You are on page 1of 9

உள்ளடக்கம்

1.0 உள்ளடக்கம் 1
2.0 நன்றியுரை 2
3.0 முன்னுரை 3
4.0 கட்டுரை 4
- 12
 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய மலேசியத் தமிழ்க்கல்வி, 21 ஆம் நூற்றாண்டின்
சவால்களுக்கேற்ப இயங்க, தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலில் கொணரவேண்டிய
புத்தாக்கத் திறன்களையும் மாற்றங்களையும் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் ஆராய்க
5.0 துணைமேற்கோள் நூல்கள் 13

நன்றியுரை

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாரு!!!

தமிழ் இலக்கணம் கற்பித்தல் முறைமை செய்பணியை வெற்றிகரமாக ஒப்படைத்ததில் எல்ல வல்ல


இறைவக்கு பத்து விரல்களையும் ஒன்றிணைத்து கைக் கூப்பி உமக்கு நன்றியைத் தெரிவித்துக்

1
கொள்கிறேன். தமிழ் இலக்கணம் கற்பித்தல் முறைமை செய்பணியைச் செய்வதற்க்கு வழிக்காட்டியாக
இருந்த எங்கள் விரிவுரையாளர் திரு குணசீலன் சுப்பிரமணியம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்தச் செய்பனியை எழுதும் பொழுது பல இன்னல்களைச் சந்தித்தாலும், முழு நேரமும் எனக்கு


உறுதுணையாக இருந்த என் அருமைக் குரிய பெற்றொர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் என்
நன்றியைச் சமர்பிக்கிறேன்.

மறவாத என் அருமை நண்பர்களுக்கு இந்தத் தருனத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் . பல
தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டதற்க்கும் உதவியாக இருந்தமைக்கும் மிக்க நன்றி.

முன்னுரை

நாட்டின் வளமைக்கு, 21 ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்கள் முக்கியத்துவம் என விவாதங்கள்


எழும்பின. மூன்று முக்கிய கூறுகளாக எடுத்துரைக்கப்பட்டன. அவை, கல்வியாளரும் கல்வியியல்
கொள்கை வகுப்பாளர்களும் முறையான ‘வழிகாட்டும் திட்டவரைவுகள் முழுமைபடுத்தி
இருக்க வேண்டும். நிலம், மாவட்டம், பள்ளிகள் அனைத்தும் மனிதவள ஆற்றல்கள் நிறைந்த
ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். விவேகமான, ஆழ்ந்த கற்றல்
திறன்களைப் பயன்படுத்திச் சிக்கலான பணியைச் செய்து முடிக்கும் கற்றல் திறன்களைக்
கண்டறிய புதிய கற்றல் மதிப்பீடுகள் தேவை ஆகும்.

21 ஆம் நூற்றாண்டில் நுழைந்து பதினாறாவது ஆண்டாகிறது. இந்தச் செல்நெறிகளும்


மாற்றங்களும் நம் குழந்தைகளுக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் அத்தியாவசியம்.
இந்த அதிரடி மாற்றங்களைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஆயினும், 21 ஆம்
நூற்றாண்டுக் கல்விக்குகந்த வகுப்பறை மாற்றங்களும் தேவைப்படுகிறது.

2
19- ஆம் நூற்றாண்டில் தொடங்கிய மலேசியத் தமிழ்க்கல்வி, 21 ஆம் நூற்றாண்டின்
சவால்களுக்கேற்ப இயங்க, தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலில் கொணரவேண்டிய புத்தாக்கத்
திறன்களையும் மாற்றங்களையும் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் ஆராய்க.

