You are on page 1of 12

ஆன்மீ கப் பார்வையில் திருக்குறள்

அன்புடைமை’ என்ற வார்த்தையிலேயே அன்பு நம்மிடமிருக்கும் ஒரு உடைமையாக


இருக்க வேண்டும் அல்லது ஒரு உறுப்பாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர்
வலியுறுத்துகிறார். ‘அன்பு’ என்பது அகத்துறுப்பாகும்.

                      “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை


                      அகத்துறுப்பு அன்பிலவர்க்கு?”
உடம்பினுள்ளே இருக்கின்ற மனதின்மேல் அன்புற்றவர்களுக்குப் புறத்தே உள்ள
உறுப்புகளால் ஆகும் பயன் என்ன? எதுவுமில்லை என்பது இக்குறளின் பொருளாகும்.

அதாவது கை, கால், கண், மூக்கு, செவி, வாய் போன்றவை புற உறுப்புகளாகும். ஆனால்
‘அன்பு’ என்ற கண்ணுக்குத் தெரியாத அகத்துறுப்பு இல்லாவிட்டால், புற உறுப்புகள்
இருந்தும் பயன் இல்லை. அன்புணர்ச்சி என்பது தனித் தன்மையுடையது. அன்பின்
அடிப்படையிலேதான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உயர்ந்த
நிலையிலிருக்கும்போதுதான் அன்பு செய்கிறார்கள். அதே நபர் வாழ்க்கை சக்கரத்தில்
கீ ழான நிலைக்கு வரும்போதும், அன்பு செலுத்த வேண்டும். அதுவே உண்மையான
அன்பாகும். அன்பு என்ற உறுப்பு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்கள், பறவைகள்,
ஊர்வன போன்றவற்றிலும் காணப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது இச்சம்பவம்.

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விஷமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு,


சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில்
மகான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு
மானையடிக்க குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம்
குறி தவறியதால் அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின்மீ து பாய்ந்தது.

கொடிய விஷந்தடவிய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும்,


இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அந்த
மரமானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாட்களாக வசித்திருந்த ஒரு
கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை.
நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனதுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியில் சஞ்சரியாமலும்,
இரை எடுக்காமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உலர்ந்தது.

மரஞ்செழிப்புற்று இருந்தபோது அதனுடன் சுகித்திருந்ததுபோல், அது உலர்ந்து


துன்புறும்போது அதனை விட்டுப் பிரியாமல் தானும் துன்புற்றிருந்தது. இதைக் கண்ட
தேவேந்திரன் திகைப்படைந்தான்.

இந்திரன் மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப்


பட்சியைப் பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தாக்ஷேயி உன்னால்
நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். உலர்ந்துபோன இந்த மரத்தை ஏன்
விடாமலிருக்கிறாய்? என்று கேட்டான். கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம்
புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத்
தெரிந்துகொண்டேன்” என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று, நன்று” என்று கூறி ‘என்ன
அறிவு’ என்று மனதிற்குள் கொண்டாடினான்.
அதனிடம் “அறிவிற் சிறந்த பறவையே, இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து,
பறவைகளுக்கு ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே!
இலைகளினால் மூடப்பட்ட பொந்துகளும், சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும்
அழகான மரங்கள் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து, சக்தியற்று, இரசம்
வற்றி ஒளிகுன்றிக் கெட்டுப்போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியால் ஆராய்ந்து பார்த்து
விட்டு விடு” என்றான். இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்த கிளி, மிகவும்
நீண்ட பெருமூச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று.

“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும்


பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைக் தெரிந்துகொள். அதே நற்குணங்கள்
பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப்
பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று, பனி,
வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இந்த மரத்தில் சுகித்திருந்தேன். எல்லா
தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர்.
அதனாலேயே, நீ தேவசிரேஷ்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம்
செய்யப்பட்டிருக்கிறாய்.

இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல


நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைக்கு வந்தவுடன் அதை எப்படி
விடலாம்?” அந்த நன்றியறிவையும், தயையையும் எண்ணித் திருப்தியுற்ற தருமம் தெரிந்த
அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!” என்று கூறினான்.

எப்போதும், பிறர் நோவாமையைப் பார்த்து பெரிதாகக் கருதிய அந்த கிளி, “ஏ! தேவர்
கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்து தழைத்து ஓங்க வேண்டும்” என்றது. இந்திரன்
உடனே அம்மரத்தின் மீ து அமிர்தத்தை பொழிந்தான். அதனால் அந்த மரத்தில் கனிகளும்,
இலைகளும், கிளைகளும் உண்டாக்கித் தழைத்தது.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை


                      நீ ட்டி அளப்பதோர் கோல்
நம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் உண்மையான அன்பை கண்டுபிடிக்க உதவும்
அளவுகோலாக திகழ்கிறது என்று வள்ளுவர் கூறுவது சரிதானே! இதே கருத்தை
மூதுரையில் ஒளவையார் கூறியுள்ளார்கள்.

அற்ற குளத்தில் அறுநீ ர்ப் பறவைபோல்


                      உற்றுழித்தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்
                      கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
                      ஒட்டி உறுவார் உறவு.
வற்றிய குளத்திலிருந்து நீங்கி சென்றுவிடும் நீர்ப்பறவை போல், துன்பம் வந்த காலத்தில்
நம்மை விட்டுச் சென்று விடுபவர் உண்மை உறவினர் அல்லர். அக்குளத்திலுள்ள
அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போல நீர் உள்ள காலத்தும், வற்றிப்போன
சமயத்தும் சேர்ந்திருப்பவரே உண்மையான உறவினராவர்.

