You are on page 1of 16

1.

0 முன்னுரை

தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள் மட்டும் அல்லாமல் வேறு சில வகை
எழுத்துகளும் உள்ளன. இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாக
அமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) நிற்கின்றன.
எனவே சார்பு எழுத்துகள் என அழைக்கப் படுகின்றன. உயிர்மெய், ஆய்தம் முதலிய
எழுத்துகள் சார்பு எழுத்துகள் ஆகும்.

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில்


குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால்
ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள்
கூட்டியும் எழுதப்படும்.

இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை


முன்னோர் சார்பெழுத்து என்றனர். இப்படிச் சார்பெழுத்து என்னும் பாகுபாட்டைத் தொல்காப்பியர்
குறிப்பிட்டுவிட்டதால் நன்னூல் சார்பல்லா எழுத்துக்களை முதலெழுத்து எனக் குறிப்பிட்டுத்
தெளிவுபடுத்தியது.

"சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல் எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்று" என்று
தொல்காப்பியர் இதனை விளக்குகிறார். (பிறப்பியல்)

தாய்தந்தையரைச் சார்ந்து குழந்தை வாழ்வது போல இந்தச் சார்பெழுத்துக்கள்


உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் சார்ந்து வாழும்.

உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆகமொத்தம் 30 எழுத்துக்கள் முதல்-எழுத்துக்கள். கி.மு.


ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் சார்பெழுத்துக்கள் மூன்று என்கிறது..
அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன.

ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய நன்னூல் சார்பழுத்துக்கள் 10 வகை எனக்


காட்டுகிறது. இந்த 10 என்னும் பாகுபாட்டுக்குத் தொல்காப்பியத்தில் தோற்றுவாய் உள்ளது.
அவற்றை இப்பட்டியலில் காணலாம்.

……………………………………………………………………

தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம். இது


தன்னிகரற்ற தமிழ் இலக்கண நூலாகவும் தாய்மை இலக்கண நூலாகவும்
விளங்குகிறது. “தொல்காப்பிய(ர்)ம் காலம் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு
ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். கி.மு.எழுநூறு என்பது பலரது
கொள்கை”2 இத்தொன்மையான தொல்காப்பியம்ஃ

                 “எழுத் தெனப் படுப


          அகரமுத னகர விறுவாய்
          முப்பஃ தென்ப
          சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே”  (தொல்.1)

என்று எழுத்தெனப் படுவது அகரத்தை முதலாக கொண்ட பன்னிரண்டும், னகரத்தை


இறுதியாக கொண்ட பதினெட்டும் ஆகிய முப்பதும் ஆகும். அது தனக்கு தனித்து
இயங்கும் இயல்பின்றி பிறவற்றோடு சார்ந்து வரும் மரபையுடைய சார்பெழுத்துக்கள்
மூன்றும் இல்லாவிடத்து என்ற கருத்தை முன்வைக்கிறது.  இளம்ப 10 ரணர் “எழுத்தென்று
சிறப்பித்துச் சொல்லப்படுவன அகரமாகிய முதலையுடையனவும் னகரமாகிய
இறுவாயினையுடையனவுமாகிய முப்பதென்று சொல்லுப; சார்ந்து வருதலாகிய
இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று
என்று சொல்லுப”3 என்கின்றார்.

இவற்றில் ‘சார்ந்துவரன் மரபின்’ என்றதனால் தொல்காப்பியர் சார்பெழுத்துக்களை


வெளிப்படையாய் கூறாது குறிப்பால் கூறிச் சென்றமை புலனாகின்றது.
சார்பெழுத்துக்களைக் குறிப்பால் கூறியதோடு,

                 “அவைதாம்
          குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
          முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”   (தொல்.2)

என்று சார்பெடுத்துக்களின் வகை மூன்று என்பதனையும் சுட்டுகிறார். இவ்வாறாகத்


தொல்காப்பியத்தில் சார்பெழுத்துக்களும் அதன் வகைகளும் இடம்பெற்றிருப்பதை நாம்
உணரலாம்.

………………………………………………………..

தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்று வெளிப்படையாய்


முதன்முதலில் எடுத்தியம்பிய நூல் நன்னூல். இதன்காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டாகும்.
நன்னூலார் எழுத்துக்களை முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்றதனை,

                “மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி


             எழுத்து முதல்சார் பெனவிரு வனகத்தே”  (நன்.58)

என்ற நூற்பாவின் மூலம் அறியலாம்.

