You are on page 1of 10

3.

0 யாப்பியல்

செய்யுள் இயற்றும் முறைறயப் பற்றிக் கூறும் இலக்கணம் தான் யாப்பிலக்கணம்.


எலும்பு, தசை, நரம்பு முதலியவற்றால் கட்டப் பெற்றதை யாக்கை அல்லது உடம்பு என்று
கூறுவது போல எழுத்து, அசை, சீர், தளை, அடி முதலியவற்றால் கட்டப்பெற்றது ‘யாப்பு’
(செய்யுள்) எனப்பெற்றது. யாப்பு என்பதனைக் கட்டுதல், செய்தல் என்றும் குறிப்பிடலாம்.
யாப்பின் உறுப்புகள் மொத்தம் ஆறு உள்ளன. அவையாவன, எழுத்து, அசை, சீர், தளை,
அடி, தொடை போன்றவையே ஆகும். யாப்பினை செய்யுள், பா, கவிதை, பாட்டு போன்ற
வேறு பெயர்களிலும் சுட்டலாம். ஐயா சீனி நைனா அவர்களின் சிந்தனைத் துளியில்
மலர்ந்த ‘தமிழ்ப்பேறு! தவப்பேறு!’ என்ற கவிதை இந்த யாப்பியல் அடிப்படையில்
பகுப்பாய்வுச் செய்யப்பட்டுள்ளது.

3.1 எழுத்து

‘எழுதப்படுதலின் எழுத்தே’. எழுதப்படுகின்ற காரணத்தினால் எழுத்தாகின்றது.


செய்யுளை இயற்றுவதற்கு, அடிப்படையானது எழுத்தாகும் (பரமசிவம், 2016). எல்லா
எழுத்துகளும் செய்யுளை இயற்றத் துணைப்புரிகின்றன. யாப்பின் அடிப்படையில் மூன்று
வகைகளாகப் பிரிக்கப்படும். அவை, குறில், நெடில், ஒற்று ஆகும். இவ்வெழுத்துகளின்
மாத்திரை அளவு என்ற நிலையில் பார்க்கும்பொழுது, ஒரு மாத்திரை எழுத்து (குறில்),
இரண்டு மாத்திரை எழுத்து (நெடில்), அரை மாத்திரை எழுத்து (மெய், ஆய்தம்) ஆகும்.
காட்டாக,

தாய்மொழி என்பது தாயின்மொழி – அது

தாயும் நீயும் பேசும்மொழி

வண்ணமாக்கப் பட்ட கவிதைவரியில் ‘தாய்மொழி’ என்ற சொல்லில் மூன்று வகை


எழுத்தும் அடங்கியுள்ளது.

தா - இரண்டு மாத்திரை எழுத்து (நெடில்),

ய் - அரை மாத்திரை எழுத்து (மெய்

மொ - ஒரு மாத்திரை எழுத்து (குறில்),

ழி - ஒரு மாத்திரை எழுத்து (குறில்),


3.2 அசை

‘எழுத்து அசைத்து இசை கோடலின் அசையே’. எழுத்துத் தனித்தோ, பல


சேர்ந்தோ, ஓசை உண்டாகுமாறு பிரிந்து நிற்பது அசை. இது சீருக்கு உறுப்பாகும். பல
அசைகள் சேர்ந்துதான் சொல்லும், சீருமாகின்றன. ஒரு சொல் அல்லது சீரைச்
சொல்லும்பொழுது குறில், நெடில், ஒற்று என்னும் மூவகை எழுத்துக்களால்
அசைக்கப்படுவது அசை. சொல் என்பது யாப்பிலக்கணத்தின் உறுப்பாக வரும்பொழுது
‘சீர்’ எனப் பெயர் பெறும். சீர் மொத்தம் இரண்டு வகைப்படும் (படம் 7).