மலேசியாவின் கலைத் திட்டம் பல நிலைகளைக் கொண்டுள்ளது. அவை தொடக்கக்


கல்வி, இடைநிலைக் கல்வி, தொழிற்க் கல்வி, மேல்நிலைக் கல்வி ஆகியனவாகும்.
தமிழ்பப் ள்ளிகள் முதன்முறையாக தொடுவாய்க் குடியேற்ற பகுதிகளிலேயே (Straits
Settlement ) நிறுவப்பட்டன. தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களான பினாங்கு, மலாக்கா,
சிங்கப்பூர் ஆகியவற்றுள் பினாங்கிலேயே 1816 இல் ரெவரெண்டு ஹட்சிங்ஸ் (Rev.R.
Hutchings) முதன்முதலில் பிரிஸ்கூல் (Free School) ஆங்கில பள்ளியின் ஒரு பிரிவாகத்
தமிழ் வகுப்பைத் தொடங்கினார். இதுவே, இந்நாட்டின் முதன் தமிழ்ப்பள்ளி. எனினும், போதிய
ஆதரவில்லாமையால் ஈராண்டுகளுக்குப் பிறகு இத்தமிழ் வகுப்பு மூடப்பட்டது. அதையடுத்து
1834 இல் சிங்கப்பூரில் பிரிஸ்கூலின் ஒரு பிரிவாக தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. இதுவும்
1839 இல் மூடப்பட்டது. மலாக்காவில் 1850 இல் ஆங்கிலேயத் தமிழ்பப் ள்ளி ஒன்று
தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூரிலும் பினாங்கிலும் இதுபோன்ற பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் 1859 இல் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மலபார் பள்ளியில் தமிழ் வகுப்பு
தொடங்கப்பட்டது. தமிழ்க் கிறிஸ்துவப் பாதியார் தவத்திரு ஆப்ரகாம், கோலாலம்பூர், செந்தூலில்
1895 இல் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளியை நிறுவினார்.[ CITATION முன 15 \l 1033 ]

தமிழ்ப்பள்ளியின் கட்டய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது 1912 இல்


ஆங்கிலேயர் செயற்படுத்திய தொழிலாளர் சட்டமாகும் (Labour Ordinance). இச்சட்டம் 7
முதல் 14 வயதுள்ள 10 பிள்ளைகள் இருப்பின், அத்தோட்ட நிருவாகம் கட்டயமாகப் பள்ளீயை
நிறுவவேண்டும் என வலியுறுத்தியது. தோட்ட முதலாளிகள் வேறி வழியின்றிப் பள்ளிகளை
அமைத்துத் தர வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். ஒரே நிறுவாகத்தில் இயங்கும்
தோட்டப் பிரிவுகளிலும் (division) தனித்தனிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதனால்,
1920 இல் 122 தமிழ்பப் ள்ளிகள் இருந்தன. [ CITATION முன 15 \l 1033 ]

1920 இல் ரப்பர் விலை உயர்நத


் போது ஆள் தேவையை நன்குணர்நத
் ஆங்கிலேயர்
தோட்டங்களின் தாமகவே முன்வந்து மேலும் பள்ளிகளை நிறுவினர். இது தமிழ்ப்பள்ளிகளின்
எண்ணிக்கையை அதிகரித்தது. ஒருகிணைக்கப்பட்ட மலாய் மாநிலங்கலளில் 1925 இல் 235
தமிழ்பப் ள்ளிகள் இருந்தன. அவற்றில் 8,153 மாணவர்கள் கல்வி பயின்றனர். அடுத்த ஐந்து
ஆண்டிற்குள் (1930) பள்ளிகளின் எண்ணிக்கை 12,640 ஆக உயர்நத
் து. ஆங்கிலேயர் அரசால்

3
1937 வரை 13 அரசினர் தமிழ்பப் ள்ளிகளேயே நிறுவப்பட்டிருந்தன. இப்பள்ளிகள் பெரும்பாலும்
நகர்ப்புறங்களிலேயே இருந்தன. தாய்மொழிக்கல்விக்கு ஆங்கிலய அரசின் ஊக்குவிப்பு இன்றியே
1930 இல் 333 ஆக இருந்த தமிழ்ப்பள்ளிகள் 1938 இல் 535 ஆக அதிகரித்தன. மாணவர்
எண்ணிக்கை 28,098 ஆக உயர்நத
் து.

இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர் ஜப்பானியிடம் தோற்று மலாயாவைவிட்டு ஓடினர்.


மலாயா ஜப்பானிய ஆட்சிக்கு (1942- 1945) உட்பட்டிருந்தவேளை தமிழ்க் கல்வி பெரிய அளவில்
பாதிப்பு எற்ப்பட்டது. பல பள்ளிகள் மூடப்பட்டன. இயங்கிய சில பள்ளிகளிலும் ஜப்பானிய மொழியே
கற்பிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆங்கிலேய அரசு தாய்மொழிக் கல்வியில்
கவனம் செலுத்தியது. இதற்க்கென 1946 ஆம் ஆண்டு கல்விச் சட்டம் (Rang Undang-
Undang Pelajaran 1946) நடப்பில் வந்தது. இச்சட்டம் இலவசத் தாய்மொழிக் கல்வியை
வலியுறுத்தித் தமிழ்ப் பள்ளிகளுக்குக் கிடைத்த மானியம் அதிகரிக்க வழிவகுத்தது.

நாடு விடுதலை பெறும் தருவாயில், 888 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. பல்லின மக்கள்
வாழும் இந்நாட்டில் கல்வி முறையாகச் சீர்செய்ய கல்வியமைச்சு டத்தோ ஹஜி அப்துல் ரசாக் பின்
டத்தோ ஹுசேன் தலைமையில் கல்விக்குழு அமைக்கப்பட்டு 6.5.1956 இல் ரசாக் அறிக்கையை
வெளியிட்டது. ரசாக் அறிக்கையின் அமலாக்கத்தை ஆய்வு செய்வதற்க்காக, 1960 ஆம்
ஆண்டு, கல்வி அமைச்சரான ரஹ்மான் தாலிப் அவர்களின் தலைமையில் ஒரு குழு
அமைக்கப்பட்டது. பின்னர் 1961 இல் கல்விச்சட்டமாக ( Akta Pelajaran 1961)
ஏற்க்கப்பட்டது.[ CITATION முன 15 \l 1033 ]

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் உலகைச் சிறு


கிராமமாக மாற்றியுள்ளது. இதனை நன்குணர்நத
் அன்றைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர்
முகம்மது, நாடு 2020 ஆம் ஆண்டை எட்டும்போது, எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த
உலக நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலை அடைந்திருக்க வேண்டும் எனத் திட்டமிட்டார்.
இத்திட்டத்தின் 9 நோக்கங்களுள் முக்கியமானது திறப்பாட்டுப் பள்ளிகளை உருவாக்கும்
திட்டமாகும். தொழைநோக்குப் பள்ளித்திட்டம் ஒரே பள்ளி வளாகத்தில் மலாய், தமிழ் , சீனம்
ஆகிய மூன்று பள்ளிகளும் அமைந்திருப்பதை வலியுறுத்துகிறது. தேசிய பள்ளிகளிலும்
இடைநிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 15 பெற்றொர்களின் விருப்பத்தின் பேரில் தாய்மொழிக்
கல்வி கற்பிக்க 1961 ஆம் ஆண்டில் கல்விச் சட்டம் வலியுறுத்தியது.

