You are on page 1of 3

±ý¨É ¿ýÈ¡¸ þ¨ÈÅý À¨¼ò¾Éý

¾ý¨É ¿ýÈ¡¸ò ¾Á¢ú ¦ºöÔÁ¡Ú

¦ÀÕÁ¾¢ôÀ¢üÌâ «¨Åò ¾¨ÄÅ÷ «Å÷¸§Ç, ¿£¾¢ ÅØÅ¡ ¿£¾


¢Á¡ý¸§Ç, ±ýÛ¼ý н¢óÐ §À¡ðÊ ¸Äò¾¢ø À¡Â ÅóÐûÇ ¿ñÀ÷¸§Ç,
¯í¸û «¨ÉÅÕìÌõ ±ÉРŽì¸ò¾¢¨É þÕ ¸ÃíÜôÀ¢ ºÁ÷ôÀ¢ì¸
¢§Èý. þùŢɢ §Å¨Ç¢ø ¸øŢ¢ý º¢Èô¨Àô ÀüÈ¢ §Àº ÅóÐû§Çý.

«ýÀ¡÷ó¾ «¨Å§Â¡÷¸§Ç!

     ஒரு மனிதன் தன் வாழ்வில் அவசியம் கொண்டிருக்க வேண்டியது


கல்வியே ஆகும். கல்வியினைச் சிறப்பித்து பல அறிஞர்கள் பல
பாடலைப் பாடியுள்ளனர். “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை
புகினும் கற்கை நன்றே” என்பது ஔவையின் வாக்கு. ஆக, நாம்
பொருள் படைத்திருக்காவிடிலும் கல்விச் செல்வம் பெற்றிருக்க
வேண்டும். ஒருவன் தன் வாழ்வில் எப்படி இருந்தாலும் கல்வி கற்றலே
சிறப்பு என்று ஔவை பிராட்டி நமக்கு விளக்குகின்றார்.

இவ்வாறாக வலம்வரும் செல்வமான கல்விச் செல்வத்தை நம்


தெய்வப்புலவர் வள்ளுவர் தன்னுடைய 40 வது அதிகாரத்தில்
திருக்குறளின் வழி பாடியுள்ளார். இந்த கல்வி எனும் அரிய
செல்வத்தினைப் பாட்டுடைப் பொருளாகக் கொண்டு பிற அறிஞர்களும்
பாடியிருக்கின்றனர்.

கல்வி அதிகாரத்தின் முதல் குறளாக அமைவது,

கற்க கசடற கற்பவை கற்றபின்


 நிற்க அதற்குத் தக (குறள் 391)
என்ற குறளாகும். அறிஞர் மூ. வரதராசர் அவர்கள் இயற்றிய
திருக்குறள் தெளிவுரை என்ற நூலில் இக்குறளுக்கானப் பொருள்
விளக்கம், “கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும்.
அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில்
நிற்கவேண்டும்” என்பதே ஆகும். இதன் வழி, வள்ளுவப் பெருந்தகை
பிழையறக் கற்றதை வாழ்க்கையில் ஒழுக வேண்டும் என்று
விளம்புகின்றார். நாம் ஒன்றினை பிழையறக் கற்கையில் சிறந்த
கல்வியினைப் பெறுகின்றோம். ஆகையால், நாம் பெற்ற அத்தகைய
கல்வியானது வெறுமனே ஒரு அறிவாக நிலைத்துவிடாது அதனை நம்
வாழ்வின் பின்பற்றினோம் ஆனால் நம் வாழ்வு மேன்மையடையும்
என்கிறார்.

இதனையே, முண்டாசு கவி பாரதி தன்னுடைய புதிய


ஆத்திச்சூடியில்,“கற்றது ஒழுகு” என கூறி வைத்துள்ளார். கற்ற கல்வி
வெறுமனே கற்றதோடு நின்றுவிட்டால் பின் கற்ற கல்வியின் பயன்
என்னவோ? “ஏட்டுக் கல்வியை விட அனுபவக் கல்வியே
சிறந்தது” என்பதற்கு கற்ற விசயத்தைக் கல்வியோடு நிறுத்திக்
கொள்ளாமல் அதனை அனுபவமாக்கி, கற்ற கல்விக்கு அழகு
சேர்த்தலே சிறப்பு என பொருள் கொள்ள விழைகிறேன். எனவே, தான்
மூதறிஞர்கள் கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துதல்
அவசியம் என்கின்றனர்.

அவையோரே,
‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ எனும் வாசகத்தை கேள்வி பட்டதுண்டோ?
முற்றிலும் நிஜமான ஒன்று. கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும்
அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகிறான். கற்றவனுக்குத் தனது
நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும்.
இப்படி கல்வி கற்றவரின் சிறப்பு இருக்க ஒருவன் தான் இறக்கும் வரை
கல்வி கற்றகாமல் இருந்து காலத்தை கழிப்பது மிகவும்
சிரமமானதாகும். “குன்றின் மேலிட்ட விளக்கு போல’ எனும் பழமொழிக்கேற்ப கற்றவர்கள்
என்றும் எங்கும் விளக்கின் ஒளியைப் போல் பிரகாசமாய் ஜொலிப்பார்கள்.

“கற்றது கைமண் அளவு கள்ளாதது உலகளவு” எனும் சொற்றொடரை நாம் அறிந்ததே.


நாம் கற்றறிந்த விஷயங்கள் மிகக் குறைவே. ஆனால் கற்க வேண்டியவை எண்ணில் அடங்கா.
அதற்கேற்ப மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க
மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான்.

“எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய


இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள்” என பொய்யாமொழி

புலவன் தன் குறளில் இவ்வாறூ கூறுகின்றார்.

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்

  கண்என்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392)

இறுதியாக, கல்வி கற்றவரிடம் ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, இவைகள் அனைத்தும்


ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே, கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக
இருக்கிறது. அனைவரும் கல்வி எனும் ஆழ்ந்த கடலில் மூழ்கி முத்தெடுப்போம்.
கல்வியானது, தொடக்கத்தில் கசக்கலாம், ஆனால், அதனில் வெற்றி பெற்றால்

சுவைக்கும். இதனையே, ஆங்கில எழுத்தாளர் ஒருவர், கல்வியின் விதைகள்

கசப்பானது, ஆனால், கனியோ இனிப்பானது எனக் கூறியிருக்கின்றார் என்பதை

அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறி விடைப்பெருகிறேன். நன்றி,

வணக்கம்.

You might also like