You are on page 1of 26

1.

0 நன்றியுரை

நமச்சிவாய வாழ்க நாதந்தாள் வாழ்க

இமைப் பொழுதும் என் நெஞ்சில்

நீங்காதான் தாள் வாழ்க...!!

வணக்கம் . என் பெயர் சுபாசினி இராஜீ.. நான் இளங்கலைப் பட்டப்

படிப்பில் தமிழ் மொழி பிரிவில் ஆறாம் பருவம் பயில்கிறேன். இந்த

இனிய வேளையில் நான் தமிழுக்கு என்றும் அழியா சிறப்பான

தமிழ்த்தாயின் பொற்பாதம் போற்றி இவ்விடுபணியைî சிறப்பாகச் செய்ய

துணைப் புரிந்த அனைத்து தரப்பினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத்

தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விடுபணியைச் சிறப்பாகச் செய்ய எனக்கு மிக்கத் துணையாக

இருந்த எல்லாம் வள்ள இறைவனுக்கு இவ்வேளையில் என் நன்றியைத்

தெரிவித்துக் கொள்கிறேன். அவனின்றி ஒர் அணுவும் அசையாது.

ஆகையால், எனக்கு இவ்விடுபணியைச் செய்வதற்கு ஆசிர்வாதமும் நல்ல

ஆரோக்கியமான உடல்நலத்தையும் கொடுத்தமைக்கு இறைவனுக்கு என்

முதல் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.தொடர்ந்து, இளங்கலை பட்டப் படிப்பை

மேற்கொள்ளும் எனக்கு தமிழ்மொழியில் பாடத்தைப் போதிக்கும்

விரிவுரையாளர் டாக்டர் அருள்நாதன் விசுராசம் அவர்களுக்கும் என்

நன்றியை இவ்வேளையில் சமர்ப்பிக்கிறேன். ஐயாவின் வழிக்காட்டலும்

தூண்டுகோலும் இல்லையெனில் இவ்விடுப்பணியை முழுமைப் பெறச்

செய்திருக்க முடியாது.

மேலும், என்னுடன் பயிலும் என் தோழர்களுக்கும்

தோழிமார்களுக்கும் இவ்வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக்

கொள்கிறேன். என் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எனக்கு

1
இவ்விடுபணியைச் செய்வதற்குத் தோல் கொடுத்தனர். இவ்விடுபணியைச்

செய்யும் போது என்னுள் ஏற்பட்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும்

அவர்கள் மிகவும் தெள்ளத் தெளிவாக சற்றும் முகம் சுளிக்காமல்

விளக்கினர். கிடைத்த குறிப்புகளை அவர்கள் யாவரும் சுயநலம்

பார்க்காமல் எனக்கும் கொடுத்து உதவினர். அதேப் போன்று நானும்

எனக்குக் கிடைத்த குறிப்புகளை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

‘தோள் கொடுப்பான் தோழன்’ எனும் பழமொழிக்கு என் தோழர்கள் தக்க

சான்றுகள்.

இறுதியாக இவ்விடுப்பணியை மிகவும் சிறப்பாகவும் தக்க

விளக்கங்களுடனும் சமர்ப்பிப்பதற்கு உறுதுணையாக இருந்த எல்லா

தரப்பினருக்கும் என் இதயங்கனிந்த நன்றியை மறுபடியும்

தெரிவித்துக் கொள்கிறேன். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை

’என்பது போல எனக்கு இவ்விடுபணியைச் சிறப்பாக செய்வதற்கு

நிழலாக இருந்து உதவிய அனைவரையும் என் உடலில் கடைசி

மூச்சுக் காற்று இருக்கும் வரை மறக்க மாட்டேன். நன்றி, வணக்கம்!

2.0 முன்னுரை

தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம் ஆகும்.

இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சியுற்றிருந்தது. மூன்று

பேரரசுகள் சங்க காலத்தில் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள்

மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இம்மூன்று பேரரசுகளை ஆண்ட

மன்னர்கள் தங்கள் நாட்டிற்கு நன்மையைச் செய்து மேன்மையடையச்

செய்தனர். ஒவ்வோர் மன்னர்க்கும் இடையே ஆதிக்கப்போட்டி நடைபெற்று

வந்தாலும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். இச்சங்க

2
காலத்தின் அரசியலில் மக்களின் பங்கும் அவசியமாகிறது. எனவே

அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது

மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.

சங்க காலத்தில் நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு

பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை

முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாகக் காடும் காட்டைச் சார்ந்த

இடத்தை முல்லை என்றும், மலையும், மலையைச் சார்ந்த இடத்தை

குறிஞ்சி என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்றும்,

கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து அவ்வந்நிலத்தை

ஒட்டியே வாழ்ந்து வந்தனர். இவ்வாறு நிலத்தை ஒட்டிவாழ்ந்த சங்க கால

மக்கள் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுத்துக் கொள்ளாமல்

அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு

வாழ்ந்த பெருமைக்குரியவர் ஆவர்.

இல்லறவாழ்க்கையைச் சங்க காலத்தில் அகம் எனக் குறிப்பிட்டனர்.

இதற்குச் சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை,

போன்ற அகப்பொருளைப் பாடும் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.

சங்ககாலத் தமிழர்கள் களவு, கற்பு எனத் தம் வாழ்க்கைக்கு இலக்கணம்

வகுத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.தாமாகக் கூடுவது களவு வாழ்க்கை

என்றும், பெரியோர்களால்கூட்டப்பட்ட வாழ்க்கை கற்பு வாழ்க்கை என்றும்

கொண்டிருந்தனர்.அகப்பொருள் மரபின்படி களவு, கற்பு என்ற

பெரும்பிரிவுகளுள் அடங்கும் உட்பிரிவுகளையும் துறைகளையும்

அமைத்துப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர். இயற்கைப்புணர்ச்சி,

பாங்கற்கூட்டம், இடந்தலைப்பாடு, பாங்கியிற்கூட்டம், இருவரும் உள்வழி

அவன்வரஉணர்தல், முன்னுறவுணர்தல், நாணநாட்டம், நடுங்கநாட்டம்,

மடல் திறம், குறைநயப்புக்கூறல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி,

3
ஒருவழித்தணத்தல், உடன்போக்கு, வரைவுமுடுக்கம், வரைபொருட்பிரிதல்

எனக் களவு அமைக்கப்பட்டுள்ளது. மணம் சிறப்புரைத்தல், ஓதற்பிரிவு,

காவற்பிரிவு, பகைதணி வினைப்பிரிவு, வேந்தற்குற்றுழிப்பிரிவு,

பொருள்வயிற்பிரிவு, பரத்தையிற்பிரிவு எனக் கற்பு அமைக்கப்பட்டுள்ளது.

சங்க கால இலக்கியம் என்பது வாழ்ந்த வாழ்க்கையைப்

பொருளாய்க் கொண்டதாகும். எனவே இக்காலம் இயற்கை நெறிக்காலம்

எனப்படுகிறது. சங்க கால மக்களின் வாழ்க்கையில் காணப்பட்டப் போர்

ஒழுக்கங்களும், காதல் ஒழுக்கங்களும் சங்க இலக்கியங்களில் பெயர்த்து

வைக்கப்பட்டுள்ளன. சங்க கால வாழ்க்கையில் உள்ள களவு வாழ்க்கை

கற்பு வாழ்க்கை ஆகியவற்றையும் இக்கால இளையோர்களிடையே உள்ள

காதல், திருமண வாழ்க்கையையும் ஓப்பீடு செய்வோம் வாரீர்.

3.0 சங்க கால வாழ்க்கையில் உள்ள களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கை

ஆகியவற்றையும் இக்கால இளையோர்களிடையே உள்ள காதல்,

திருமண வாழ்க்கையையும் ஓப்பீட்டு ஓர் ஆய்வு செய்தல்

3.1 வரதட்சணை - சங்க இலக்கியத்தில் சீதனம்

நற்றிணையில் தலைவன் இதுகாறும் அசையாதிருந்ட்த உள்ளத்தை

அசையச் செய்யும் திறம்வல்ல தலைவியை ஈன்ற தந்தையைத் தாயை

மனதார வாழ்த்துகின்றான். தனக்கு இன்பம் தரக் காரணமாக இருந்த

தலைவியின் பெற்றோர்களிடம் பொன்னையோ பொருளையோ

எதிர்பார்க்கவில்லை. இத

“ யார் மகள் கொல்லிவள் தந்தை வாழியர்! ”

“ திண்டேர்ப் பொறையன் தொண்டி

தன்திறம் பெறுக இவள் ஈன்ற தாயே!”

என்ற அடிகளால் அறியலாம்.

4
உயர்குடியில் பிறந்த ஒருத்தியைத் தலைவன் மணக்கும் பொருட்டுச்

சான்றோர்பால் அருங்கல முதலியவற்றைக் கொடுத்து அனுப்புகிறான்.

ஆயின், தலைவன் தந்தனுப்பிய பொருளைச் சீர்தூக்கிப் பார்ப்பின் இவளது

அழகுக்கு உறந்தை, வஞ்சி ஆகிய இரு தலைநகரங்களுமே ஈடாகா.