நாட்டில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்களில் மலாயப் பல்கலைக்கழகமே முதலில்


தோற்றுவிக்கப்பட்டதாகும். 1956 முதல் கலை மற்றும் சமூக அறிவியல் புலத்தில் ( Facuality

4
of Arts and Social Sciences) இந்திய ஆய்வியல் துறையின்கீழ் (Department of
Indian Studies) தமிழ் மொழி, இலக்கியம் கற்பிக்கப்பட்டது. மலேசியாவிலுள்ளா புத்ரா
பல்கலைகழகம், சபா மலேசியா பல்கலைக்கழகம் ஆகிய இரு அரசு பல்கலைக்கழகங்களில்
இரண்டாம் மொழியாக எளிய தமிழ் கற்பிக்கப்படுகின்றது.[ CITATION முன 15 \l 1033 ]

தற்போது 21 ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி கற்றல் திறன்களில் தொழியியல் ,


நுண்ணாய்வு, தொடர்பாடல், கூடிக்கற்றல், புத்தாக்கம், தகவல் ஊடகம் மற்றும் தகவல்
தொழிற்நுற்பம் ஆகிய திறன்கள் பெற்றிறுக்கும் அவசியத்தை வலியுறுத்துகிறது. இருப்பினும்,
21 ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் தமிழ்பப் ள்ளிகள் பல சவால்களைச் சந்திக்கும்
சூழ்நிலை நிலவியுள்ளது.

தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கு சவால்களில் தமிழ்ப்பள்ளிகளில் மோசமான கட்டட நிலை


ஒன்றாகும். கடந்த 54 ஆண்டுகளாக பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளின் கட்டட, புற வசதிகள்
அரசின் பாரபட்ச ஆட்சி நிலையால் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றன.
[ CITATION ஆதி12 \l 1033 ]

சில தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவான நிலையில் உள்ளது. 21 ஆம்


நூற்றாண்டில் ‘வெண்கட்டியும் வாய்போதனையும்‘ முறையைப் பின்பற்றி ஆசிரியர்கள் கற்றல்
கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. கணினி, இணையம் போன்ற தொழில்நுட்ப
வளர்ச்சியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் போதனைகளை நடத்த வேண்டும்
என வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். இருப்பினும், சில தமிழ்ப் பள்ளிகளில் தகவல் தொடர்
தொழிற் நுட்ப வசதிகள் இல்லை என்றால் அது வெள்ளிடமலையே. தோட்டப்புறப்பள்ளிகளில்
கணினி வழி கற்றல் அனுபவத்தை வழங்க முறையான கணினி மையம் இல்லை. அரசாங்கம்
வழங்கிய மடிக்கணினியைக் கொண்டுதான் போதிக்கப்படுகின்றது. அதிலும் இணைய வசதி
பிரச்சினைகள் ஏற்படுகின்றன [ CITATION தாய 16 \l 1033 ]

மேலும், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு


வருகின்ற நிலையும் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது. தமிழ் இல்லா பாலர்
பள்ளிகள், CEC, Smart Readers, Montessori, Q-dees போன்ற பெரிய வாணிப அளவில்
நடத்தப்படும் பாலர் பள்ளிகளிலும் நிறைய தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர். அதிக
கட்டணத்தில் தரமான கல்வி என்னும் நடைமுறையை விரும்பும் பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளை அங்கு அனுப்புகின்றனர். தங்கள் பிள்ளைகள் தாய்மொழிக் கல்வியை
இழக்கின்றனர் என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. இவ்வகை பாலர் பள்ளிகளுக்குச் செல்லும்

5
இளம் மாணவர்களில் பெரும் பகுதியினர், தமிழ்ப் பள்ளிகளுக்கு சேர்க்கப்படுவதில்லை. இதனால்,
தமிழ்பப் ள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாணவர்களின்
எண்ணிக்கைக்கேற்ப தான் அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்கப்படும். இதனால்
தமிழ்பப் ள்ளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைவான எண்ணிக்கையில் கிடைக்கும்.

