You are on page 1of 5

1.

(a) மொழியின் தோற்றம், வளர்ச்சி, மொழிக்குடும்பங்கள், மொழியியல் வரயறை


ஆகியவற்றை நுணுக்கமாக விளக்கி கட்டுரை எழுதுக.
முன்னுரை

“முப்பது கோடி முகமுடையாள் உயிர்


மொய்ம்புற வொன்றுடையாள் இவள்

செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்”

இப்பாடல் இந்தியாவின் பன்மொழித் தன்மையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது .


இந்தியாவில் மட்டும் இந்நிலை ஏற்படாமல் பலதரப்பட்ட நாடுகளிலும் இந்த நிலைமை ஏற்படுகின்றது .
எடுத்துக்காட்டாக, மலேசியாவில் ஒரு தெலுங்கு குடும்பத்தினர் நடத்தும் திருமண விழாவில் மக்கள்
ஹிந்தி, உருது, தக்கினி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பேசுவதைப் பார்தத
் ிருப்போம்.
மொழி எனப்படுவது மக்கள் கண்டுபிடித்த ஒரு முக்கியமான கருவி மட்டுமல்லாது, அனைத்தையும்
ஆக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. (Sreekumar, 2011). இதன்வழி, மொழி எனப்படுவது பல
தோற்றம், வளர்ச்சி, குடும்பம் மற்றும் வரயறையைக் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

மொழியின்ன் தோற்றம் என்று கூறும்பொழுது அது இயற்கையே உருவானது என்றால் உலக


மக்கள் அனைவரும் ஒரே மொழியைத்தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். அத்தோற்றம்
வளர்ச்சியைக் காணும்பொழுது அந்தந்த இனத்தவர் அவரவர் மொழியை அமைத்து வளர்த்துக்
கொண்டனர். ஒவ்வொரு இனத்தவரும் அவரவரின் இனத்திற்கேற்ப மொழியை வளர்த்துக்
கொண்டதால் மொழிக்கு பல குடும்பங்கள் தோன்றின. பிறகு, மொழிகளுக்கிடையே காணும் பொதுக்
கூறுகளைக் கொண்டு மொழியியலுக்கென்று ஒரு வரயறை தோன்றுகிறது.

மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

மொழியைப் படைத்தவர் மனிதரே; மொழியைப் பயன்படுத்துபவரும் மனிதரே; மொழியை


மனிதர் பழகிக் கொள்கின்றனர் (கமலி, 2017). உறங்கும் நேரமும் உண்ணும் நேரமும் தவிர், மற்றநேரம்
எல்லாம் மனிதனுக்கு வாய் நன்றாகப் பயன்பட்டது; குரல் ஒலி பயன்பட்டது. முதலில் அந்தக் குரல் ஒலியை
உணர்ச்சிக்குப் பயன்படுத்தினான். பிறகு, போல ஒலிப்பதற்குப் பயன்படுத்தினான்; அதன் பிறகு
அடையாள ஒலிகளாகச் சொற்களை ஏற்படுத்திக் கொள்வ்தற்கும் பயன்படுத்தினான். இந்த மூன்று
வகையான ஒலிகளும் சேர்ந்து தான் மொழி ஏற்படத் தொடங்கியது. இதுதான் மொழியின் தொடக்கம்
(வரதராசனார், 1951). மொழியின் தோற்றத்தைப் பற்றி பல ஆராய்சச
் ிகள் நடந்தன. சமயம் சமூகம்
சார்ந்த கருத்துக்களாக இருந்த பிறகு அறிவியல் முறையில் மொழி ஆராயப்பட்டது.

அவ்வகையில், பறவை, விலங்கு முதலியவற்றின் ஒலியைக் கேட்டு அவற்றைப்போல் ஒலித்ததால்


இசை அல்லது போலி மொழி என்றழைக்கப்பட்டது. பிறகு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒலிகளை
உணர்ச்சி மொழி அல்லது குறிப்பு மொழி எனக் குறிப்பிட்டனர். மேலும், தொழில் செய்யும் தொழிலாளர்
மூச்சு விட்டு வாங்கும் ஒலியை ஏலேலோ மொழி என்றனர். அதுமட்டுமின்றி, மழலை ஒலிகளை ஒலிக்கும்
ஒலிகளை தானனன கொள்கை அல்லது பாட்டுமொழிக்கொள்கை என்றழைத்தனர். சொற்கள் பல
ஏற்பட்ட பிறகுதான் மனிதருக்குக் கருத்துகள் வளரத் தொடங்கின (வரதராசனார், 1951). இதன்வழி,
மொழியின் தோற்றத்தைப் பற்றி எழும்பும் சந்தேகங்களுக்கு தீர்வு என்பது தெளிவாகவே உள்ளது .
(Sreekumar, 2011). ஆகவே, மனிதனின் எண்ணங்களையும் கருத்துகளையும் தாங்கிச் செல்லும்
ஊடகமாக மொழி தோற்றம் கண்டுள்ளது.