ஐயா சீனி நைனா அவர்களின் கவிதை வரிகளிலும் இந்த அசை வகைகளை


மிக்கத் துல்லியமாகக் காணலாம். காட்டாக,

தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கித்

குறில் தனித்து வரல் குறில் இணைந்து வரல்

நேரசை குறில் இணைந்து


நிரையசைஒற்றடுத்து
குறில் ஒற்றடுத்து வரல் வரல்

நெடில் தனித்து வரல் குறில் நெடி இணைந்து வரல்

குறில் நெடில் இணைந்து


நெடில் ஒற்றடுத்து வரல் ஒற்றடுத்து வரல்

சொல் அசை

தன் / னிலை நேரசை / நிரையசை

மறந் / தே நிரையசை / நேரசை

தாய் / மனம் நேரசை / நிரையசை

பொங் / கித் நேரசை / நேரசை


மேலே
வண்ணமிடப்பட்ட கவிதை வரியில் நேரசையும் நிரையசையும் அடையாளம்
காணப்பட்டுள்ளது. சான்றாக, ‘தன்னிலை’ என்ற சொல்லை அசையின் அடிப்படையில்
பார்த்தோமானால், ‘த’ குறில்; அடுத்துள்ள ‘ன்’ என்ற ஒற்றுடன் சேரும். இதில், ‘ன்’ என்ற
ஒற்றுக் கணக்கில் சேராததால் ‘த’ என்பது ஓரெழுத்து அசை அஃதாவது நேரசை என்று
குறிப்பிடலாம். ‘னி’ குறில்; தனிப்பிரிந்து அசையாகது. எனவே, அடுத்துள்ள ‘லை’ என்ற
நெடிலுடன் சேர்ந்து இரண்டு எழுத்துகள் கொண்ட நிரையசையாகும். ‘மறந்தே’ என்ற
சொல்லில் மொத்தம் இரண்டும் அசைகள் உள்ளன. ‘மறந்’ என்பது நிரையசை; ‘தே’
என்பது நேரசை ஆகும். ‘தாய்மனம்’ என்ற சொல்லிலும் இரண்டு அசைகள் உள்ளன.
‘தாய்’ என்பது நேரசை; ‘மனம்’ என்பது நிரையசை ஆகும். ‘பொங்கித்’ என்ற ஒரே அசை
மட்டும் வந்துள்ளது. ‘பொங்’ என்பது நேரசை ஆகும்; ‘கித்’ என்பதும் நேரசை ஆகும்.

3.3 சீர்

சீர் என்ற சொல்லுக்கு ஒழுங்கு என்பது பொருள். அசை அல்லது அசைகள்


சேர்ந்து கவிதையின் ஓசைக்கு ஏற்ப ஒழுங்குப்பட ஓசைகூறாக நிற்பது சீர் எனப்படும். ஒரு
சீரில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று அசைகள் வரலாம். ஐயா சீனி நைனா அவர்களின்
கவிதை வரிகளிலும் இந்த சீர் வகைகளை மிக்கத் துல்லியமாகக் காணலாம்.

3.3.1 ஓரசைச் சீர்

ஓர் அசையே சீராக வந்தால் ஓரசைச் சீர் எனப்படும். அசை, நேர் நிரை என
இருவகையே என்பதால், ஓரசைச் சீர் இவை இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
ஒரு நேர் அசை சீரானால் அதன் வாய்பாடு நாள் என்பதாகும். ஒரு நிரை அசை
சீரானால் அதன் வாய்பாடு மலர் என்பதாகும். காட்டாக கவிதை வரிகளில்,

தோளிலும், மார்பிலும் சாய்கையிலே – நீ


தொட்டிலில் ஆடி ஓய்கையிலே

சொல் அசை வாய்பாடு

நீ நிரையசை மலர்

ஆடி நேரசை நாள்


‘நீ’ என்ற சொல் ஓரசைச் சீராக வந்த நிரையசை. எனவே, இதன் வாய்பாடு மலர் ஆகும்.
‘ஆடி’ என்ற சொல் ஓரசைச் சீராக வந்த நேரசை ஆகும். எனவே, இதன் வாய்பாடு நாள்
ஆகும்.

3.3.3 ஈரசைச் சீர்

இரண்டு அசைகள் சேர்ந்து ஒரு சீராக அமைவதற்கு ‘ஈரசைச்சீர்’ எனப்படும்.


நேரசையும் நிரையசையும் தம்முள் இணைந்தும் மாறியும் இரண்டு அசைகளாக வரும்.
இவ்வாறு வரும் ஈரசைச் சீர்கள் நான்காம் (அட்டவணை 1).

