You are on page 1of 2

விடுதலை!  விடுதலை! விடுதலை!

1
பறைய ருக்கும் இங்கு தீயர்
      புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
      மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
      தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
      வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை)

2. ஏழை யென்றும் அடிமை யென்றும்


      எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
      இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
      மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
      மான மாக வாழ்வமே! (விடுதலை)

3. மாதர் தம்மை இழிவு செய்யும்


      மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
      வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
      ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
      வாழ்வம் இந்த நாட்டிலே! (விடுதலை)
சிதரிக்கிடக்கும்
முக்கோணங்களையும்,
சதுரங்கங்களையும்
வட்டங்களையும்
பொறுக்கி எடுத்து அடுக்குகிறேன்.
ஏறக்குறைய வாழ்க்கை போன்றதொரு வடிவம் கிடைக்கிறது
மனம் சலித்து வடிவங்களை களைத்துப் போட்டுவிட்டு
மீண்டும் அடுக்குகிறேன்
வாழ்க்கையைத் தாண்டி வேறு
ஏதாவது கிடைக்குமா என்று

மிக நுட்பமாக எழுதப்பட்ட, மிகச்சிறந்த கவிதை என இதைக் கூறலாம்.


தேர்ந்த வாசகன் ஒருவன் சிதரிக்கிடப்பதாகச் சொல்லும் முக்கோணங்களும்
சதுரங்களும் வடிவங்கள் அல்ல அது முன்பு வாழ்க்கையாக நம்பப்பட்ட
நினைவுகளின் சிதிலங்கள் என உருவகப்படுத்திக்கொள்வான்.
அச்சிதிலங்களைக் கொண்டு மீண்டும் வாழ்ந்த வாழ்வை தவிர்த்து
வேறொன்றை அடைய முடியுமா என்பதுதான் கவிஞரின் கேள்வியாக
உள்ளது. ஒருவிதத்தில் அது கேள்வியில்லை. விரக்தியில் வெற்றுப்புன்னகை.
அந்த நினைவுகள் அர்த்தம் அற்றவை என அறியும் கனம் வாழ்வை மாயை
என நொந்துக்கொள்கிறான். வாசகன் அந்த வெற்றுப்புன்னகையை அறிய
முனையாமல் இக்கவிதையில் கருத்தைத் தேட முனைந்தால் வேறொரு
அர்த்தத்தைக் கண்டடையலாம். வாழ்க்கையைத்தாண்டிய ஓர் உன்னத நிலை
குறித்து கவிஞர் சொல்கிறார் எனலாம். அப்படிச் சொல்ல அந்த வாசகனுக்கு
முழு உரிமை உண்டு. அவன் வாழ்வின் விரக்தியின் வெறுமை தெரியாதவரை
இக்கவிதையில் அந்த உணர்ச்சியை அவன் அறியப்போவதே இல்லை.

You might also like