You are on page 1of 9

இங்கே இப்போது வாலழும் வாலறிவன் நற்றாட்கள்

வாலறிவனை அறிவோம்

நிகழ்ச்சி என்பது
இங்கே, இப்போது நிகழ்கின்ற
இந்தக்கணத்தில் மட்டுமே
நிகழும் செயல்.

கடந்துவிட்ட கணம் இறந்து விட்டது


அடுத்த கணம் இன்னும் வரவில்லை

நேற்று என்பது கடந்த காலமாகி இறந்து விட்டது


நாளை என்பது இன்னும் வரவில்லை. அதில் வாழ முடியாது

வாழ்க்கை
இந்தக் கணத்தில் மட்டுமே நிகழ்கிறது
இந்தக்கணம் என்பதற்கு முடிவே கிடையாது.
ஆகவே
வாழ்க்கைக்கு முடிவே கிடையாது.
உடல் இருக்கும்வரை வாழ்க்கை என்னும் நிகழ்ச்சி தொடரும்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும்


“நான்“ யார்?
“எனது“ என்றால் என்ன?

எல்லையற்றது வாழ்க்கை
நீண்டு கொண்டே போவது வாழ்க்கை..

நீளம், அகலம், ஆழம் என்னும் மூன்று அளவுகளிலும் எல்லையற்றது வாழ்க்கை.


எல்லையற்ற விண்வெளியெங்கும் பரந்திருப்பது வாழ்க்கை
நீள, அகல, ஆழங்களால் வாழ்க்கையை அளக்க இயலாது
நீளம், அகலம், ஆழம் உள்ள உடலிலும் வாழ்க்கை நிகழ்கிறது
அதைக் கடந்த வெளியிலும் வாழ்க்கை நிகழ்கிறது
வாழ்க்கை எங்கெங்கும் நடக்கும் நிகழ்ச்சி

உடலில் நிகழும் வாழ்க்கையை என்னுடைய வாழ்க்கை என்கிறோம்.


உடல் மறைந்தால் வாழ்க்கை முடிந்து விட்டது என்கிறோம்
உடல் மறைந்தால் மறைவது உடலின் வாழ்க்கை

ஆனால்
வாழ்க்கை முடியுமா?
வாழ்க்கைக்கு முடிவு உண்டா?

“இங்கே” நிகழ்வது வாழ்க்கை,

“இங்கே” என்னும் இடத்துக்கு எல்லை இல்லை.


நீளம், அகலம், ஆழம். காலம் என்னும் நான்கு அளவுகளிலும் எல்லையற்றது “இங்கே”

நாம் எங்கு இருக்கிறோமோ அது “இங்கே”


எந்த ஊரில், எந்த நாட்டில் எங்கு போய்க் கேட்டாலும்

“இங்கே இருக்கிறேன்” என்பதே பதில்


“இங்கே” என்னும் இடத்துக்கு எல்லை இல்லை.

“இப்போது” நடப்பது வாழ்க்கை


“இப்போது” நிகழ்வது நிகழ்ச்சி

“இப்போது” நிகழ்வது செயல்

“இப்போது” என்பது காலத்தின் கூறு


இதற்கு
காலை, மாலை,
இரவு, பகல்,
இன்று, நேற்று, நாளை,
கோடைகாலம், குளிர்க்காலம்
என்னும்
வரையறைகள் இல்லை.

.எப்போது கேட்டாலும்

“இப்போது”
என்பது மட்டுமே உண்மை
காலம் என்னும் எல்லையற்றது

“இப்போது”
“இப்போது இருக்கிறாயா” என்று கேட்டால்
”இருக்கிறேன்” என்பதே பதில்
வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதன்
”நான் இப்போது இல்லை”
என்று பதிலளிக்க மாட்டான்

“இப்போது” நிகழும் வாழ்க்கைக்கு எல்லையில்லை

வாழ்க்கை சொல்கிறது,

“நான் இங்கே இருக்கிறேன்”


”நான் இங்கே செய்கிறேன்”

”நான் இப்போது இருக்கிறேன்”


”நான் இப்போது செய்கிறேன்”

“இங்கே”, “இப்போது” வாழ்கின்ற வாழ்க்கைக்கு உயிர் இருக்கிறது


“இங்கே”, “இப்போது” நிகழ்கின்ற செயலுக்கு உயிர் இருக்கிறது.
“இங்கே”, “இப்போது” நிகழ்கின்ற நிகழ்ச்சிக்கு உயிர் இருக்கிறது.
“நான் இங்கே இருக்கிறேன்”
“இங்கே” இருப்பதை அறிவது யார்?
அறிவு

ஆகவே “நான்” அறிவு

”நான் இங்கே செய்கிறேன்”


“இங்கே” செய்வதை அறிவது யார்?
அறிவு

ஆகவே “நான்” அறிவு

”நான் இப்போது இருக்கிறேன்”


”இப்போது” இருப்பதை அறிவது யார்?
அறிவு

ஆகவே “நான்” அறிவு

”நான் இப்போது செய்கிறேன்”


