You are on page 1of 1

நிஷாந்தினி த/பெ புவனேஸ்வரன் (வி17) (மி15)

பரோட்டா யானை

கொம்பு மொளச்ச யானையொன்னு

கொத்து பரோட்டா கேட்டுச்சாம்,


வம்பு பண்ணி ஊருக்குள்ள

வாலையாட்டித் திரிஞ்சிச்சாம்!

ஒட்ட கந்தான் ஓரமாக

ஓட்ட லொண்ணு நடத்திச்சாம்,


எட்டு ரூபா காசுவாங்கி

இட்லி தோச வித்துச்சாம்!

பக்கம் வந்து யானை நின்னு

பரோட்டா தான்னு கேட்டுச்சாம்,

பரோட்டா தா! பரோட்டா தா!


சுக்கு சேர்த்து ஒட்டகமும்

சூடாக் சுட்டு தந்துச்சாம்!

ஆவலாகச் சாப்பிட்ட யானை

அச்சோ காரம் என்றுச்சாம்,


கூவலோடு காட்டை நோக்கிக்

கும்பிடு போட்டு ஓடிச்சாம்!

You might also like