சீர் வாய்பாடு

நேர் நேர் தே மா

நிரை நேர் புளி மா

நிரை நிரை கரு விளம்

நேர் நிரை கூ விளம்


அட்டவணை 1: ஈரசைச் சீர்களும் வாய்பாடுகளும்

தேர்தெடுக்கப்பட்ட கவிதை வரிகளில் இந்த ஈரசைசீர்களைக் காணலாம. காட்டாக


கவிதை வரிகளில்,

ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்

‘ஆ சொல் அசை வாய்பாடு யிரம்’


(ஆ/ யிரம்)
ஆ / யிரம் நேர் நிரை கூ விளம்
என்ற சொல்
மொழி / கள் நிரை நேர் புளி மா

நீ / யறிந் நேர் நிரை கூ விளம்

தா / லும் நேர் நேர் தே மா

ஈரசைச் சீராக வந்த ‘நேர் நிரை’ அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளம்
ஆகும். ‘மொழிகள்’ (மொழி/கள்) என்ற சொல் ஈரசைச் சீராக வந்த ‘நிரை நிரை’
அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு புளிமா ஆகும். ‘நீயறிந்த’ (நீ/யறிந்) என்ற சொல்
ஈரசைச் சீராக வந்த ‘நேர் நிரை’ அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளம்
ஆகும். ‘தாலும்’ (தா/லும்) என்ற சொல் ஈரசைச் சீராக வந்த ‘நேர் நேர்’ அசைகளாகும்.
எனவே, இதன் வாய்பாடு கூவிளம் ஆகும்.

3.3.4 மூவசைச்சீர்

மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீராக அமைவது ‘மூவசைச்சீர்’ எனப்படும்.


நேரில் முடிவது நான்கும், நிரையில் முடிவது நான்குமாக மூவசைச்சீர் எட்டாகும். நேரில்
முடிவது காய்ச்சீர் என்றும், நிரையில் முடிவது கனிச்சீர் ஆகும் (அட்டவணை 2 & 3).

சீர் வாய்பாடு

நேர் நேர் நேர் தே மாங் காய்

நிரை நேர் நேர் புளி மாங் காய்

நிரை நிரை நேர் கரு விளங் காய்

நேர் நிரை நேர் கூ விளங் காய்

அட்டவணை 2: காய்ச்சீர் வாய்பாடுகள்

சீர் வாய்பாடு

நேர் நேர் நிரை தே மாங் கனி

நிரை நேர் நிரை புளி மாங் கனி

நிரை நிரை நிரை கரு விளங் கனி

நேர் நிரை நிரை கூ விளங் கனி


அட்டவணை 3: கனிச்சீர் வாய்பாடுகள்

தேர்தெடுக்கப்பட்ட கவிதை வரிகளில் இந்த ஈரசைசீர்களைக் காணலாம. காட்டாக


கவிதை வரிகளில்,

இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது

இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!

சொல் அசை வாய்பாடு

பாட் / டுமொ / ழி நேர் நிரை நேர் கூவிளங்காய்

இத / யங் / கள் நிரை நேர் நேர் புளிமாங்காய்

வீட் / டுமொ / ழி நேர் நிரை நேர் கூவிளங்காய்

‘பாட்டுமொழி’ (பாட்/டுமொ/ழி) என்ற சொல் மூவசைச் சீராக வந்த ‘நேர் நிரை நேர்’
அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளங்காய் ஆகும். ‘இதயங்கள்’ (இத/யங்/கள்)
என்ற சொல் மூவசைச் சீராக வந்த ‘நிரை நேர் நேர்’ அசைகளாகும். எனவே, இதன்
வாய்பாடு புளிமாங்காய் ஆகும். ‘வீட்டுமொழி’ (வீட்/டுமொ/ழி) என்ற சொல் மூவசைச்
சீராக வந்த ‘நேர் நிரை நேர்’ அசைகளாகும். எனவே, இதன் வாய்பாடு கூவிளங்காய்
ஆகும்.