  “உயிர்மெய் யாய்த முயரள பொற்றள


             பஃகிய இஉ ஐஒள மஃகான்
           தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்”  (நன்.60)

என்ற நூற்பாவில்
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறு
க்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என பத்து வகையான
சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார். மேலும்,

  “உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுய ராய்தம்


                 …………………………………………..
             ஓன்றொழி முந்நூற் றெழுபா னென்ப”   (நன்.61)

என்ற நூற்பாவின் மூலம் உயிர்மெய்-216, முற்றாய்தம்-8, உயிரளபெடை-


21, ஒற்றளபெடை-42, குற்றியலிகரம்-37, குற்றியலுகரம்-36, ஐகாரக்குறுக்கம்-3, ஒளகா
ரக்குறுகு;கம்-1, மகரக்குறுக்கம்-3, ஆய்தம்-2 ஆக மொத்தம் 369 சார்பெழுத்துக்களின்
விரிகளையும் விளக்கியுள்ளார். தொல்காப்பியர் சார்பெழுத்தின் வகையை மட்டும்
சொல்லிச் சென்றார். நன்னூலாரோ தொகை, வகை, விரிகளையும்
விளக்கியுள்ளமை நினைவு கூறத்தக்கதாகும். “தொல்காப்பியர் செய்கை
யொன்றனையு நோக்கிச் சார்பெழுத்து மூன்றெனக் கருவி செய்தா
ராகலின், இவ்வாசிரியர் (நன்னூலார்) செய்கையுஞ் செய்யுளியலு நோக்கிச்
சார்பெழுத்துப் பத்தெனக் கருவி செய்தாரென்பதும்
உய்த்துணர்க”4 என்றமை, தொல்காப்பியர் புணர்ச்சி விதிகளின்படி சார்பெழுத்து
மூன்றெனவும், நன்னூலார் புணர்ச்சி விதிகளின்படியும், செய்யுள் ஈட்டல்
அடிப்படையிலும் சார்பெழுத்தை பத்தென வகுத்தமையையும்
சுட்டுகிறது. ‘செய்கை’ என்பது புணர்ச்சி விதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்மெய் எழுத்து 

உயிமெய் எழுத்து

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய்
எழுத்து ஆகும்.

எ.கா:
 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய்
பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய்
எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
எ.கா: 
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ
ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ

மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து


ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.

மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்


ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் - நன்னூல்
எ.கா:
வரும் வண்டி
 தரும் வளவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில்


வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல்
மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே
ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்.


மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக்
குறுக்கம் ஆகும்.

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்


நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் - நன்னூல்
எ.கா:
ஔவை
மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரண்டு
மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
குறிப்பு:
ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.

ஐகாரக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து


குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.

ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.

ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு


முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை
மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும்.
இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்


  நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் – நன்னூல்
எ.கா:
 ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
 வளையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
 மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து


யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள
குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே
ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.

குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்


(குறுகிய ஓசையுடைய இகரம்)
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய – நன்னூல்
எ.கா:
நாடு + யாது -> நாடியாது
  கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம்.
வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம்
இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்.

குற்றியலுகரம்
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து
(எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய்
எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை
அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல
எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும்
உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும்.
குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்


(குறுகிய ஓசையுடைய உகரம்)
எ.கா:
நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம்
ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல்,
அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்)
சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே
ஒலிப்பதை காணலாம். 
இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து
போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம்
ஆகும். மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை
1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்றொடர்க் குற்றியலுகரம்
5. மென்றொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு:-
  'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு
மா | டு +அல்ல = மாடல்ல
ம் + ஆ | ட் + உ + 'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)
'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம்
ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும்
வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம்
திரிந்து ட் + உ= டு ஆனது ட் + அ= ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம்
ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்


இ·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.
அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
 உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.
அ·து + இல்லை = அ·தில்லை

இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும் வருமொழி 'இ'
உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும் ஆய்தத் தொடர்க்
குற்றியலுகரம் ஆனது. 

