You are on page 1of 61

பாரம்பரிய இந்திய இசை

கருவிகள்
இவை உலகின் மிகப் பழமையான இசைக்கருவிகளாகும்
யாழ் 

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு


நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக
இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி,
மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர்
வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி
கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழி வந்த வீணை இன்று நரம்பிசைக்
கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் கேள்வி என்ற பெயரையும் கொண்டுள்ளது
குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து
அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். இந்த வில்லே
வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி
நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக
நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.
யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க
இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை
நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும்
பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ்,
மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.
பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக்
கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்)
ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
யாழின் அமைப்பு
 
யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி  தணக்கு எனும் மரத்தால்
செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத்
தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக
நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில
யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின்
வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில்
வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர். சங்க நூல்கள்
யாழின் உறுப்புகளாக
யாழ் வகைகள்
தம்புரா

தம்புரா சுருதிகருவிகளில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு, தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது. நன்கு


சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனதை ஒன்றுபடுத்தி இறை தியானத்தில் ஈடுபடுவோரும்
உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகிறது. வாய்பாட்டுக்கும், வீணைக்கும், வயலினுக்கும்
துணைக்கருவியாக தம்பூரா பயன்படுகிறது.
வீணை போன்ற தோற்றமுடைய தம்பூராவின் அடிப்பகுதி குடம் போலவும் மேல் பகுதி நீண்டும் இருக்கும். குடத்தின்
குறுக்களவு 10 முதல் 18 அங்குலமும், தம்பூராவின் நீளம் மூன்றரை முதல் ஐந்து அடிவரையிலும் இருக்கும். அடியில்
உள்ள குடமானது பலா மரத்தாலோ அல்லது சுரைக்காயாலோ செய்யப்பட்டதாக இருக்கும். தப்பூராவின் வளைவான
பகுதி குதிரை எனப்படும். மேல் பக்கத்தில் 4 தந்திகள் செல்லும். இதில் மூன்று தந்திகள் இரும்பாலும், ஒன்று
பித்தளையாலும் ஆனது. நடுத் தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிப்பவை. 4 தந்திகளையும் ஒன்றாக சேர்த்து
ஒலிக்கும்போது முதன்மை மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டுக்கும் இடையில் துண்டு நூல்களை செலுத்தி
வைத்துக் கொள்வர். இது சீவா எனப்படும். சுருதியை சரியாக சேர்க்க ஏதுவாக தந்திகளில் மணிகள் கோர்க்கபட்டிருக்கும்.
தம்பூராவின் உச்சியில் உள்ள பிருடைகளை பயன்படுத்தி தந்திகளைத் தளர்த்த இயலும்.
பெரும்பாலும் தம்பூராவை செங்குத்தாக நிறுத்தி விரல்கலால் தந்திகளை வருடி வாசிப்பர். 'ரிக ரிக' என வண்டின்
ரீங்காரம்போல் இது கேட்கும்.
உதாரணம்
வீணை

வீணை  ஒரு நரம்பு இசைக் கருவி. மிக அழகி இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல
நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை
வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட
ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது. குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம்,
மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.
வீணையின் அமைப்பு

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3
தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில்
சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள்
உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4
வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள
வளையங்களில்முடியப்பட்டு, குதிரையின் மேலும்,  மெட்டுக்களின் மேலும்சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.
நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப்
பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி
குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.
தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும்
குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல
ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.

படம்
நாதசுவரம்

நாதசுவரம்  என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும்.


இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.
சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும்
இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும்
இயல்பினைக் கொண்டது.
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு
இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு
நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற
பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப்
பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம்
என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.
பல்லாண்டுகளாக திமிரி என்னும் நாகசுவரமே வாசிக்கப்பட்டது. இதன் நீளம் குறைவாக இருக்கும். இதில் சில மாற்றங்களோடு நாகசுவர
மேதை டி. என். ராஜரத்தினம் பிள்ளை அறிமுகப்படுத்தியதுதான் தற்போது புழக்கத்தில் உள்ள பாரி நாகசுவரம் ஆகும். திமிரி நாகசுவரத்தைவிட
பாரி நாகசுவரம் நீளமாக இருப்பதுடன், இசைக் கலைஞர்களால் நீண்ட நேரம் வாசிக்க சுருதி அளவுடன் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்
அமைப்பு

இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது ஆகும். எனினும் இது ஷெனாயை விட அளவில்
பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த
அடிப் பகுதியையும் கொண்டது. நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள்
வருமாறு:

வகைகள்
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும்,
ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
படம்
சித்தார்

சித்தார் நரம்பு இசைக்கருவிகளுள் ஒன்று. இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற


இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம்.
மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி,
இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.
படம்
பறை
பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக்
குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458).
பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே
கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து, தோலிசைக்
கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்.
தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது. "பறை" என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர்
அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என முனைவர் வளர்மதி
தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்.
படம்
எக்காளம்

எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு
காற்றிசைக் கருவி ஆகும்.

எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர்


எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின்
சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.
எக்காளமானது ஆறு அடி நீளம் கொண்டது. சுமார் நான்கு கிலோ எடை இருக்கும். இதை மூன்று அல்லது நான்கு
பகுதிகளாக பிரித்துவைத்துக் கொள்ளலாம். இது பித்தளை அல்லது தாமிரக் குழாய்களால் செய்யப்பட்டது. இது சங்கு,
நாகசுரம் ஆகியவற்றின் இசைக் கலவை ஆகும். இதில் துளைகள் ஏதும் இருக்காது. கிராமிய பஞ்ச வாத்தியம் என்று
அழைக்கப்படும் ஐந்து இசைக் கருவிகளில் இதுவும் ஒன்று.[1]

தமிழகத்தில் வாழும் தொட்டிய நாயக்கர் இந்த எக்காளத்தை ஊதியபடியே ஆடும் எக்காளக் கூத்து என்றும் நாட்டுப்புறக்
கலை முற்காலத்தில் இருந்தது. தற்போது இக்கலை வழக்கொழிந்துவிட்டது.
படம்
கிடுகிட்டி

பிற பெயர்கள்
கிடுகிட்டி, கிடிகிட்டி,கிரிகிட்டி என வெவ்வேறுவிதமாக இந்த இசைக்கருவி அழைக்கப்பட்டுள்ளது[2].

அமைப்பு
இது இரு கருவிகள் இணைந்த இசைக்கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.
[3]

பொய்க்கால் ஆட்டம், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உறுமியிசை, மாட்டுகலியாணக் கூத்து போன்றவற்றில் இக் கருவி இசைக்கப்படுகிறது.

கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள்[2]


நாகப்பட்டணத்திற்கு அருகிலுள்ள கீழ்வேளுர் எனும் ஊரில் கேடிலியப்பர் எனும் கோயில் உள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளில் கிடிகிட்டி இசை
முக்கிய இடம்பெற்றது. இதன்காரணமாக இவ்வூரில் கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள், தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சுப்பிரமணியப் பிள்ளை (1787 - 1846), சண்முகம் பிள்ளை (1835 - 1897), ராமையா பிள்ளை (1876 - 1955) எனும் தலைமுறைக் குடும்பக்
கலைஞர்கள் குறிப்பிடத்தக்கோர். இவர்களுக்குப் பிறகு வந்த முத்துவீர் பிள்ளை, கோவிந்தராஜ பிள்ளை என்போருக்கு கிடிகிட்டி வாசிக்கத் தெரியும்.
எனினும், தவிலிசைக் கலைஞர்களாக இசைத் துறையில் இருக்கிறார்கள்.

கீவளூர் சுப்பராய பிள்ளை, பந்தணைநல்லூர் கோவிந்தபிள்ளை , தில்லையாடி ஸ்ரீநிவாச பிள்ளை ஆகியோர் வல்லுனர்களாக விளங்கியுள்ளனர்
படம்
தாரை

தாரை எனப்படுவது 12 அடி வரையான


நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ்
ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக்
கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான,
இடை நிற்காத இசை தருவது.
கைம்முரசு
கைம்முரசு இணை (தபேலா அல்லது தப்லா அல்லது இருமுக முழவு) இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம்.
கடந்த 200 ஆண்டுகளிலேயே கைம்முரசு இரண பிரபல்யம் அடைந்துள்ளது. கச்சேரியின் பிரதான பாடகர் அல்லது
வாத்தியக்கருவியை இசைப்பவர் கைம்முரசு இணை ஜதிகளை (டேக்காக்களை) அனுசரித்தே பாட அல்லது வாத்தியத்தை இசைக்க
வேண்டும்.

200 கி.மு. சிற்பங்கள் பஜே குகைகள், மகாராஷ்டிரா, இந்தியா தபலா மற்றும் நிகழ்ச்சி மற்றொரு நடன விளையாடி ஒரு பெண்
காட்டும்.
கைம்முரசு இணை 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான்
என்றும் அழைக்கப்படும். பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும்.
இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும்.

