You are on page 1of 13

தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின்

புவி தின கொண்டாட்ட நிகழ்ச்சி அறிக்கை 2019

‘பிறக்கும் வரை தாயின் கருவறை, இறக்கும் வரை பூமி எனும் கருவறை, இரண்டையும்
காத்தால்தான் நம் வாழ்க்கையே நடைமுறை’ என்ற கூற்றின் படி பூமியைக் காக்கும் ஒரு
முயற்சிதான் சர்வேதேச புவி தினம். அவ்வகையில், இளைய தலைமுறையினருக்கும் இப்பொறுப்பும்,
விழிப்புணர்வும் ஏற்படும் வகையில் தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில்
கடந்த 15 பிப்ரவரி 2019 ஆம் நாள் புவி தின கொண்டாட்டம் நடந்தேறியது. இந்நிகழ்ச்சி காலை
8.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைப்பெற்றது. இந்நிகழ்வை இயற்கையைப் போற்றும்
இயக்கமான தெமெங்கொங் இப்ராஹிம் தன்னார்வ சுற்று சூழல் இயக்கமும், 5 அறிவியல், 5
தகவாண்மை மற்றும் 5 தமிழ் மொழி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து சீரும் சிறப்புமாக
ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களும்,
விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருக்கூட்டினர்.

15 பிப்ரவரி 2019 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் இந்நிகழ்ச்சி தொடங்கியது.


இந்நிகழ்வின் முதல் அங்கமாக இந்நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சிறப்பு விருந்தினரான
தெமெங்கொங் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் துணை மேலாளர், அறிவியல் துறை தலைமை
விரிவுரையாளர் மற்றும் விரிவுரையாளர்களையும் பயிற்சி ஆசிரியர்கள் எழுந்து நின்று
கரகோசையுடன் வரவேற்றனர். அதன் பின், அனைவரும் தேசிய கீதத்தையும்,ஜோகூர் மாநில
பாடலையும் மற்றும் கல்லூரி பாடலான ‘ செமையான் சூபுர்’ பாடலையும் மிகுந்த பற்றுடனும்,
கம்பீரத்துடனும் பாடினர்.

அடுத்ததாக, கல்லூரியின் துணை மேலாளர், டாக்டர் மஸ்லான் மாலிக்


வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில், இந்த நிகழ்வின் நோக்கம், என்றும் நாம் வாழ மூல
காரணமாக இருக்கும் சுற்று சூழலையும் இயற்கையையும் நேசிக்க வேண்டும் உணர்த்தும்
நோக்கத்தில் ஏற்பாடு செய்தவை என்றார். அதோடு, இத்தகைய பெரிய நிகழ்வினை எடுத்து
நடத்திய ஏற்பாட்டு குழுவினருக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், ‘ஒன்று பட்டால்
உண்டு வாழ்வு’ என்பதற்கொப்ப ஒன்றாக செயல்பட்டால் இந்நிகழ்வினை வெற்றிகரமாக்கலாம்
என்றும் தெள்ளத்தெளிவாக கூறினார்.

அடுத்த அங்கமாக, அறிவியல் பிரிவின் தலைமை விரிவரையாளர் சிறப்புரையாற்றினார்.


அவர் இந்நிகழ்ச்சி சுற்று சுழலின் அவசியத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு
விழிப்புணர்வூட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று கூறினார். பின், அவரும், ஆசிரியர் பயிற்சி
கல்லூரியின் துணை மேலாளரும் சேர்ந்து நிகழ்ச்சியினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

காலை மணி 8.30 அளவில் மாணவர்களின் படைப்பு நடந்தேறியது. திரு ஈசா பின் அம்ரி
அவர்களின் தலைமையிலான தன்னார்வ சுற்று சூழல் இசைக்குழு இயற்கையைப் பற்றி இரண்டு
பாடல்களை மிகவும் சிறப்பாக படைத்தனர். அதன் பிறகு, செல்வன் கார்த்திக் அவர்கள் பூமி
தாயைப் பற்றி ஒரு கவிதையைப் பாராயணம் செய்தார். படைப்புகள் முடிந்தவுடன் அனைவருக்கும்
காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, புவி தினத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சிகள் ஒன்றன் பின்