“மெத்த வளருவது மேற்கே- அந்த


மேன்மைக் கலைகள் தமிழனில் இல்லை”

என்ற பாரதியின் அங்கலாய்பையும் ஆதங்கத்தையும் உள்ளத்திலே கொண்டு எத்தனையோ துறை


அறிஞர்கள் தத்தம் துறைகளில் கலைச் சொல்லாக்கங்களிலும் பிறவற்றிலும் நாட்டம் மிகக் கொண்டு
தமிழ் மொழியின் வளர்ச்சியில் ஈடுபட்டு வருதல் காணத்தக்கது.

இப்போது கடைக்குப் போய் ஒரு படு அரிசி வாங்க வேண்டுமானால், நாம் பணம் எடுத்துச்
செல்கிறோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், ஆடு வளர்த்துப் பிழைத்தவர்கள் அரிசி
வாங்க போனபோது, ஆட்டையோ அல்லது கம்பளி முதலியவற்றையோ கொண்டுபோய் கொடுத்து அரிசி
வாங்கினர். அதுபோல்தான், மொழியும் தமிழ்நாட்டில் ஒரு வகையாகவும் சீனாவில் ஒருவகையாகவும்
வேறு வேறு மொழியாக அமைந்து வளரத் தொடங்கியது. (வரதராசனார், 1951). மொழியியல் துறையின்
வளர்ச்சிக்குப் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தோர் பல்வேறு பங்களிப்பினைச் செய்துள்ளனர்.

கிரேக்கர்கள், ரோமர்கள், அரேபியர்கள், இந்திய பெருநிலத்தினைச் சார்ந்த இலக்கண


ஆசிரியர்களின் கொடை என இவ்வரிசை நீண்டு கொண்டே போகிறது. இவர்கள் இத்துறையின்
வளர்ச்சிக்கு ஆற்றிய கொடைகளைப் பல்வேறு படிநிலைகளாக, பல்வேறு கோணங்கள் வாயிலாக
ஆராயலாம். அவற்றுள் மூன்று கோணங்கள் முக்கியமானவை. ஒன்று, மொழி வளர்சச
் ியில்
ஈடுபட்ட்டவர்களின் பங்களிப்பு; மற்றொன்று, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழி தொடர்பான
் ிகள் எங்ஙனம் வளர்ந்து வந்துள்ளன என்பதாகும். (மோகன் தாஸ், 2011).
ஆராய்சச

மொழிக்குடும்பங்கள்

உலகில் மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளை மொத்தம் 2796 எனக் கிரே என்னும் அறிஞர்
குறிப்பிடுகிறார். மொழிகளைக் குடும்ப அடிப்படையிலோ நிலப்பரப்பு அடிப்படையிலோ மொழிகளிடையே
காணப்படும் ஒற்றுமை வேற்றுமைக் கூறுகளின் அடிப்படையிலோ பாகுபாடு செய்வார்கள். மொழி

எனப்படுவது எப்ப்ப்பொழுதும் மாறும் ஒரு கருவி. (MCWhorter, 2019). இதனுடைய ஆதாரம்தான்

தற்கால உலகமொழிகளைப் பதின்மூன்று வகைகளாகப் பிரித்துக் குறிப்பிடுகின்றார் அகத்தியலிங்கம்.


படம் 1: மொழிக்குடும்பங்கள்

மொழியியல் வரயறை

ஒரு மொழியை அறிவியல் அடிப்படையில் ஆராயும் துறையைத்தான் மொழியியல் என்றும்


ஆங்கிலத்தில் ‘லிங்குய்ஸ்திக்’ (linguistics) என்று அழைக்கின்றோம். இதனை ஆராய்வோரை
மொழியியலார் எனப்படுவர். உலக நாடுகளில் வளர்நது
் வரும் துறைகளில் ஒன்றாக மொழியியல் என்று
கூறினால் அது மிகையாகாது. அறிவியலையும் கலையையும் இணைத்து நிற்கும் பாலமாக விளங்குவது
மொழியியலாகும். மொழி என்றால் ஒருவர் அவர்களது கூட்டத்தினரிடையே கருத்துகளைப்
பரிமாற்றத்திற்கு உதவிக் கரமாக இருப்பது மொழி எனப்படுகின்ற சாதனமே ஆகும். (மோகன்தாஸ்,
2012).