                      அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு


                      என்புதோல் போர்த்த உடம்பு
பிற உயிர்கள் மீ து அன்பு கொண்டு வாழும் உடம்பே உயிருள்ளதாகும். பிற அன்பற்றவர்
உடம்போ உயிரற்ற வெறும் தோல் மூடிய எலும்புக்கூட்டிற்கே ஒப்பாகும் என்ற
குறளுக்கேற்ப வாழ்ந்த கிளியைப் போல நாமும் வாழ்வோம். இவ்வுலகை அன்பினால்
ஜெயிப்போம்! இத்தனை நாட்களாக இந்த ஆய்வு கட்டுரையை படித்து பயன்
பெற்றிருப்பீர்கள் என்று கருதுகிறோம். இன்னும் அநேக ஆன்மீ க கருத்துக்கள் திருக்குறளில்
கூறப்பட்டுள்ளது. அவை சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் பிரசுரிக்கப்படும் என்பதை
வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்


மறத்திற்கும் அஃதே துணை

இதன் பொருள் யாதெனில், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்பர் அன்பின்


உண்மையை அறியாதவர். மற்ற பாவச் செயல்களை நீக்குவதற்கும் அவ்வன்பே
துணையாகும். அன்பானது புண்ணியம் செய்வதற்கான உபகார சக்தி என மட்டுமே நாம்
அறிவோம். ஆனால் வள்ளுவரோ அஃது பாவச் செயலை நீக்குவதற்கும் துணை புரியுமென
இயம்புகிறார். அத்தகைய அன்பானது அடுத்தவர்கள் புரிகின்ற கீ ழான பாவச்
செயல்களையும் தனக்குள் ஈர்த்துக்கொண்டு அவர்களை சகோதரத் தன்மையுடன் காண
வகை செய்யும். இஃது முழுமையான தூய அன்புடையவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
இவ்வன்பின் ஆழத்தை ஒரு கதையின் மூலம் காண்போம்.

ஞானி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே உலாவுவதற்காக சென்று கொண்டிருந்தார்.


அப்பொழுது அவரெதிரே, அவ்வூரில் எல்லோராலும் திறமையுடையவரென
மதிக்கத்தக்க வயலின் கலைஞர் ஒருவர் அதிகமான குடி போதையில் தன் நண்பர்களுடன்
தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஞானியானவர் அவன்மீ து
இரக்கம் கொண்டு வயலின் கலைஞரை நோக்கி “என்னப்பா, நீயோ திறமைமிக்க சிறந்த
வயலின் கலைஞன், உன் திறமையையும் புகழையும் இந்த மதுப்பழக்கத்திற்கு அடகு
வைத்து விட்டாயே, இதனால் உன் பெயர்தானே கெடும்” என்று அறிவுரை கூறினார்.
அந்த அறிவுரையை சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இல்லாத அவன்,
ஞானியை தகாத கீ ழான வார்த்தைகளால் திட்டினான். அவனுடமிருந்த நண்பர்கள்
ஞானியை திட்டுவதைக் கண்டு தலை கவிழ்ந்தனர். அவனோ, அதுபோதாதென்று
கையிலிருந்த வயலினால் ஞானியின் தலையில் ஓங்கி அடித்தான். அந்த அடியில் அவரின்
தலையில் காயமடைந்து ரத்தம் கொட்டியது. அவனுடைய வயலினும் உடைந்து போயிற்று.
ஆனால் ஞானி ஏதும் பேசாமல் தலையில் கை வைத்தவாறு சென்று விட்டார். அவனும்
ஏதோ உளறிக் கொண்டே தரையில் விழுந்தான்.

அடுத்த நாள் காலையில் அவன் நண்பர்கள் முந்தைய இரவு நடந்ததை எடுத்துக்


கூறினார்கள். அவனோ அப்படியா என மிகவும் வருத்தப்பட்டான். அப்போது
ஞானியின் சீடன் ஒருவன் அங்கு வந்தான். அந்த வயலின் கலைஞன் சீடனிடம் ஞானி
தனக்கு என்ன செய்தி சொல்லியனுப்பினாரோ என்றபடி நோக்கினான். சீடனோ, ஞானி
தன்னிடம் ஒரு கடிதத்தையும், சில இனிப்புகளையும், சிறிதளவு பணமும் கொடுத்து
அனுப்பியதாக கூறி அவனிடம் தந்தான். அதனைக் கையில் வாங்கி கடிதத்தைப் பிரித்துப்
பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் அவன் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது.
சுற்றியிருந்த நண்பர்களும் கடிதம் கொடுத்த சீடனும், ஞானி அப்படி என்னதான்
எழுதியிருக்கிறார் என்று கேட்க, அவன் கடிதத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு
நாற்காலியில் அமர்ந்தான். நண்பர்களில் ஒருவன் கடிதத்தை வாங்கி உரக்கப் படித்தான்.
“வயலின் கலைஞனுக்கு வணக்கம். நேற்று இரவு என்னை திட்டியதால் உன்னுடைய நாவு
கசந்திருக்கும். அதற்காக சில இனிப்புகளை அனுப்பியுள்ளேன், அதை சாப்பிடு. உன்னுடைய
சிறந்த அழகிய வயலின் உடைபடுவதற்கு என்னுடைய தலை காரணமாகிவிட்டது.
அதற்காக இந்தப் பணத்தை அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொண்டு வயலினை சரிப்படுத்திக்
கொள்” என எழுதியிருந்தார். அதைக் கண்டு தன் தவறை எண்ணி மனம் வருந்தி,
ஞானியிடம் சென்று மன்னிப்பு கேட்டு திருந்தினான். இந்தக் கதையின் மூலம் நமக்கு
என்ன விளங்குகிறது? ஞானியின் அன்பு எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. அந்த
தூய்மையான அன்புக்குள் நல்லவர், பொல்லாதவர், ஏழை, பணக்காரன், அறிந்தவர்,
அறியாதவர் என்ற எந்தவிதமான ஏற்றத்தாழ்வுமில்லை.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்பது வள்ளுவரின் வாக்கு. அதுபோல்தான்


ஞானியின் அன்பும். எந்தவித பாரபட்சமும் பார்ப்பதில்லை. ஒரு தாய் தான்பெற்ற
பிள்ளைகளில் ஒன்று ஊனமானதாகவும், மற்றொன்று நன்றாகவும் இருந்தால், இதில் எந்த
பேதமும் பாராமல் இரண்டையும் ஒன்றைப்போல் அரவணைத்து எப்படி அன்பு
காட்டுவாளோ, அதுபோல்தான் கடவுளின் அன்பும், ஞானியின் அன்பும் இருக்கும். அதுபோல்
தூய்மையான அன்பு எவ்வித எதிர்பார்ப்பையும் கொண்டதில்லை. தூய்மையான விருப்பு
வெறுப்பற்ற அன்புடையவர்களே முக்திநிலை அடைந்தவர்கள்.