3.4 தளை

தளை எனப்படுவது ஒழுங்கு என்று பொருள்படுகின்றது. நின்ற சீரின்


ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை. தளைகள்
மொத்தம் எட்டு வகைகள் ஆகும். செய்யுள்களில் சீர்கள் தளை என்ற ஒழுங்கின்படி
அடியாக தொடுக்கப்படுகின்றன தளையை ஆசிரியத்தளை, வெண்டளை,
கலித்தளை,வஞ்சித்தளை போன்ற வகைகளில் பிரிக்கலாம். செய்யுளில் முந்திய சீர் மாச்சீர்,
விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீராக இருந்து இவற்றில் வந்து சேரும் அடுத்த சீரின் முதல்
அசை, நேர் அசையா நிரை அசையா என்பதை பொருத்தே, செய்யுள் ஓசை
வேறுபடுகின்றது.

தளை வகைகள் வாய்பாடு


நேர் ஒன்றாசிரியத்தளை மா முன் நேர்
நிரையொன்றாசிரியத்தளை விளம் முன் நிரை
இயற்சீர் வெண்டளை மாமுன் நிரையும் விளம் முன்
நேரும் வருவது
வெண்சீர் வெண்டளை காய் முன் நேர் வருவது
கலித்தளை காய் முன் நிரை வருவது
ஒன்றிய வஞ்சித்தளை கனி முன் நிரை வருவது
ஒன்றாத வஞ்சித்தளை கனி முன் நேர் வருவது
தமிழ்ப்பேறு! தவப்பேறு! என்ற கவிதையில் சில தளை வகைகள் அடையாள
காணப்பட்டுள்ளன. காட்டாக,

உன் / னுடன் இணைந் / தே

விளம் நிரை

நிரையொன்றாசிரியத்தளை

‘உன்னுடன்’ என்ற நின்றசீர் விளச்ச்சீராகும் (நேர் நிரை) ஆகும். ‘இணைந்தே’ என்ற

வருஞ்சீரின் முதலசை நிரையசையாகும் (இணைந்). எனவே, நின்றசீரில் விளச்சீர் வந்து


வருஞ்சீரில் நிரையசையும் ஒன்றி நிரையொன்றாசிரியத்தளை ஆயிற்று.

இணைந் / தே பிறந் / தமொ / ழி

மா நிரை

இயற்சீர் வெண்டளை
‘இணைந்தே’ என்ற நின்றசீர் விளச்ச்சீராகும் (நிரை நேர்) ஆகும். ‘பிறந்த்மொழி’ என்ற
வருஞ்சீரின் முதலசை நிரையசையாகும் (பிறந்). எனவே, நின்றசீரில் மாச்சீர் வந்து
வருஞ்சீரில் நிரையசையும் ஒன்றி இயற்சீர் வெண்டளை ஆயிற்று.

பிறந் / தமொ/ ழி உன்

காய் நேர்

வெண்சீர் வெண்டளை

‘பிறந்தமொழி’ என்ற நின்றசீர் காய்ச்ச்சீராகும் (நிரை நிரை நேர்) ஆகும். ‘உன்’ என்ற
வருஞ்சீரின் முதலசை நேரசையாகும் (உன்). எனவே, நின்றசீரில் காய்ச்சீர் வந்து
வருஞ்சீரில் நேரசையும் ஒன்றி வெண்சீர் வெண்டளை ஆயிற்று.

தமிழ்ப்பேறு! தவப்பேறு! கவிதையில் காணப்படும் மற்ற தளை வகைகள் அட்டவனைச்


சேர்க்கப்பட்டுள்ளன.

சீர் அசை வகை தளை / பா


நீ தொட் / டிலில் நேர் (மா) முன் நேர் நேர் ஒன்றாசிரியத்தளை
பாட் / டுமொ / ழி அது நேர் நிரை நேர் (காய்) கலித்தளை
முன் நிரை
பரு / வத் / திலே நீ நிரை நேர் நிரை (கனி) ஒன்றாத வஞ்சித்தளை
முன் நேர்

3.5 அடி

‘அத்தளை அடுத்து நடத்தலின் அடியே’. தளை அமைந்த இரண்டு சீர்களும்,


இரண்டுக்கு மேற்பட்ட சீர்களும் பல அமைந்து உண்டான தொடருக்கு ‘அடி’ என்று
பெயர். இது குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி எனப் பலவகைப்படும்.
ஒவ்வொரு அடிக்கான விளக்கங்கள் அட்டவணையில் காண்க.