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.
  அரசு + ஆட்சி = அரசாட்சி
நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து
'சு' என்ற உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும்
மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து
அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

வன்றொடர்க் குற்றியலுகரம்
இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.
பட்டு + ஆடை = பட்டாடை

இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு'
என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது
ட்+உ= டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ= டா ஆனதாலும் வன் தொடர்க்
குற்றியலுகரமாயிற்று.

மென்றொடர்க் குற்றியலுகரம்
இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.
சங்கு + ஊதினான் = சங்கூதினான்

 
இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும்
வரும்மொழியுடன் இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன்
இணைந்து சங்கூதினான் என்று ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு
பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.
இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம்
வந்ததாலும் அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு
பெய்துடுத்தான் என்று குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.

ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து
நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண்,
ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில்
குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
 அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
  மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ - நன்னூல்
எ.கா:
  வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
  கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை
  கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை
  மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம். ஒற்றெழுத்து
அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.

உயிரளபெடை
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு
ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை


மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்


 அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ- நன்னூல்
எ.கா:
 1 ஓஒதல் வேண்டும் – முதல்
 2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு – இடை
 3 நல்ல படாஅ பறை – கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம். ஓர்
உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு
இனமான குறில் எழுத்து எழுதப்படும். இதில் செய்யுளிசை அளபெடை, இன்னிசை
அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன.
ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ
என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று
என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.


('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய்


எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா:

அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய் 


இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

உலகில் தோன்றிய தொன்மையான மொழிகளுள் எழிலும் எழுச்சியும்


மிக்கது தமிழ்மொழி. தமிழ்மொழி ‘தொல்காப்பியம்’ முதல் ‘அறுவகை
இலக்கணம்’ ஈறாக பல்வேறு இலக்கண நூல்களைப் பெற்றுள்ளது. இவற்றில்
தொல்காப்பியம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல்
விளக்கம், முத்துவரியம்
ீ , சுவாமிநாதம் முதலான இலக்கண நூல்களில்
சார்பெழுத்துக்களின் தன்மைகளையும் மாற்றங்களையும் ஆராய்வதாய்
இக்கட்டுரை அமைகின்றது.

சார்பெழுத்துக்களின் தன்மைகள்
தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் என்று
தொல்காப்பியத்திற்கும் பின் தோன்றிய இலக்கண நூல்கள் பகுத்துக் கூறுகின்றன.
சார்பெழுத்தானது உயிர் எழுத்துக்கள் போன்று தனித்தும், மெய்யெழுத்துக்கள்
போன்று உயிருடன் கூடியும் வராமல் ஒரு மொழியைச் சார்ந்து வருதலால் இது
சார்பெழுத்தாகும். இவ்வாறு தனித்து இயங்கும் தன்மையற்ற சார்பெழுத்துக்களை
தொல்காப்பியர்,

                 “சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்


          தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
          தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி
          ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்”  (தொல்.101)

என்கிறார்.

சார்பெழுத்துக்களின் பிறப்பு பற்றி கூற வந்த தொல்காப்பியர், மொழிக்கண்


பிற எழுத்துக்களைச் சார்ந்து வருதலின்றித் தாமே தனித்தியங்கும்
இயல்பில்லாதனவாகிய சார்பெழுத்துக்கள் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்கள்
பிறப்பிடத்தே பிறக்கும் என்று சார்பெழுத்துக்களின்
பிறப்பைக்கூறி, சார்பெழுத்துக்களுக்கெனத் தனி பிறப்பியல்பும், தனி இயக்க
இயல்பும் இல்லை என்று கூறுகிறார். இவற்றிற்கு உரைகண்ட
நச்சினார்க்கினியர் “சில எழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத்
தோன்றுதற்கு ஓரியல்பிலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட எழுத்துக்கள்
தம்முடைய பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால் தத்தமக்கு உரிய சார்பாகிய
மெய்களது சிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும்”1 என்கிறார். மேலும்
எழுத்துக்களுக்கு மாத்திரை (ஒலி அளவு) கூறிய தொல்காப்பியர்,

  ‘மெய்யின் அளபே அறையென மொழிப’  (தொல்.11)


 என்று மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை எனக்கூறி,
              ‘அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’  (தொல்.12)

என்று சார்பெழுத்துக்களுக்கும் அரை மாத்திரை (ஒலி அளவு) எனக் கூறுகிறார்.


