You are on page 1of 2

அறிந்து உறவாடு

அவையோருக்கு நற்றமிழ் வணக்கம். என் பெயர் ____________________.


நான் ஐக்கோம் தமிழ்ப்பள்ளியிலிருந்து பேச வந்துள்ளேன்.
எனக்கு வழங்கப்பட்ட தலைப்பு அறிந்து உறவாடு . உறவைப் பற்றிப்
பலர் பலவிதமான விளக்கங்களைக் கூறியிருக்கலாம். ஆனால், வள்ளுவர்
அறிந்து எவ்வாறு உறவாடுவது என்று நாம் ஒருவருடன் கொள்ளும்
நட்பில் மிக எளிமையாக எடுத்துரைத்துள்ளார். அதையும் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஏற்படும் ஒரு சிறு அனுபவத்தைக் கூறியே
விளக்கியுள்ளார். எத்தகைய அனுபவம் என்று உங்களுக்கு வினா
எழுப்புகிறதா?

ஆம் அவையோரே, ஒருவனது உடலின் மானத்தை மறைப்பது


அவன் அணிந்திருக்கும்
ஆடை. அந்த ஆடை, அவன் உடலை விட்டு நழுவினால் என்ன நிகழும்?
அவனை அறியாமலே அவனது கை விரைந்து சென்று அவனது
மானத்தைக் காப்பாற்றும். இது ஒவ்வொருவருக்கும் அன்றாட
வாழ்க்கையில் நடைபெறும் ஒரு சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும்,.
இதையே நட்புக்கு உரிய இலக்கணம் என்கிறார் வள்ளுவர்.

‘உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே


இடுக்கண் களைவது ஆம் நட்பு’

இடுப்பிலுள்ள ஆடை நழுவி விட்ட ஒருவனது கை அவனை அறியாமலே


உடனே விரைந்து சென்று அவனது மானத்தைக் காப்பாற்றுவது போல,
நண்பனுக்குத் துன்பம் வந்ததை அறிந்த அந்தக்கணமே, அவன்
அறியாமலே, அவனது அழைப்பிற்குக் காத்திராமல், விரைந்து சென்று
அவன் துன்பத்தை நீக்குவதுதான் நட்பு என்பது இக்குறளின் கருத்து.
இவ்வாறான நடபுடன் அறிந்து உறவாடுவதே சிறந்தது.

அறிந்து உறவாடுவதை வள்ளுவர் மற்றொரு நோக்கிலும் மிக


அழகாகச் சித்தரித்துள்ளார். அன்பிற்கினிய சபையோரே, நல்ல
நூலைக் கற்பதினால் கிடைக்கும் மகிழ்ச்சியுடன் நல்லவர் நட்பை
ஒப்பிட்டுக் கூறுகின்றார் வள்ளுவர்,

‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்


பண்பு உடையார் தொடர்பு.’

‘நவிலுதல்’ என்ற சொல்லுக்குச் ‘சொல்லுதல்’, ‘நாவினால் உரைத்தல்’,


‘வாசித்தல்’ என்று பொருள். ஒவ்வொரு முறை படிக்கும் போதும், புதிய
புதிய சிந்தனைகள், கருத்துகள், பொருள்
கொள்ளும் வகைகள் எனப் புதுமையை உணர்த்துவன நல் நூல்கள்.
ஒவ்வொரு வாசிப்பிலும் நூலின் நயமும், பெருமையும் மிகும்.
அதுபோலவே பண்புடைய பெரியோரின் சுற்றத்தை
விரும்பி, நட்பாக உறவாடும், ஒவ்வொரு முறையும் அந்தச் சுற்றத்தின்
அருமை கூடும்; அந்த உறவின் பெருமை மிகும்.

என் நெஞ்சில் குடியிருக்கும் என் தமிழ் நெஞ்சங்களே,

அறிந்து உறவாடுவதை இந்தக் குறளில் இவ்வாறு மிக அழகாக


எடுத்து இயம்புகிறார்.

‘அழிவி னவைநீ க்கி ஆறுய்த்து அழிவின்கண்


அல்லல் உழப்பதாம் நட்பு.’
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, நல்வழியில்
நடக்கச் செய்து,அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின்
துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும் என்று எவ்வாறு
அறிந்து உறவாட வேண்டும் என்பதை மிக ஆழமாகக் கூறியுள்ளார்
வான்புகழ் வள்ளுவர்.
சபையோரே,

இறுதியாக நாம் வள்ளுவன் காட்டிய வழியில் அறிந்து


உறவாடினால், எக்காலத்திலும் உறவு என்ற மகத்தான சக்தி நம் வாழ்நாள்
முழுவதும் நம்முடன் பயணிக்கும் என்பது திண்ணம் என்று கூறி விடை
பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

You might also like