எனவே, அத்தலைவனுக்குத் தலைவியை மணம் முடித்துக் கொடுப்பது

நலம்ம் என்கிறாள் செவிலி. தலைவன் தலைவியை மணக்க அவளது

பெற்றோர்களை வருத்திப் பொருள் பறிக்க விரும்பவில்லை. இங்கு

நெய்தல் தலைவியை மணக்க முல்லைத் தலைவன் சான்றோர் சுமக்க

முடியாத அளவுக்குப் பொருள் கொடுத்து மணம் பேசுவதைக்

காண்கிறோம்.

“சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது

வாந்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்

.......................................................................
அடைப்பொருள் கருதுவிர் ஆயின்

......................................................................
பங்குனி விழாவின் உறந்தையோடு

உள்ளி விழாவின் விஞ்சியும் சிறிதே”

என்ற நற்றிணை அடிகளால் காணலாம்.

“உப்பு வணிகர் வாழ்வு துன்பமானது”

எனப் பிறர் கூறினாலும் உமணர் மகளோடு சேர்ந்து ஐம்புல இன்பம்

துய்ப்பது இனிமையே தரும். எனவே, இவன் இன்னாள் என அறிந்து வருக

எனப் பாங்கனிடம் தலைவன் ஏவுகின்றான். இங்கும் நெய்தல் தலைவியை

மணக்க விரும்பும் குறிஞ்சித் தலைவன் பொருளைக் குறிக்கோளாக

விரும்பாமல் அன்பு நெஞ்சினையே விரும்புகின்றான். இச்செய்தியினை

5
“ உலர்விளை உப்பின் கொள்ளை சாற்றி

அதர்படு பூழிய சேட்புலம் படரும்

ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்

கணநிறை வாழ்க்கை...........................................

பன்மான் பேதைக் கொழிந்ததென் நெஞ்சே”

எனும் அகநானூற்று அடிகளால் நோக்கலாம்.

இதுவே அன்றையக் கால வாழ்ககை


் . சங்க காலங்களில் அதிகமான வரதட்சணைக்கு
இடமளிக்காமல் தான் கொண்ட அன்புக்கும் காதலுக்கும் மதிப்பளித்தனர். பெற்றோர்களுக்கு
அதிகமான சுமையைக் கொடுக்க விரும்பாத ஒரு நிலையைக் காண முடிந்தது. வரதட்சணை என்ற
பேரில் கொடுமைகள் இழைக்கவில்லை; துன்புறுத்தவில்லை. மாறாக, வரதட்சணைக்குப் பெண்ணின்
அழகும் குணமும் ஈடாகுமா என எண்ணினர்.
ஆனால், இன்றைய நாவீன காலங்களில் பார்த்தோமேயானால், வரதட்சணை என்பது ஒருவரின்
வசதியைக் காண்பிப்பதாக அமைந்து விட்டது. வரதட்சணைக் கொடுத்தால்தான் திருமணம் எனும்
அளவிற்கு காலம் மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் அதிகமான வரதட்சணைக்
கொடுத்தால் போது; பெண்ணை மணந்து வைக்கத் தயாராகிறார்கள். இதனால், இரு குடும்பத்திற்கும்
இடையே உள்ள உறவுக்கு மதிப்பில்லாமல் போகின்றது. அதிகமான வரதட்சணைக் கொடுப்பதே தனக்குப்
பெருமை என எண்ணிக் கொண்டு வலம் வருபவர்கள் ஏராளம். இதனால், ஏழைக் குடும்பத்தில்
பிறந்தவர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்படுவதை நாம் அன்றாட வாழ்ககை
் யில் கண்கூடாகக் காண
முடியும். வரதட்சணைக் குறைவாகக் கொடுத்தமையால் தன் மனைவியைத் துன்புறுத்தும் கனவரும்,
மீண்டும் மீண்டும் பெற்றவர்களிடம் பணம் வாங்கி வரும்படி சித்ரவதைப் படுத்தும் ஆண்களும்
இருக்கத்தான் செய்கின்றனர். இதனால், அன்றையக் காலங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட
அன்பு , பாசம், காதல், பரிவு இவற்றிற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது. “பணம் பத்தும் செய்யும்”
என்பார்களே அதற்கொப்ப பணத்திற்கும் பொருளுக்கும் கிடைக்கும் முக்கியத்துவம் இன்றைய
உறவுகளுக்குக் கிடைப்பதில்லை. இன்றையக் காலங்களில் எந்த பெண் நல்ல குணம் கொண்டவள் என்று
பார்ப்பதைக் காட்டிலும் எந்த பெண்ணின் வீட்டில் அதிக வரதட்சணைக் கொடுப்பார்கள் என்ற
ஆராய்சச
் ியே அதிகம் உள்ளது. வரதட்சணைக் கொடுமைத் தாங்காமல் தற்கொலைச் செய்து
கொன்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கௌரவம் என்ற பெயரில் ஒருவரை ஒருவர்
வரதட்சணை என்ற பெயரில் துன்பத்தை விளைவித்துக் கொள்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
புகுந்த வீட்டிற்கு வருவதற்காக ஒரு பெண் தட்சணை தருவது கூடாது. மாறாக மாப்பிள்ளை வீட்டார்
விரும்பினால் தட்சணை கொடுத்து தங்கள் வீடடு
் வரும் மகாலட்சுமியை (பெண்) அழைத்து வரலாம்.
ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டின் மகாலட்சுமியாகவே கருதப்படுகிறாள். எனவே
மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு சிரமப்படுத்தி அழைத்து வரக் கூடாது. வரதட்சணை பெறுவதால்

6
புகுந்த வீட்டு உறவுகள் மீது மணமகளுக்கு வெறுப்பு ஏற்படுமே தவிர அன்பும் பாசமும் தழைக்காது.
வரதட்சணைக் கொடுத்தால்தான் திருமணம் என்ற நிலையிலும் வரதட்சணையை அவமானமாக
நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். கல்வி கற்று வாழ்வில் சிறந்தவர்கள் வரதட்ணை
வாங்குவதை விரும்புவதில்லை. ஏனெனில், அஃது ஒரு சிறந்த முறையல்ல. மாறாக, தனக்கு
திருமணம் செய்து வைத்த பெண்ணுக்குத் தேவையான எல்லா அடிப்படைகளையும் நிறைவேற்றுபவனே
மதிக்கத்தக்க ஆண். அவ்வகையில் மலேசிய திருநாட்டில் வரதட்சணை என்பது கேட்டு பெருவதாக
இல்லாமல் தானே தன் பெண் பிள்ளைக்குப் போட விரும்புவதைக் கொடுக்கலாம். ஆகவே, வரதட்சணை
வாங்குவதும் கேட்பதும் மிக இழிவானச் செயலாகக் கருதப்படுகின்றது. இன்றையக் காலங்களில்
துளிர்விடும் இந்த முறையைச் சங்க இலக்கியங்களோடு ஒப்பிட்டு மாற்றம் ஏற்படுத்துதல் சிறப்பு.

3.2 கற்பு

அன்புரிமை பூண்ட தலைமகள் தன்பால் அன்புடைய தலைவியைப்

பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனை வாழ்க்கையே

கற்பென வழங்கப் பெறும். கற்பு களவொழுக்கத்தின் கனி; அன்பின் வெற்றி.

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

என்பது தொல்காப்பியர் விதி. ஒத்த அன்புடைய ஒருவனும்

ஒருத்தியும் நல்லூழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புனர்ச்சியிற் கூடி

ஒழுகினராயினும், தலைமகளுடைய பெற்றோர் உடன்பாடின்றி

அவ்விருவரும் மனைவாழ்க்கையை மேற்கொள்ள இயலாது. ஆகவே,

ஒருவரையொருவர் பிரியாது வாழ்வதற்குரிய உள்ளத்துறுதியை

உலகத்தார் அறிய வெளிப்படுத்தும் நியதியாகிய வதுவைச் சடங்குடன்

தலைமகளை மணந்து கொள்ளுதல் மனை வாழ்க்கைக்கு இன்றியமையாத

சிறப்புடைய நிகழ்ச்சியாக அமைந்தது. இவ்வாறு உள்ளப்புணர்ச்சியளவில்

உரிமை பூண்டொழுகிய தலைவனும் தலைவியும், உலகத்தார் அறிய

7
மனையறம் நிகழ்த்துதற்கு உரிமை செய்தளிக்கும் செயல் முறையே

பண்டைத் தமிழரின் திருமணச் சடங்காகும்.