இவ்வாறாகச் சார்பெழுத்துக்கள் தமக்கென தனி இயக்க இயல்பும் , தனி
பிறப்பியல்பும், தனி மாத்திரையும் (ஒலியளவும்) இல்லாத தன்மைகளைக்
கொண்டவையாக விளங்குகின்றன என்பது புலப்படுகிறது.

சார்பெழுத்துக்களின் மாற்றங்கள்

தொல்காப்பியம் முதலாக (முன்னுரையில்) கூறப்பட்ட சில தமிழ்


இலக்கண நூல்களின் வாயிலாகச் சார்பெழுத்துக்கள் அடைந்துள்ள மாற்றங்களைப்
பின்வருமாறு காண்போம்.

தொல்காப்பியம்
தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது
தொல்காப்பியம். இது தன்னிகரற்ற தமிழ் இலக்கண நூலாகவும் தாய்மை
இலக்கண நூலாகவும் விளங்குகிறது. “தொல்காப்பிய(ர்)ம் காலம் இன்றைக்கு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். கி.மு.எழுநூறு என்பது
பலரது கொள்கை”2 இத்தொன்மையான தொல்காப்பியம்ஃ

                 “எழுத் தெனப் படுப


          அகரமுத னகர விறுவாய்
          முப்பஃ தென்ப
          சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே”  (தொல்.1)

என்று எழுத்தெனப் படுவது அகரத்தை முதலாக கொண்ட


பன்னிரண்டும், னகரத்தை இறுதியாக கொண்ட பதினெட்டும் ஆகிய முப்பதும்
ஆகும். அது தனக்கு தனித்து இயங்கும் இயல்பின்றி பிறவற்றோடு சார்ந்து வரும்
மரபையுடைய சார்பெழுத்துக்கள் மூன்றும் இல்லாவிடத்து என்ற கருத்தை
முன்வைக்கிறது.  இளம்ப 10 ரணர் “எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன
அகரமாகிய முதலையுடையனவும் னகரமாகிய இறுவாயினையுடையனவுமாகிய
முப்பதென்று சொல்லுப; சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும்
அல்லாவிடத்து மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று
சொல்லுப”3 என்கின்றார்.

இவற்றில் ‘சார்ந்துவரன் மரபின்’ என்றதனால் தொல்காப்பியர்


சார்பெழுத்துக்களை வெளிப்படையாய் கூறாது குறிப்பால் கூறிச் சென்றமை
புலனாகின்றது. சார்பெழுத்துக்களைக் குறிப்பால் கூறியதோடு,

                 “அவைதாம்
          குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
          முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”   (தொல்.2)

என்று சார்பெடுத்துக்களின் வகை மூன்று என்பதனையும் சுட்டுகிறார்.


இவ்வாறாகத் தொல்காப்பியத்தில் சார்பெழுத்துக்களும் அதன் வகைகளும்
இடம்பெற்றிருப்பதை நாம் உணரலாம்.

நன்னூல்

தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்று


வெளிப்படையாய் முதன்முதலில் எடுத்தியம்பிய நூல் நன்னூல். இதன்காலம்
கி.பி.12 ஆம் நூற்றாண்டாகும். நன்னூலார் எழுத்துக்களை முதல் எழுத்துக்கள்
சார்பெழுத்துக்கள் என்றதனை,

                “மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி


             எழுத்து முதல்சார் பெனவிரு வனகத்தே”  (நன்.58)
என்ற நூற்பாவின் மூலம் அறியலாம்.

  “உயிர்மெய் யாய்த முயரள பொற்றள


             பஃகிய இஉ ஐஒள மஃகான்
           தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்”  (நன்.60)

என்ற நூற்பாவில்
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், 
ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என பத்து
வகையான சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார். மேலும்,

  “உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுய ராய்தம்


                 …………………………………………..
             ஓன்றொழி முந்நூற் றெழுபா னென்ப”   (நன்.61)