ஒன்றாக நடந்தேறியது. காலை 9.00 மணியளவில் திட கழிவைப் (sisa pepejal) பற்றிய விரிவுரை
துன் முகமது கைருல் ரிச்சுவான் அவர்களால் வழங்கப்பட்டது. அவர் தனது விரிவுரையில் திட
கழிவுகளைப் பிரிக்கும் வழியைப் பற்றி விளக்கினார். அதோடு, நம் நாட்டில் மொத்தம் இருபத்து
எட்டு குப்பை அகற்றும் தளம் உள்ளதையும் குறிப்பிட்டார். குப்பைகளை அகற்றுவதற்கென்று
உள்ள சட்ட திட்டங்களைப் பற்றியும் விளக்கமளித்தார். பின், அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற
வேண்டுமென்று வலியுறுத்தினார். இவ்விரிவுரையின் வழி மாணவர்கள் திட கழிவுகளைப் பற்றியும்
அதை முறையாக அகற்றும் வழியைப் பற்றியும் தெரிந்து கொண்டனர்.

அடுத்த நிகழ்ச்சியாக கல்லூரி வளாகம் மற்றும் பள்ளியின் சுற்றுசூழல் தூய்மையைப்


பற்றிய கருத்தரங்கு காலை மணி 10.00 முதல் 11.00 வரை நடைப்பெற்றது. இக்கருத்தரங்கை
இயற்கை உலகளாவிய நிதியத்தின் உறுப்பினர் திருமதி மதிவதணி அவர்கள் வழி நடத்தினார்.
இக்கருத்தரங்கில் தற்போது நடக்கும் சுற்றுசுழல் தூய்மைக்கேட்டினைப் பற்றி அவர் விளக்கினார்.
அதோடு, இயற்கை உலகளாவிய நிதியத்தின் ஒரு திட்டமான ‘நெகிழியின் பயன்பாட்டை முற்றாக
தவிர்ப்போம்’ என்ற திட்டத்தை இந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் அமல்படுத்த வேண்டும்
என்று அறுதியிட்டு கூறினார். மண் வளத்தைக் கெடுக்கும் நெகிழியின் பயன்பாட்டைக் குறைப்பதன்
மூலம் தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என்பதையும்
மாணவர்களின் மனதில் பதிய வைத்தார். ஆக, இக்கருத்தரங்கு மாணவர்களுக்கு நெகிழி ஒழிப்பு
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 11.00 மணிக்கு சட்டைகளை மறு உபயோகிப்பு செய்தல் என்ற நோக்கத்தின்


அடிப்படையில் பட்டறை ஒன்று நடந்தேறியது. இப்பட்டறையை டாக்டர் லீ கோக் சொங்
வழிநடத்தினார். முதலில், பட்டறையைப் பற்றியும் அதன் நோக்கத்தைப் பற்றியும் சிறிய
விரிவுரையைக் கொடுத்தார். அதன் பின், மாணவர்கள் இருபது குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
அதோடு, பட்டறை வழிநடத்துனர், உபயோகிக்காதச் சட்டை, கத்தரிக்கோல், நூல், ஊசி போன்ற
தேவையான பொருட்களைப் பங்கேற்பாளர்களிடம் வழங்கினார். ஒரு மணி நேரத்திற்குப் பின்,
அனைத்து குழுக்களும் தங்களின் படைப்பாற்றலின் மூலமாக பல விதமான பைகளைச் சிறப்பாக்
உருவாக்கியிருந்தனர். அதில் அழகான பையைத் தயாரித்த மூன்று குழுக்களுக்குப் பரிசுகள்
வழங்கப்பட்டது. இப்பட்டறையின் மூலம் பங்கேற்பாளர்கள் நெகிழிப்பை பயன்பாட்டைக் குறைக்கும்
முறையைப் பற்றி அறிந்து கொண்டனர். அதோடு, பயன்படாத துணிகளைத் தூக்கி எறிவதைத்
தவிர்த்து வேறு வழியில் கையாளும் உத்திகளையும் கற்றுக் கொண்டனர்.
பட்டறை முடிவுற்றதும் மதியம் 1.00 மணியளவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
அதோடு, பங்கேற்பாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டே புவி தினத்தை முன்னிட்டு
பூமியைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் தயாரித்திருந்த
காணொலிகளைக் கண்டு களித்தனர்.