கணவனைவிடச் சிறந்த தெய்வம் மனைவிக்கு இல்லை என்றும்,

அவனை இன்னவாறு வழிபடுதல் வேண்டுமெனவும், தலைமகளுக்குப்

பெற்றோர் கற்பிக்கின்றனர். அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர்,

விருந்தினர் முதலியர்பால் இன்னவாறு நடந்துகொள்ளுதல் வேண்டும்

என்று தலைமகளுக்குத் தலைவன் கற்பிக்கின்றான். அன்னார் தலைவிக்குப்

புதியவர்களாதலின் அவரவர் இயல்புக்கேற்றவாறு தலைவி நடந்து

கொள்ள வேண்டுமன்றோ? குடும்பத் தலைமைப் பொறுபேற்றுக்

கொண்டுள்ள அவள், அக்குடும்பத் தொடர்புடையோர் இயல்பறிந்து

கொள்ளுதல் இன்றியமையாததாகும். இத்துணை நுட்பமாக அறிந்து

ஒழுகிய பண்டையோரின் இல்லற வாழ்க்கை வியந்து போற்றற்குரியது.

‘நின் மனைவியை இவ்வாறு பாதுகாப்பாயாக!’ என்று

தலைவனுக்கும், ‘நின் கணவனுக்கு இவ்வாறு பணிசெய்து ஒழுகுவாயாக!’

என தலைவிக்கும் சான்றோர் கற்பிக்கின்றனர். இது வதுவைச் சடங்காகிய

‘கரணம்’ நிகழுங்கால் கற்பிக்கப்பெறும். இது நச்சினார்க்கினியரின்

விளக்கம். இறுதியில் குறிப்பிட்டதை அவர், ‘ தலைவனும் களவின்கண்

ஓரையும் நாளும் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற் போல ஒழுகாது,

ஒத்தினும் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்

கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லறம் நிகழ்த்தலிற்

கற்பாயிற்று” என்று கூறுவர்.

தலைவன் தலைவராகிய இருவரும் ஒருவரையொருவர்

இன்றியமையாதவராய் மணந்து வாழுங்கால் தலைமகளது மனத்தின்கண்

அமைந்த கலங்கா நிலைமையே கற்பு எனப்படும்.

8
வள்ளுவப்பெருந்தகையும் “கற்பென்னும் திண்மை” என்று உரைத்தன்மை

காண்க. இத்தகைய மன உறுதியை உலகினருக்குப் புலப்படுத்துவதுதான்

திருமணச் சடங்காகிய கரணம் என்பது. காதலர் இருவரும்

பிரிவின்றியைந்த நட்புடையார் என்பதனை வலியுறுத்துவது. இந்நியதி மரபு

பிழைபடுமாயின் அவ்விருவரது வாழ்க்கையில் சாதலையொத்த

பெருந்துன்பம் நேரிடும் என்பது திண்னம். ‘கரணம் பிழைக்கில் மரணம்

பயக்கும்’ என்று உலகினோரிடம் வழங்கும் பழமொழியும் இதனை

வழியுறுத்துவதைக் காண்க.

இன்றைய காலக்கட்டத்தில் கற்பு வாழ்ககை


் யானது மிகவும் கீழ்தங்கிய நிலையில் இருப்பதை
நாம் காண முடிகின்றது. இந்திய பண்பாட்டில் கற்பு என்பது மிகவும் உயர்வாக பேசப்படுகிறது. கற்புடைய
பெண்கள் மிகவும் போற்றப்படுகிறார்கள்.சிலர் கற்பு மன ரீதியானது என்கிறார்கள். சிலர் கற்பு ஆண்
பெண் இருபாலருக்கும் பொதுவானது என்கிறார்கள். சில பெண்களோ, ஆண்கள் கற்பு நெறியில்
வாழாத போது நாங்கள் ஏன் அப்படி வாழ வேண்டும் என்று கூறி பவருடன் வாழ்வதை
நியாயப்படுத்துகிறார்கள். இதனிடையே, அன்றையக் காலங்களில் கற்பு என்பது தான் விரும்பிய
ஒருவரைப் பெற்றோரின் சம்மதத்துடன் கரம் பிடித்தலே ஆகும். ஆனால், இன்றைய நிலையில்
இளைஞர்களின் காதலானது குரங்கு மனம் போல நிலையற்றதாகி விட்டது. இன்றைய இளைஞர்கள்
நவீனம் என்ற பெயரில் ஒருவரைக் காதலித்துப் பெற்றோருக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்பே
இன்னொருவரை காதலிக்கத் தொடங்கி விடுகின்றனர். “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அதைக் காதலுன்னு சொல்லிறாங்க அனைவரும்” என்ற பாடல் வரிகளுக்கு ஒப்ப இன்றைய இளைஞர்கள்
நேரம் கழிப்பதற்காகவும் பணத்திற்காகவும் தான் காதல் வயப்படுகிறார்கள். இதனால், கற்பு
வாழ்ககை
் யானது குன்றி சீரழிந்து போகின்றனர். அன்றைய நிலையில் பெற்றோர்களே காதலித்தவருடன்
சேர்த்து வைத்தனர். ஆனால், இன்றோ பிள்ளைகள் தான் காதலிக்கிறேன் என்பதைக் கூட
வெளிப்படுத்தாமல் இரு வேடம் போடுகின்றனர். காதலிப்பது ஒருவரை மணம் புரிவது ஒருவரை. இது
கற்பு வாழ்ககை
் யாகக் கருதப்படுவதில்லை. மேலும், அன்றைய நிலைகளில் கற்பு வாழ்ககை
் யானது தன்
கனவனை விட சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை என சொல்லும் அளவு இருந்தது. ஆனால், இன்று
தன் கணவனை மதிக்கும் பெண்கள் குறைந்த வண்ணமே உள்ளனர். கணவனே கண்கண்ட தெய்வம்
என்ற நிலை மாறி கணவனே காணக்கூடாத தெய்வமாகி விட்டது. ஏனெனில், இன்றைய நிலையில்
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கண்டாலே சண்டை தான் மிஞ்சும். கணவனுக்குக் கொடுக்க
வேண்டிய மரியாதைகளைக் கொடுக்காத பெண்களும் நிறைய இருப்பதைக் காண முடிகிறது. பலரின்
முன்னிலையில் கணவனைப் பெயர் வைத்து அழைக்கும் மனைவிமார்களும் உலா வருகின்றனர். மேலும்,
கணவன் இருக்கும்போதே நண்பன் எனக் கூறிக் கொண்டு ஊர் திரிவதும் மனைவி முன்னிலையில்

9
வேறு பெண்ணைக் கட்டி அணைத்து வணக்கம் கூறுவதும் இன்றைய நாகரீக வாழ்ககை
் யாகக் கருத
படுகின்றது. இதுவும் கற்பு வாழ்ககை
் யாகாது என்பதை நாம் அறிய வேண்டும். அன்றைய காலங்களில்
காதலித்தவரையே கைப்பிடிக்க வேண்டும். இல்லையேல், ஒன்றாக உயிர் விடல் வேண்டும். இதனையே,
காதல்,காதல் காதல்,
காதல் போயின் காதல் போயின்
சாதல், சாதல், சாதல்.
எனப்படுகின்றது. அதே போல, இன்றும் சிலர் காதலித்தவரைக் கைப்பிடிக்கத் தன் குடும்பத்தோடு
போராடுகின்றனர். அப்படி போராடி வெற்றியடைய முடியாத நிலையில் இம்மையில் வாழ முடியாத
வாழ்வை மறுமையில் ஒன்றாக சேர்நது
் வாழ்வோம் எனக் கூறி தன்னை மாய்த்துக் கொள்ள
முடிவெடுக்கின்றனர். கையை வெட்டிக் கொள்ளுதல், மருந்து குடித்தல், மலையிலிருந்து குதித்தல்
எனப் பல முறைகளில் தற்கொலையில் ஈடுப்படுகின்றனர். காதல் வெற்றியடையவில்லை எனில் எதிர்த்துப்
போராடி வாழ்ககை
் நடத்தாமல் மனம் சோர்நது
் தற்கொலைப் பண்ணுவதை நாம் அறிவோம். இஃது நமது
இளைஞர்களிடையே உள்ள கற்பு வாழ்ககை
் யைக் குறிப்பிடுகின்றது. தான் காதலித்தப் பெண்ணையோ
ஆணையோ கைவிட்டுச் செல்வதற்குப் பதிலாக ஒன்றாகச் சேந்து வாழ முற்படல் வேண்டும். அது
முடியாத போது தற்கொலைச் செய்து கொள்கின்றனர். ஆகவே, இன்றைய நிலையில் ஓரளவு
இளைஞர்கலிடையே கற்பு நிழலாடுவதை நாம் அறிந்து செயல்படல் வேண்டும் என்றால் அது
மிகையாகாது எனலாம்.

