You are on page 1of 7

BTP 3123 KEMAHIRAN ASAS BAHASA TAMIL

கே.எஸ்.எஸ்.எம்.தமிழ்மொழிக் கலைத்திட்டத்தின் மொழித்திறன்களான கேட்டல் பேச்சு, வாசிப்பு,


எழுத்து ஆகியவற்றின் உள்ளடக்கத் தர மற்றும் கற்றல் தர நோக்கங்களைத் தெளிவாக விளக்குக.

பெயர் : நிஷாலினி த/பெ

கலைச்செல்வன்

கடவை எண் : D20221104296

மின்னஞ்சல் முகவரி :
D20221104296@siswa.upsi.edu.my

கலைப்பிரிவு : FAKULTI BAHASA DAN KOMUNIKASI

விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் கார்திகேஸ் பொன்னையா

கே.எஸ்.எஸ்.எம்.தமிழ்மொழிக் கலைத்திட்டத்தின் மொழித்திறன்களான கேட்டல் பேச்சு, வாசிப்பு,


எழுத்து ஆகியவற்றின் உள்ளடக்கத் தர மற்றும் கற்றல் தர நோக்கங்களைத் தெளிவாக விளக்குக.

தமிழ்மொழிக் கலைத்திட்டம் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே சமுதாயத்


தொடர்பினை மேம்படுத்தவும் எண்ணங்களையும் கருத்துக்களையும் ஏரணச்சிந்தனையோடு
விளைபயன்மிக்க வகையில் வெளிபடுத்தவும் வழிவகுத்தாகும். தமிழ்மொழிக்
கலைத்திட்டதின் கீழ் மொழித்திறன்களான கேட்டல் பேச்சு, வாசிப்பு, எழுத்து, செய்யுளும்
மொழியணியும், இலக்கணம் போன்றவற்றையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கற்றல்
தரம் மற்றும் உள்ளடக்கத் தரம் என மாணவர்களுக்குப் பிரிக்கப்பட்டுள்ளது. அதனால்,
ஒவ்வொருப் படிவதின் கீழ் பிரிக்கப்பட்டுள்ள உள்ளடக்கத் தரம் மற்றும் கற்றல் தரத்தின்
செயற்பாடுகளைக் காண்போம்.

1.0 புகுமுக வகுப்பிற்கான கற்றல் தரம் மற்றும் உள்ளடக்கத் தரம்.

புகுமுக வகுப்பு மாணவர்கள் பனுவல் மற்றும் உரைநடைகளில் காணப்படும் சரியான வேகம்,


தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்க மிகவும்
துணைப்புரிகின்றது. மாணவர்கள் ழ,ள,ல-கரம் சொற்கள், ந,ண,ன-கரம் சொற்களில்
தடுமாற்றம் காண்பர். அதன் வேறுபாடுகளை அறிந்து சொற்களின் தொனிகளை அறிந்து
வாசிப்பதற்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், பல்வகைப் பனுவல்களை
மாணவர்கள் வாசிப்பதால் அவர்களின் வாசிப்பில் மாற்றம் காண இயலும்.
எடுத்துக்காட்டாக, உரைநடை, பனுவல், கட்டுரை, கதை போன்றவற்றையை சரளமாக
வாசிப்பதை உருதிச் செய்ய முடியும்.

மாணவர்கள் பள்ளிகளில் நிகழும் நிகழ்ச்சியைச் சார்ந்த உரைநடையை வாசிப்பதுடன்


தகவல்களையும் விபரங்களையும் சரிவரத் தெரிந்து கொள்ளவும் பகுத்தாய்வதற்கும்
சுலபமாக இருக்கும். மாணவர்களிடையே சுயமாக நிகழ்ச்சியை நிரல் செய்வதற்கு
விழிப்புணர்வைக் கொடுக்கும். பல்வகைப் பனுவல்களை வாசிப்பதன் மூலம்
மாணவர்களிடையே மொழியை வளர்க்க முடிகின்றது. பண்பாட்டு மற்றும் தகவல் தொடர்புத்
தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

2.0 படிவம் 1 க்கான உள்ளடக்கத் தரம் மற்றும் கற்றல் தரம்.

