You are on page 1of 3

கா.கலியபெருமாள் அவர்கள் 10.08.1037-ல் பிறந்தவர்.

பேரக் மாநிலத்தில் பிறந்த


இவர் 08.07.2011 – இயற்கை எய்தினார். இவர் மலேசியாவின் மூத்த தமிழ்
எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 80 க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப்
பயிற்சி நூல்களை எழுதியவர். நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை
எழுதியவர். மலேசியாவில் தமிழர் சடங்கு முறைகளை முறையாக வடிவமைத்துக்
கொடுத்தவர்.

மலேசியக் கவிஞர்களில் மற்றுமொறுவர் கவிஞர் பொன்முடி அவர்கள். அவரின்


பற்றிய இயற்பெயர் திரு.சுப்பிரமணியம். கவிஞர் அவர்கள் 27.11.1937-ல் பிறந்தார். இவர்
இடைநிலைக் கல்விபெற்று, 1959-1971 வரை ஆசிரியராகவும், 1972-1994 வரை
தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். கவிதை, உரைவீச்சு எழுதும் திறமும்
கட்டுரை எழுதுவதிலும் மிகவும் சிறந்து விளங்கினார்.
மலேசியக் கவிஞர்களான இவ்விருவரும் திருவள்ளுவரின் திருக்குறளைப்பற்றி
தங்களின் கவிதைகளில் மிக அழகாக கூறியுள்ளனர். வள்ளுவரின் கொள்கைகளைத்
திருக்குறள்களில் இருக்கும் சிறப்புகளையும் கவிஞர் கா.கலியபெருமாள் அவர்களும்
(திருக்குறள் பயில்க) திருக்குறலில் உள்ள வாய்மைத்திறத்தையும் அதைப்
பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் கவிஞர் பொன்முடி அவர்களும்
(வாய்மை வள்ளுவம்) என்ற கவிதைகளில் நாம் புரிந்துகொள்ளும் வண்ணம்
மிகத்தெளிவாகக் கவிதையைப் புனைந்துள்ளனர்.
எந்த நாட்டவருக்கும், எந்த மக்களுக்கும், எந்த நிறத்தினருக்கும், எந்த நாட்டவரும்,
எந்தமொழியினரும், எந்த மதத்தினருக்கும் வேறுபாடு கிடையாதது. திருக்குறள் நமக்கு
அறத்தைச் சொல்லித் தருகிறது என்பதை பற்றியெல்லாம் வாய்கிழியப்பேசும் மக்கள்:
உண்மையில் அவர்களின் வாழ்கையில் திருக்குறளைப் பின்பற்றுவதில்லை. மேலும்
திருக்குறளின் மீதான பற்று நாளுக்கு நாள் தேயும் நிலவைப்போல் தேய்ந்து வருகிறது
எனவும்,

வாய்கிழிய வள்ளுவத்தை வார்த்தையிலே வடிப்போம் - அது


வாழ வழிவகை செய்வது போல் வகைவகையாய் நடிப்போம்! ...

எனும் தனது வாய்மை வள்ளுவம் என்ற கவிதையில் கடுமையாகச் சாடியிருப்பார்.

‘கவிக்குயில்’ அவர்கள் தமது திருக்குறள் பயில்க’ எனும் கவிதையில் திருக்குறளை


நீதி நூலாக மட்டுமன்றி அஃது ஒரு வாழ்வியல் நூலாகவே பார்க்கிறார். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய
தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும்
புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து
மனித வாழ்க்கையை வளப்படுத்தும் இந்நூலை நாம் அவசியம் கற்க வேண்டும் என்பதை

உலகுஎன்றே பாட்டுரைக்கும் முப்பால் ஏட்டில்


உண்மையில் சாதியில்லை மதம் இல்லை...

அவர் தமது இக்கவிதை வரியில் மிக ஆழமாக விளக்கியுள்ளார்.

உயிரினத்தின் உச்சியில் வாழும் இன்றைய மனிதனை, அவனது வாழ்க்கையைப்


பகுத்து நோக்கி, அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்துப்
பயனுடைய வாழ்க்கை வாழ வள்ளுவம் வழி காட்டுகிறது. எதிலும் விரைவும், ஓட்டமும்
காட்டும் இந்த நூற்றாண்டு மனிதனுக்கு உள்ளத்தை உறுதிப்படுத்தவும் வாழ்வியல்
பொருண்மைத் தெளிவுபெறவும் வள்ளுவர் வாக்கு ஊன்றுகோலாய் இருக்கிறது. ஆனால்
ஏனே நாம் அதைச் செய்ய மறுக்கிறோம் என்பதனை,

வாழ்வியலை இயல் இயலாய் வகுத்துரைத்த நூலாம்! - புவி


வாழ வழி வகைபுணர்த்த வந்த தமிழ்ப்பாலம்!...
எனும் வரிகளில் கவிஞர் பொன்முடி அவர்கள் வெள்ளிடைமழிப்போல் விளக்குகிறார்.

