You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் தயாரிப்பதன் நன்மைகளை 200 சொற்களுக்குள்,

நாள் பாடத்திட்டம் என்பது ஒவ்வொரு ஆசிரியருக்கும் மிகவும் முக்கியமானது. ஒரு சிறந்த


கற்றல் கற்பித்தலை உருவாக்க நாள் பாடத்திட்டமே மிகவும் முக்கிய பங்காற்றுகின்றது.
எடுத்துக்காட்டாக, ஆசிரியர் வகுப்பில் உயிர் எழுத்துகளைப் பற்றிப் பாடம் நடத்தினார் என்றால்,
அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் முன்னதாகவே தயார் செய்ய முடியும். இதன் வழி
ஆசிரியரால் பாடத்திட்டத்தினை மிகவும் நன்றாகப் போதிக்க முடியும்.

அடுத்ததாக, மாணவர்களின் ஈடுபாடு மிகவும் நன்றாக அமையும். அதாவது, நாள்


பாடத்திட்டத்தைத் தயாரித்து மாணவர்களுக்குப் போதிக்கும்போது, மாணவர்கள் முழு
கவனத்தையும் செலுத்துவர்.கற்றல் க ற்பித்தல் சரியாக அமையும்போது, மாணவர்களின் கவனமும்
அங்கு சிதறுவதில்லை. அடுத்த நன்மையானது நேரம் கற்றல் கற்பித்தலுக்குச் சரியாக அமையும்.
அதாவது, நாள் பாடத்திட்டத்தின்வழி பாடம் போதிப்பதனால், சரியான நேரத்தில் ஒரு பாடத்தின்
நோக்கத்தினை அடையளாம். உதாரணமாக, ஆசிரியர் குறில் நெடில் என்ற நடவடிக்கையைத்
தயார் செய்து, மாணவர்களுக்குப் போதிக்கிறார். அவருடைய பாடத்திட்டம் 30 நிமிடம் ஆகும்.
குறிப்பிட்ட 30 நிமிடத்திட்டத்திற்கான திட்டமிடலை அவரால் செய்து முடிக்க முடியும்.
அதுமட்டுமின்றி, திட்டமிட்ட வெவ்வேறு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின் வாயிலாக
மாணவர்களின் புரிதலை அதிகரிக்கலாம்.

அடுத்ததாகத் தரமான கற்றல் கற்பித்தலை உருவாக்கலாம். அதாவது, ஒவ்வொன்றையும்


திட்டமிட்டு செய்வதன்வழி தமிழ்மொழிப் பாடத்திட்டத்திற்கான தரத்தை வளர்க்கலாம். மாணவர்கள்
மிகவும் நுணுக்கமாக ஒவ்வொன்றையும் புரிந்து கொள்வர். தேர்ச்சியின்போது அவர்களால் சிறந்த
மதிப்பெண்னை அடைய மிகவும் துணையாக அமையும். ஆகையால், தரமான கற்றல் கற்பித்தலுக்கு
பாடத்திட்டம் முக்கிய வழிவகுக்குகின்றது.

You might also like