குறளடி 2 சீர்
சிந்தடி 3 சீர்
அளவடி 4 சீர்
நெடிலடி 5 சீர்
கழிநெடிலடி 5 சீருக்கும் மேற்பட்டு அமையும்

தமிழ்ப்பேறு! தவப்பேறு! என்ற கவிதையில் சில அடி வகைகள் அடையாள


காணப்பட்டுள்ளன. காட்டாக,

சீர் அடி

தமிழினம் எய்திய பெரும்பேறு – அது அளவடி

தாய்மொழி தமிழெனும் அரும்பேறு சிந்தடி

தமிழ்ப்பேறு! தவப்பேறு! என்ற கவிதையில் மொத்தம் இரண்டு வகையான அடிகளே


அடையாளம் காணப்பட்டுள்ளது. அஃதாவது நான்கு சீர்கள் கொண்ட அளவடியும், மூன்று
அடிகள் கொண்ட சிந்தடியும் ஆகும்.

3.6 தொடை

அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடை எனப்படும். இரண்டு


அடிகலேயின்றி, ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடைவரும். செய்யுளின் ஓசைக்கு
இனிமைகைக்கும் சிறப்புக்கும் இத்தொடையுறுப்பு இன்றியமையாததாகும். தொடை மொத்தம்
ஐந்து வகைப்படும். அவை மோனைத்தொடை, எதுகைத்தொடை, முரண்தொடை,
இயைபுத்தொடை, அளபெடைத்தொடை. இந்தத் தொடை வகைகள் தமிழ்ப்பேறு! தவப்பேறி!
என்ற சீனி நைனா கவிதையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

3.6.1 மோனை

இரண்டு அடிகளின் முதற்சீரின் முதலெழுத்து, அல்லது ஓரடியிலுள்ள சீர்களின்


முதலெழுத்து ஒன்றே வருதல் மோனை எனப்படும். அடிகளில் மோனை வருதல்
அடிமோனை என்றும், சீர்களில் மோனை வருதல் சீர்மோனை என்றும் பெயர்பெறும்.
இதற்கான காட்டுகளைத் தமிழ்ப்பேறு! தவப்பேறி! என்ற கவிதையில் காணலாம்.

 அடிமோனை

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்


அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
இவ்வடிகளின் முதற்சீரின் முதலெழுத்து ‘அ’ ஒன்றே வந்திருத்தல். எனவே இது
அடிமோனையாகும்.

ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே


இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது

இவ்வடிகளின் முதற்சீரின் முதலெழுத்து ‘எ’, ‘இ’ என்ற எழுத்துக்களே வந்துள்ளன. இவை


இரண்டும் ஒன்றுக்கொன்று ஒன்றிவரும் மோனை எழுத்துகளாகும்.

 சீர்மோனை

உள்ளமும், உணர்வும் புரிந்தமொழி


இவ்வடியின் முதற்சீரிலும் இரண்டாவது சீரிலும் முதலெழுத்து ‘உ’ ஒன்றே வந்திருத்தல் சீர்
மோனையாகும்.

3.6.2 எதுகை

எதுகை என்பது சீர்களின் முதல் எழுத்து ஒரே அளவாக இருக்க, இரண்டாம்


எழுத்துகள் ஒன்றிவருவது. முதலெழுத்து ஒரே அளவாய் இருத்தல் என்பது குறிலுக்குக்
குறில், நெடிலுக்கு நெடில் என வருதலாகும். இரண்டாம் எழுத்துகள் ஒன்றுதல் என்பது
அதே எழுத்து வருதலைக் குறிக்கும். இதற்கான காட்டுகளைத் தமிழ்ப்பேறு! தவப்பேறி!
என்ற கவிதையில் காணலாம்.

அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்

உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் எல்லாம் ஒரே அடியில் எதுகைகள் அமைந்துள்ளன.


‘அருந்தா திருந்தால்’ எதுகை; ‘ரு’, ‘ரு’ ஒன்றிவந்தன. தொடர்ந்து ‘உன்னுடன் இணைந்தே’
எழுதுகை; ‘ன்’, ‘ணை’ ஒன்றிவந்தன.

You might also like