படிவம் 1 மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பனுவல்கள் மற்றும் உரைநடையை சரியான


வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். பனுவலில்
காணப்படும் நெடில் குறில் சொற்களின் வேறுப்பாடுகளை அறிந்து வாசிக்க முடியும்.
அவ்வாறு வாசிப்பதன் மூலம் மாணவர்களின் குரல் வளம் திரம்படும். அத்துடன், பள்ளியில்
நிகழும் நிகழ்ச்சிக்கு திரம்பட பேசுவதற்கும் சிறப்பாக அறிவிப்புச் செய்வதற்கும் உதவிப்
புரியும். எடுத்துக்காட்டாக, தீபாவளி கொண்டாட்டம், பொங்கல் திருநாள் போன்ற
நிகழ்ச்சிக்கு அறிவிப்பு எவ்வாறு செய்வது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் விளம்பரத்தைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். பொருட்களை சந்தையில் விற்கும்பொழுது
பயன்படுத்தப்படும் மொழிகளை அறிந்து கொள்வர். கடிதத்தைச் சரியான வேகம், தொனி.
உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பதன் மூலம் அதிகாரப்பூர்வ
கடிதம் மற்றும் அதிகாரப்பூர்வமற்றக் கடிதம் போன்றவற்றையின் வடிவங்களை அறிந்து
கொள்வர்.
படிவம் 2 க்கான உள்ளடக்கத் தரம் மற்றும் கற்றல் தரம்.

மாணவர்கள் உரையை சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பதன் மூலம் உரையை எவ்வாறு நிகழ்த்துவது என்பதில்
விழிப்புணர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல், உரையில் கூறப்படும் முக்கியக்
கருத்துக்களை அடையாளம் கண்டு அதனை பகுத்தாயும் திறனைக் கொண்டிருப்பர்.
அத்துடன், கருத்துணர் கேள்வி மற்றும் சிந்தனைத் திறன் கேள்விகளுக்கும் பதிலளிக்க
முடியும். சுகாதாரம் தொடர்பான உரைநடையை வாசிப்பதன் மூலம் வாழ்க்கையை எவ்வாறு
ஆரோக்கியமாக வாழ்வது என்பதனை அறிந்து கொள்ள முடியும். மாணவர்களிடையே
அறிஞர்களை அறிமுகப்படுத்துவதோடு மொழியை எவ்வாறு மேம்படுத்துவது
என்பதனையும் விளக்க முடியும். அதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்க முடியும்.
இதனால், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதுடன் அதனைக் காக்க முற்படுவர்.

அதோடு இல்லாமல், மாணவர்கள் அறிவியல் தொடர்பான உரைநடையை வாசிப்பதுடன்


கருத்துணர் கேள்விகளில் தங்களுக்குப் புரிந்தவற்றை பதிலளிப்பதுடன் அறிவையும்
வளர்த்துக் கொள்ள முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதுடன் மாணவர்களுக்கு பல
போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும். எடுத்துக்காட்டாக, கதைச்சொல்லும்
போட்டி, உரை, போன்ற போட்டிகளில் தன்னார்வலர்களாக இருப்பர்.
படிவம் 3 க்கான உள்ளடக்கத் தரம் மற்றும் கற்றல் தரம்.

மாணவர்களுக்குச் செய்திகளை எவ்வாறு வாசிப்பது என்பதனைக் கற்றுக் கொடுக்க


வேண்டும். செய்தியைச் சார்ந்த பனுவலை வாசிப்பதன் மூலம் மாணவர்களுக்கிடையே
செய்தி வாசிக்க ஆர்வத்தை ஊட்டுகிறது. இவை மாணவர்களுக்கிடையே தொழிலில் சிறந்து
விளங்க முனைப்பதுடன் சொல் வளம், மற்றும் மொழி வளத்தை அதிகரிக்கிறது. செய்திகள்
மட்டுமல்லாது, கதையையும் சரளமாகவும், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் சொல்ல
முயலுவதால் மாணவர்களுக்கிடையே பேச்சுத் திறனையும் வளர்க்கின்றது.

