You are on page 1of 2

சென்ற பருவம் உங்கள் கல்லூரி வளாகம், தமிழ் மொழிக் கழக ஏற்பாட்டில் தமிழ்

மொழி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிட்டு


நடத்தப்பட்டன. அதனையொட்டி அறிக்கை ஒன்றனைத் தயாரித்திடுக.

ஆசிரியர் பயிற்சி கல்லூரி டாருல் அமன்


வளாகம். 2019 ஆம் ஆண்டின் தமிழ் மொழி விழா அறிக்கை

ஏப்ரல் திங்கள் 25/5/2019 நாள் சனிக்கிழமையன்று, உங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரி


டாருல் அமன் வளாகம் தமிழ்மொழிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தமிழ்விழா மிகவும்
விமரிசையாக நடைபெற்றது. இவ்விழா காலை மணி 9.30 க்குப் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
டாருல் அமன் வளாகத்தின் மண்டபத்தில் தொடங்கியது.

வரவேற்புரை, தமிழ்மொழிக் கழகத்தின் தலைவர் ஷரன் அர்வின் வருகை புரிந்த


அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேற வருகையாளர்களின்
ஒத்துழைப்பையும் வேண்டினார். மேலும் ஷரன் தமிழ் மொழி விழாவின் முக்கிய துவதை
நோக்கும் பற்றி எடுத்துரைத்தி. தமிழ் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து
வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக்
கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கமாக கருதப்பட்டது. போட்டி
விதிகள், தலைப்புகள், முடிவுகள் போன்றவை ஒழுங்கே அறியப்பட்டு சிறப்பாக
செயல்படுத்தப்பட்டது.

தலைமையுரை, செல்வன் லிங்கேசும், செல்வன் குமணனும் தமிழ்வாழ்த்துப் பாடி


நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து செல்வி தாரணியின் பரத நாட்டியம்
அரங்கேறியது. அதன் பின்னர், தமிழ்மொழிக் கழக ஆலோசகர் திரு கோபாலகிருஷ்ணன்
அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் இவ்விழாவின் நோக்கத்தை விளக்கினார்.
தொடர்ந்து, திறப்புரை நிகழ்வின் முக்கிய பிரமுகர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி டாருல்
அமன்
வளாகனின் இயக்குனர் ஹாஜி ஹாஷிம் பின் அஸ்மான் அவர்கள் திறப்புரை ஆற்றி
நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தமதுரையில் இது போன்ற
நிகழ்வுகள் இந்திய மாணவர்களிடையே பண்பாட்டைக் காப்பதோடு, சமுதாயச்
சீர்கேடுகளையும் குறைக்கும் என்றார். மெலும் திரு ஹாஜி ஹாஷிம் பின் அஸ்மான்
விவரித்தார், மொழி என்பது ஒரு “கருவி” என்று பார்க்கும் போதுதான் அது ஒரு
எல்லைக்குட்பட்ட்து என்பது விளங்குகிறது. கணிதத்தைப் புரிவதற்கும் அல்லது முடிவுகளை
எடுப்பதற்கும் மொழி கருவியாகத்தான் செயல்படுகிறது. மொழி கருவியாகச்
செயல்பட்டாலும், அது அதற்கும் மேலே பல பயன்களைக் கொண்டது.. “பல பயன்கள்”
என்று சொல்லும் பொழுது, அது மொழியையே மையமாக்க் குறிக்கிறது. அந்த மொழிதான்
பொதுவாக குழந்தையின் கல்வி, அதன் அன்றாட வாழ்வு ஆகியவைகளுக்கு ஆதாரமான
ஒன்றாக உள்ளது.

போட்டிகள் இவ்விழாவில், திருக்குறள் எழுதும் போட்டி, கவிதை ஒப்புவிக்கும்


போட்டி, பேச்சுப் போட்டி, புதிர்ப் போட்டி போன்ற போட்டிகள் பல இடம்பெற்றன. இப்
போட்டிகளிள் அனைத்து பல்வேறு விருப்பங்கள் செர்ந்த இந்திய மணவர்கள் பங்கு பற்று
பெரு மகிழ்ச்சி அடைந்தன. தோடர்ந்து பரிசளிப்பு விழா அனைத்துப் போட்டிகளிலும்
முதல் மூன்று நிலைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினருக்கு பழக்கூடை ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும்
இந்நிகழ்வு வெற்றிபெற ஒத்துழைத்த அனைத்து நடுவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இருதியாக தமிழ்மொழிக் கழகத்தின் செயலர் ஷரன் நன்றியுரை ஆற்ற, இவ்விழா
பிற்பகல் மணி 1.30 க்கு இனிதே முடிவுற்றது. வந்திருந்தவர்களுக்கு மதிய உணவும்
வழங்கப்பட்டது. பிற்பகல் மணி 2.00 அளவில் அனைவரும் மகிழ்ச்சியோடு வீடு
திரும்பினர்.

அறிக்கைத் தயாரித்தவர், 4 ஜூன் 2020

..........................................
(எல்வின் ஜூட் த/பெ வின்சன் போல்)
செயலாலர்,
தமிழ் மொழிக் கழகம்,
ஆசிரியர் பயிற்சி கல்லூரி டாருல் அமன் வளாகம்,
கெடா, 06000 ஜித்ரா.

You might also like