உருளை வடிவான மரத்துண்டுகள் கைம்முரசு இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும்


நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம். தபேலா 1 அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் 1 அங்குலம்
அல்லது 2 அங்குலம் தயானை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த பாயாவில்
பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும். [[|thumb| ஹார்மோனியம், தப்லா வாசித்தல்]]

வாசிக்கும் முறை
கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது
தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக
வாசிக்கப்படுகிறது
படம்
கொம்பு

கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில்
இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.

கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும்
செய்யப்படுகிறது.[1] தற்போது வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களில் கொம்பு செய்யப்படுகிறது. பித்தளையால் செயபட்ட
கொம்பைவிட வெண்கல வார்பினால் செய்யப்பட்ட கொம்பில் ஒலி அதிர்வு கூடுதலாக இருக்கும். இரண்டு பாகங்களை பொருத்தி
வாசிக்கப்படும் கொம்பு ஆங்கில எழுத்தான S வடிவத்தில் வைத்து வாசிக்க முடியும். அதே போல அதை மேல் நோக்கி திருப்பி
அரைவட்ட வடிவிலும் வாசிக்க முடியும்.[2]

கொம்பு இசைக் கருவி சுமார் நான்கு முதல் ஆறு அடிவரை இருக்கும். இதை இசைக்கும் கலைஞர்கள் தங்கள் முழு பலத்தையும்
பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம் யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பில் உருவாகிறது. அக்காலத்தில்
மன்னர் வெளியே வந்தாலும், போரில் வெற்றி பெற்றாலும் கொம்பு ஊதப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான
கொம்பு தற்போது சில கோயில் விழாக்களில் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்தக் கருவியை வாசிக்கும் கலைஞர்களின்
எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது
படம்
ஷெனாய்

ஷெனாய் அல்லது செனாய் என்பது நாகசுரம் போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி. வட இந்தியாவில் திருமணம் போன்ற
நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில்
இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில்
வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.

உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா,
ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும்
இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய்
வாசித்தார்.08:26 PM
படம்
சிலம்பு

சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில்
அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த்
தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறக்காணலாம்.

சிலம்பு மற்றும் கொலுசு அணிந்திருக்கும் தமிழ் நாட்டுப் பெண்ணின் பாதம்


சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும்
தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த
மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும்.
நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது.
உடுக்கை

உடுக்கை (ஆங்கிலப்பெயர்கள்:Udukai, Udukku) என்பது பல்வேறு தமிழக நாட்டுப்புறச் சடங்குகளில்


பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக
மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக்
கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும்
விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்கு பறை என்றும் துடி என்றும் அழைப்பர்.
கரகம் ஆடும் போதும், பஜனைகளின் போதும், பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது
முழக்கப்படுவதுண்டு.

இது ஒரு இந்திய பாரம்பரிய தாள இசைக் கருவி ஆகும். இது, தமிழ்நாட்டில், தோன்றியதாக
கருதப்படுகிறது. இது, முறையே தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு
பகுதிகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. டமாரம் மற்றும் இடக்கை போன்ற தாள இசைக் கருவிகள்
உடுக்கையை ஒத்ததாக உள்ளது. ஆனால் அளவில் வேறுபடுகிறது.
பம்பை (இசைக்கருவி)

பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று


வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள்.ஆரம்ப காலத்தில் பம்பையானது வெண்கலம் மற்றும்
பித்தாளை போன்ற உலோகத்தால் பயன்படுத்தி வந்தனர் ஆனால் இப்போது இரும்பு(கலாய்) தகடு போன்ற உலோகத்திலும்
பயன்படுத்தி வருகின்றனர்.இதில் நையாண்டி மேளம் என்று சொல்லப்படும் ஒரு வகை பிரிவினர் மரத்தால் (பலா,
வேங்கை)செய்து இசைத்து வருகின்றனர்.. பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல்
நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற
மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது. மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை
முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு
நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு உறுமி, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம்
கொண்டதாகும். தமிழ் நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது.
சங்கு (இசைக்கருவி)

சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும்
பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் சுவாமி வழிபாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும்
இசைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் சென்ற இடங்களிலெல்லாம் சங்கநாதம் முழங்கியதாக பெரியபுராணத்தில் குறிப்புகள்
உள்ளன. சிவனடியார்கள் இந்த இசைக்கருவியை பஞ்ச வாத்தியம் என்றும் கைலாய வாத்தியம் என்றும் அழைக்கின்றனர்
படம்
கைம்முரசு இணை