மாலை 1.45 மணியளவில் நொதியம்(enzyme) பற்றிய பட்டறையுடன் இப்புவி தின


கொண்டாட்டம் தொடர்ந்தது. இப்பட்டறை மாணவர்கள் விவகாரங்கள் துறை விரிவுரையாளர்
திருமதி நோரைன்னி அவர்களினால் வழி நடத்தப்பட்டது. அவர் நமது அன்றாட வாழ்வியலில்
நொதியம் எதற்கு பயன்படும் என்றும், சுயமாக தயாரிக்கப்படும் நொதியத்தின் பயன்கள் பற்றியும்
சிறப்பான மற்றும் தெளிவான விளக்கத்தை அளித்தார். தொடர்ந்து, பங்கேற்பாளர்களுக்கு நொதியம்
தயாரிக்க தேவையான பொருட்களான, கனிம நீர், உணவு கழிவுகள், காய்கறிகள் மற்றும் சீனி
போன்றவற்றை வழங்கினார். பங்கேற்பாளர்கள் குழுக்களாகப் பிரிந்து விரிவுரையாளரின்
வழிக்காட்டலின்படி சுயமாக நொதியத்தை உருவாக்கினர். சுயமாக நொதியம் உருவாக்குதல்
சிரமமாக இருப்பினும் ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற முன்னோரின் வாக்குப்படி மனம்
தளராமல் முயன்றதால் அனைத்துக் குழுக்களும் வெற்றிக்கரமாக நொதியத்தை தயாரித்திருந்தனர்.
இப்பட்டறையின் மூலம் பங்கேற்பாளர்கள் பழம் மற்றும் காய்கறி கழிவுகளை மறுபயன்பாடு
செய்யும் வழியைப் பற்றியும், மண்ணைப் பாதுக்காக்கும் நொதியத்தின் சிறப்பையும் அறிந்துக்
கொண்டனர்.

மாலை 2.45 மணியளவில், நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக மறுசுழற்சி(Recycle),


மீள்பயன்படுத்தல்(Reuse) மற்றும் குறைத்தல்(Reduce) பற்றிய கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இக்கருத்தரங்கை தெம்மெங்கொங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தன்னார்வ
சுற்றுச்சூழல் கழகத்தின் தலைவர் செல்வன் தர்ஷன் எடுத்து நடத்தினார். அவர் தனது உரையில்
குப்பைகளை முறையாக பிரித்து வீச வேண்டும் என்றும், இதன் மூலம் கல்லூரியில் அமல்படுத்தி
வரும் மறுசுழற்சி, மீள்பயன்பாடு மற்றும் குறைத்தல் திட்டத்தை வெற்றியடைய செய்ய முடியும்
என்றும் கூறினார். மேலும், அவர் இத்திட்டத்தின் வழி சுற்றுச்சுழலை மாசுப்படுத்தும் குப்பைக்களின்
எண்ணிக்கையைக் குறைக்க இயலும் என்றும் வலியுறுத்தினார். இக்கருத்தரங்கின் முடிவில்
பங்கேற்பாளர்கள் அனைவரும் இனி தாங்கள் குப்பைகளை வீசும் பொழுது பிரித்து வீசுவதாக
வாக்களித்ததோடு, மறுசுழற்சி, மீள்பயன்படுத்தல், குறைத்தல் திட்டத்தை வெற்றியடையச் செய்ய
ஒத்துழைப்போம் என்றும் வாக்குறுதியளித்தனர்.

மாலை மணி 3.00 க்கு, நிகழ்ச்சியின் அனைத்து சிறப்பு விருந்தினருக்கும், பட்டறை


வழிநடத்துனருக்கும், கருத்தரங்க பேச்சாளருக்கும் நினைவு பரிசுகளைக் கல்லூரியின் துணை
மேலாளர் எடுத்து வழங்கினார். பிறகு, 2019 ஆம் ஆண்டு கல்லூரியின் தன்னார்வ சுற்றுசூழல்
கழக்கத்தில் சிறப்பான ஈடுப்பாட்டை வழங்கிய உறுப்பினர்களுக்கும் பரிசுகளைக் கொடுத்தனர்.
தொடர்ந்து, தன்னார்வ சுற்றுச்சூழல் கழகத்தின் ஆலோசகர், டாக்டர். வான் நோர் சியா அவர்கள்
முடிவுரையாற்றினார். அவர் தனது உரையில் கலந்துக் கொண்டு இந்நிகழ்வினை வெற்றியடைய
செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப்
பற்றிய இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
2019 ஆம் ஆண்டின் புவி தின கொண்டாட்டம் புவி தினத்தின் அதிகார்ப்பூர்வ பாடலுடன்
முடிவுற்றது. அனைவரும் இந்நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய களிப்பில் விடைப்பெற்றனர்.

