தொழிலுக்குரிய உறுப்புகளான ஒலிப்பான்களைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்ள முடியும். இதன்வழி,
ஒரு மாணவனுக்கு இருக்கும் உருப்புகளைப் பார்தது
் அவனால் எவ்விதமாகப் பேச முடியும் என்பதையும்
எந்தெந்தச் சொற்களை முறையாக உச்சரிக்க முடியும் என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள
முடியும்.

உதாரணத்திற்கு, சில மாணவர்களுக்கு கீழ் பல் வரிசையானது, மேற்பல் வரிசையைவிட


முன்னதாக இருக்கும் (Po Chang, Chuan Tseng & Fu Chang, 2006). இதை ஆங்கிலத்தில்
‘Mandibular Prognathism’ என்றழைப்பர்.

படம் 1: ‘Mandibular Prognathism’

இம்ம்மதிரியான மாணவர்கள் அரையுயிர் என்று கூறப்படும் /வ்/ என்ற ஒலியனை உச்சரிக்க சிரமப்
படுவார்கள்[ CITATION ராச 141 \l 1033 ]. இதனால், ஆசிரியர்கள் அம்மாணவர்களை /வ்/ ஒலியனை
முறையாக உச்சரிக்க சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. இது அவர்களின் இயலாமை என்று ஓர்
ஆசிரியர் உணர்ந்து அவர்களை மதிக்கும்போது அவர்களுக்குள் ஒரு மனிதாபிமானம் தோன்றும். மேலும்,
இவ்வியலாமையை மற்ற மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறுவதன்வழி, மாணவர்களிடையெ ஏற்ற
தாழ்வு மனப்பான்மையும் ஏற்படாது, அதே சமயத்தில் மாணவர்களுக்கு நல்ல ஒரு புரிந்துணர்வை
ஏற்படுத்தும். இதனால், ஆசிரியர்கள் ஒலியியல் அறிவைப் பெற்றுக் கொள்வதன்வழி, ஒரு சீரான மற்றும்
பண்புமிக்க வகுப்பறை சூழலை ஏற்படுத்த முடியும் என்பது உறுதி.

1.1.2 ஆசிரியர் மற்றும் சமுதாயத்தின் தமிழ் உச்சரிப்பு மேம்படும்

“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” (வைரமுத்து, 2018).


இப்படி அவர் கூறியதற்கு காரணம், தமிழ் மக்களே தமிழைப் பயன்படுத்தாமல் வேறு மொழிகளைப்
பயன்படுத்திப் பேசுகின்றனர் என்பதே ஆகும்.. சான்றாக, ‘Quora’ வலைத்தளம் மேற்கொண்ட ஆய்வில்,
மலேசிய இந்தியர்கள் விட்டில் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர்.
படம் 2: மலேசிய தமிழர்கள் விட்டில் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் சதவிகிதம்

இந்நிலைமை உருவானதற்கு ஆசிரியர்களும் பொறுப்பு வகிக்கின்றார்கள். ஆசிரியர்கள் மட்டுமே ஒரு


சமுதாயத்திற்கு அறிவைப் புகட்ட முடியும். ஓர் ஆசிரியர் உச்சரிப்பு அறிவைப் பெற்றிருந்தால், அவர் தமிழ்
சமுதாயத்தையே முன்னேற்ற முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும். ஏனெனில், உச்சரிப்பு
எனப்படுவது ஒரு சொல்லை எப்படி முறையாக உச்சரிக்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றிருப்பார்கள்.
அவ்வறிவை வைத்து மாணவர்களுக்கு முறையான உச்சரிப்பைக் கற்றுக் கொடுத்தாலே
போதுமானதாகும். காரணம், இன்றுள்ள மாணவர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்தாமல்
போவதற்கானக் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு முறையான உச்சரிப்பு தெரியாததால்
சொற்களை உச்சரிக்க சிரமப்படுகின்றனர்.

உதாரணத்திற்கு, ‘வாழைப்பழம்’ என்ற சொல்லை உச்சரிப்பதற்குப் பலரும் சிரமப் படுவார்கள்.