3.3 உடன்போக்கு
தலைவி தலைவனுடன் அவனிருப்பிடத்திற்குச் செல்லுதல் என்பது இதன் பொருள்.
இக்காலத்திலும் சில பெண்கள் தாம் காதலிப்பதை வீட்டிலுள்ளோர் ஏற்காவிட்டால், காதலனுடன் 'ஓடிப்
போதல்' உண்டல்லவா? அக்காலத்தில் தலைவி தான் விரும்பும் தலைவனுக்குத் தன்னைப் பெற்றோர்
மணமுடிக்க விரும்பாவிட்டால், அல்லது வேறு ஒருவனுக்கு மணம் பேச முனைந்தால், அல்லது ஊரில்
அலர் எழுந்தால் (ஊர் மக்கள் பழித்துப் பேச முற்பட்டால்) அல்லது தலைவனே விரும்பினால், அவனுடன்
வேற்றூர் சென்று வாழத் துணிவாள். இதனையே உடன்போக்கு என்பர். சில சமயம் தலைவன்
உடன்போக்கை விரும்பாமல் காட்டுவழியில் ஏற்படும் துன்பங்களையும், கள்வர்கள் வழிப்பறி செய்யும்
தொல்லை பற்றியும் எடுத்துக் கூறித் தடுப்பதுண்டு; தடுத்தாலும் தலைவி உடன் செல்வதையே
விரும்புவாள்; அவனைப் பிரிந்து வீட்டிலிருந்து வருந்துவதைக் காட்டிலும், உடன் செல்வதே மேல் என்று
எண்ணுவாள்.

அவ்வாறு உடன் செல்லத் துணிந்த ஒரு தலைவியின் உள்ளப்பாங்கை இப்பொழுது காணலாம்.


"என் மனமே! நீ உடனே புறப்படு; கட்டி என்பான் ஒரு சிற்றூர்த் தலைவன்; அவன் வேலெறிதலில்
வல்லவன்; அவனது ஊருக்கு அப்பாலுள்ளது நம் தலைவனது ஊர்; அது குல்லை என்ற

10
ஒருவகைப்பூவைத் தலைமாலையாக அணிந்த வடுகா நாட்டின் எல்லையிலுள்ளது. அங்கெல்லாம் வாழும்
மக்கள் வேற்றுமொழி பேசுபவர்கள். இவற்றுக்கெல்லாம் கவலைப்படாமல் உடனே புறப்படு.

நான் அவனுடைய நாட்டுக்குச் சென்று அவனை வழிபட்டு வாழ விரும்புகிறேன் . அதனால்


உடனே புறப்படு; அவனைப் பிரிந்து வருந்துவதால் என் உடல் மெலிந்து, சங்கினை அறுத்துச் செய்த என்
வளையல்கள் கழன்று விழுகின்றன. என் கண்கள் நாள் முழுவதும் உறங்காமல் அழுதுகொண்டே
இருக்கின்றன. இவ்வாறு இங்கு வருந்தித் தனித்து வாழ்வதிலிருந்து அவனுடன் செல்வதால் தப்பிப்
பிழைக்கலாம்! ஆகையால் நெஞ்சே! உடனே புறப்படு" என்று தன் நெஞ்சிற்குக் கூறுவதுபோல் தோழி
கேட்கும்படி தான் உடன்போக்கிற்குத் துணிந்ததைத் தலைவி கூறினாள். இதனை விளக்கும் பாடல்
மாமூலனார் இயற்றியது:
"கோடுஈர் இலங்குவளை நெகிழ, நாளும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவள் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழுஇனி! வாழி!என் நெஞ்சே; முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட்டு உப்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின்; அவருடை நாட்டே
அன்றையக் காலத்தில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பார்தது
் நன்கு புரிந்து
கொண்டு காதல் கொண்டனர். பின் ஒருவரை ஒருவர் பிரியும் நிலை வரும் போது செய்வதறியாது தன்
தலைவனொடு ஊரை விட்டு வெளியேறினர். ஆனால், இன்றையக் காலக்கட்டத்தில்
பார்த்தோமேயானால் , நமது இளைஞர்கள் சிறிது நாளே பழகிய ஒருவனோடு வீட்டை விட்டு வெளியேறத்
துணிந்து விடுகின்றனர். ஏனெனில், அவர்கள் காதலின் பால் கொண்ட மோகம். ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என்பதற்கொப்ப வீட்டை விட்டு ஓடிய சிறிது நாட்களில் அறிவையும் இழந்து
தன்னையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் பலரையும் நாம் கண்கூடாகக் காண முடிகின்றது. அதிலும்,
முகம் தெரியாது முகநூலிலும் கைப்பேசியிலும் பழக்கமான ஒருவரை நம்பும் இன்றையத்
தலைமுரையினர் பெற்ற தாய் தந்தையை நம்புவதில்லை. காதலிப்பது தவறென்று சொல்லவில்லை.
காதல் என்ற பெயரில் பலரின் கண்களைக் கட்டி போடுவதுதான் தவறு எனக் கூறுகிறேன் . மேலும்,

இரு பாலருக்குமிடையே வாழ்க்கை பற்றிய கருத்து இல்லாது காமம்

உணர்ச்சியாலே இந்தச் செயல் நிகழ காரணமாக இருக்கிறது. அன்று

பெற்றோர்கள் சம்மதிக்காததால் இந்த உடன்போக்கு ஏற்படக்காரணமாக

இருந்தது. அதுவும் தலைவி தன் பெற்றோர்களுக்காக தலைவனிடன்

பொருத்தாழ்மாறு கேட்டுக் கொள்வாள். தலைவனும் அவனின் முடிவில்

11
ஒருதலைபோல் இல்லாமல் தலைவிக்காகக் காத்துக் கொண்டிருப்பான்.

ஆனால், இன்று இளையோர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.

இன்றைய இளைஞர்களுக்குக் காதல் கண்ணை மறித்து விடும் போலும். தன்னை ஈன்றெடுத்தப்


பெற்றோரையே மதிக்காது அவர்களின் முடிவுக்குக் காத்திராது வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதனால், அவர்களின் பெற்றோருக்கும் அவமானம்; அவர்களுக்கும் அவமானம். அன்றையக்
காலங்களில் தலைவன் தலைவியைப் பிரிந்தோ தலைவி தலைவனைப் பிரிந்து ஆழ்ந்த துயரத்தில்
இருப்பதைத் தாங்காது வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், இன்று காதலர்களிடையே உலா வரும்
உடல் மோகமும் பணமும் தான் வீட்டை விட்டு வெளியேற உறுதுணையாக இருக்கின்றது. ஆயினும்,
இன்னும் சிலர் காதலர்களின் பால் கொண்ட அளவில்லா அன்பினை நிலைநிறுத்தவும் தன் காதலின் மேல்
கொண்ட அளவற்ற மரியாதையாலும் வீட்டை விட்டு வெளியேறி சங்க கால உடன்போக்கோடு ஒற்று
நிற்கின்றனர்.

3.4 சங்க இலக்கியக் காதல்


மனிதர்களில் ஆணோ ! பெண்ணோ ! விரும்பிய நேரத்தில்

விரும்பியவாறு இணைவிழைச்சலுக்கு வாய்ப்பிருந்தவரைக் காதலை

உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் விரும்பிய நேரத்தில்

விரும்பியவாறு, விரும்பியவரோடு இணைவிழைச்சுக்கு வாய்ப்பில்லாமல்

போனபோதுதான் மனிதன் “காதலை” முதன்முதலில் உணர்ந்திருப்பான்.

இத்தகைய வாய்ப்பின்மையை உருவாக்கும் சூழ்நிலைகளை ஒட்டிக்

காதலின் தன்மையும் மதிப்பும் மாறுபடும். ஒரு பெண்ணை ஒன்றுக்கு

மேற்பட்ட ஆடவர்கள் நினைத்த போது; போட்டிக் காரணமாகப் போரிடத்

தொடங்கிய மனிதர்களில் வென்றவன் அவளை அடைந்தபோது காதல்

வரத்தோடு
ீ தொடர்புடையதாயிற்று.

வரையறையற்ற புணர்ச்சி ஒழுக்கக் காலத்தில் ஒரே பொருளில்

உணரப்பட்ட காதல், வரையறையுடைய புணர்ச்சி ஒழுக்கக் காலங்களில்

பாசம், அன்பு, மதிப்பு, பக்தி, காதல் எனப் பலவாறு பிரித்துணர வேண்டிய

சூழ்நிலைகளை உருவாக்கித் தந்தது.தனியுடைமை, ஆணாதிக்கம்

இவைகளைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட காதல் கோட்பாடு

12
காலந்தோறும் இலக்கியவாதிகளாலும் மக்களாலும் மிக உயரியதாகவே

கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தது. சங்க அகப்பாடல்களும் திட்டமிட்ட

முறையில் ‘காதலை’ அகமாக்கி வளர்த்தனர். ஆனால்,

நடைமுறையையோ சமுதாயத்தில் பொருளாதார, சாதீய

முரண்பாடுகளையும் மீ றிய முறையில் காதல் உருவாக வாய்ப்பளித்தது.

தலைவன் தலைவியை நாடாமல் அகன்று அகன்று போகின்றான். ‘

வேண்டாப் பெண்டாட்டி கால்பட்டால் குற்றம்; கைப்பட்டால் குற்றம்’ என்ற

நிலைதான் இருக்கிறது. இந்நிலையில் ஏதோ துறவிபோல, அவன் தன்னை

நீங்கி ஒழுகுவதைத் தோழியிடம் குறிப்பிடும் தலைவி “ ஒரீஇ ஒழுகும்

என்ஐக்குப் பரியலேன்” (203) என்கிறாள்.