தாயுமானவர் இறைவனுக்கு மலர்களைப் பறித்து பூஜை செய்ய விரும்பினார். ஆனால்,


அவரின் அன்புப் பார்வையில் எல்லா மலர்களிலும் இறைவன் குடிகொண்டிருப்பதைக்
கண்டு கண்களில் நீர் மல்க, மலர்களைப் பறித்து பூஜிக்காமல் அந்த மலர்த்தோட்டத்திலுள்ள
மலர்கள் அனைத்தையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார். அன்பே இறைவன்!
இறைவனே அன்பு! இதனைத்தான் திருமூலர் ‘அன்பே சிவம்’ என அருளினார். எந்தவித
பாகுபாடுமில்லாத அன்பிற்கு வரம்,
ீ கோழை என்ற குணங்களேதும் கிடையாது.
இப்படியிருக்க, அன்பில்லாதவர் எப்படியிருப்பார். அன்பில்லாத இடம் அன்பில்லாத உறவு,
அன்பில்லா வாழ்க்கை பற்றி விளக்கமளிக்கின்றனர் நம் சான்றோர்கள்.
அன்பில்லாதவர் உடம்பு, எலும்பும் தோலும் மட்டுமே இருக்கும் உயிரற்ற உடம்பாகும்.
அன்பிலா இடம் வறண்ட பாலை நிலம் போன்றதாகும். அன்பில்லா உறவு ஒன்றுக்கும்
உதவாத ஒதிய மரமாகும். அன்பில்லா வாழ்க்கை கானல் நீருக்கு ஒப்பாகும். நம் வள்ளல்
பெருமான், அன்பை எப்படி பெற்றுக்கொள்வது என்பது பற்றி நமக்கு விளக்கியுள்ளார்கள்.
ஜீவகாருண்யத்தால் அறிவும், அன்பும் உடனாக நின்று விளங்குமென்றும், இதனால் எல்லா
நன்மைகளும் விளங்குமென்றும் அருளியுள்ளார்கள்.

எல்லாம் வல்ல இறைவனை அடைவதற்கு அவரின் அருளைப் பெற வேண்டும்.


அவ்வருளை அன்பினாலல்லது வேறுவகையில் அடைவதென்பது அரிதாகும். அவ்வன்பைப்
பெறுவதற்கு ஜீவகாருண்யம் சிறந்த வழி என்று வள்ளலார் கூறியுள்ளார். அவ்வன்பை
கீ ழ்ப்படிதலின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
உரைத்திருக்கிறார். ஆக இறைவனுக்கு கீ ழ்ப்படிந்து தெய்வக
ீ அன்பை பெறுவோவாமாக!
எவ்வித வேறுபாடுமின்றி, எவ்வித எதிர்பார்ப்புமின்றி செலுத்தப்படுகின்ற அன்பே
இவ்விதமான நன்மையைப் பெற்றுத்தருமென்பதில் ஐயமில்லை. இதனால் அன்பு
செலுத்தும்போது அடங்கிப் போதல், கோழைத்தனமாக தோன்றுதல் எல்லாம் வெறும் புற
எண்ணங்களே. அகத்திலிருந்து தோன்றும் உண்மையன்பு எந்தப் புறத்தோற்றங்களையும்
பார்க்காது, அந்த அன்பு மிக வலிமையுடையது. இனியும் காலம் தாழ்த்தாது பிற
உயிர்களிடத்தில் உண்மையன்பைச் செலுத்தி இறைவனின் அருள்பெற்று உயர்வோமாக!

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே


அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரமசிவமே! – திருஅருட்பா

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்


சான்றோன் எனக்கேட்ட தாய்.

குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது, அந்த தாய் அதிக சந்தோஷம்
அடைகிறாள் என்பது இக்குறளின் கருத்தாகும்.

ஒரு தாய் இயற்கையாக குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அக்குழந்தையைப்


பெற்றெடுப்பதற்கு, தான் அடைந்த அத்தனை துன்பங்களையும் மறந்து மகிழ்ச்சி
அடைகிறாள். குழந்தை இப்போது தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதன் மூலம் உலகிற்கு
வந்துள்ளது. இவ்வாறு இயற்கையின் வழியில் பிறப்பது மட்டுமே குழந்தைக்குச் சிறப்பல்ல.
இந்த இயற்கைப் பிறப்பைத் தாண்டியும் பிறப்பு ஒன்றைக் குழந்தை அடைய வேண்டும்.
இயற்கையாக பிறப்பது மட்டுமே ஒருவனுக்கு சிறப்பை அளிக்காது. அதற்கடுத்தபடியாக
ஒரு மனிதன் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். அதுவே சாதாரண மனிதன்
‘சான்றோன்’ என்று அழைக்கப்படுவதாகும். முதற் பிறப்பு தாய்ப் பறவையின்
வயிற்றிலிருந்து வெளிவரும் முட்டையைப்போல உள்ளது. சான்றோனாவது
முட்டையிலிருந்து தானாகவே வெளிவரும் குஞ்சு என்ற நிலையே இரண்டாம் பிறப்பு
அல்லது மறுபிறவியாகும். சான்றோனாக இரண்டாம் பிறப்படைந்த நிலையே முழு
வளர்ச்சியடைந்த நிலையாகும். உருவத்தால் மனிதர்களாக காட்சி அளிக்கிறவர்கள்
யாவரும் மனிதர்கள் அல்ல. அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்?
இறைவனைப்போல காட்சியளிப்பவனே மனிதன். இறைவன் மனிதனை தம்முடைய
சாயலில் படைத்தான் என்று விவிலியம் கூறுகிறது. இறைவனின் சாயலில் யார்
உள்ளாரோ அவனே சான்றோன். இந்த சான்றோன் பிறக்கும்போது மனிதன். ஆனால்
மறுபிறவி அடைந்தவன், ஆன்மீ கப் பிறப்பு அடைந்தவன். அத்தகைய இறைவன் போன்ற
மனிதனையே வள்ளுவர் சான்றோன் என்று கூறுகிறார். சான்றோன் என்பவன் உறுப்பளவில்
மற்றவர்களைப் போல காணப்பட்டாலும் உள்ளத்தால் மாறிப்பிறந்த இரண்டாம் பிறப்பு
உடையவர்கள், மறுபிறவி அடைந்தவர்கள். அதாவது  அவர்களிடம் காணப்படும்
பண்புகளினால் வேறுபட்டவர்கள் ஆவார்கள். இதே கருத்தை இயேசு பிரான் விவிலியத்தில்
கூறினார். நீ மறுபடியும் பிறக்க வேண்டுமென்று  நிக்கொதேமு என்ற யூத ஞானியிடம்
கூறினார். நான் எங்ஙனம் என் தாயின் வயிற்றிற்குள் சென்று மறுபடியும் பிறப்பது? என்று
கேட்டான். அதற்கு இயேசுபிரான் உள்ளம் மாறி, மனம் மாறி ஒருவன் ஆன்மீ க ஜாதியாக,
ஆன்மீ க உலகில் பிறப்பதை பற்றிக் கூறினார். இயற்கையான பிறப்பை பற்றிக்
கூறவில்லை.

