You are on page 1of 3

மூன்று நாடகங்கள்

1.0 முன்னுரை

மு.வரதராசன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான புத்தகம் மூன்று நாடகங்கள் ஆகும்.


இதில் இளங்கோ, திலகவதியார் மற்றும் வீண் கனவு என மூன்று நாடகங்கள் உள்ளடங்கும். இம்மூன்று
நாடகங்களும் சமுதாயக் கருத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

2.0 இளங்கோ
2.1 ஒருவரின் குடும்ப பிண்ணனியைக் கொண்டு அவரை குறை கூற கூடாது.

இளங்கோவடிகள் அரச குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் சேர மன்னனின் தம்பி.


சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகளே. அதுமட்டுமின்றி இவர் ஒரு துறவி ஆவார்.
இந்நாடகத்தில் வரும் துறவி3, இளங்கோவடிகள் துறவு பூண்டது வெறும் வெளிமயக்கத்திற்காக என்று
மற்ற துறவிகளிடம் குறை கூறுகிறார். அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்ததால் துறவு பூண்டால் பிறர்
போற்றுவர் என்பதறகாகத் துறவியானர் எனக் கூறுகிறார்.

2.2 துறவிகள் இல்லறத்தைப் போற்றுவது தவறில்லை.

துறவியாக விளங்கும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அதிகமாக இல்லறத்தைப் பற்றி


போற்றி எழுதியுள்ளார். மேலும், இக்காப்பியத்தில் இறுதியில் கோவலனின் தந்தை, கண்ணகியின்
தந்தை, மாதவி, மற்றும் மணிமேகலை யாவரும் துறவு பூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்
அப்படி அமைத்ததற்குக் காரணம் இல்லறத்தைப் பற்றி மட்டுமே பேசினால் இந்நூலை நாடு ஏற்காது
என்பதற்காக அவ்வாறு அமைத்திருப்பதாக துறவி3 கூறுகிறார். மேலும், இக்காப்பியத்தில் ஒரு
துறவியே இல்லறத்தைப் போற்றுவதைப் போன்று எழுதியுள்ளார். அக்கூற்று மிகவும் தவறான கூற்று என
துறவி3 கூறுகிறார்.

2.3 ஒற்றுமையோடு செயல்பட்டால் எதையும் உருவாக்க இயலும்.

இளங்கோவடிகள் தம்முடைய காப்பியத்தில் தமிழ்நாடு, தமிழகம் என ஆங்காங்கே


குறிப்பிட்டிருப்பார். அது எதை குறிக்க வள்ளது என்றால், மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்
மூவரும் ஒன்று சேர்நத
் ால் தமிழகத்தை உருவாக்க இயலும் என்பதைக் குறிக்கிறது. மூவரும்
ஒன்றிணைந்து தாங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் தமிழர் கலைகளையும் தமிழ் பண்பாடுகளையும் பரப்ப
வேண்டும். அப்படி செய்தால் மூன்று நாடும் இணைந்த ஒரு நாடாக தமிழ்நாட்டை உருவாக்க இயலும்
் வே இக்காப்பியத்தை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார்.
என்பதை உணர்தத
3.0 திலகவதியார்

3.1 எத்துணை இடர்கள் வந்தாலும் மனம் தளரக்கூடாது.

திருமண வயதில் இருந்த திலகவதியாரும் அவரது தம்பியும் தாய் தந்தை இருவரையும்


இழந்துவிட்டனர். அத்துயரத்திலிருந்து வெளியேறி இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை
அதற்குள்ளே திலகவதியாருக்கு மற்றொரு துன்ப செய்தி. அவருக்காகத் தன் பெற்றோர் பார்தது

வைத்திருந்த மணமகன் போரில் மாண்டுவிட்டார் என்று செய்தி வந்தது. இதைக் கேள்வியுற்ற
திலகவிதியார் மனம் தளர்ந்து தாமும் இறந்து போக எண்ணினார். ஆனால், சிறுவனாக இருக்கும் தம்
தம்பிக்காகத் தன் எண்ணத்தைக் கைவிட்டார். மேலும், அவருடைய தோழியான பூங்கொடியும் மனம்
தளராமல் இருக்கும் படி அறிவுரை கூறினார். எனவே, எத்தணை துன்பங்கள் வந்தாலும் மனம் தளராமல்
இருக்க வேண்டும்.

3.2 பணம் வாழ்வின் முக்கிய பங்காக அமையாது

திலகவிதியாரின் தந்தை புகழனார் சேர்த்து வைத்திருந்த செல்வங்களைக் கொண்டு தம்


தமையனோடு நல்ல செல்வாக்கோடு இருவரும் வாழ்ந்திருக்களாம். ஆனால், பணம் ஒன்றே வாழ்வின்
முக்கிய பங்காக அவர்கள் எண்ணாததால் தன் தந்தை சேர்த்து வைத்த செல்வங்களை எல்லாம்
மருள்நீக்கியார் வாரி வாரி வழங்கி சிறந்த ஆறங்கள் செய்தார்.

4.0 வீண் கனவு

4.1 என்றும் தமக்கு நிகர் எவரும் அல்ல என்று எண்ண கூடாது.

முதலாம் இராசேந்திரனான சோழ வேந்தன் ஒரு காலத்தில் தமக்கு நிகராக யாரும் இல்லை என
பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால், அவரின் காலம் முடிவுறும் நேரத்தில் தான் கொண்ட பெருமிதம்
தவறு என உணருகிறார். மேலும், சோழ மன்னன் தன் சேனைத் தலைவரிடம் ‘’ நான் இந்த நாட்டை
ஆளப் பிறந்தவன். இந்த நாடு என் நாடு என்று பெருமைப் படலாம். எனக்கு உரிமை உண்டு. ஆனால்,
பிறர் நாட்டைப் பற்றி ஏன் குறைவாக எண்ண வேண்டும்? பாண்டியர் சேரர் ஆட்சியைப் பற்றி ஏன்
குறைவாக எண்ண வேண்டும்?” என வினவுகிறார்.
4.2 பிறரை துன்பத்துக்கு உள்ளாகி நாம் மகிழ கூடாது.

சோழரும் சேனைத் தலைவரும் சேர்நது


் பல போர்களை நடத்தியுள்ளனர். அப்பொழுது,
போர்க்களத்தில் சிற்றரசர்களையும் சேனைத் தலைவர்களையும் கொன்றனர்; உயிர்களைக்
கொளுத்தினர்; மங்கையரின் அலறலைக் கேட்டு மகிழ்ந்தனர் மற்றும் பல. இவை அனைத்தையும் தம்
இறுதி படுக்கையில் இருக்கும் சோழ வேந்தர் நினைத்து வருந்துகிறார்; வேதனை கொள்கிறார்.

5.0 முடிவுரை

எனவே, மு.வரதராசன் இயற்றிய இந்த மூன்று நாடகங்களில் பல்வேறு சமுதாய கருத்துகளை


அடக்கியுள்ளார். இந்த மூன்று நாடகங்களையும் படித்து அதன் வழி நடக்கும் ஒரு மனிதன் சிறந்த
பணபுள்ளவனாகத் திகழுவான்.

You might also like