அரும்பாகி, மொட்டாகி, பேதாகி, மலராகி, அலராகி, செம்மலராகும்

பூவினத்தைப் போல ஆசை அன்பாகி, அன்பு பாசமாகி, பாசம் நேசமாகி,

நேசம் பிரியமாகி, பிரியம் காதலாகக் கசிந்து விடும் நிலையைக்

காணலாம். “காலையில் அரும்பி பகலில் போதாகி மாலையில் மலரும்

இக்காதல்” என்று மொழிவதையும் அறிந்திக்க வாய்ப்புண்டு. இதுதான்

இன்றைய நிலையில் உள்ள காதல். காலையில் பார்த்து மாலையில்

காதலை வெளிப்படுத்தும் அளவு உலகம் வெகு விரைவில் பயணம்

செய்துக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. அந்த

வகையில் அன்றையக் காலங்களில் தலைவனும் தலைவியும் கொண்ட

காதல் மிக உண்ணதமானது. போற்றத்தக்கது எனலாம். காதலியைத்

தொடுவதே பாவன் என நினைத்தான் தலைவன். ஆனால், இன்றைய

நிலையில், காதல் முத்தி விட்டது. முளைத்து மூன்று இலை விடாத

பள்ளி மாணவர்கள் கூடக் காதல் வயப்பட்டு விடுவதை நாம் அறிவோம்.

ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவரும் கூடத் தன்னுடம் பயிலும் சக

மாணவனோடு காதல் வயப்படுகிறார்கள். கேட்டால், வயதுக் கோளாராம்.

13
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால், கண்கள் இல்லாமல்

காதலே இல்லை. காதலின் தொடக்கப்புள்ளியே கண்களில் தான்

இருக்கின்றது. கண்டதும் காதல், கொண்டதே கோலம் என்பதற்கொப்ப

இன்றைய இளைஞர்களின் காதல் அன்பாலும் பாசத்தாலும் பிண்ணிப்

பிணைக்கப்பட்டது அன்று. மாறாக, அழகிலும் பணத்திலும் மயங்கி

கண்டதும் காதல் கொள்கின்றனர். அவர்களின் பின்புலம் என்ன? என்ன

வேலை செய்கிறார்கள்? அவர்களின் நடத்தை என்ன என ஆராய்து

அறியாமல் கண்டதுமே காதல் வலையில் சிக்குண்டு பின் வாழ்க்கையில்

சிரமப்படுவதை நாம் காண முடியும். மேலும், இன்றைய இளைஞர்கள் தன்

சுய மரியாதைக்காகவும் பந்தாக்காகவும் காதலிப்பதை இங்கு குறிப்பிடல்

வேண்டும். தன் சக நண்பர்களுக்கு மத்தியில் தனக்கும் ஒரு காதலன்

அல்லது காதலி இருக்கிறார் என்பதைக் காட்டிக் கொள்ளவே காதல்

என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துகின்றனர். காதல் கனிந்து கசந்தப்பின்

கைகழுவி விடுகின்றனர். மேலும், பல வருடங்கள் காதல் கொண்டு

திருமண பந்தத்தில் நுழைந்தவுடன் மறுநாளே நீதிமன்றம் காலடியில்

சிதறி கிடக்கிறது. பல வருடம் கொண்டக் காதலின் பலனைக் காண

முடிகிறதல்லவா? இதே காதலை அன்று கொண்டிருந்த தலைவனும்

தலைவியும் எந்த நீதிமன்றத்தையும் நாடிச் செல்லவில்லையே. ஊடல்

அந்தக் காலத்திலும் இருந்ததே இன்றும் ஊடல் இல்லாத வாழ்க்கையைத்

தேட முடியாது.

அன்றைய காலத்தில் தலைவி தலைவனைத் தொடச் சொல்லும்

போது தலைவன் கைகால் பட்டாலே கற்பை இழத்தல் என்று அவளைக்

கற்புக்கரசியாக பாதுகாத்து வந்தான். ஆனால், இன்றோ கற்பை

வேட்டையாடும் வேகத்தில் இன்றைய இளையோர்களின் சிந்தனைகள்

உள்ளன. அதுமட்டுமின்றி, இன்றைய இளைஞர்கள் காதல் என்ற பெயரில்

14
செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்ட இடங்களில்

எல்லாம் பலர் பார்க்க கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது எனப் பலச்

செயல்களைச் சிறிதும் பொருட்படுத்தாது செய்கின்றனர். அதுமட்டுமின்றி,

சமூக வலைத்தளங்களிலும் அறைகுறை உடை அணிந்தும் அசிங்கமான

நிலைகளிலும் காதலர்களோடு தம்படம் எடுத்துப் பலரும் பார்க்க

அந்தரங்கத்தைப் போடுகின்றனர். இது காதல் மரபு அன்று. ஏனெனில்,

காதல் என்றால் ஒரு கலை. இன்று பிடித்த கரத்தை இறுதிவரை விடாது

பற்றி கொள்வதே உண்மையான காதல். இதுவே சங்க இலக்கியங்களில்

போற்றப்பட்டக் காதல். ஆனால், இன்று ஆசை அறுபது நாள் மோகம்

முப்பது நாள் என்றாகிவிட்ட பிறகு, பிணக்கு, பிரிவு, மனமுரிவு ஏற்பட்டு

இறுதியில் சூனியத்தில் சுழல்கின்றனர். சங்க காலக் காதலுக்கும்

இன்றைய இளைஞர்களின் காதலுக்கும் மிகப் பெரிய இடைவெளி வந்து

விட்டதை நாம் உணர வேண்டும்.

3.5 மடலேறுதல்

மடலேறுதல் என்றால் என்ன? சங்க காலத்தில் மடலேறுதல்

என்னும் ஒரு வழக்கு இருந்தது. அது என்னவென்றால் தலைவி,

தலைவனை .மணம் செய்ய மறுத்தால், தலைவன் காதல் மிகுதியில்

மடலேறி தலைவியை அடைவான் என்பதாம். காமம் மிக்க தலைவன்

குதிரையைப் போல பனை மடலால் ஓர் உருவம் செய்து ,அதன்

கழுத்தில் மணிமாலை முதலியவற்றைப் பூட்டி அதில் ஊர்வான் .அவன்

தன கழுத்தில் யாரும் சூடாத எருக்க மலர்களால் கோர்க்கப்பட்ட

மாலையை அணிந்து இருப்பான்.ஆவிரம் பூ மாலையையும் சில சமயம்

சூடி இருப்பான் .மேலும் ,அவன் ஒரு படத்தில் தனது உருவத்தையும்

15
,தலைவியின் உருவத்தையும் ஏந்தி ஊர் முழுக்க சுற்றி வருவான்

.இங்ஙனம், அவன் வருவதைக் கண்ட ஊரார் "இந்தத் தலைவிக்கும்

இந்தத் தலைவனுக்கும் நட்பு உண்டு என்று அறிந்துக் கொள்வர் .மேலும்

தலைவனை இந்த நிலைக்கு தள்ளிய தலைவியைப் பழிப்பர் ஊராரின்

நகைப்புக்கு உள்ளான தலைவி மணம் வருந்துவாள் . தலைவன்

மடலேறும் அளவுக்கு தான் காரணமாய் இருந்ததை எண்ணி

துன்பமடைவாள். தலைவனின் உண்மையான அன்பினை நினைத்து

நெஞ்சுருகுவாள். செவிலித்தாயும் ,நற்றாயும் நடந்ததை அறிந்து ,தலைவி

மீ து தலைவன் கொண்டிருக்கும் காதலை உணர்ந்து இருவருக்கும்

மணமுடித்து வைப்பர்.இவ்வாறு தலைவன் தான் கொண்ட காதலை ஊரார்

அறிய தெரியப்படுத்தி ,அதன் மூலம் தலைவியை அடைவது மடல்

ஏறுதல் எனப்படும். சங்க இலக்கியத்தில் பெண்கள் காம மிகுதியால்

மடலேருவதாய் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் சங்கம் மருவிய

காலத்தில் ஆழ்வார்களால் சொல்லப்பட்டு இருக்கின்றது

தான் விரும்பும் தலைவியை மணக்க இயலாத நிலை ஏற்படும்போது தலைவன் மடல் ஏறுகிறான் .
அதைக் கண்ட தலைவி இரங்கி அவனுக்கு உடன்படுகிறாள். அவ்வாறு அவளை அடைந்த விதத்தைத்
தலைவன் தன்னைச் சேர்ந்தோருக்குத் தெரிவிக்கின்றான். (கலித்தொகை, பாடல் 138) இப்பாடலில்
தலைவன் தலைவியை அடைகிறான். எனினும் அடைந்த விதம் (மடலேறுதல்) அன்பின் ஐந்திணைக்குப்
பொருந்துவதாக இல்லை. நாணமற்ற ஒரு செயலால் களவைப் பலர் அறிய வெளிப்படுத்தி விட்டமையால்
இது பெருந்திணை ஆயிற்று. தலைவன் பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகியவற்றைத் தொடுத்து
மடல் குதிரையில் கட்டி, ஊர்க்கடைத் தெருவில் மடல் ஏறி,

எல்லீரும் கேட்டீமின் என்று


படரும், பனைஈன்ற மாவும் சுடர்இழை
நல்கியாள் நல்கி யவை
(அடிகள் : 11-13)
விளங்கும் அணியை உடைய என்னால் விரும்பப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும்,
வருத்தத்தால் உண்டான பனை மடலால் செய்த குதிரையும் ஆகும்” என்பது பொருள்.