முதல் கட்டமாக மனிதனின் மனம் மாற வேண்டும். மனமாற்றம் அடைந்த மனிதன்


இறைவனைப் போலவே காட்சி அளிக்கிறான். அவனுக்கு இறைவன் நவானிதேஹி,
அதாவது மரணமில்லா சக்தியுடைய சரீரத்தைக் கொடுக்கிறார். அந்த சம்பவத்தைத்தான்
‘மகிமைப்படுதல்’ என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார். அந்த சம்பவம் நடப்பதற்கு
முன்பாக மரணம் எய்துபவர்களுக்கும் அந்த சரீரம் வழங்கப்படுகிறது.
இந்த ஆன்மீ கப் பிறப்பு அல்லது மறுபிறவி அடைய எத்தனை காலமாகும் என்று
சொல்லுதற்கரிது. இயற்கையான பிறப்பில் ஒன்பது மாதங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது.
ஆனால் ஆன்மீ கம் பிறப்பதற்கு காலத்தை நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொரு நாளும்
சிறுமை போக்கிப் பெருங்குணமேலோனாக வேண்டும். அதற்கு நாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
போதனைகளை கற்றுணர வேண்டும். இந்தப் பிறவியிலேயே மறுபிறவி அடைந்து எவ்வாறு
நவானி தேஹி – மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்யவே
ஸ்ரீ லஹரி கிருஷ்ணா மனுஜோதி ஆசிரமத்தை தோற்றுவித்து மனிதர்கள் மக்களாக
இல்லாமல் சான்றோன் அல்லது இறைநிலையை அடைய தேவையான எல்லா
உபதேசங்களையும் கொடுத்துள்ளார்.

சங்ககாலத்தில் ‘சான்றோர்’ எனக் குறிக்கப்படுஞ்சொல் காண்பிக்கும் பொருள் என்ன?


சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள், நல்லவர்கள், நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர்கள். பொதுவாக
சால்பு உடையவர் சான்றோர். சால்பு என்றால் எல்லா நற்குணங்களாலும் நிறைந்திருத்தல்.
அதாவது நற்குணங்கள் யாவும் நிரம்பியவர் என்பதாகும். சான்றோர் ஒரு குறிப்பிட்ட
கொள்கையால் இணைந்தவர்.

“பிறர் நோயுந் தந்நோய் போற் போற்றி அறனறிதல்


சான்றவர்க்கெல்லாம் கடன்.”   – கலித்தொகை.

பிறருக்கு நோய் ஏற்பட்டாலும், துன்பம் ஏற்பட்டாலும் தனக்கே அந்த நோய் அல்லது


துன்பம் ஏற்பட்டது போல பாவித்து அவர்கள் துன்பம் தீர முயற்சி செய்வதே
சான்றோர்களின் கடமை என்று கலித்தொகை பாடல் கூறுகிறது.

“தம்மை இதழ்ந்தமை தாம் பொறுப்ப தன்றி


மற்றெம்மை யிகழ்ந்த வினைப் பயத்தால்
உம்மை எரிவாய் நிரயத்து வழ்வர்
ீ கொலென்று
பரிவதூ உஞ் சான்றோர் கடன்”

மற்றவர் வாழும் பொருட்டு தன்னை அழித்துக்கொள்ளப் பின்வாங்காக் கொள்கையினர்


தன்னை இகழும் பகைவர்க்கும் நன்மையே நினைக்கும் கொள்கையினர் என்பதும், பகைவர்
அடையும் துன்பத்தையும் சகித்துக் கொள்ள இயலாத உள்ளத்தினர் என்பதை இந்த நாலடிச்
செய்யுளால் நாம் அறிந்துகொள்ளலாம். இதினால் சான்றோர் தாழ்ந்திருப்பர். இவ்வேறுபாடு
நடைபெற்றதாகப் பழமொழி கண்ணர்ீ விடுகிறது.

“உரை சான்ற சான்றோ ரொடுங்கி யுறைய


நிறையுள்ள ரல்லார் நிமிர்ந்து பெருகல்
வரை தாழி லங்கருவி வெற்ப அதுவே
சுரையாழ அம்மி மிதப்பு”

தண்ண ீரின் மேலே மிதக்க வேண்டியது கீ ழே போகிறது. கீ ழே இருக்க வேண்டியது


தண்ண ீருக்கு மேலே மிதக்கிறது. இந்தத் தலைகீ ழ் மாற்றமே இடைக்காலத்தில்
சான்றோர்க்கு ஏற்பட்டதென்பது பழமொழியின் முடிவாகும்.

ஆக தற்போது நாம் சான்றோர்களை எங்ஙனம் கண்டு கொள்வது? என்ற கேள்விக்கு ஸ்ரீ


லஹரி கிருஷ்ணா பதில் கூறுகிறார். கலித்தொகை, நாலடியார் பாடல்களில் கூறியபடி
சான்றோர்கள் இந்தியாவில் தாழ்ந்த நிலைக்குச் சென்றார்கள். சான்றோர்களிடம் எதிரிகள்
போரிட வரும்போது அவர்கள் விலகி ஒதுங்கினார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் ஒதுங்கி
நின்றார்கள்? கடற்கரை வரை ஒதுங்கினார்கள். அதற்கு பின்னர் எதிரிகளால் வர முடியாது.
அல்லது அவர்கள் பனைமரத்தில் ஏறுவார்கள். ஆக தற்போது தாழ்த்தப்பட்ட நிலையில்
இருப்பவர்கள் தான் சான்றோர்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மறுபடியும்
சான்றோன் ஆக்குவதே கல்கி மகா அவதாரத்தின் கடமையாக இருக்கிறது.

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து


முந்தி யிருப்பச் செயல்”

ஒரு தந்தை மகனுக்குக் கல்வி ஞானம் வழங்குவதைப் பார்க்கிலும் சாகாத கல்வியை


வழங்குவதே தன் மகனுக்குச் செய்யும் சிறந்த நன்மையாகும். தன்னுடன்
உறவாடுவதற்காகவே இறைவன் மனிதனை படைத்தான். ஆனால் மனிதன் சம்சார
சக்கரத்தில் வழ்ந்து
ீ இறக்க நேரிட்டான். ஆக இப்பொழுது நாம் இறைவனுடன் என்றென்றும்
இருக்கும் பேரின்பத்தை அடைய வேண்டும். சாகாத கல்வி ஒரு தனி விஞ்ஞானமாகும்.
இந்த மெய்ஞ்ஞான விஞ்ஞானத்தை மனுஜோதி ஆசிரமத்தை ஸ்தாபித்த கல்கி
மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருவர் மாத்திரமே கற்றுத்
தருகிறார்.

