You are on page 1of 6

3.

0 அனியியல்

‘அணி’ என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். கவிதையில் புலவன் தான்


கூறவந்த கருத்தை அழகுறச்சொல்வதற்காகப் பயன்படுத்தும் உத்திமுறைகள் ‘அணி’
எனப்படுகிறது. மேலும், கவிதையில் அல்லது செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு,
பொருளழகு முதலியற்வற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். நன்னூல் என்ற
இலக்கண நூலில் அணி என்பது அணியப்படுவதெனவும், அழகைத் தருவதெனவும்,
பொருள்தரும், அழகுக்கு அழகு சேர்ப்பது அணியாகும் என்றும் கூறப்படுகின்றது.

“மாடக்குச் சித்திரமும் மாநாகர்க்குக் கோபுரமும்


ஆடமைத்தோ ணல்லார்க் கணியும் போல்” (நன்னூல் 45)
என்ற நன்நூல் வரிகள் அணியினைப் பற்றி நயம்பட எடுத்துரைக்கின்றன (திருமுனிவர்,
2018). தன்மை அணி முதல் பாவிக அணிவரை மொத்தம் முப்பத்து ஐந்து வகையான
அணிவகைகள் இருப்பதாகத் தண்டியலங்காரம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வகையில் கவிதை என்னும் இலக்கிய வானில் மின்னும் விண்மீனாக


விளங்கியவர் இறையருட் கவிஞர் செ.சீனி.நைனா முகம்மது. அவரன் கைவண்ணத்தில்
உருவான கவிதையே ‘தமிழ்ப்பேறு! தவப்பேறு’ என்னும் கவிதையாகும். தமிழருக்குத் தமிழ்
வாய்த்தது பெரு பேறாகும் என்னும் மையக்கருத்தைத் தாங்கி நிற்கும் இக்கவிதையில்
கவிஞர் மொத்தம் ஐந்து வகையான அணிகளைக் (படம் 1) கொண்டு கவிதையை எழில்
ஓவியம் தீட்டியுள்ளார்.
உருவக
அணி

முரண் உவமை
அணி அணி
கவிதையில்
உள்ள
அணிகள்

உயர்வு
தன்மை
நவிற்சி
அணி
அணி

படம் 1: தமிழ்ப்பேறு! தவப்பேறு! கவிதையில் காணப்படும் அணிகள்


3.1 உருவக அணி

ஐயா சீனி நைனா அவர்களின் கவிதையில் காணப்படும் அணிகளில் உருவக


அணியும் அடங்கும். உருவக அணி என்பது உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்)
உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை
இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது
உருவக அணியாகும். இந்த உவமை அணியை வடநூலார், ரூபகம் அல்லது
ரூபலங்கலங்காரம் என்றும் அழைப்பர் (கோகனதாஸ், 2018). இவ்வணியில் உவமேயப்
பொருள் முன்னும் உவமைப் பொருள் பின்னும் அமைந்திருக்கும். இந்த அணியைக்
கவிஞரின் கவிதையில் உற்றுநோக்கினோமானால்,

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்


அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே (பா 2)
என்ற கன்னியில் ‘அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே’ என்ற வரிகளில் இந்த உருவக
அணி காணப்படுகின்றது. இந்த வரியில் தாயின் அன்பு பாலாக உருவகம்
செய்யப்பட்டுள்ளது. அஃதாவது, குழந்தையானது பசிப்பிணியால் அழும் பொழுது தன்
தாயின் அன்பைக் பாலாய்ப் பருகித் தன் பசியைத் தீர்க்கின்றது. இந்த வரியில் ‘அன்பு’
என்ற சொல் உவமேயப் பொருளாகவும், ‘பால்’ என்ற சொல் உவமைப் பொருளாகவும்
சித்தரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கவிதையில் வேறு சில வரிகளிலும் இந்த உருவக அணி


கையாளப்பட்டுள்ளது. காட்டாக,

தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்

சிந்தையில் விதைகள் போட்டமொழி (பா 2)


என்ற கன்னியில் ‘சிந்தையில் விதைகள் போட்டமொழி’ என்ற வரியிலும் உருவக அணி
கவிஞரால் கையாள்ளப்பட்டுள்ளது. இந்த வரியில் தாய் தன் குழந்தைக்குக் புகட்டும்
அல்லது எடுத்தியம்பும் நன்மை பயக்கும் கருத்துகள் யாவும் குழந்தையின் சிந்தையில்
விதைகளாக விதைக்கப்படுகின்றன என்று உருவகப்படுத்தி கவிஞர் எடுத்துரைக்கிறார். இந்த
வரியில் ‘சிந்தையில்’ என்ற சொல் உவமேயப் பொருளாகவும், ‘விதைகள்’ என்ற சொல்
உவமைப் பொருளாகவும் சுட்டப்படுகின்றன.