16
ஒளி பொருந்திய அணியை உடையவள் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாதபடி காம நோயை
எனக்குத் தந்தாள். அந்நோயால் என் உயிர் அழுந்தியது. நெருப்பில் பட்ட மெழுகாய் உருகித் தேய்கிறது.
இஃது எல்லாரும் இரக்கப்படுமாறு இருப்பது”
இப்பாடலைக் கேட்டு அவள் இரங்கித் தன்னை ஏற்றதாகக் கூறுகிறான்.
இன்றைய நவீனக் காலக்கட்டத்திலும் மடலேறுதல் என்ற நிலை இன்னும் இருந்த வண்ணமே
உள்ளது. அன்றையக் காலங்களில் குதிரையில் ஏறி தன் காதலியின் படத்தை ஏந்தி ஊர் முழுக்கச் சுற்றி
வந்து தன் காதலை வெளிப்படுத்துவான். இன்றும் தன் காதலைப் பலர் அறிய வெளிப்படுத்தும் முறை
இருக்கத்தான் செய்கின்றது. அன்றைய நிலைப்போல இல்லாமல் இன்றைய நவீனக் காலக்கட்டத்தில்
காதலை வெளிப்படுத்தத் தகவல் தொடர்பு தொலைநுட்பம் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது
என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை எனலாம். தன் காதலைப் பலர் அறிய வெளிப்படுத்துவதற்கு
இன்றைய இளைஞர்கள் உலா வரும் முகநூலும் பெரிதும் துணைப்புரிகின்றது எனலாம். இளைஞர்கள்
முகநூலில்தான் அதிகமாக தன் காதலை வெளிப்படுத்துகின்றனர். நேரே சொல்ல தைரியம் இல்லாது
முகநூலிலும், “வாட்சாப்பிலும்” , “வைபரிலும்” தன் காதலைப் பலருக்குத் தெரியும் வகையில்
கூறுகின்றனர். அன்றையக் காலத்தில் படத்தைக் கையில் ஏந்தி பலருக்கு அறிவித்ததைப் போல
இன்றையக் காலத்தில் படத்தைச் சமூக வளைத்தளங்களில் பதிவேற்றம் செய்து தன் காதலை
காதலிக்கும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகின்றனர். இதற்குச் சமூக வலைத்தளத்தின் பங்கு மிக
அளப்பறியது என்றால் அது மிகையாகாது எனலாம்.

3.6 இல்லறவொழுக்கம்

தலைவனும் தலைவியும் பல்லோர் அறியத் திருமணம் புரிந்து

கொண்டு வாழ்க்கை நடத்துதலே இல்லறவொழுக்கம் என்று ஆன்றோர்

குறிப்பிட்டுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர் கற்பு அல்லது

இல்லறவொழுக்கத்தை,

மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்

இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது

மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்

பிரிவோடு புணர்ந்தது கற்பெனப் படுமே.

என்று குறிப்பர். களவு வெளிப்பட்ட பின் தமர் கொடுப்பக் கொள்ளும்

மணவினை நிறைவேறியபின் மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு ஆகிய

ஐந்து கூறுகளும் அடங்கிய பகுதியே கற்பென வழங்கப்பெறுவது. கற்பு

17
என்பதுதான் இல்லறவொழுக்கமாகும். தொல்காப்பியத்தில் ‘கற்பு” என்று

வரும் இடங்களையெல்லாம் ஆராயின் அது ‘இல்லறம்’ என்ற

பொருளையே குறித்தல் அறியலாம். கற்பு என்பதற்கு ‘மகளிர்க்கு

மாந்தர்மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி; என்று இளம்பூரணரும், ‘தன்

கனவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்’ என்று

நச்சினார்க்கினியரும் கூறுவர். இல்லறவொழுக்கத்தில் கூறும் பகுதிகளைக்

காண்போம்.

மலிவு என்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்றால்

மகிழ்தல். அதாவது களவு முற்றி மணந்து கொண்ட காதலர் மனக்குறை

தீரக் கூடி கலந்து இன்புற்று வாழ்தல். இம்மலிவுக் காலத்தே தலைவனும்

தலைவியும் களவுக்காலத்தே நிகழ்ந்தவற்றை ஒருவர் மற்றவரோடு கூறி

இன்புறுவர். இப்பகுதியில் நிகழும் செய்திகளைத் தொல்காப்பியர்

‘கரணத்தின் அமைந்து முடிந்தகாலை’ என்ற கற்பியல் நூற்பாவில்

கூறியுள்ளார். தலைவியைத் தலைவன் கண்ணுற்ற ஞான்று தலைவன்

மாட்டு உளதாகிய பெருமையும் உரனும் தலைவிமாட்டு உளதாகிய

அச்சமும் நாணும் மடனும் ஏதுவாக இயற்கைப்புணர்ச்சி இடையீடுபட்டுழி

வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு

நின்ற நெஞ்சம் கட்டுவிடப் பெறல். இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைவன்

அலரறிவுக்கப்பட்டு நீங்கி வரைந்தெய்துங்காறும் புணர்ச்சி வேட்கையால்

செல்கின்ற நெஞ்சினை இருவரும் வேட்கை தோற்றாமல்

தளைக்கப்பட்டத்தனை ‘தளை’ என்றும் கூறலாம். தலைவியுடன் இன்புற்று

இல்லறம் நடத்தும் தலைவன், அத்தலைவியால் வரும் இன்பம்

எப்பொருளினும் சிறப்புடையதென்று தோழி முதலியோர் அறியும்படி

கூறுவதாக அமைகிறது.

18
இன்னிலையை இன்றைய இளைஞர்களோடு ஒப்பிட்டோமேயானால்,

இன்றைய நிலையில் இல்லறவொழுக்கமானது மிகவும் சிறப்பான

நிலையிலேயே உள்ளது. ஏனெனில், இன்றைய நிலையில் பல

பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆசைக்கேற்பக் காதலித்தவரையே மணம்

முடித்து வைக்கிறார்கள். பல இளைஞர்கள் இன்று தங்களுக்குப் பிடித்த

வாழ்க்கைத் துணைவரோடு வாழ்வதை நாம் அறிவோம். பலரும் வியக்கும்

வண்ணம் பெற்றோர்கள் போற்ற திருமணம் செய்பவர்கள் இன்றும்

இருக்கிறார்கள். அவ்வகையில் அன்றைய இல்லறவொழுக்கம் இன்றும்

போற்றப்படுகிறது.அவ்வகையில் இல்லறம் என வரும்போது இருவரும்

உடலால் மட்டுமின்றி மனதாலும் ஒன்றிணைந்து வாழ்வதை நாம் காண

முடிகிறது எனலாம். இன்றும் முதலிரவு என்ற சம்பிரதாயம் இருந்துதான்

வருகிறது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு

ஒன்றிணைவதே இந்த முதலிரவு. இல்லறத்தில் கணவன் மனைவிக்கு

மட்டுமே தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதை பலரும்

அறியக் கூருவது சிறப்பாகாது. சங்க இலக்கியத்தில் கணவனும்

மனைவியும் இணைந்தவற்றை தலைவி தோழியுடன் பகிர்ந்து கொண்டு

கிண்டல் செய்வார்களாம். ஆனால், இன்று நண்பர்களிடையே கிண்டலும்

கேலியும் இருந்தாலும் தன் அந்தரங்க வாழ்க்கையைப் படம் பிடித்துக்

காட்ட வெக்கப் படுவதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில்,

கிண்டல் செய்வதற்கும் கேலி செய்வதற்கும் பல விஷயங்கள் இருக்கும்

நிலையில் தன்னுடைய வாழ்க்கையைப் படம் போட்டு காண்பிக்காத

பெண் தான் கற்புடையவள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே

ஆயிரும் நடந்தாலும் தன் கணவனின் மானத்தைக் மனைவியும்

மனைவியின் மானத்தைக் கணவனும் காப்பாற்றுதல் வேண்டும்.

இதனையே, இல்லறவொழுக்கம் என்பார்கள். அன்றைய காலங்களில்

19
கணவனை கடவுளாக நினைத்துப் போற்றினார்கள். இந்நிலை இன்றும்

மாறாது சிலரால் கடைபிடிக்கப்பட்டு வருவதை இங்கு குறிப்பிடல்

வேண்டும். கணவன் அழைக்கும் குரல் கேட்டு கயிற்றை நீர்க்குடத்துடன்

விட்டு விரைந்து ஓடினார் அம்மையார். திரும்பி வந்து பார்த்தபோது

நீர்க்குடம், கீ ழே இறங்காமல், அம்மையார் விட்டுச் சென்ற இடத்திலேயே

நின்றிருந்ததாம். என்னே கற்பின் உயர்வு! இதுதான் கணவனுக்குக்

கொடுக்கும் மரியாதை.

