You are on page 1of 12

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில்

முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர

மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை

மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச

விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.


தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக

(பறுவம்) இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய

விஷேட தினமாகும். இத்திருநாளில்தான் சுவாமி முருகன்

கொடிய அரக்கனான தாரகனைக் கொன்று அழிப்பதற்கு

வெற்றிவேல் வாங்கிய தினம்.


தாரகனை அழித்து உலக உயிரினங்களைத் துன்பத்தில்

இருந்து மீட்ட தினம். இதனைப் போற்றும் விழாவாக

தைப்பூச விழா ஆண்டுதோறும் முருகன் கோயில்களில் வெகு

சிறப்பாக நடைபெற்று வருகிறது.


தைப்பூச திருநாள் உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும்

உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள்

காவடி, பால்குடம் எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற பல்வேறு

நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி பாதயாத்திரை செலுத்துவர்.


தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு

முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக

அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம்

தூக்குதல் போன்ற நிகழ்வுக்குப் பிறகு கோவிலில் அன்னதானம்

வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி

வழிபடுவது வழக்கம் .
பாதயாத்திரை

முருகன் பெருமானைக் காண பக்தர்கள் காவியுடை


அணிந்து, விரதம் இருந்து பலநூறு மைல்கள் பனி, வெயில் பாராது
நடந்து, முருக பெருமானின் அருளைப் பெறுதல்.
பாதயாத்திரையால் தங்களின் பாவ வினைகள்
நீங்குகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
காவடிகள் பல...
மச்ச
பால்
க்
காவடி
காவடி
சேவல்
காவடி
வேல் மயில்
காவடி காவடி
சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து

வரப்படுகிறது.

தீர்த்தக் காவடி - காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து

வரப்படுகிறது.

பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில்

அழைத்து வரப்படுகிறார்.
பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து

வரப்படுகிறது.

மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து

வரப்படுகிறது.

மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி

பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது


"பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே''

தைப்பூசத் திருநாளன்று நீராடுவது பற்றி அப்பர்

பாடுகிறார்.
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்
நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்
- ஞானசம்பந்தர்

தைப்பூசத் திருவிழாவைக் கண்ணாறக் கண்டு களித்தல்


முக்கியமானது என்று உணர்த்துகிறது
இந்தப் பாடல்.
தைப்பூச விரத முறை

You might also like