சென்ற இதழில் சாகாத நிலையை அடைய தடையாக இருப்பவை கால நேரம் பார்ப்பது,
ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைப்பது மற்றும் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள் வர
மறுப்பது என்பதைக் குறித்து பார்த்தோம்.

“ஈன்று புறந் தருதல் என் தலைக் கடனே


சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”

மகனைப் பெற்று வளர்த்து உலகுக்குத் தருவது தாயின் முதன்மையான கடமையாகும்.


அவனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை என்கிறது புறநானூறு. ஒருவன்
எவ்வாறு சான்றோன் ஆகிறான்? சாகாத கல்வியை கற்றறியும்போது அவன் சான்றோன்
ஆகிறான். இவ்வாறு மனிதனாகப் பிறந்த நாம் இறப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டோமா?
இல்லை. மக்கட் பிறப்பு, படைப்பின் மணிமுடி. மக்கட் பிறப்பினும் மற்றப் பிறப்பு, சிறந்த
பிறப்பன்று. அதனால் ஒளவையாரும் “அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார். பிற
உயிர்களைவிட மனிதன் நீண்ட காலம் வாழலாம். எலி 3 ஆண்டுகள் வாழும். முயல் 5
ஆண்டுகள் வாழும். பூனை, நரி, மான் இவை 10 ஆண்டுகளுக்குமேல் வாழ்வதில்லை. கீ ரி
13 ஆண்டுகள் வாழும். குதிரை, குரங்கு, பசு, பன்றி இவை 15 ஆண்டுகள் வாழும். யானை
மட்டும் 50 ஆண்டுகளுக்குமேல் 100 ஆண்டுகளுக்குள் வாழும். ஆனால் மனிதன் இறக்கும்
வயது மாத்திரம் இந்த கலியுகத்தில் மிகவும் குறைந்து விட்டது. நாம் இறைவனின்
சாயலில் படைக்கப்பட்டோம். பல காரணங்களினால் சாகாத தன்மையை இழந்து
விட்டோம். அவற்றை சரி செய்தால் நாம் சாகாத நிலையை அடைய முடியும் என்று ஸ்ரீமந்
நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகின்றார்.

‘தந்தை தாய் பேண்’, ‘உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்று


வேதங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த கட்டளையையும் மனிதன் கடைப்பிடிக்கிறதில்லை.
பெற்றோருக்கு மரியாதை செலுத்தாததினால் மனிதனின் ஆயுட்காலம் குறைந்தது. ‘தந்தை
சொல் மிக்க மந்திரமில்லை’.இதுவும் பிற்காலத்தில் தாய் சொல்லுவதற்கு கீ ழ்ப்படிய
வேண்டும் என்று மக்களால் மாற்றப்பட்டது. ஆனால் பிள்ளைகள் தந்தையின் சொல்லுக்குக்
கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் நியதியாகும். இதை
மாற்றும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைய நேரிட்டது.

அடுத்ததாக பிரம்ம வேள்வி அல்லது ஆதிபலியை மனிதர்கள் மறந்து விட்டனர்.


இதினாலும் மனிதர்களின் ஆயுசு நாட்கள் குறைந்தது. துவாபரயுகத்தில், ஸ்ரீ கிருஷ்ணராக
அவதரித்த இறைவன் அர்ச்சுனனிடம் இவ்வாறு கூறுகிறார். ஸ்ரீமத் பகவத்கீ தை 4:1-3: “நான்
விவஸ்வானுக்கு இந்த அழிவற்ற யோகத்தை உபதேசித்தேன்; விவஸ்வான் மனுவுக்கு
உரைத்தார்; மனு இஷ்வாகுவுக்கு உரைத்தார். இவ்வாறு பரம்பரையாக வந்த இதை
ராஜரிஷிகள் அறிந்திருந்தனர்; சத்துருக்களைத் தவிக்கச் செய்வோனே! இவ்வுலகில் அந்த
யோகம் நாளடைவில் மறைந்து போயிற்று. எனக்குப் பக்தனும் நண்பனுமாக நீ இருக்கிறாய்
என்று அந்தப் பழமையான யோகமே இன்று என்னால் உனக்குக் கூறப்பட்டது; உண்மையில்
இது உத்தமமான மறைபொருள்”.

துவாபர யுகத்தில் அழிவற்ற யோகம் அல்லது பிரம்ம வேள்வி அல்லது ஆதிபலியை


மறந்ததினால் ஸ்ரீ கிருஷ்ணர் அதை மறுபடியும் உரைத்தார். இக்கலியுகத்தில் கல்கி மகா
அவதாரமாக வந்து, இறைவன் நமக்கு அதை மறுபடியும் போதித்துள்ளார். பிரம்ம
வேள்வியை நினைவு கூர்ந்து, நாமும் தன்னலமற்ற வாழ்க்கையை வாழும்போது
நம்முடைய ஆயுசு நாட்கள் கூடுகின்றது.

ஏழாம் நாளாகிய சனிக்கிழமையை விரத நாளாக கடைப்பிடிக்காமல் இருப்பதினாலும்


மனிதனின் ஆயுசு நாட்கள் குறைகின்றது. விரத நாளை மக்கள் மறக்கும்படி கலியன்
செய்து விட்டான். சனிக்கிழமையன்று வட்டில்
ீ இருந்து விரதம் மேற்கொள்ளாமல் வெளியே
சுற்றித் திரிகிறதினால் சனி பிடித்துக் கொள்கிறது. இது மரணம் ஏற்படுவதின் இன்னொரு
காரணமாகும். சாகாத நிலையை விரும்புவோர் அல்லது இறைவனுடன் ஒன்றுபட
விரும்புவோர் சனிக்கிழமையன்று வட்டிலிருந்து
ீ வெளியே செல்லாமல், இறைவனை
தியானித்து, அவனது அருளைப்பெற வேண்டும். அப்போது நாம் ‘இறப்பு’ என்ற
பாதையில் செல்லாமல், ‘சாகாத நிலை’ என்ற பாதையில் செல்லுவோம்.

இப்பொழுது நாம் சூரியன் உதிப்பதை வைத்து நாளையும், மாதங்களையும்,


வருடங்களையும் கணக்கிடுகிறோம். சந்திரனை வைத்து நாட்களையும், மாதங்களையும்,
வருடங்களையும் கணக்கிட்டதாலும் மனிதனின் ஆயுட்காலம் குறைந்தது.