கைம்முரசு இணை 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது
தயான் என்றும் அழைக்கப்படும். பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும்.
இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும்.
உருளை வடிவான மரத்துண்டுகள் கைம்முரசு இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும்
நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம். தபேலா 1 அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் 1
அங்குலம் அல்லது 2 அங்குலம் தயனை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த
பாயாவில் பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும். [[|thumb| ஹார்மோனியம், தப்லா வாசித்தல்]]
கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது
தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக
வாசிக்கப்படுகிறது.
படம்
தாளம் (இசைக்கருவி)

தாளம் எனப்படுவது ஒரு கஞ்ச வகை தமிழர் இசைக்கருவி. இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு


பெயர்களும் உள்ளன. இது கைக்கு அடக்கமான வட்ட வடிவிலான வெண்கலத்தால் ஆன இரு
பாகங்களைக் கொண்டது. இரண்டையும் சேர்ந்து தட்டி தாளம் எழுப்புவர். பல்வேறு இசைக்கருவிகள்
சேர்ந்து வாசிக்கப்படும் போது இசையின் கால அளவுகளை நெறிப்படுத்தும் கருவி தாளம் ஆகும்

படம்
முரசு

முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில்இந்த

முரசுகளில் மூன்று வகை உண்டு.


வீர முரசு
தியாக முரசு
நியாய முரசு
 மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
வீர முரசு
இது போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது. போருக்குச் செல்லும் முன்னும், போர்
நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த
முரசிலிருந்து வெளிவரும் ஒலி வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு
வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த
மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்

தியாக முரசு
இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க
அமைக்கப்பட்ட முரசு இது.

நியாய முரசு
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட
முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி
இது போன்றது)
உறுமி மேளம்

உறுமி மேளம் ஒரு தாள தோல்இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்பு இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும்


பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம்
சிறப்பிடம் பெறுகிறது. இன்று, மலேசியாவில் உறுமி மேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அங்கே பல உறுமி
மேளக் குழுக்கள் உள்ளன.
இந்த இசைக்கருவி உறுமி மேளம், நையண்டி மேளம் ஆகிய இசைக்குழுக்களில் இடம்பெறுகிறது. தேவராட்டம், மயிலாட்டம், புலி
ஆட்டம், காவடியாட்டம் ஆகிய நிகழ்த்துக் கலைகளிலும், சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும்
இசைக்கப்படுகிறது. தேவராட்டக் கலைஞர்கள் இந்தக் கருவியை தேவதுந்துபி என்று அழைக்கின்றனர். இந்தக் கருவி சிவனால்
உருவாக்கப்பட்டது என்றும் தேவருலகத்தில் இசைக்கப்பட்டது என்றும் அவர்கள் நம்புகின்றனர். உறுமி மேளம் இரண்டு முகங்கள்
உடையது. இடை சுருங்கிய ஒரு தோற் கருவி ஆகும். இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்தக் கருவியின் ஒரு
முகப்பகுதியை நீளமான வளைந்த குச்சியைக் கொண்டும் தேய்த்தும், மறுபக்கத்தில் நேரான குச்சியைக் கொண்டு தட்டியும் ஒலி
எழுப்பப்படுகிறது. இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமுவது போல இசையெழுப்புவர். இந்தக்
கருவியை ஒரு துணி கொண்டு கட்டி தோள்பட்டைக்கு குறுக்கே தொங்கவிட்டு நடந்தும் நின்று கொண்டும் இசைப்பர்
கஞ்சிரா

கஞ்சிரா (Kanjira) சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்.


இவ்வாத்தியம் பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது
தாடப்பலகை, கனகதப்பட்டை, டேப் தாஸ்ரிதப்பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும்.
டேப் எனும் வாத்தியக் கருவி கஞ்சிராவுக்கு முன்னோடியாக இருந்தது. அது கஞ்சிராவைவிட அளவில் பெரியதாக இருக்கும்.
கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப
தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார்.
கஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக
இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த இசைக்கருவியானது வட்டவடிவ மரச்சட்டத்தில் இறுக்கமாக ஒட்டபட்டிருப்பதால் அதிலிருந்து வெளிப்படுத் நாதம் உச்ச
ஸ்தாயில்தான் இருக்கும். இதை மட்டப்படுத்த வாத்தியத்தின் பின்பக்கத் தோலில் நீரைத் தடவி அடர்த்தியான ஒலியை
வரவழைப்பர். ஒரு கையால் வாசிக்கப்படும் இதில் சுருதியை சேர்க்க முடியாது

You might also like