You are on page 1of 5

உரை

‘திருமொழியார் மொழித்திறவாய் தித்திக்கும் தேன்பாகாய்

அருந்தமிழாய் தமிழமுதாய் அழகொளிரும் தமிழனங்கே

பெருமையுறும் காப்பியமாய்ப் பெருமகளே நீ பிறந்தாய்

இருந்தமிழே நறுங்கவியாய் எனதுவழி பிறந்திடவா ! ’

தாயின் கருவறையிலே எனக்குள் உயிர்த்த மொழியான தாய்மொழி தமிழுக்கு முதல் வணக்கம்.


இங்கு வருகைப் புரிந்திருக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது முத்தான முத்தமிழ்
வணக்கம். நான் என் உரையைத் தொடங்குவதற்கு முன் என்னை உங்களிடம் அறிமுகம் செய்துக்
கொள்ள விரும்புகிறேன். என் பெயர் ஸ்ரீகௌரி த/பெ இரமேஸ். நான் தெமெங்கோங் இப்ராஹிம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி ஆசிரியராக பயின்று வருகிறேன். சரி, என்னைப் பற்றிய
தகவல் போதுமா? உங்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி.

சிந்தனை சிற்பிகளே,

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்’

திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்ற கருவூலம் திருக்குறள். அந்த ஒழுக்க நெறி
நூலிலிருந்து ஒரு குறளை நான் உரைத்ததன் காரணம் அறிவீர்களா? தோழர்களே, நான் எதற்காக
ஒழுக்கத்திற்கு இவ்வளவு அழுத்தம் தருகிறேன்? இதற்கு காரணம், மனிதனாகிய நாம் மனிதனாக
வாழ ஒழுக்கம் தேவை. ஒழுக்கம் நம் உயிருக்கு ஒப்பாகும்.

ஆனால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஒழுக்கம் நம்மிடையே உள்ளதா?


உங்களின் மனம் என்ற கதவைத் தட்டி சிந்தனையெனும் சன்னலைத் திறந்து பாருங்கள், நிச்சயம்
பதில் கிட்டும். உலகம் போகிற போக்கில் ஒழுக்கம், நற்குணமெல்லாம் நமக்கு தேவைத்தானா? என்ற
கேள்வி எழாமல் இல்லை. ஒழுக்கமாக வாழ்வதைப் பற்றி பேசுவதானால் எளிமையானதாக
இருக்கலாம். ஆனால், அதை நடைமுறைபடுத்துவது சாதாரணமான காரியமா? இது போன்ற
வினாக்கள் பெருக்கிவிட்டது. இத்தகைய வினாவிற்கு விடைகள்தான் கிடைக்காமல் இருக்கின்றன.
என் பார்வையில், நாம் ஒழுக்கம் என்பதையே மறந்து விட்டோம். அதை வாழ்க்கையில்
கடைப்பிடிக்க மறுத்துவிட்டோம். ஒழுங்கின்றி நடந்துவிட்டு ஒப்பனைக்கு ஓலமிடும் கூட்டம்
பெருகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

நேர்மை, ஒழுக்கம், பண்பு, பரிவு போன்ற நற்குணங்கள் என்றும் மாறாது; மறையாது. இதற்கு
காரணம், தமிழர் மரபில் அதன் வேர்கள் ஆழமாக உள்ளது. அதன் ஆழத்தை நாம் உணர
வேண்டும். அதை நாம் ஆசிரியராகிவிட்டப் பின் நம் மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