அடுத்ததாக பொய் சொல்லுவதினால் நாம் மரணத்தை நோக்கிச் செல்லுகிறோம். நீ இந்த


பொருளை எடுத்தாயா என்று கேட்கப்படும்போது, உண்மையை சொல்லாவிட்டால் ஆயுசு
நாட்கள் குறைகிறது. நீங்கள் வேதங்களை தினமும் வாசிக்கலாம், தினமும் பிரார்த்தனை
செய்யலாம், தியானம் செய்யலாம். ஆனால் உண்மையைக் கூறுவது இவைகள்
எல்லாவற்றைப் பார்க்கிலும் முக்கியமானதாகும்.

அடுத்ததாக உங்களுக்கு முன்பாக ஜீவன் முக்திக்கு செல்லும் பாதை இருக்கிறது,


மரணத்திற்கு செல்லும் பாதையும் இருக்கிறது. நீங்கள் ஒரு மனிதனாக இருந்தால் ஜீவன்
முக்திக்கு செல்லும் பாதையை தேர்ந்தெடுப்பீர்கள், மிருகமாக இருந்தால் மரணத்திற்கு
செல்லும் பாதையை தேர்ந்தெடுப்பீர்கள். ஒன்று நீங்கள் ஒரு மனிதனாக இருக்க வேண்டும்
அல்லது மிருகமாக இருக்க வேண்டும்.

மிருக குணம் என்றால் என்ன? இனக்கவர்ச்சியை எல்லாவற்றிலும் தேடுவது மிருகக்


குணமாகும். மிருக குணமுள்ளவர்கள் இனக்கவர்ச்சியை தூண்டுவதிலேயே ஆர்வமாக
இருப்பார்கள். இவ்வுலகத்தில் மாத்திரமல்ல, மறுமையிலும் இனக்கவர்ச்சியை அனுபவிக்க
வேண்டுமென்ற எண்ணத்துடன் சிலர் இயேசுவின் காலத்தில் இருந்தார்கள். அவர்கள்
இயேசுவிடம் ஒரு பெண்ணிற்கு ஏழு புருஷர்கள் இருந்தார்கள். சொர்க்கத்தில் அவள்
யாருடைய மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்:
சொர்க்கத்தில் திருமணமோ, இனக்கவர்ச்சியோ இருக்காது என்று கூறினார்.
ஜீவன் முக்தியை அடைய விரும்புபவர்கள் இனக்கவர்ச்சியில் தங்கள் வாழ்க்கையை
வணாக்கக்கூடாது. ஏனென்றால்
ீ அது பஞ்சேந்திரியத்தில் மட்டுமே அனுபவிக்கக்கூடியது.
நவானிதேஹி அல்லது இறைவன் அருளும் புதிய சரீரத்தில் இனக்கவர்ச்சி கிடையாது.
மனிதனின் எண் ஆறு. ஏனென்றால் அவன் ஆறாம் நாளில் படைக்கப்பட்டான் என்று
விவிலியம் கூறுகிறது. மிருகக் குணங்கள் ஆறு. அவையாவன காமம், குரோதம், லோபம்,
மோகம், மதம் (ஆணவம்) மாச்சரியம் (பொறாமை) என்பவைகளாகும். இந்த
ஆறு குணங்களையும் ஒழித்து, அழித்து தெய்வகத்தன்மையை
ீ அடைய வேண்டும். ஆக
மனிதன் மனிதனாக வாழாமல், மிருகமாக வாழும்போது அவனுடைய ஆயுட்காலம்
குறைய நேரிட்டது. ஆகவே மனிதனின் ஆயுட்காலம் குறைந்ததின் காரணங்களைப்
பார்த்தோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால், இறைவனுக்கு கீ ழ்ப்படியாமல் இருப்பதே
நம்மை (மரணிக்க) இறக்கச் செய்கிறது. மாறாக நாம் அவருக்கு கீ ழ்ப்படிகின்றபோது
ஜீவனைப் பெறுகிறோம். இவ்வாறு சாகாத கல்வியைக் கற்பதே ஒருவனுக்கு புகழைத்
தருகின்றது.

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து


முந்தி யிருப்பச் செயல்” – என்ற குறளில்

வள்ளுவர்  ஒருவன்  தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் இருக்கும்


அவையின்  தலைமகனாக  தன் மகன்  இருக்குமாறு உருவாக்க  வேண்டும்  என்கிறார்.
கல்வியை  மட்டும்  கற்றால் போதாது, வாழ்க்கைக் கல்வி  அதாவது  எவ்வாறு வாழ
வேண்டும்  என்ற கல்வியையும் கற்க வேண்டும் என்று  சென்ற  இதழில்  பார்த்தோம்.
இக்காலத்தில்  பெற்றோர் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட  சூழ்நிலையிலும்  வாழும் கலையை
கற்றுக்கொடுக்காமல்  பணத்தை  அவர்களுக்காக சேர்த்து  வைக்கிறார்கள். நான்
கஷ்டப்பட்டது போல என்  பிள்ளைகளும்  கஷ்டப்படக்கூடாது என்ற மனநிலை
உடையவர்களாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது. பிள்ளைகள் கஷ்டப்படும்போது வாழ
கற்றுக்கொள்ளுவார்கள் என்ற மனநிலைபெற்றோர்களிடம் இருந்தால் அது
ஆரோக்கியமாக இருக்கும்.
ஸ்ரீமந் நாராயணர்  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாஅமைத்த மனுஜோதி  ஆசிரமத்தில்
“வாழ்க்கைகல்வி” முறை  இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.  பள்ளிக் கூடம்  மற்றும்
கல்லூரி  செல்பவர்களுக்காக  கோடை காலத்தில், இந்த பயிற்சியை  மேற்கொள்ள
வாய்ப்பளிக்க  “கோடை கால விடுமுறை முகாம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கல்வியறிவு,
வாழ்க்கை கல்வி இவற்றை மட்டுமே பிள்ளைகளுக்கு  அளித்தால் போதுமா? ஒருவன்
சாகாத கல்வியை கற்றுணர வேண்டாமா?வள்ளுவரே  தம்  குறளில்  இதைக் கூறுகிறார்.

“கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன்


நற்றாள் தொழா அர் எனின்”

கல்வியில் சிறந்தது சாகாத கல்வியாகும் என்று வள்ளலார் தம்முடைய உபதேசத்தில்


கூறுகிறார். திருக்குறளில் முதல் அதிகாரத்திலேயே  சாகாத கல்வியைப் பற்றி வள்ளுவர்
சொல்லியிருக்கிறார். வேதங்களில் சாகாத கல்வி சொல்லப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கான வழியைப் பற்றி திருவள்ளுவர் கூறுகிறார். பிறவிப்
பெருங்கடலை நீந்தி எவ்வாறு  இறைவனடி சேருவது? என்ற அறிவே சாகாத கல்வியாகும்.
மருத்துவக் கலையைப்  பயின்றவர்  மருத்துவர்  என்கிறோம்.  மர வேலைப்பாடுகள்  செய்ய
கற்றவனை  தச்சன் என்கிறோம்.  பொன் ஆபரணங்களை  செய்ய படித்தவனை
பொற்கொல்லன் என்கிறோம். சாகாத கல்வி பயின்ற மருத்துவர் இறைவன் ஆவர்.
இறைவனே இப்பூமிக்கு அவதாரமாக வந்து எவ்வாறு மரணத்தை வெல்ல வேண்டும் என்று
கற்றுக் கொடுக்கிறார். ஆகவேதான் விவிலியத்தில் “நானே உன் பரிகாரியாகிய இறைவன்”
என்று விளம்புகிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் அறிவை
மனிதனுக்கு வழங்கினார். இறைவன். மரணம் என்ற  பிணியைப் போக்கும் சாகாத
கல்வியை  இறைவன் தாமே கற்றுக்கொடுக்கிறார். மரணத்தை வெல்வதற்கான வழிகளை
ஆராய்ச்சி செய்யவே, மனுஜோதி ஆசிரமத்தை  நிறுவினார், கல்கி மகா அவதாரம் ஸ்ரீ
லஹரி கிருஷ்ணா. வள்ளலார்  இதை மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் வழி என்று
தம்முடைய உபதேசத்தில் கூறுகிறார். மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்குச் சில
பக்குவங்களை வள்ளற் பெருமான் கூறுகிறார்.

நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு ஆகும். அவையாவன் ஆகாரம், மைதுனம், நித்திரை,


பயம்.  இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்கு அளவையும்
கூறுகிறார்.  உணவு அரை (½)  உறக்கம் (1/8)  மைதுனம் (1/16) பயம் பூஜ்ஜியமாக (0)
இருக்க வேண்டும் என்கிறார்.  மனிதன் சாதாரணமாக 1000 ஆண்டுகள் வாழ்வதற்காக
சிருஷ்டிக்கப்பட்டான் என்று விவிலியத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.  1000
ஆண்டுகள் வாழ வேண்டிய மனிதன் தற்போது கலியுகத்தில்  30 அல்லது  40 வயதில்
மரணமடைகிறான். ஆயுள் குறைந்து போவதற்கான காரணங்களை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
வேதங்களை ஆராய்ந்து கூறியுள்ளார். அடுத்தபடியாக  ‘சாகாத கல்வி’ அல்லது
‘மரணமில்லா பெருவாழ்வு’ அல்லது  ‘ஜீவன் முக்தி’ அல்லது  ‘நித்திய ஜீவன்’ எவ்வாறு பெற
வேண்டும் என்று விளம்பியுள்ளார்.   அவற்றைக் குறித்து காண்போம்.

மனிதன் இறைவனோடு உறவாடுவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் மனிதன்


இறந்து போக  நேரிட்டது.  ஜீவன் அவனை விட்டுச் சென்று விட்டதினால், எல்லோரும்
எல்லா இடத்திலேயும்  “ஜீவனை” எவ்வாறு பெற வேண்டும் என்ற ஆராய்ச்சியை
நடத்துகிறார்கள். ஜீவன் எங்கேயிருந்து ஆரம்பித்தது? அது எவ்வாறு ஆரம்பித்தது?
என்பதைப் பற்றி  விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
வைட்டமின் – ஈ (Vitamin – E) சேர்த்துக்கொண்டால் மனிதன் நீண்ட காலம் வாழலாம்
என்கிறார்கள்.

‘காயகல்பம்’ என்பதை உணவில் சேர்த்துக் கொண்டால், நீண்ட காலம் வாழலாம் என்று


மூலிகை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மனுஜோதி ஆசிரமம், நித்தியஜீவன் அல்லது சாகாத வரம் அல்லது ஜீவன் முக்தியை


எவ்வாறு பெற வேண்டும் என்று ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சி நிலையமாக உள்ளது.
மனிதன் எக்காரணங்களினால் இறக்க  நேரிட்டான் என்பதைக் கண்டுபிடித்து விட்டால்,
நீண்ட காலம் வாழலாம். மனிதன் 50 முதல் 80 வயது வரைதான் வாழ்கின்றான்.
அதற்குள்ளாக அவன் யாரையாவது சுட்டுக் கொன்று சர்வாதிகாரியாக விரும்புகிறான். 
இறந்த பின்னர் அவனுக்கு ஒரு சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. ஓ! அவன் பூதவுடலை
நீக்கி புகழுடம்பை எய்தினான் என்று கூறுகிறார்கள். ஒருவன் கற்சிலையாக
வாழ்வது,ஜீவன் முக்தி அல்லது சாகாத வரம் பெறுவதாக அர்த்தமாகுமா? அப்படியென்றால்
நாம் மிகவும் பரிதபிக்கப்படுகின்ற மக்களாக இருக்கிறோம்.
சாகாத வரம் அல்லது சாகாத கல்வி அல்லதுஜீவன் முக்தி, இப்பொழுது எளிமையில்
வந்துள்ளதால், ஒரு ஏழை மனிதன்கூட விலை செலுத்தாமல் அதைப்
பெற்றுக்கொள்ளலாம். சாகாத கல்வியை கற்றுக்கொள்ள அல்லது ஜீவன் முக்தியை
பெற்றுக்கொள்ள வயது வரம்பு கிடையாது. ஜீவன் முக்தி என்பது இறைவனின் கையில்
இருக்கிறது. ஆகவே ஜீவனை நாம் எவ்வாறு இழந்து போனோம்? மனிதன் தன்னுடைய
சொந்த மூளையை உபயோகித்து எவ்வாறு ஜீவன் முக்தியை பெற முடியும்? அது
சாத்தியமல்ல. இறைவனே அதை நமக்கு ஆசானாக வந்து கற்றுத்தர வேண்டும். ஸ்ரீ
கிருஷ்ணர் வரப் போகின்ற கல்கி மகா அவதாரத்தை “மகத்தான ஆசான்” என்று கூறுகிறார்.
இழந்துபோன ஜீவனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
விஞ்ஞானிகளா? காயகல்பம் செய்யும் மூலிகை வைத்தியர்களா? இறைவனை
பின்பற்றுபவர்களா? அல்லது ஜீவனை தன் கையில் வைத்திருக்கும் இறைவனின்
அவதாரமான கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவா? என்பதுதான் கேள்வியாகும்.