3.2 உவமை அணி

உவமை அணி என்பது ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே


உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது ஆகும். மேலும், பல பொருள்களுக்கு இடையே
உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். ஒரு பொருளை மற்றோரு பொருள், குணத்தால்,
அல்லது தொழிலால் அல்லது பயனால் ஒத்திருப்பதாக வருணிப்பதும் உவமை அணி
என்று பொருள்படுகின்றது. கவிஞன் தான் கண்ட காட்சியை மற்றவர்கள், அவனது
கற்பனை எல்லைக்குள் மிக நெருங்கிச் சென்று உள்ளபடி கண்டு கொள்ளத்
துணைக்கருவியாய் இருப்பது உவமை ஆகும் (பாலசந்திரன், 2015). அவ்வகையில் ஐயா
சீனி நைனா அவர்களும் தன் கவிதையில் இந்த உவமையை அணியைக்
கையாண்டுள்ளார். காட்டாக,

சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து

தேனாய் இனித்திடக் கேட்டமொழி

என்ற கன்னியில் ‘தேனாய் இனித்திடக் கேட்டமொழி’ என்று கவிஞர் தமிழ்மொழியைத்


நாவில் தித்திக்கும் தேன்போல் இனிமையாக இருக்கும் மொழி என்று உவமைப்படுத்திக்
கூறுகிறார். தாயானவள் சிறுவயது முதலே தன் குழவியின் சின்னதொரு செவியில்
தேன்போல் இனிக்கும் தமிழ்மொழியினைக் கொண்டு நல்ல கருத்துகளைச் சொல்லி நலமாய்
வாழ்ந்திட வழிவகுக்கிறாள். தமிழ் தேன்போன்று இனிப்பானது என்ற வர்ணணையில்
தமிழ்மொழிக்கும், தேனிற்கும் தொடர்பு ஏற்படக் காரணம் அவற்றிடையே காணப்படும்
சிறப்பு வாய்ந்த தன்மையே ஆகும். ‘தேனாய் இனித்திடக் கேட்டமொழி’ என்று இந்த
வரியில் போன்ற என்ற சொல் நீங்கியதால் இஃது உவமை அணியாகக் கூறப்பட்டுள்ளது.

3.3 உயர்வுநவிற்சி அணி

உயர்வுநவிற்சி அணி என்பது ஒன்றைச் சொல்லும் பொழுது, உள்ளதை


உள்ளவாறு கூறாமல், அதனைக் கேட்போர் வியக்கும் வகையில் அவர் மனத்திரையில் ஓர்
உருவம் பதியுமாறு பல மடங்கு உயர்த்திக் கூறுவது ஆகும். கவிஞர், தாம் கருதிய ஒரு
பொருளினது அழகை உவந்து சொல்லும் பொழுது, உலகவரம்பைக் கடவாதபடி கவிதையை
வாசிப்போர் வியக்கும்படி சொல்லுவதும் உயர்வுநவிற்சி அணியாகும். உயர்தனிச்
செம்மொழி என்று உயர்வாகப் போற்றப்படுவது தமிழ்மொழியே ஆகும். இந்தச் சிறப்பு
வாய்ந்த தமிழ்மொழியைக் கவிஞர் மேலும் மிகைப்படுத்திக் கூற இந்த உயர்வுநவிற்சி
அணியைக் கவிதையில் பயன்படுத்திள்ளார். காட்டாக,

தவிப்புடன் உன்னைக் கொஞ்மொழி – அது


தரணியில் எதையும் மிஞ்சுமொழி

என்ற கன்னியில் தன் குழந்தையைக் கண்டவுடன் தாய் தந்தை மறந்தே மனம் தவித்துத்
தாய்மொழியில்தான் கொஞ்சுகிறார். அத்தகைய கொஞ்சுமொழியே இப்புவியில் எந்தவொரு
மொழியையும் மிஞ்சுமொழியாக உள்ளது எனக் கவிஞர் புகழாரம் சூட்டுகிறார். அஃதாவது,
தாய்மொழியான தமிழ்மொழியில் தாய் தன் குழந்தையைக் கொஞ்சுவது இப்புவியில்
காணப்படும் அனைத்து மொழிகளையும் மிஞ்சுமொழியாகத் தமிழ்மொழி அமைவதாகக்
கவிஞர் உயர்வு நவிற்சி அணியினைப் பயன்படுத்தி நயம்படக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, இந்தக் கவிதையில் மற்ற சில வரிகளிலும் கவிஞர் உயர்வுநவிற்சி