1
அன்பு சகோதரர்களே,

ஒழுக்கம் என்று நாம் எதைச் சொல்கிறோம்? நல்லவராக இருப்பதையா? இல்லை,


நல்லவராக இருப்பதுப்போல் நடிப்பதையா? எதை ஒழுக்கம் என்று சொல்கிறோம்? அன்பர்களே,
நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதைத் தான் ஒழுக்கம் என்கிறோம். அதாவது, ஏதேனும் தீய
செயல் செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது, ஆனால் அது தவறு, இதனால் நமக்கும் பிறருக்கும்
என்ன தீமை ஏற்படும் என்று தீர ஆராய்ந்து அதை செய்யாமல் இருப்பதுதான் ஒழுக்கம்.
உதாரணத்திற்குக் கேட்கிறேன், மற்றவர் வீட்டிலிருந்து மாங்காய் திருடுவது ஒழுக்கமற்ற செயலா?
மாங்காய் இயற்கையின் வழி உருவானதுதானே? அப்படி என்றால் அது பொதுவானதுதானே. அதில்
என்ன தவறு உள்ளது? ஆம், அது இயற்கையின் பொருளாக இருந்தாலும், அதை பாதுக்காத்தவரின்
சொந்தமாகவே கருதப்படும். அதனால், அவர்களின் உரிமையின்றி எடுப்பதும், அதாவது திருடுவதும்
தவறே!

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒழுக்கம் எப்படி கற்றுத் தரப்படுகிறது? பெரும்பாலும் இங்கு


நாம் ஒழுக்கமாக இருக்க கற்று கொள்கிறோம் என்பதைவிட ஒழுக்கமாக இருக்க
வற்புறுத்தப்படுகிறோம்.

நெஞ்சார்ந்த தோழர் தோழிகளே,

கல்லூரியிலோ, பள்ளியிலோ அல்லது பொது இடங்களிலோ ஒரு தவறு செய்தால்


தண்டனை என்று சொல்வதால் தான் பெரும்பாலானோர் ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள்,
நடிக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். இது எவ்விதத்திலும் நம்மை வளர்த்தெடுக்காது.
ஏனெனில், நடிப்பு என்றும் நிஜமாகாது. நடிப்பதற்கு இது என்ன நாடக மேடையா? இல்லை,
வாழ்க்கை. நம்மை ஒழுக்கமானவராக்க நிஜத்தில் ஓர் அந்நியனையா (அந்நியன் படத்தின் ஒரு
கதாப்பாத்திரம்) கொண்டுவர முடியுமா? முடியாது. ஆனாலும், அந்த அந்நியனே ஒழுக்கமில்லாமல்
தானே நடந்து கொண்டார்.

யாராலும் நம்முள் ஒழுக்கத்தை உருவாக்க முடியாது. திருடனே பார்த்து திருந்தாவிட்டால்


திருட்டை ஒழிக்க முடியாது இல்லையா? ஒழுக்கம் என்பது நம்முள் விதைக்கப்பட வேண்டிய
ஒன்று.

“சுய கட்டுபாடு” இது தான் ஒழுக்கத்தின் அஸ்திவாரம். ஒரு தவறைப் பலரும் இருக்கும்
இடத்தில் செய்யாமல் இருப்பது ஒழுக்கமாகாது. யாரும் இல்லாத தனிமையில் கூட தீயவைச்
செய்யாது இருப்பதே ஒழுக்கம். சுய கட்டுப்பாடு எதில் இருக்க வேண்டும்? பேசுவது மட்டுமின்றி
நடப்பது, உணவு உண்பது, சிரிப்பது என்று அனைத்திலும் இருப்பது அவசியம். நம் வாழ்வில் நாம்
செயல்படுத்தும் அனைத்து நடவடிக்கையிலும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று, ஒழுக்கம்.
சிரிப்பதில் ஏன் ஒழுக்கம் அவசியம்? நாம் மனது விட்டு சிரிக்க வேண்டும். ஆனால், பிறர் மனதில்

2
மரண பயத்தை உண்டு செய்வதுப் போல் பயங்கரமாக சிரிக்கக் கூடாது. மேலும், பிறர் மனதைப்
புண்படுத்துவதுப்போல் சிரிப்பது கூடவே கூடாது. அவ்வகையில், சிறு விடயம் தானே என்று
எண்ணாமல் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். அதுதான்
மகிழ்ச்சியான நல்வாழ்க்கையாக அமையும் திறவுக்கோள். இதற்கு தக்க சான்றாக, உலகப்பொதுமறை
அருளிய பேராசன் உரைத்துள்ளார்,