ஆசிரியர் துறையானது மதிப்பும் உயர்வும் கிடைக்கும் வகையில் அதை ‘ அறிவு சார்நத



தரமிகுதுறை’ (knowledge-based profession) நிலைக்கு உயர்த்துவதே 21 ஆம்
நூற்றாண்டில் சவாலாக அமைந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டு வகுப்பறை மறுவடிவமைப்பும் ஒரு
சவாலாக உள்ளது. இன்றைய கல்விச்சூழலும் உலகலாவிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கவும்,
நுட்பவியல் திறன்கருவிகள், இணைய இணைப்பு, சமூகம் பொருளாதாரம், சுற்றுச் சூழியல்
விழிப்புணர்வு மிகுந்த, சிக்கலைக் கலையும் அறிவார்நத
் மாணவர்கள் சமூகத்தை வடிவமைக்கும்
பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு.

21 ஆம் நூற்றாண்டின் அதிவேக மாற்றங்களுக்கு ஆசிரியர்கள் தயாராகிவரும்


இன்றையச் சூழலில், கற்றலுக்குப் பயன்படும் குறுஞ்செயலிகள் (Edu-Apps)
துணைசெய்கின்றன. 21 ஆம் நூற்றாண்டுத் தமிழாசிரியர்கள் தகவல் தொழில்நுட்ப
மாற்றங்களின் வேகத்திற்கு ஈடுசெய்ய இயலாமல் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
21 ஆம் நூற்றாண்டு கற்றல் செல்நெறிகளைத் தெரிந்து வைத்திராத ஆசிரியர்கள்
மாணவர்களின் தேவைகளை அறியாதவர்களாகிறார்கள். இச்சூழலை மாற்றியமைக்க
தமிழாசிரியர்கள் முனைப்புக் காட்ட வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கேற்ப
இயங்க, தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கத் திறன்களையும் மாற்றங்களையும்
கொண்டு வருதல் முக்கியமானது.

21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் புதிய கற்றல் துணைக் கருவிகள்
பயன்படுத்துதல் அவசியம். அவற்றுள், ஒத்துழைப்பு (collaboration), பேச்சுக்கலை
(Communication), ஆக்கச்சிந்தனை (Creativity), விமர்சனச் சிந்தனை (Critical
Thinking), மறுமொழி (Feedback), புத்தாக்கம் (Innovation), படைப்பு (Presentation),
சிக்கல் கலைதல் (Problem Solving), உற்பத்தி (Productivity), மீடடு
் ணர்தல் (Reflection),
சமூக வலைதளங்கள் (Social Networking) போன்றவை அடங்கும்.

21 ஆம் நுற்றாண்டில் ஆசிரியர் கற்றல் கற்பித்தலை மாணவர் மையமாகக்


கொண்டுவருதல் அவசியமாகும். ஆசிரியர் வழிகாட்டியாகவே செயல்படுவார்; மாணவர்கள்

6
சுயமாகவோ, குழு முறையிலோ, வகுப்பு முறையிலோ செயல்பட வாய்ப்பு வழங்குதல் 21 ஆம்
நுற்றாண்டு கற்றல் கற்பித்தலில் அவசியம். உதாரணத்திற்க்கு, பாகமேற்று நடித்தல்.

 ஆசிரியர் செய்யுளையும் அதன் பொருளையும் கதையின் வழி அறிமுகம் செய்தல்.


 செய்யுளையும் அதன் பொருளையும் விளங்கிக் கொள்ள சூழல்களை வழங்குதல்.
 மாணவர்கள் அதனை விளங்கிக் கொண்டு சுயமாக சூழல்களை உருவாக்கி பாகமேற்று
நடித்தல். உதாரணத்திற்கு: அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்…. எனும்
செய்யுளை சூழலுக்கேற்ப நடித்துக் காட்டுதல்.
 மாணவர்கள் செய்யுளைச் சூழலுக்கேற்ப பாகமேற்று நடிக்கும் போது செய்யுளையும் அதன்
பொருளையும் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
 படித்து, மனனம் செய்து ஒப்புவிப்பதைவிட நாடக வடிவில் வெளிப்படுத்தும்போது
சுலபமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தலில் கொணரவேண்டிய புத்தாக்கத் திறன்களும்