என்ற நூற்பாவின் மூலம் உயிர்மெய்-216, முற்றாய்தம்-8, உயிரளபெடை-


21, ஒற்றளபெடை-42, குற்றியலிகரம்-37, குற்றியலுகரம்-36, ஐகாரக்குறுக்கம்-3, ஒளகா
ரக்குறுகு;கம்-1, மகரக்குறுக்கம்-3, ஆய்தம்-2 ஆக மொத்தம் 369 சார்பெழுத்துக்களின்
விரிகளையும் விளக்கியுள்ளார். தொல்காப்பியர் சார்பெழுத்தின் வகையை மட்டும்
சொல்லிச் சென்றார். நன்னூலாரோ தொகை, வகை, விரிகளையும்
விளக்கியுள்ளமை நினைவு கூறத்தக்கதாகும். “தொல்காப்பியர் செய்கை
யொன்றனையு நோக்கிச் சார்பெழுத்து மூன்றெனக் கருவி செய்தா
ராகலின், இவ்வாசிரியர் (நன்னூலார்) செய்கையுஞ் செய்யுளியலு நோக்கிச்
சார்பெழுத்துப் பத்தெனக் கருவி செய்தாரென்பதும்
உய்த்துணர்க”4 என்றமை, தொல்காப்பியர் புணர்ச்சி விதிகளின்படி சார்பெழுத்து
மூன்றெனவும், நன்னூலார் புணர்ச்சி விதிகளின்படியும், செய்யுள் ஈட்டல்
அடிப்படையிலும் சார்பெழுத்தை பத்தென வகுத்தமையையும்
சுட்டுகிறது. ‘செய்கை’ என்பது புணர்ச்சி விதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கத்தின் ஆசிரியர்; நன்னூலாரின் எழுத்துப் பாகுபாடான


முதல் சார்பு என்பவற்றில் ஒன்றிப்போனாலும் அதன் வகை விரிகளிலே சற்று
வேறுபடுகின்றார் என்பதை,

  “குற்றிய லிகரம் குற்றிய லுகரம்


          ஆய்தமொடு உயிர்மெய் ஈரளபு ஐஒள
          மஃகான் குறுக்கம் உள்ளுறுத்து ஒன்பதும்
           சார்பின் பால என்மனார் அவற்றுள்
          உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு உயிர் அளபுழ்
           ஒற்றளபு பதினொன்று ஒன்றுஒன்று ஏனைய
           ஆயிரு நூற்றுஎண் ணைந்தும் அதன் விரியே”  (இ.வி.5)
                                              
என்ற நூற்பா தெளிவுபடுத்துகிறது. இங்குச் சார்பெழுத்தின் வகையாகக்
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபடை, ஐ
காரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் ஆகிய ஒன்பதையும்; விரியாக
உயிர்மெய்-216, உயிரளபெடை-7, ஒற்றளபெடை-11, குற்றியலிகரம்-1, குற்றியலுகரம்-
1, ஆய்தம்-1, ஐகாரக்குறுக்கம்-1, ஒளகாரக்குறுக்கம்-1, மகரக்குறுக்கம்-1 ஆகிய
இருநூற்று நாற்பதையும் கூறுகின்றார். இவர் ஆய்தக்குறுக்கத்தை ஏற்றுக்
கொள்ளவில்லை என்பதை “ஆய்தக்குறுக்கம் ஒன்றுளது என்றும் அதனொடு கூடச்
சார்பெழுத்துப் பத்தாம் என்னும் அதன் விரித்தொகை முந்நூற்று
அறுபத்தொன்பதாம் என்றும் கூறுவாரும் உளராலோ எனின் என்று காரணம்
5
காட்டி மறுக்கிறார்”  என்பது மூலம் உணரலாம்.

தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர் வரமாமுனிவர்



(தொ.வி.5) நன்னூலாரின் முதல், சார்பு என்ற பாகுபாட்டையும், சார்பெழுத்தின்
வகை 10 என்பதையும் ஏற்றுக்கொண்டு சார்பெழுத்தின் விரியைச் சுட்டாமலே
விட்டுச் சென்றுள்ளார்.

முத்துவரியம்

தமிழில் இயற்றப்பெற்ற ஐந்திலக்கண நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர்


முத்துவரீ உபாத்தியாயர். காலம் கி.பி.19-ஆம் நூற்றாண்டாகும். முத்துவரீ
உபாத்தியாயர் சார்பெழுத்து பற்றி முன்னோர்களிடமிருந்து முற்றிலும்
வேறுபடுவதை,

 ‘சார்புயிர் மெய்தனி நிலையிரு பாலன’   (மு.வ.ீ22)

என்ற நூற்பா சுட்டுகிறது. இதில் ஆசிரியர் சார்பெழுத்து, உயிர்மெய், ஆய்தம் என


இரண்டு வகையாய் கூறியிருப்பது தொல்காப்பியரின் மூன்று
வகையிலும், நன்னூலாரின் பத்து வகையிலும், வைத்தியநாததேசிகரின் ஒன்பது
வகையிலும் சேராது தனித்து நிற்பது ஆராயத்தக்கதாகும்.