மாணவர்களுக்கு வரலாறு தொடர்புடைய பாடங்களை மறவாமல் கற்றுக்கொடுக்க


வேண்டும். ஏனெனில், மாணவர்களுக்கு நாட்டில் நிகழும் சரித்திரங்களை அறிவதுடன் நம்
நாட்டின் தலைவர்களையும் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், பண்பாட்டுத்
தொடர்பான பாடங்களைப் போதிப்பதால் மாணவர்கள் பண்பாட்டை அறிவதுடன் நல்ல
குடிமக்களையும் உருவாக்க உதவுகின்றது. நாட்டுப்பற்று, தலைமைத்திறன், சமுதாயத்தின்
தேவைகளை உணர்ந்து செயலாற்றும் ஆர்வம் போன்றவற்றைகளை வளர்க்க உதவுகிறது.

படிவம் 4 க்கான உள்ளடக்கத் தரம் மற்றும் கற்றல் தரம்.

நேர்காணலின் வடிவங்களையும் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பதன் மூலம் மாணவர்களுக்கு சுலபமாக இருக்கும்.
நேர்காணலின் அவசியத்தையும் அறிந்து கொள்ள முடிகின்றது. அறிந்து கொள்வதன் மூலம்
அவர்களின் கல்விக்கான தேடல்களில் நேர்காணல் முக்கிய பங்கை வகிக்கும். அவைகளில்
மாணவர்கள் சிறந்து விளங்க துணைப்புரியும். நேர்காணல் மட்டுமில்லாமல், கவிதைகளிலும்
சிறந்து விளங்க வழிவகுக்கின்றது. கவிதைகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு, நயம்
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பதன் மூலம் மாணவர்களுக்கு அதில் கூற
வரும் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியும். அதோடு இல்லாமல், மாணவர்களை
கவிதைகளை எழுதுவதில் ஆர்வத்தை ஊட்டுகிறது. இதனால் போட்டிகளில்
மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்கச் செய்கிறது.

அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு முக்கியமாக பாதுகாப்புத் தொடர்பான


தகவல்களை ஆசிரியர் போதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் வெளியிடங்களிலும்
மாணவர்களின் பாதுக்காப்பினை உறுதிச் செய்வதற்கு துணைப்புரியும். அத்துடன்
விவசாயம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தகவல்களையும் மாணவர்களுக்கு
கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு கற்றுக்கொடுப்பதால் மாணவர்களிடையே
வணிகத்தில் ஈடுபடுவதற்கு ஊக்கம் ஊட்டும்.

படிவம் 5 க்கான உள்ளடக்கத் தரம் மற்றும் கற்றல் தரம்.

அறிக்கைகளை வடிவங்களையும் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பதன் மூலம் எவ்வாறு அறிக்கைகளைத் தாயாரிப்பர்
என்பதை அறிந்து கொள்ளலாம். தெரிந்து கொள்வதுடன் இல்லாமல் அறிக்கையையும்
எழுத மாணவர்களால் சுலபமாக முடிகின்றது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களிடையே
நாடகம் சார்ந்தப் பனுவல்களை வாசிக்கும்பொழுது நாடகத்தின் உணர்ச்சிகளைப் புரிந்து
கொள்ள முடிகின்றது. அதனால், மாணவர்களிடையே நடிக்கும் திறனை வளர்க்கின்றது.

மாணவர்களிடையே குடும்பவியல் தொடர்பான உரைநடையைக் கற்றுக்கொடுப்பதால்


உறவுகளுடன் எவ்வாறு அன்பாக இருப்பது என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
அதோடு இல்லாமல், வங்கி தொடர்பான உரைநடையை வாசிக்க கற்றுக்கொடுப்பதன் மூலம்
மாணவர்கள் வாசிப்புடன் கருத்துக்களையும் உய்துணர முடிகின்றது. செலவுகளையும்
சிக்கணமாக இருப்பது எப்படி என தெரிந்து கொள்ள முடிகின்றது.

மேற்கொள்

புத்தகம்
1. சந்திரிகா ராஜமோகன், (2006). கலைத்திட்டச் செயல்பாட்டின் கோட்பாடுகள், சென்னை:

சிவம்ஸ். ISBN: 9444232005

2. Multi Educational Book Enterprise, (2016). தமிழ்மொழி (படிவம் 1), Kementerian Pendidikan Malaysia. ISBN:

978-983-9286-97-7.
இணையம்

1.Multi Educational Book Enterprise, https://anyflip.com/auova/qbuj/ தமிழ்மொழி (புகுமுக


வகுப்பு). அடைந்தது, 1 டிசம்பர் 2022.

You might also like