மொத்ததில், 2019 ஆம் ஆண்டின் புவி தின கொண்டாட்டம் மாணவர்களிடையே


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் போற்றும் எண்ணத்தை பசுமரத்தாணிப்போல அவர்கள்
மனதில் விதைத்தது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அதோடு, தங்களால் முயன்ற அளவிற்கு
குப்பையின் எண்ணிக்கையைக் குறைக்க அனைவரும் முயல வேண்டும் என்ற எண்ணமும்,
அதற்கான தீர்வு, மறுசுழற்சி மற்றும் மறுப்பயன்பாடு என்பதையும் புரிந்துக் கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், நெகிழிப்பைப் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக
செயல்படுவோம் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டனர். மேலும், குழு நடவடிக்கையின் மூலம்
மாணவர்களிடயே உள்ள ஒற்றுமையையும் வலுப்படுத்தப்பட்டது. அவ்வகையில், இவ்வாண்டின் புவி
தின கொண்டாட்ட நிகழ்ச்சி அதன் நோக்கத்தைச் சிறப்பாக சென்று அடைந்துள்ளது என்பது
வெள்ளிடைமலை.

அறிக்கை தயாரித்தவர், 20 பிப்ரவாரி 2019

____________________________

( ஸ்ரீகௌரி த/பெ இரமேஸ் ),

பங்கேற்பாளர்,

தன்னார்வ சுற்றுச்சூழல் இயக்கம்,

தெமெங்கொங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி.

பின்னிணைப்பு
வரவேற்புரை,சிறப்புரை,அதிகாரப்பூர்வமான தொடக்கம்
படைப்புகள்
பின்னிணைப்பு
பின்னிணைப்பு
மேற்கோள்
அச்சு ஆவணங்கள்

தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதி. (2008). சென்னை: சுரா புக்கஸ் லிமிடெட்

இந்தெர்நேஸ்னல் அட்வான்ஸ்ட் டிலெக்ஸ் அகராதி (International Advanced Deluxe Dictionary).

( 2009 ). கோயம்பத்தூர்: டிலெக்ஸ் பப்ளிஷெர்ஸ் (Deluxe Publishers)

நோர்பேட், எ. அ. (2008). புவியியல் : சூழலியல் முகாமைத்துவம் . கொழும்பு: சேமமடு பதிப்பகம்.

மைந்தன், ப. (2009). சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல். பொதுக் கட்டுரைகள் (பக். 38-40). இல்
சென்னை: சாரதா பதிப்பகம். பிப்ரவரி 15, 2019 மீட்டெடுக்கப்பட்டது

ஆய்வடங்கள்

(தே.இ). Jabatan Pengurusan Sisa Pepejal Negara: http://jpspn.kpkt.gov.my/index.php/pages/view/127


-இல் இருந்து, பிப்ரவரி 15, 2019 எடுக்கப்பட்டது

(2019, ஆப்ரல் 22). Retrieved பிப்ரவரி 24, 2019, from https://tamil.samayam.com/topics/பூமி-தினம்

ஐ.பி.சி தமிழ். (தே.இ). https://www.youtube.com/channel/UCZinho9wu3iAeRpUXvAMzBQ?


sub_confirmation=1 -இல் இருந்து, பிப்ரவரி 18, 2019 எடுக்கப்பட்டது

நோர்பேட், எ. அ. (2008). புவியியல் : சூழலியல் முகாமைத்துவம் . கொழும்பு: சேமமடு பதிப்பகம்.

மனாப், ல. அ. (2011). Aplikasi sistem pintar dalam pengurusan sisa pepejal. கோலாலம்பூர்: டேவான்
பஹாசா & புஸ்தாகா (Dewan Bahasa dan Pustaka). Retrieved பிப்ரவரி 12, 2019, from
http://www.ibctamil.com/

மைந்தன், ப. (2009). சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல். பொதுக் கட்டுரைகள் (பக். 38-40). இல்
சென்னை: சாரதா பதிப்பகம். பிப்ரவரி 15, 2019 மீட்டெடுக்கப்பட்டது

வினவு. (2014, அக்டோபர் 29). இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல். Retrieved from
https://www.vinavu.com/2014/10/29/nature-in-tamil-literary-tradition/

You might also like