சுவாமிநாதம் இலக்கண விளக்கத்தை ஒட்டிக் கூறினும் அது கூறாத


ஆய்தக் குறுக்கத்தையும் சேர்த்துக் கொண்டதால் வகை 10, விரி 241 என்று
இலக்கண விளக்கத்தைக் காட்டிலும் ஒன்று எண் மிகையாக உள்ளமை
குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களைத் தொல்காப்பியம்


மூன்றெனவும்; நன்னூல் பத்து எனவும், விரி முந்நூற்று
அறுபத்தொன்பதெனவும்; இலக்கண விளக்கம் ஒன்பது எனவும், விரி இருநூற்று
நாற்பதெனவும்; தொன்னூல் விளக்கம் பத்தெனக்கூறி விரி
கூறாமலும், முத்துவரியம்
ீ இரண்டென முன்னை நூல்களிலிருந்து
முரண்பட்டும்; சுவாமிநாதம் இலக்கண விளக்கத்தை ஒன்றி
வந்தாலும்; வகையிலும், விரியிலும் ஒன்று மிகைப்பட வந்துள்ளமை அதன்
மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு மாறுபட்டிருப்பினும், இவை
அனைத்தும் தொல்காப்பியத்தைச் சார்ந்தே அமைந்திருப்பது அவற்றை
நுண்மையாக நோக்கும் பொழுதே புலப்படும்.

நன்னூலில் சார்பெழுத்துகள் தொல்காப்பிய மரபைப் பின்பற்றி எழுந்தாலும் சார்பெழுத்தை


வகைப்படுத்தும் பொழுது சற்று மாறுபட்டுக் காணப்படுகின்றது. மேற்கூறிய மூன்றும்
நன்னூலில் அப்படியே இடம்பெற்றுள்ளதால்; அம்மூன்றைத் தவிர்த்து மற்றவை இங்கு
விளக்கப்படுகின்றன.

“மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி


எழுத்தது முதல் சார் பெனவிரு வகைத்தே” (நன்.எழு.58)

மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து. இது


முதல் சார்பு என இருவகைப்படும்.

“உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு


அஃகிய இ உ ஐ ஒள மஃகான்
தனிநிலை பத்தும் சார்பு எழுத்தாகும்” (நன்.எழு.60)

தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறிய சார்பெழுத்துகளைத் தொகுக்கும் பொழுது


வகைகளும் அவற்றின் நிலைகளும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. தொல்காப்பியர் கால
வழக்கிற்கு ஏற்பச் சார்பெழுத்துகளை வகைப்படுத்தியுள்ளார் எனவும் நன்னூலார் தம் கால
வழக்கிற்கேற்ப வகைப்படுத்தியுள்ளார் எனவும் கூறலாம். மொழியின் வரலாறு பல்வேறு
காலக்கட்டங்கள் கொண்டது. ஒரு காலத்தில் வழங்கிய சொற்களை அடுத்த
காலக்கட்டத்தில் காண முடியாது. கால வளர்ச்சியில் எத்தனையோ புதுச்சொற்கள்
உருவாவதும் பல சொற்கள் வழக்கு இழப்பதும் கால இயற்கையாகும். இத்தகைய
நிலைகளைத் தொல்காப்பியத்திற்குப் பின் எழுந்த நன்னூலிலும் காணமுடிகிறது.
புதிய சிந்தனை ஓட்டத்தால் நுண்ணிய வேறுபாடுகளை விளக்கப் புதிய சொற்கள்
தேவைப்படுவது காலத்தின் தேவையாகும். ஆகவே காலத்திற்கு ஏற்ப மொழிவளர்ச்சி
நிலைகளையும் இலக்கண மாற்றங்களையும் மொழியியல் உணர்வுகளையும் உள்வாங்கித்
தொல்காப்பியத்திற்குப் பின்வந்த நன்னூலும் இலக்கணத்தை அமைத்துள்ளதை உணர
முடிகிறது.
துணைநின்றவைதொல்காப்பியம், கழக வெளியீடு நன்னூல், கழக வெளியீடு
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-7
கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி

You might also like