கல்வி உலகில் பயன்படுத்தப்படும் மொழியானது கல்வி மொழி என்றும் ஆட்சி அரசியல்


நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மொழி அரசியல் மொழி என்றும் சமய நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தப்படும் மொழியைச் சமய மொழி என்றும் அழைக்கிறார்கள். ஒரு மொழியின் அமைப்புகள்
எவ்வாறு வரிவடிவம் பெருகிறதோ அந்த அமைப்பில் பங்கு பெறும் நிலைகள், கூறுகள், அலகுகள்
போன்றவற்றைத் தொடர்புபடுத்துவதோடு மட்டுமல்லாமல் முழுமையான மொழியமைப்பு எவ்வாறு
வெளிப்படுகின்றன என்பதனை மொழியியல் விளக்குகின்றன. (

மொழியை அறிவியல் அடிப்படையில் ஆய்வது மொழியியலாகும். நடப்புகளைக் கூர்ந்து நோக்கி


அதன் பிறகு ஓர் எடுகோளை அமைத்துக்கொண்டு, அதனை முறைப்படி சோதனைகள் மூலம் ஆராய்ந்து
முடிவில் ஒரு கொள்கையை வெளியிடுவதுதான் அறிவியல் முறை என்று கருதப்படுகின்றது.
(இராசேந்திரன், 2006). மொழியியற் கொள்கைகளும் இம்முறையிலே வெளியிடப்படுகின்றன.
நடப்புகளிலிருந்து வடித்தெடுக்கப்படுவதே அறிவியற் கொள்கை என்பதை ஏற்றுக்கொள்வதற்குச் சிலர்
தயங்குவர். கூர்ந்து நோக்குவதற்கும் விளக்குவதற்கும் உரிய நடப்புகளை ஒருவர் தெரிந்தெடுக்கும்
போதே அவர் அறிந்தோ அறியாமலோ அவருள்ளத்தில் ஏதோ ஓர் அடிப்படை நம்பிக்கை இருக்கத்தான்
செய்கிறது என்றும், அந்நம்பிக்கையே பின்பு அவர் வெளியிடும் கொள்கையாய் மலர்கின்றது என்றும்
அவர்கள் கூறுவர். எவ்வாறாயினும் அறிவியல் ஆராய்ச்சியில் மேற்குறித்த இரண்டு நிலைகளும் உண்டு.
மொழ்யியல் ஆய்வுகளிலும் உண்டு. இதனாலேயெ மொழியியலும் ஓர் அறிவியலே என்கின்றனர்.
(MCWhorter, 2019).

மொழியியல் ஆய்வுகள் மொழித்துறையினருக்கு மட்டுமின்றி தருக்கவியலார், உளவியலார்,


சமூகவியலார், மானிடவியலார், கணிபொறியியலார் முதலிய அனைவருக்கும் பயன்படுகின்றது.
(இராசேந்திரன், 2006). இவ்வாறு மொழியியல் தனிநிலை மொழியியல் என்றும் பயன்பாட்டு மொழியியல்
் ி அடைந்துள்ளது, இன்றைய கணினி யுகத்தில் மொழியை பகுத்தாய்வதும் மொழி
என்றும் வளர்சச
அலகுளை உருவாக்குவதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கணினியைப் பயன்படுத்தி இயந்திர
மொழிபெயர்ப்பு செய்வதற்கு மொழியியல் ஆய்வு மிக இன்றியமையாததாகும்.

துணைமேற்கோள் நூல்கள்
கமலி., (2017). மொழி அமைப்பும் வரலாறும். சென்னை. மாரி நிலையம்
மு.வரதராசனார்., (1951). மொழியின் கதை. சென்னை. பாரி நிலையம்.
Sreekumar, P., (2011). Language & Linguistics: core course of BA English, 1-11.
http://www.universityofcalicut.info/SDE/BAEnglish_language_linguistics.pdf
மோகன்., (2011), தமிழ் மொழியியல் அறிமுகம். UPSI, FR Vision Sdn. Bhd.
MCWhorter., (2019). Language Families of the World. USA, The Teaching Company
இராசேந்திரன்., (2006). பொது மொழியியல். கோயம்பத்தூர், அமிர்தா விஷ்வ வித்யபீடம்.

You might also like