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

இன்று இந்த ஒழுக்கம் எழுதுபவர்களுக்கு மிக அவசியமான ஒன்று. முகநூல், புலனம்,


கீச்சகம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் மனதின் ஆழத்தில் தோன்றுவதைப் பரிட்சயமாக
எழுதுபவர்கள் எண்ணிலடங்கா. இவர்களில் பெரும்பாலானோர் எழுதும் போது ஒழுக்கமென்ற
ஒன்றைச் சிந்திப்பதே இல்லை. யாருடையாவது செயலோ அல்லது கருத்தோ
பிடிக்கவில்லையென்றால் தாறுமாறாக பின்னூட்டம் (கமெண்ட்) செய்பவர்கள் அதிகம். எழுத்து
சுதந்திரம் இருக்கிறது தான், அதற்காக ஒழுக்கம் இல்லாமல் எழுதுவது எத்தனை தவறானது?

ஒருவரைச் புகழ்வது என்றாலும் சாடுவது என்றாலும் கனிவாக செய்யுங்கள். கோபம்


வரத்தான் செய்யும் சில சமயம், சிலர் மீது. இருப்பினும், பொதுவாக ஒருவரைப் பற்றி தர குறைவாக
தீய வார்த்தைக்களால் திட்டுவது, பலிப்பது, எத்துணை இழிவான செயல்? இதனால் இழக்கப்
போவது நமது சுய மரியாதையைத் தான். சிந்தித்து பாருங்கள். தமிழின் இனிமையைக் கொச்சைச்
சொற்களால் கெடுக்க வேண்டாமே. நிறைய எழுதுவோம், சமூக அவலங்கள் பற்றி எழுதுவோம்,
தமிழின் வளர்ச்சியைப் பற்றி எழுதுவோம், என்ன எழுதினாலும், அதில் ஒரு சுய கட்டுப்பாடு
(ஒழுக்கம்) நிச்சயம் இருத்தல் அவசியம்.

குணமணிகளே,

பேச்சிலும் ஒழுக்கம் அவசியமான ஒன்று. எவ்வேளையிலும் யாரையும் தீய சொற்களைப்


பயன்படுத்தி திட்டாதீர்கள். உங்களின் வார்த்தைகளே உங்களின் பண்பைப் பறைச்சாற்றும்.
ஒழுக்கமுள்ளவர் எப்போதும் தவறியும் ஒருவர் மனம் புண்படும்படி தீயவையைப் பேச
மாட்டார்கள். அப்படி தவறி பேசிவிட்டால் அவர்கள் ஒழுக்கச்சீலர்களாகக் கருதப்பட மாட்டனர்.
இதைத்தான், ஐயன் பெருமான்,

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்

3
என்று மிக அழகாக பகர்கிறார். வருங்கால ஆசிரியர்களாகிய நாம் பேச்சில் ஒழுக்கத்தைக்
கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால், ஒரு தலைமுறையின் வளர்ச்சியும்
வாழ்க்கையும் நாம் சொல்லும் வார்த்தைகளில்தான் உள்ளது.

ஒழுக்கமென்றால் என்ன என்று தந்தை பெரியாரிடம் கேட்டப்போது, அவர் இரத்தின


சுறுக்கமாக நெத்தியில் அடித்தாற்ப்போல் கூறினார், “மற்றவர்கள் உங்களிடத்தில் எப்படி நடந்து
கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி நீங்கள் மற்றவர்களிடம் நடந்து
கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம்” என்று. தந்தை பெரியார்ப்போல் ஒழுக்கத்தின் விளக்கத்தை
யாராலும் அவ்வளவு தெளிவாகக் கூற முடியாது என்பது திண்ணம். நம்மிடம் மற்றவர்
பண்பில்லாமலும், கடினமாகவும் நடந்துக் கொள்வது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்படியிருக்கையில், நாம் மற்றவரிடம் அப்படி நடப்பது சரியாகுமா? ஒரு பட வசனம் உள்ளதே,
‘உங்களுக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்டினியா?’. அதேப்போல் தான், நாம்,
மற்றவர் நம்மிடம் ஒழுக்கமாக நடந்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தால், முதலில் நாம்
அவ்வகையில் நடந்துக் கொள்ள வேண்டும். முதலில், கொடுப்போம். பிறகு, நிச்சயம் திரும்பப்
பெறுவோம்.