மாற்றங்களில் ஒன்றுதான் அதிர்மாற்ற வகுப்பறை (Flipped Classroom). அதிர்மாற்ற
வகுப்பறை (Flipped Classroom) என்பது முறையான நிரல்கற்பித்தலுக்கு
எதிர்மறையானதாகும். மாணவர்கள் இவ்வதிர்மாற்ற வகுப்புக்கு வரும்முன்பே முன்னறி
நடவடிக்கைகளில் ஈடுபட ஆசிரியர் ஊக்குவிப்பர். இணையம்வழி செய்முறைக் காணொளி,
விளக்கவுரை தொடர்பான ஆய்வுச்சால் கட்டுரையை வகுப்பறைக்கு வெளியே பார்த்தும் கேட்டும்
வாசித்தும் தெரிந்து கொள்வர். இந்த முன்னறி செயற்பாங்கு வகுப்பறையில் மாணவர்கள்
ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் அறிவின் அடிப்படையில் உள்வாங்கி கருதுகோளின்
அடிப்படையில் கலந்துரையாடல் முறையிலும், விவாதித்தும் , சிக்கலுக்குத் தீர்வுகாண்பர்.
இதனால், மாணவர்கள் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் இயங்கும் வாய்ப்பு உயரும். பாட
உபகரங்களை மாணவர்களே தயாரிப்பர்.

உலகமயமாயிருக்கும் யுகத்தில், 21 ஆம் தூற்றாண்டுகற்றல் திறன்களையும் தகவல்


தொழில்நுட்பம் சார்நத
் கற்பித்தல் திறன்களையும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிந்திருக்க
வேண்டும். கற்றலுக்குத் தேவையான செயலிகளை உருவாக்குதலிலும், புதியமென்
பொருள்களைப் பயன்பாடு. 21 ஆம் துற்றாண்டுக் கல்வியியலின் கட்டாயம் என்பதை
விடகாலத்தின் நெருக்கடி என்றே குறிப்பிடலாம். இதை கற்பவர்களைவிடக் கற்பிப்பவர்களே
முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அதன்வழி விளைபயன்மிக்க நன்மைகளை
மாணவர்களுக்கு ஏற்படுத்தித்தர முடியும்.

7
துணைமேற்கோள் நூல்கள்

அர்ஜுனன், க. (2016, அக்டோபர்). மாணவர் மையக் கல்வி முறையைப் பின்பற்றி செய்யுள்


மொழியணியைக் கற்பித்தல். Retrieved மார்ச் செவ்வாய், 2017, from தமிழ்க் கல்வி:
http://tamilkalvi.my/class/

குமரன், ம. எ. (2015). மலேசியாவில் தமிழ்க்கல்வி அன்றும் இன்றும். ஒன்பதாவது உலகத் தமிழ்


ஆராய்சச ் ி மாநாடு சிறப்பு மலர், 24-31.

திருவேங்கடம், ஆ. (2012, நவம்பர் 23). மலேசிய தமிழ்ப்பள்ளிகள் ஏதிர்நோக்கும் சவால்கள்.


Retrieved மார்ச் செவ்வாய், 2017, from Blogspot:
http://rawangjohnson.blogspot.my/2012/11/blog-post.html

8
மொழி, த. (2016). தாய் மொழி. Retrieved மார்ச் செவ்வாய், 2017, from 21 ஆம்
நூற்றாண்டில் கற்றல் கற்பித்தலின் வெற்றி புதுமை படைக்கும் ஆசிரியர் கையிலே:
http://www.thaimoli.com/news-detail.php?nwsId=9781

வாசுதேவன். (2016, அக்டோபர் 18). 21-ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை: கற்பித்தலில் அதிநவீன
இலத்திரனியல் அலை. Retrieved மார்ச் செவ்வாய், 2017, from தமிழ்க்கல்வி:
http://tamilkalvi.my/class/21

You might also like