இவ்வாரு இல்லறவொழுக்கத்தைக் கட்டிக் காக்க சிலர் இருந்தாலும்

பலரும் அதனைச் சீர்குலைக்க ஒழுக்கத்தை இழந்து வாழ்வதை நாம்

அறிவோம். தற்கால இல்லறமானது மேலை நாட்டு நாகரிகம் தமிழர்

பண்பாட்டை வேகமாக மூடி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நிறை, பேதமை, என ஆறு

அணிகலன்களையே அணிந்த தமிழ்ப் பெண்கள் இன்று அழகிப்

போட்டிகளின் அணிவகுப்பில் பங்கேற்பது தலைகுனிய வேண்டிய ஒன்று.

மணம் முடிந்தபின்பே கணவனுடன் கூடி இல்லறம் நடத்துதல் என்பது

கனவாகி விடுமோ? விவாகரத்து, மகளிர்க்கு இழைக்கப்படும் கொடுமைகள்

விதவைத் திருமணங்கள் மலிந்து வருகின்றன. பெண் கற்பு இவ்வாறு

இருக்க ஆண் கற்பும் இழி நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. ஒருவனுக்கு

ஒருத்தியே என்ற நெறி மாறி வருகிறது. இந்நிலை தொடருமே ஆகில்,

அமெரிக்காவிற்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன வேறுபாடு என்ற ஐயமே

எழும். ஆக, இல்லறம் நல்லறம் பெற கணவனும் மனைவியும் ஒன்று கூடி

வாழ வேண்டும். கணவன் மனைவியையும் மனைவி கணவனையும்

அறிந்து அவர்களின் மனதுக்குப் பிடித்த வண்ணம் விட்டு கொடுத்து

வாழ்வதே சிறப்பாகும் எனலாம். ஆகவே, அன்றைய காலங்களில்

கடைப்பிடித்த இல்லறவொழுக்கத்தை நாமும் கடைப்பிடித்தல் நன்று.

20
3.7 ஓதற்பிரிவு
கல்வியின் பொருட்டுத் தலைவன் பிரிவான் என்பதனால், தலைவன் இதுகாறும் கல்வி கற்றிலன்
என்று கருத வேண்டியதில்லை. இதற்கு முன்பே அவன் நல்லாசிரியனையடைந்து அறம், பொருள்,
இன்பம், வீடு ஆகிய நான்கும் குறிக்கோள் பொருள்களை உணர்த்தும் நூல்களையெல்லாம் முறைப்படி
கற்றுத் துறை போகியவன். எவ்வளவுதான் கற்றாலுக் கல்வி கரையில அல்லவா? “கற்றது கைம்மண்
அளவு, கல்லாதது உலகளவு” என்று ஆன்றோர் கூறியிருக்கவில்லையா? இன்று கூடப் பல பட்டங்களைப்
பெற்று ஆராய்ச்சித் திறன் மிக்க அறிஞர்கள் வெளிநாடு சென்று, பல அறிவியல் துறைகளில் மேலும்
கற்று வருவதைக் காண்கிறோமன்றோ? “ஓதற்பிரிவு” என்பதற்கு இளம்பூரணர், “தமது நாட்டகத்து
வழங்காது பிற நாட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல்” என்று
கூறியித்தல், இன்று நினைவுபடுத்துகின்றது. இங்ஙணம் “அறிதோறும் அறியாமையைக் காட்ட வல்ல
ஒப்பற்ற கல்விச் செல்வத்தைப்பெறச் செல்வோரைப் பரணர் என்ற சங்கப் புலவர்,
“கைதொழு மரபில் கடவுள் சான்ற
செய்வினை மருங்குற் சென்றோர்”
என்று குறிப்பிடுவர். “கடவுள் சான்ற செய்வினை” என்பது ஓதற் பிரிவினை உணர்த்துகின்றது.

இன்றைய நிலையில் பார்த்தோமேயானால், திருமணம் முடிந்த ஆணோ பெண்ணோ


தன்னுடையக் கல்வியைத் தொடர தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இஃது சங்க காலத்தினின்றே தொடரும் ஒரு முறையாகி விட்டது. திருமணத்திற்குப் பின் என்ன படிக்க
வேண்டும் என பலர் ஒதுங்கி குடும்பத்தைக் கவனித்தால் மட்டுமே போதுமானது என நினைக்கும்
இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கு முக்க்யத்துவம் அளித்து தன் குடும்பத்தைப் பிரிந்து படிக்கச்
செல்லும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். திருமணம் என்ற பந்தம் இளைஞர்களின் கல்விக்கும்
அறிவைத் திரட்டுவதற்கும் முட்டுக்கட்டையாக இருத்தல் கூடாது எனலாம். பாடை ஏறினாலும் ஏடு
அதைக் கைவிடக் கூடாது என்பது சான்றோர் வாக்கு.
“சினம் இறக்கக் கற்றாலும்
சித்தி பலப் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பரா பரமே”
என்னும் தாயுமானவரின் இவ்வடிகள் கல்வியின் அவசியத்தைப் பறைச்சாற்றுகிறது எனலாம். கல்வி
என்பது எல்லையற்றது. அளவிட இயலாத கடல். இன்றுகூட மணவினை முடித்துக் கொண்ட
மாணாக்கர்கள் சிறப்பாகத் தொழிற்கல்லூரியிலும் பிற கல்லூரிகளிலும் பயின்று வருவதை நாம்
காணலாம். அவர்கள் யாவரும் “ஓதற்பிரிவில்” உள்ளவர்களே. இவ்வாறு பிரிந்து நிற்கும் காலத்தில்
கணவன் மனைவியிடயே ஓர் அளவற்ற அன்பும் பாசமும் என்றும் துள்ளிக் குதிப்பதை நாம் காண முடியும்
எனலாம். பிரிந்திருப்பது துன்பமாக இருந்தாலும் இது ஒரு வகை இன்பமான துன்பம் எனலாம் . ஆக,
இன்றைய இளைஞர்களின் களவு வாழ்ககை
் யிலும் பிரிவு என்ற நிலை இருப்பதை நாம் அறிய வேண்டும்.
இஃது சங்க இலக்கியக் காலத்தினின்றே தொடரும் ஓர் அற்புத வாழ்ககை
் யாகும்.

21
3.8 பரத்தையர் பிரிவு
பரத்தையிற்பிரிவு என்பது பொதுப் பெண்டிர்மாட்டுக்குப் பிரியும் பிரிவு. தலைமகன் கற்பு
வாழ்ககை
் யில் மேற்கொள்ளும் பிரிவுகள் ஆறு வகைப்படும். அவற்றுள் முதலில் அமைவது பரத்தையிற்
பிரிவு என்பதாகும். தனக்கே உரிய தனிப்பெருமை மிக்க தலைவியோடு கூடி இல்லறம் மேற்கொள்ளும்
தலைவன் நிறைந்த மகிழ்ச்சியில் சிறந்த வாழ்ககை
் நடத்துவான். எனினும் இலக்கிய இலக்கணப்
போக்கின்படி, அத்தகு வாழ்ககை
் யில் அவர்கள் வாழ்ககை
் யில் வேறுபட்ட நிலையாக, தலைவன்
பரத்தையர் எனப்படும் பொதுமகளிர் வாழும் பகுதிக்குச் (சேரிக்கு) சென்று பரத்தையுடன் கூடிச் சில
காலம் வாழ்வதாகவும் அமைத்துக் காட்டுகின்றனர். கற்பு வாழ்ககை
் யின் முதல் கூறு மகிழ்வாகவும்
அடுத்து வருவது ஊடலாகவும் அமைவதைத் தொடக்கத்தில் கண்டோம். மகிழ்ச்சி மாறி ஊடல்
பிறப்பதற்கு இவ்வகைப் பரத்தையிற் பிரிவும் ஒரு முதன்மைக் காரணமாக அமைகிறது. இணைவிழைச்சு
காரணமாகத் தலைவன் அவர்களை நாடிச் சென்றான் என்று எண்ண வேண்டியதில்லை. தலைமகளை
விட்டு அப்பொழுதுப் பெண்டிர்களின் ஆடல் காண்பதற்காகவும் பிரிவான் என்று கருதுதல் வேண்டும்.
இச்சங்க காலத்தில் எத்தனையோ இசை நிகழ்சிகட்கும் நாடிய நிகழ்ச்சிகட்கும் பலர் செல்வதைக்
காண்கிறோம். இவ்வாறு செல்லுகையில் சிலர் தலைவியை விட்டுச் செல்கின்றனர். சிலர் தம்முடன்
கூட்டிச் செல்கின்றனர். தலைமகளை விட்டுச் செல்லும்போது நிகழ்ச்சிகளின்பால் ஊன்றி நிற்கும் தம்
உணர்ச்சி தலைமகள் மாட்டு நிற்கும் தம் உணர்ச்சியை மறைக்கும். ஏனெனில், இரண்டு உணர்ச்சிகளும்
ஒருங்கே நிற்பது இயற்கைக்கு முரணானது. இதனால் தம் உணர்ச்சி முழுவதும் அரங்க நிகழ்ச்சியிலேயே
ஈடுப்பட்டிருக்கும். அரங்க நிகழ்ச்சிகளில் ஈடுபடும் மகளிர் பொது மகளிராக இருப்பின் எத்தனையோ
செல்வர்கள் மயங்கி அப்பொதுப் பெண்டிர்களுடன் உறவு கொள்வதையும் காண்கிறோம். சிலர்
பரத்தையிற் பிரிவினை குற்றமற்றதாகக் கூறும் நிலையில் உலக வழக்கில் இவ்வொழுக்கம் நிகழ்ந்து
வந்தமையின் வள்ளுவர்போன்ற அறநிலையில் நிற்கும் சான்றோர்கள் இதனைத் தம் நூல்களில்
இழித்துக் கூறியுள்ளதைத் தமிழ் மக்கள் எண்ணி உணர்வார்களாக. தமிழ் நெறி உயர்நத