மேலும், சுயநலம் தீய ஒழுக்கமாக கருதப்படுகிறது. பொது நலத்திற்கு எதிரான மற்றும்


பொது வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆசிரியர்களாகிய நமக்குச் சுயநலம் கூடவே கூடாது. இதைத் தான் விவேகானந்தர், “உலகம்
வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!” என்று
குறிப்பிட்டுள்ளார்.

மொத்ததில், மானம் இழப்பதா அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலை
ஏற்பட்டாலும், அந்நிலையிலும், பொய்யாமொழி புலவரின் வாக்குப்படி மானத்தை இழக்காமல்
உயிரை இழந்துவிடுவதே மேல். அவ்வகையில், உயிரைவிட மேன்மையானது ஒழுக்க நெறி. அதை
இந்நாட்டின் சுடர்களான மாணவர்களின், தூண்டுக்கோளாகிய ஆசிரியர்கள் நாம், அவர்களின்
மனதில் பசுமரத்தாணிப்போல பதிய வைக்க வேண்டும். ஒழுக்கத்தை பின்பற்றி ஒழுகினால்
வாழ்க்கையில் மேன்மையடைவதோடு நல்வாழ்க்கை வாழ்ந்து புகழடைவது உறுதி. ஆக, ஒழுக்கம்
என்பது வழுக்கு மரம், ஒரு விரல்பிடி நழுவினும் வாழ்க்கை விழும் எனக் கூறி
விடைப்பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

‘ ஒழுக்கம் ஒல்கா புகழ் தரும்’

4
மேற்கோள்

1. https://ta.wikibooks.org/wiki/. (2009, பிப்ரவரி 11). விக்கிநூல்கள். https://ta.wikibooks.org/wiki


-இல் இருந்து, மார்ச் 05, 2019 எடுக்கப்பட்டது

2. இராமசாமி, ஈ. வ. (2016, மே 10). விக்கிமேற்கோள். https://ta.wikiquote.org/wiki/ -இல் இருந்து


எடுக்கப்பட்டது

3. ஒன் இந்தியா. (தே.இ). https://tamil.oneindia.com/art-culture/kural/14.html - இல் இருந்து, மார்ச் 06,


2019 எடுக்கப்பட்டது

4. கனகசுப்புரத்தினம், இ. (2006). நாம்தான் கடவுள்!எப்போது? திருக்குறள் கூறும் இரகசியங்கள்.


சென்னை: கவனகர் முழக்கம். மார்ச் 5, 2019 மீடடெ
் டுக்கப்பட்டது

5. செ. மோகன் குமார் பி.ஏ(ஆனர்ஸ்), எ. ஏ. (2010). எழுச்சிக்கனல். கோலாலும்பூர்: விசால் அச்சகம்.

6. தமிழர்கள். (2009). இலக்கியம். Retrieved மார்ச் 05, 2019, from https://ilakkiyam.com/73-


tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4207-ozhukamudaimai

7. தினமணி. (2017, நவம்பர் 27). https://www.dinamani.com/all-editions/edition-


chennai/chennai/2016/nov/27/ -இல் இருந்து, மார்ச் 06, 2019 எடுக்கப்பட்டது

8. ராஜ்குமார். (2017, நவம்பர் 30). எழுத்து. Retrieved மார்ச் 06, 2019, from
https://eluthu.com/kavithai/340807.html

9. விக்கிப்பீடியா. (2017, ஜூலை 05). https://ta.wikipedia.org/wiki/ -இல் இருந்து, மார்ச் 05, 2019
எடுக்கப்பட்டது

You might also like