”இப்போது” செய்வதை அறிவது யார்?
அறிவு

ஆகவே “நான்” அறிவு

“இங்கே”, “இப்போது” வாழ்கிறேன்


“இங்கே”, “இப்போது” வாழ்வது யார்?
அறிவு

ஆகவே “நான்” அறிவு

“இங்கே”, “இப்போது” வாழ்வது வாழ்க்கை


“இங்கே”, “இப்போது” இருப்பது வாழ்க்கை
இடம், காலம் என்ற எல்லையில்லாதது வாழ்க்கை

வாழ்வதும், இருப்பதும் “நான்” என்றால்

“நான்” யார்?
“நான்” என்று சொல்ல அறிவு வேண்டும்

“நான் இருக்கிறேன்” என்று சொல்வது அறிவு


“நான் வாழ்கிறேன்” என்று சொல்வது அறிவு

வாழ்வது அறிவு,
இருப்பது அறிவு
செய்வது அறிவு

“நான்” என்பது அறிவு,


“நான்” அறிவு
அறிவு சொல்கிறது,

“நான் வாழ்கிறேன்”,
“நான் இருக்கிறேன்”
“நான் செய்கிறேன்”

“நான் இங்கே, இப்போது வாழ்கிறேன்”,


“நான் இங்கே, இப்போது இருக்கிறேன்”
“நான் இங்கே, இப்போது செய்கிறேன்”

இருப்புக்கு எல்லையில்லை
வாழ்க்கைக்கு எல்லையில்லை
வாழும் அறிவுக்கு எல்லையில்லை

இந்த வாழ்க்கையை,

“நான் வாழ்கிறேன்” என்று உடல் சொல்ல முடியாது


உடல் ஒரு ஜடப்பொருள்
உடலுக்கு முடிவு உண்டு

அறிவு உடலை இயக்குகிறது


அறிவின் வாழ்க்கை முடிவற்றது

ஆகவே “நான்” வெறும் உடல் மட்டுமல்ல

“நான்” அறிவு

வார்த்தைக்கு வார்த்தை

“நான் சொல்கிறேன்”,
“நான் செய்கிறேன்”
என்று சொல்கிறோம்

அந்த “நான்”

“நான்” என்னும் அறிவு உணர்வு


எல்லையற்று நீ ண்ட
“இங்கே”, “இப்போது”
என்னும்
பரவெளியில் வாழும் உணர்வு
புலன்களுக்கு எட்டாத நுண்ணுணர்வு
“நான்” பரவெளியில் வாழும் நுண்ணுணர்வு
அறிவுணர்வு

எல்லையற்று நீ ண்ட
“இங்கே”, “இப்போது”
என்னும்
புத்தம்புதிய கணத்தின்
எல்லையற்ற
பரவெளியில் வாழ்ந்து
எல்லாவற்றையும் அறியும்
“நான்” வாலறிவு

“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
I am the Awareness

“நான்” புலன்களுக்கு எட்டாத நுண்ணறிவு


“நான்” புலன்களை எட்டிப் பிடிக்கும் நுண்ணறிவு
“நான்” புலன்களை ஆட்டி வைக்கும் நுண்ணறிவு
“நான்” பரவெளி நுண்ணறிவு
“நான்” வாலறிவு
I am the Open Intelligence

பரவெளியில் “நான்” வாலறிவன்


இந்த உடலில் பதிந்துள்ள “நான்”
வாலறிவனின் கூறு
வாலறிவனின் தாள்,
வாலறிவனின் நற்றாள்

இங்கே இப்போது வாழ்வது


வாலறிவனின் நற்றாட்கள்

“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்று அறிந்து,
ஒழுகுவது
ஒழுக்கம்

“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்று அறிந்து, உணர்ந்து
ஒழுகும்போது
“எனது”
“என்னுடையது”
என்ற பாவனைகளுக்கு
பொருளில்லை, உயிரில்லை

ஒழுக்கமும் ஒழுகலும்

நிகழ்ச்சிகளின் தொகுப்பு வாழ்க்கை


வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செயற்படுவது ஒழுகல்.

ஆங்கிலத்தில் Behave, தமிழில் ஒழுகு.


ஆங்கிலத்தில் Behaviour தமிழில் ஒழுகல்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்று செயற்படுவது ஒழுகல்.
வாழ்க்கை என்னும் வெள்ளத்தில்
சிறுதுளியாக இணைந்து அதில் பங்கேற்பது ஒழுகல்
உறவுகளோடு தொடர்பு கொள்வது ஒழுகல்
உலகத்தோடு தொடர்பு கொள்வது ஒழுகல்
உலகத்தோடு
நான், எனது என்னும்
பற்றுக்களுடன் தொடர்பு கொள்வது ஒழுகல்

உலகப் பொருட்களோடு உள்ள


பற்றுக்களை விட்டுவிட்டு ஒழுகுவது
ஒழுக்கம். Discipline

ஒழுக்கம்
“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்ற உண்மையை உணர்த்துகிறது
விழுப்பம் தருகிறது
உயர்வைத் தருகிறது

அதனால்தான் திருவள்ளுவர் அறிவித்தார்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்


உயிரினும் ஓம்பப் படும்

“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்ற அறிவைத் தரும்,
உயர்வைத் தரும்
ஒழுக்கத்தை
பயிற்றுவிக்கும் கல்வியே மனிதனுக்கு தேவை

இந்த உண்மையை உணர்த்தும் பொருட்டே


திருவள்ளுவர் முழங்கினார்,

கற்றதனாலாய பயனென் கொல்?


வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்

“தொழாஅர்” என்னும் அளபெடை


ஆழமானது பொருள் பொதிந்தது
வாலறிவனின் நற்றாட்களை
தொழுது வாழ்வதற்கு
பணிந்து வாழ்வதற்கு
முதலில் கற்க வேண்டும்
மற்ற கல்விகளைக் கற்பதற்கு
துணைசெய்வது வாலறிவனைப் பற்றிய கல்வி
வாலறிவனின் நற்றாட்களான
அறிவுணர்வையும் செயலுணர்வையும்
பற்றிக் கொண்டு
வாழ்க்கை என்னும் கடலை கடப்பதற்கு
முதலில் கற்க வேண்டும்
பிறகுதான் மற்ற கல்விகள் எல்லாம்
உண்டா? இல்லையா?

கற்பது என்றாலே
வாலறிவாகிய
பரவெளி நுண்ணறிவை
உணர்ந்து அறிந்து
அந்த அறிவாகவே வாழக்
கற்பதுதான்.

அதை கற்பிப்பதுதான்
கல்வி

இந்த கல்வியைக் கற்றவனே


கண்ணுடையவன்
இதைக் கல்லாதவன்
முகத்தில் இரண்டு புண்ணுடையவன்

இக்கல்வியைக் கற்ற கண்ணுடையவன்


வாலறிவன் நற்றாள் தொழுவான்
வாழ்வாங்கு வாழ்வான்

இதை வலியுறுத்தும்
வள்ளுவரைப்
போற்றுவோம்

வாலறிவனின் நற்றாட்களை தொழும் வழியை


மிக எளிதாக சுவையாக விளக்குகிறார் திருமூலர்

சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்


மாத்திரைப் போது மறித்துளே நோக்குமின்
பார்த்த அப்பார்வை பசுமரத்தாணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டோடுமே

ஒரே ஒரு மாத்திரை நேரம்,


விரல்களை சொடுக்கும் நேரம்
செய்கின்ற வேலைகள்,
சிந்தனைகள்
எல்லாவற்றையும் நிறுத்தி
உங்களுக்கு உள்ளே நோக்குங்கள்.

அந்த சிறு நோக்கு


பச்சை மரத்திலே ஆழமாக,
எளிதாக பதியும் ஆணியைப் போல
பதிந்து
ஆரவாரத்துடன்
அலையெனப் பிறந்து
உடலில் மோதி மறையும்
சிந்தனைகள்,
மனவுணர்வுகள்,
உடல் உணர்வுகள்,
மற்றும் அனுபவங்கள்
ஆகிய அலைகளை
அந்த நொடிப் பொழுதிலேயே
மறைந்து ஓடச்செய்துவிடும்.
அவற்றிலிருந்த அந்த நொடியில்
உங்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்.

ஒரு கணம் சிந்தனையை நிறுத்தி


உள்ளே நோக்கினால்
அங்கே இருப்பது
விழிப்புடன் எல்லாவற்றையும்
அறிந்துக் கொண்டிருக்கும்
பரவெளி நுண்ணறிவான
வாலறிவின் பேரொளியான
அறிவுணர்வு என்னும்
ஒட்பமும்
அதன்
பேராற்றல் மிக்க அமைதியும்.

மீ ண்டும் மீ ண்டும் சிறு சிறு கணங்கள் வாலறிவில்


இருந்து பழகினால் .அது மறையாமல்
தொடர்ந்து ஒளி வழங்கும் கதிரவனாய் பிரகாசிக்கும்.
நாம் எப்போதும் வாலறிவின் பேராற்றலுடன் செயற்படுவோம்
பதற்றமில்லாமல் அமைதியாக செயற்படுவோம்
அந்த அமைதியே வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்பம்

இந்த இன்பத்தை அனுபவித்த திருமூலர் பாடினார்

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்


வான் பற்றிநின்ற மெய்ப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்ற பற்ற தலைப்படும் தானே 85

அந்த விடுதலையை, வட்டை


ீ அனுபவித்த ஆழ்வார் பாடினார்

நன்றாய் ஞானம் கடந்து போய் நல்லிற் திரியும் எல்லாம் ஈர்த்து


ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து
சென்றாங்கு இன்பதுன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்
அன்றை அப்போதே வடு
ீ – அதுவே வடு
ீ வடாமே

திருவாய் மொழி 8,8,6

வடு
ீ என்னும் பேற்றுக்கு இதைவிட
நல்லாழ்வாரின் இந்த திருவாய்மொழியைவிட
சிறந்த விளக்கத்தை நாம் காண்பது அரிது

You might also like