அணியைப் பயன்படுத்தியுள்ளார். காட்டாக,

ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்


ஆன்மா உணர்மொழி அந்தமொழி

என்ற கன்னியில் இப்புவியில் தோன்றிய பல்லாயிரக்கணக்கான மொழிகளைப் பேசத்


தெரிந்தாலும், அத்தகைய ஆன்மா உணர்வுடன் கலவையாகும் மொழியாகத் திகழ்வது
தாய்மொழியான தமிழ்மொழி எனக் கவிஞர் சுட்டிக்காட்டுகிறார். அஃதாவது, ‘ஆயிரம்
மொழி’ என்று கூறுவது நாம் தினசரி வாழ்க்கையில் ஒரு மொழியை மட்டும் பேசுவது
கிடையாது மாறாக ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளையே பேசுகின்றோம். இவ்வாறு நாம்
ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவதையே கவிஞர் உயர்வுநவிற்சி அணியின் வழி
ஆயிரம் மொழி என்கிறார்

3.4 தன்மை நவிற்சி அணி

இருப்பதை இருக்கின்றபடி வருணிப்பது தன்மை அணி ஆகும். இதை, தன்மை


நவிற்சி அணி என்றும் அழைப்பதுண்டு. இவ்வணியில் ஒரு பொருளின் தன்மையை
மிகைப்படுத்தியோ அல்லது உயர்வாகவோ கூறமால் உள்ளதை உள்ளாவாறு அழகுப்படக்
கூறுவதாகும். வருணிக்கப்படும் பொருளை நேரில் பார்ப்பதுபோல் தோன்றும்படி கூறும்
வகையில் அமைவது இவ்வணி. ஐயா சீனி நைனாவும் அவரது கவிதையில் இந்த
அணியைப் பயன்படுத்தியுள்ளார். காட்டாக,

தாய்மொழி என்பது தாயின்மொழி – அது


தாயும் நீயும் பேசும்மொழி
என்ற கன்னியில் இத்தரணியில் தோன்றிய ஒவ்வொரு மானிடனும் தன் தாய் வழி வந்த
மொழியையே தான் முதல் மொழியாகப் பேசுகின்றான். அச்சிறப்பினைப் பெற்ற
மொழியையே கருவறையிலிருந்து தாயும் சேயும் தாங்கள் வாழநாள் முழுவதும்
பேசுகின்றனர். அஃதாவது, ஒவ்வொரு மனிதனும் தன் தாய் வழி வந்த மொழியையே முதல்
கற்று பேசுகிறான் என்பதை உயிர்த்தியோ, மிகைப்படுத்தியோ கூறாமல் உள்ளதை
உள்ளாவாறு வருணித்துக் கவிஞர் கூறுகிறார்.

3.5 முரண் அணி

முரண் அல்லது விரோத அணி என்பது ஒன்றுகொன்று மாறுபட்ட சொல்லும்,


பொருளும் வருவது ஆகும். இந்த முரண் அணியில் சொல் முரண், பொருள் முரண் என
இரு வகைப்படும். அவ்வகையில் கவிஞர் சீனி நைனா அவர்களும் தன் கவிதையில் இந்த
முரண் அணியைப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக, பொருள் முரண் அணியைக்
கையாண்டுள்ளார். பொருள் முரண் என்பது பொருள்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு
அமைத்தல் என்பதே ஆகும். காட்டாக,

அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்


அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு
என்ற வரிகளில் அமிழ்தான தமிழ்மொழியை உரிமையாய்ப் பெற்றவர்களான நாம் அதைப்
பயன்படுத்தாவிடில் அது பெரும் அவமானாகும் எனக் கவிஞர் நிணைவுறுத்துகிறார்.
பைந்தமிழான தமிழ்மொழியைக் கற்பதே நாம் செய்த தவப்பேறு என்று கவிஞர்
எடுத்தியம்புகிறார். பொருள் முரண் அணி என்ற அடிப்படையில் இவ்வரிகளை
ஆய்ந்தோமானால், தமிழ்மொழியைக் கற்று பயன்படுத்துவது தவப்பேறு என்று
தமிழ்மொழியைப் பயன்படுத்தாமல் இருப்பது அவமான என்று கவிஞர் பொருள்
முரணாகக் கூறுகிறார்.

பாலசந்திரன், 2015https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/218903/9/09_chapter

%203.pdf

You might also like