நெறியென்பதைத் தம் உள்லத்தில் நிலை நிறுத்துவார்களாக.
இன்றைய நிலையில் இளைஞர்களிடையே பரத்தையிற்பிரிவானது இருக்கத்தான் செய்கின்றது
எனலாம். திருமணமானப் பின்பும் தன் குடும்பத்தை நினையாது அழகுக்கும் பணத்துக்கும் மயங்கும்
மனம் இருப்பதை நாம் அறிய வேண்டும். ஒழுக்கம் தவறி வாழும் மனிதர்கல் இன்றும் வாழ்ந்த
வண்ணமே உள்ளனர். ]
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருத வேண்டும் என்ற நமது பொய்யாமொழி புலவர் திருவள்ளுவரின்
கருத்தைக் காட்டிலும் பலரும் இன்று ஒழுக்கத்தை இழந்து தன் சுய மகிழ்ச்சியே அவசியம் என
சுயநலமாக வாழ்வதைக் காண முடிகிறது. தன் மனைவிக்கே தெரியாது வேறு ஒரு பெண்ணுடன்
தொடர்பு வைத்திருப்பதையும் அவளுடன் உடல் உறவில் ஈடுபடுவதும் இன்று மிக சாதாரண விஷயமாகி
விட்டது. தன்னையே நம்பி வந்த மனைவிக்குத் துரோகம் செய்ததோடு அவளுக்கு மட்டுமே
சொந்தமான கற்பையும் வேறு ஒரு பெண்ணோடு பகிர்ந்து கொள்வதை எந்த பெண்ணால் தாங்கிக்

22
கொள்ள முடியும்? இன்றைய காலக்கட்டங்களில் லோரி ஓட்டுனர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுமே
அதிகம் இப்பரத்தியரைத் தேடிச் செல்வதை நாம் அறிய வேண்டும். இதனால், ஒழுக்கத்தை இழந்து
தன் கௌரவத்தையும் இழந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சிறிது நாட்கள் மட்டுமே
கிடைக்கும் இந்த மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் இழத்தல் நலமாகுமா? இதனால் எத்தனை
பெண்களின் வாழ்ககை
் கவலைக்கிடமாகியுள்ளது. இதுதான் தமிழ் பண்பாடா? ஒருவனுக்கு ஒருத்தி
என்னும் தமிழர் பண்பாடு எங்கே சென்றது. பெண்களை வேண்டிய போது பயன்படுத்திக் கொள்ளவும்
வேண்டாத போது தூக்கிப் போடவும் பெண்கள் என்ன குப்பையா? இல்லை. பெண்களும் மனதைக்
கொண்ட மனித இனமே. இதனை அனைவரும் அறிய வேண்டும். அன்றையக் காலங்களில் இவ்வாறு
பரத்தியரைத் தேடிச் சென்ற கணவனைப் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொண்டதுண்டு. ஆனால்,
இன்றைய இளைய தலைமுறைப் பெண்கள் மிக தைரியமானவர்கள். இன்றைய பெண்கள் பாரதிக்
கண்ட புதுமைப் பெண்கள் என்பத நாம் மறந்து விடக் கூடாது. ஏனெனில், இவ்வாறு பரத்தையரைத்
தேடிச் செல்லும் கணவனை உடனே வெளியே துரத்தும் பெண்களே அதிகம் உள்ளனர் எனலாம்.
தனக்குத் துரோகம் செய்துவிட்டு வேறு ஒருத்தியைத் தேடிச் சென்றவனை நாம் ஏன் ஏற்க வேண்டும்
என்பதே இன்றையப் பெண்களின் எண்ணமாக உள்ளது. இதுவும் போற்றலுக்குறிய ஒன்றே. ஏனெனில்,
ஆண்கள் இருந்தால் மட்டுமே பெண்களால் வாழ முடியும் என்ற நிலை இன்று மாறி விட்டது. தனக்கு
துரோகம் செய்த கணவனுக்குத் தக்கத் தண்டனைக் கொடுப்பதை நாம் பாராட்டுதல் வேண்டும்
எனலாம். எனினும், இன்றும் சிலர் தன் கணவனுக்கு மட்டும் மனைவியாகவும் மனைவிக்கு மட்டும்
கணவனாக மிக மகிழ்ச்சியாக வாழ்வதை நான் கண்கூடாகக் காண முடிகிறது. ஆயினும், இவர்களை
நாம் கைவிட்டு எண்ணி விடல் முடியும். ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழும் வாழ்ககை
் யில் உள்ள
சுகமானது மிக அழகானது. அதனை வாழ்நத
் வர்களால் மட்டுமே அனுபவிக்க முடியும் என்றால் அது
மிகையாகாது எனலாம்.

3.9 திருமணம் நிகழும் இடம்


சங்க இலக்கியத்தில் தலைவியின் வீட்டார் மகட்கொடைக்கு இசைந்த பின்னர் தலைவியின்
வீட்டிலேயே திருமணம் நடைப்பெற்றது. இதனை மேற்குறிப்பிட்ட “பூரண பொற்குடம் வைக்க” என்ற
திருச்சிறறம்பலக்கோவைப் பாட்டால் அறியலாம். மணிமேகலை, சீவக்சிந்தாமணி , இராமாயணம்,
பாரதம் திருவிளையாடற்புராணம் முதலிய இலக்கியங்களில் கூறப்பெறும் திருமண நிகழ்ச்சிக்
குறிப்புகளும் திருமணம் பெண்வட
ீ ்டில் நடைப்பெற்றதையே உறுதிப்படுத்துகின்றன.
இன்றைய நிலையில் பார்த்தோமேயானால், திருமணம் என்ற நிகழ்வு மணமகன் இல்லத்திலேயே
நடக்கின்றது. திருமண நிச்சயதார்த்தம் மணமகள் இல்லத்தில் நடப்பதோடு திருமணமானது மணமகன்
இல்லத்தில் நடக்கிறது. ஏனெனில், மணமகன் வீட்டில் திருமணம் நடந்தால்தான் அது மணமகனுக்குப்
பெருமையாக அமையும். மணமகள் வீட்டில் திருமணம் நடப்பது மணமகளின் சொந்த பந்தங்களுக்கு
மத்தியில் கௌரவக் குறைச்சலாக அமைகிறது. இதனால், இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குத்
தேவையான அனைத்துச் செலவுகளையும் தானே செய்து தன் திருமணத்தை மிக விமரிசையாகச்

23
செய்து மகிழ்வதை நாம் அறிவோம். ஆயினும், இன்றும் செல்வர் வீடடு
் த் திருமணம் பெரும்பாலும்
மணமகள் வீட்டிலேயே நடைபெற்று வருதல் உலக இயல்பாக இருத்தலை நாம் காண்கிறோம் எனலாம்.
ஆகவே, இன்றைய நிலையில் திருமணமானது சங்க இலக்கியக் காலத்தைக் காட்டிலும் சில
மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளதை நாம் அறிதல் வேண்டும்.
சுருங்கக் கூறின், இன்றைய நிலையில் சில வாழ்ககை
் நெறியானது மட்டுமே சங்க
இலக்கியத்தை ஒட்டியதாக உள்ளது. பலவகையில் இன்றைய வாழ்ககை
் முறை மாற்றம் கண்டுள்ளது
என்றால் அது மிகையாகாது. இவையாவும் நமது நாகரீக வளர்ச்சியினால் மட்டுமே என்றால்
மறுப்பதற்கில்லை. ஆக, சங்க இலக்கிய வாழ்ககை
் முறையில் நமக்கு தேவையானவற்றை என்றும்
கைவிடல் கூடாது. நல்லது கெட்டது எதுவென பகுத்தாராய்ந்து நல்லவற்றை இன்றும் ஏற்றுக் கொள்வதே
சிறப்பை அளிக்கும் எனலாம். மேலும், வாழ்ககை
் க்குத் தேவையான நன்நெறிகளை நாம் சங்க இலக்கிய
காலத்திலூடே பெறல் வேண்டும்.

4.0 மேற்கோள் நூல்கள்

24
5.0 சிந்தனை மீட்சி

25
6.0 இணைப்பு

26

You might also like