மனிதன் சுயமாக சிந்திக்கவும், சுயமாக செயல்படக்கூடியவனாக சிருஷ்டிக்கப்பட்டான்.


‘சுயசித்தம்’ என்பது மிகவும் ஆபத்தானது. மனிதன் இறைவனின் சாயலில்
சிருஷ்டிக்கப்பட்டபோதும், அவன் சுயசித்தமுள்ளவனாக அதாவது தான் விரும்பியதை
செய்யக்கூடியவனாக இருக்கிறான். “சுயசித்தம்” என்பதை மனிதன் விட்டு விட்டு
இறைவனின் சித்தத்தை செய்வதே ஞானமாக கருதப்படுகிறது. இந்த ஞானத்தின் மூலமாக
நாம் இழந்துபோனஜீவனைப் பெறுகிறோம். மறுபடியுமாக இறைவனே நம்மை ஆட்சி செய்ய
வேண்டுமென்று நாம் விரும்ப வேண்டும். அத்துடன் அவருடைய கட்டுப்பாட்டின்கீ ழ் வர
விரும்ப வேண்டும். இறைவா என்னை ஆட்கொள், நீ என்னை ஆள வேண்டும், நான்
உம்முடைய கட்டுப்பாட்டின்கீ ழ் இருக்க விரும்புகிறேன், என்று நாம் கூறி நம்முடைய
விருப்பங்களையெல்லாம் விட்டு விட்டு, நம்முடைய வாழ்க்கையை இறைவனிடம்
ஒப்புவிக்க வேண்டும்.

மிருகங்கள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றிற்கு சுயசித்தம் கிடையாது. மனிதனிடம்: நீ


அவற்றை பராமரித்துக் கொள் என்றார். ஏன்? அவைகளிடமிருந்து மனிதன் இறைவனுடைய
கட்டளைகளை அறிந்துகொள்ளலாம். இறைவன் யானையிடம்:  “நீ இலை, தழைகளை
உட்கொண்டு உயிர் வாழ்” என்றார். குதிரைக்கும் அதே கட்டளைதான் கொடுக்கப்பட்டது.
தினமும் அவைகள் புல்லைத்தான் சாப்பிடுகின்றன. எனக்கு புல் தின்று சலிப்பாக
இருக்கிறது என்கின்றனவா?

ஆனால் மனிதனோ ஒருநாள் ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்கிறான். இன்னொரு


நாள் ஐஸ்க்ரிம் வேண்டும், ஒருநாள் பால்கோவா என்று விதவிதமான ருசிகளை ருசிக்க
வேண்டும் என்கிறான். ஒரேவிதமான ஆகாரத்தை சாப்பிட்டால் எனக்கு சலிப்பாக
இருக்கிறது என்கிறான்.

ஆயுட்காலம் குறைய ஆரம்பித்தபோது, ஜீவன் எங்கேயிருக்கிறது என்று மனிதன்


கண்டுபிடிக்க முயற்சி செய்தான். தான் சாப்பிடும் உணவினால் ஆயுட்காலம்
குறைந்துபோனது என்று நினைத்தான். முன்பு தேவர்களின் உணவை மனிதன் சாப்பிட்டான்.
அதன்பின்னர் மிருகங்களைப்போல மூலிகைகளை உண்ண ஆரம்பித்தான். ஆனால்
இறைவனின் பாகமாக உள்ளவர்கள் ஜோதி ரூபமானவர்கள். அவர்கள் மிருகங்கள் அல்ல.
ஆனால் மிருகங்களைப் போல ஆனார்கள். அதன்பின்னர் பழங்களை உண்ண
ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் விதை தானியங்களை சாப்பிட்டார்கள். நல்ல வழிக்குச்
செல்வதற்குப் பதிலாக, அவர்கள் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டார்கள். ஆகவே
அவர்கள் ஆயுட்காலம் 120 வயது என்றானது. 1000 வயதிலிருந்து 120 என்ற வயதிற்கு
வரம்பு விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 80 வயது வரை வாழ்ந்தார்கள். தற்போது 40, 50, 60
வயதுவரை வாழ்வதும் மிகவும் சிரமமாக உள்ளது.  ஏனென்றால் இப்பொழுது மனிதன்
புலால் உண்ணும் நிலைக்கு வந்து விட்டதால் ஜீவனை இழந்துவிட்டான். நாவின் ருசிக்கு
அடிமையாகி, மிருகங்களின் மாம்சத்தை உண்ண ஆரம்பித்தான். இது ஜீவனுக்குச் செல்லும்
வழியல்ல. புலால் உண்ணாமல் இருப்பதைப் பற்றி வள்ளுவர், வள்ளலார், மகாத்மா
காந்தியடிகள் வலியுறுத்தியுள்ளார்கள். ஜீவன் முக்தியைப் பெற விரும்புபவர்கள் புலால்
உணவை உண்ணாமல் இருக்க வேண்டும்.

அடுத்ததாக ஜீவன் மனிதனை எங்ஙனம் விட்டுச் சென்றது? இறைவனைத் தவிர எந்த


சிருஷ்டியையும் வணங்கவும் கூடாது, நேசிக்கவும் கூடாது. இறைவனை நாம் நம் முழு
மனதுடனும், முழு ஆன்மாவுடனும், முழு இருதயத்துடனும், முழு சக்தியுடனும் நேசிக்க
வேண்டும். அப்படி செய்யும்போது நாம் வேறு யாரையும் வணங்கவும் முடியாது,
நேசிக்கவும் முடியாது. இறைவனைத் தவிர வேறு சிருஷ்டிகளை வணங்குபவர்களுக்கு
சாகாத ஜீவன் கிடைக்காது. இறைவனின் தத்துவங்களை வர்ணிக்கும் சிருஷ்டிகளாகிய,
உதாரணத்திற்கு விநாயகர், பிரம்மா போன்ற சிருஷ்டிகளை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இங்கே
குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவை இறைவனின் தெய்வக
ீ குணங்களை
விளக்குபவையாக உள்ளன. பொருளாசை உள்ளவர்கள், கொலை பாதகர்கள் சாகா ஜீவனைப்
பெற முடியாது. கொலை பாதகர்கள் என்பதற்கு விளக்கமாவது் எவன் ஒருவன்
இன்னொருவனை துவேஷிக்கின்றானோ, பகைக்கிறானோ அவனே கொலைபாதகன். பகை
உணர்ச்சியுடையவர்கள் சாகா ஜீவனைப் பெற முடியாது.

You might also like