மனித வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடாமல் விரிந்து பரந்து


முக்கியத்துவம் மிக்கதாக அமைய வேண்டும். மனித மனங்களை விரிவுபடுத்தி
அறவழிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவது திருக்குறளின் நோக்காகவும் உள்ளது.
மனமாசின்றி வாழும் வாழ்க்கை சிறப்புடையது. அதுவே அறங்களில் முழுமை. மனித
வாழ்க்கை நெறி என்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.

என்னும் குறட்பா இதனை உணர்த்துகிறது. அறம் என்பது பற்றிய இலக்கிய


மரபுசார் கருத்தாக்கத்தை வள்ளுவர் மாற்றியமைக்கிறார். அறமெனப்படுவது யாதெனக்
கேட்பின் மறவாத இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்
அல்லது கண்டது இல்

என்னும் காப்பியக் கருத்தினை மறு ஆய்வு செய்து அறத்திற்குப் புதிய விளக்கங்களைத்


தந்தவர் வள்ளுவர். மனத்தூய்மை, ஈகை, காதல் என்னும் தூயநெறிகளை வாழ்வியல்
அறமாகக் கொள்ள வேண்டியதின் தேவையை உணர்த்தியுள்ளார் என்பதை
கா.கலியபெருமாள் அவர்கள்,
ஒருமை நலம் விரித்துரைக்கும் அறத்துப்பாலில்
உண்மை நல்ல அதிகாரம் முப்பத்தெட்டே! ...
தனது ‘திருக்குறள் பயில்வோம்’ எனும் கவிதையில், நம்மை திருக்குறளைப்
படிக்கத் தூண்டுகிறார்.

மேலும் கவிஞர் கா.கலியபெருமாள் அவர்கள் தனது கவிதையில்,

இரண்டு வரி எழுசீர் குறட்பா தோற்றம்


இனிய தமிழ் அறிய நூலாம் முப்பால் என்பர் ...

பள்ளிக்கூடங்களில் திருக்குறளை படித்தாலும் நம்மில் எத்தனை பேர் முழுமையாக


அதன் பொருள் உணர்ந்து நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்பது
கேள்விக்குறியானது.இதுவரை அதன் பொருள் உணர்ந்து நாம் படிக்காவிட்டாலும்
இனிமேல் திருக்குறளின் உண்மை பொருள் அறிந்து அதை நம் வாழ்க்கை நெறியாக
கொள்வதே சிறந்தது. மேலும் ,உலகத்தில் உள்ள அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில்
திருக்குறள் முக்கியத்துவம் அடைந்து வருகிறது. ளானால் நாம் திருக்குறளை நம்
வாழ்க்கை நெறியாக குழந்தை பருவம் முதல் இறப்பு வரை பின்பற்றுவது குறைவு ஆகவே
திருக்குறளைப் படித்து திருவள்ளுவர் வாழ்க்கை நெறியான
" நல்வழியில் வாழ்ந்து,நல்வழியில் பொருள்சேர்த்து இன்பமான வாழ்வு வாழ்வதே ஆகும்"
என் வாழ் ஏண்டும் என் மிக அழகாகக் கூறுகிறார்.

முப்பாலுக்கு ஒப்பாக ஒரு நூலைச் சொல்லு!- தமிழ்


முகநூலை கொண்டவர் நாம் முனைப்போடு நில்லு!...
முப்பாலில் நமது வாழ்க்கைத் தத்துவத்தை அழகாக எடுத்திருக்கும் திருக்குறளைப்
போல வேறு ஒரு நூல் இல்லை. இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும் நம்மை
காக்கும் இந்த திருக்குறள் நம் தாயிடம் குடித்த தாயைப்பாலைப் போல நம்மை கரை
சேர்க்கும் என்பது உண்மை. இந்த உலகில் நாம் பெற்ற மிகச் சிறந்த பொருள் திருக்குறள்.
இதை ஏற்காத தமிழனுக்கு உண்மையில் வாழ்வு என்றும் இருளாகவே இருக்கும் என்றும்
இதை தான் நாங்கள் உரைக்கிறோம். நாங்கள் உரைப்பதை தவறாது கேட்டு நமது தமிழ்
மறையை காக்க திருக்குறளைப் பற்றி படித்தோம் என்றால் நமது வாழ்வு சிறக்கும் என்று
மிகவும் ஆத்திரத்தோடு ஆணித்தரத்தோடும் தனது கருத்தை முன் வைக்கிறார் கவிஞர்
பொன்முடி அவர்கள்.

You might also like