அச்சொல்லில் இருக்கும் அந்த ‘ழ’ ஒலியனை ஒரு காரணமாகக் கொண்டு அந்தச் சொல்லை
உச்சரிப்பதற்குச் சிரமம் என்று கூறுகிறார்கள். மெய்யாக, அச்சொல்லை உச்சரிப்பதற்கு எவ்விதமானச்
சிரமமும் இல்லை. /ழ்/ என்ற ஒலியனை உச்சச ் ரிக்க்கும்போது நாமடிந்து இடையண்னத்தைத் தொட்டு,
காற்று எங்கும் தடைப்படாமல் காற்று வெளிப்படுகிறது[ CITATION கரு11 \l 1033 ]. ஆனால், மாணவர்கள்
நாவை இடையண்ணத்தில் வைக்காமல் கடையண்ணத்தில் வைத்து அச்சொல்லை ஒலிப்பதால்தான்
அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். ஆக, ஆசிரியர்கள் இதனை முறையாகக் கற்றுக்
கொடுத்தால்தான் மாணவர்களுக்கு இதன் உண்மை புரியும், தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும்
இதனை விளக்கப்படுத்துவார்கள். இதனால், தமிழ் சமுதாயம் தமிழ் மொழியை சரியான உச்சரிப்பில்
பேசும் பழக்கத்தை அதிகரிக்த்துக் கொள்ளும்.

2.0 முடிவுரை

உந்தி முதலா முந்துவளி தோன்றிக்


தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலஇப்
பல்லு மிதழு நாவு மூக்கும்
அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறம்படத் தெரியுங்க காட்சி யான (தொ.எழு.பிற.நூ.1)

என்று ஒலிகள் பிறக்கும் முறையை அழகாக விவரிக்கும் தொல்காப்பியர் உடலுக்கு எவ்விதமான


சேதத்தையும் தராமலே தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்றன என்கிறார். ஆக, எவ்வித தீமையும்
விளைக்காத மொழியியலின் கூறான உச்சரிப்பைப் பயன்படுத்துவதால் தமிழ் ஆசிரியரின் பணி
தலைத்தோங்கி ஒரு மதிப்புமிக்கத் தமிழ் சமுதாயத்தை உருவாக்கும். ஆசிரயப் பணியே அறப்பணி,
அட்தற்கே உண்ணை அற்பணி என்பதற்கொப்ப ஆசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் ஒலியியலின்
அறிவைப் பெறுக்கிக் கொண்டு மாணவர்களுக்கும் மக்களுக்கும் பல விழிப்புணர்வை ஏற்படுத்தினால்
அனைவரும் பயன் அடைவர்.
மேற்கோள் நூல்கள்

Chang, T. C. (2006). Treatment of Mandibular Prognathism. Treatment of Mandibular


Prognathism, 781-785.

Masuda-Katsuse, I. (2015). Web Application System for Pronunciation Practice by Children


with. Show & Tell Contribution, 6-10.

Speech-Language and Audiology Canada. (2019). Classroom Acoustics. Speech-Language &


Audiology Canada , 1-10.

சீனிவாசன், ர. (2014). மொழியியல். சென்னை: முல்லை நிலையம்.

வைரமுத்து. (2018, ஏப்ரல் 20). தமிழ் மொழி பற்று. (இ. அசோகன், Interviewer)

ஜெயா, க. &. (2011). மொழியியல். சென்னை: மெய்யப்பன் பதிப்பகம்.

மேற்கோள் நூல்கள்

Chang, T. C. (2006). Treatment of Mandibular Prognathism. Treatment of Mandibular


Prognathism, 781-785.

Masuda-Katsuse, I. (2015). Web Application System for Pronunciation Practice by Children


with. Show & Tell Contribution, 6-10.
MCWhorter. (2019). Language Family of the World. USA: The Teaching Company.

Speech-Language and Audiology Canada. (2019). Classroom Acoustics. Speech-Language &


Audiology Canada , 1-10.

Sreekumar.P. (2007). Language & Liguistics: . Selangor: Wangi Printers Sdn. Bhd.

கமலி. (2017). மொழி அமைப்பும் வரலாறும். சென்னை: பாரி நிலையம்.

சீனிவாசன், ர. (2014). மொழியியல். சென்னை: முல்லை நிலையம்.

மிராசேந்திரன். (2009). பொது மொழியியல். கோயம்பத்தூர்: அமிர்த விஷ்வ வித்யாலயம்.

மோகன். (தமிழ் மொழியியல் அறிமுகம்). 2011. தஞ்சோங் மாலிம்: FR Vision Sdn. Bhd.

வரதராசனார், ம. (1951). மொழியின் கதை. சென்னை: பாரி நிலையம்.

விசுவநாதம். (2016). மாணவர்களுக்கு. சென்னை: பாரி நிலையம்.

வைரமுத்து. (2018, ஏப்ரல் 20). தமிழ் மொழி பற்று. (இ. அசோகன், Interviewer)

ஜெயா, க. &. (2011). மொழியியல். சென்னை: மெய்யப்பன் பதிப்பகம்.

You might also like