You are on page 1of 8

அள்ளித்தெளித்த அலங்கோலங்கள்

கடலாலும் நிலத்தாலும் பிரிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளில்


வாழும் தமிழ் மக்களிடையே ஒருமித்த தாய் மொழிப்பற்றை
விதைக்கவும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழாராச்சியை
ஒருமுகப்படுத்தவும், தமிழ்மொழியை பலப்படுத்தவும்
வளப்படுத்தவும் மெருகேற்றவும் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி நடத்தும்
மாநாடு உலகத் தமிழாராச்சி மாநாடாகும்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் கல்வித்துறைக்கு


தலைமையேற்ற தனிநாயகம் அடிகளார் 1964 ஜனவரி 7 ஆம் நாள்
தன்னார்வ முறையிலே புதுதில்லியில் கூடியபோது தவத்திரு "உலகத்
தமிழ் ஆராய்ச்சி மன்றம்' என்ற ஒன்றினை திருவாளர்கள் ஏ.சுப்பையா,
பிலியோசர், பர்ரோ, எமனோ, கூப்பர், சுவலெபிஸ் போன்றோர்
உதவியுடன் தோற்றுவித்தனர்.

அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் காலாண்டு இதழ் மூலம்


உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க
முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர்.

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற உலக நாடுகளில் இரண்டு


ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழாராச்சி மாநாடு
நடத்துவது என்பது அந்த மன்றத்தின் தலையாய நோக்கமாகும்.

உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தமிழுக்கு, தமிழன்னைக்கு


ஆராதனை செய்யும் அதேவேளையில் தமிழுக்கு ஒரு சிறந்த
அணிகலனை ஈராண்டுக்கு ஒரு முறை அணிய செய்து, த
மிழன்னைக்கு மகுடம் சூட்டப்பட வேண்டும் என்பது தமிழ்ச்
சான்றோர்களின் அன்றைய அவாவாகும். மாநாட்டைக்
கூட்டினோம், கலைந்தோம் என்றில்லாமல் மாநாட்டின்
நோக்கங்கள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின்
எதிர்பார்ப்பாக இருந்தது.

முதலாவது உலகத் தமிழாய்ச்சி மாநாடு தனிநாயகர் அடிகளால்


தலைமையில் 1966 ஆம் ஆண்டு மலேசியா வெற்றிகரமாக
நடத்தியது. நாட்டின் தலைநகரில் மலாயா பல்கலைக்கழகம்,
தேசிய கல்வி வளர்ப்பு நிறுவனத்தின் இந்தியப்பிரிவு, உலகத் த
மிழாராச்சி மன்றம் ஆகிய மூன்று அமைப்புகளின் சார்பில் இந்த
மாநாடு கூட்டப்பெற்றது. 25 நாடுகளிலிருந்து சுமார் 200
பேரறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பிரிவை களமாகக்


கொண்ட நடத்தப்பட்ட இந்த மாநாடு வெளிநாட்டு தமிழ்ப்
பேரறிஞர்களும் ஆய்வாளர்களும் தத்தம் ஆராய்ச்சிகளையும்,
கருத்துக்களையும் பரிமாற்றம் செய்த இந்த மாநாடு தமிழ்மொழி
வளர்ச்சிக்கு ஊக்கமும் எழுச்சியும் தந்தது. முதல் முதலில்
நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் மூலம் தமிழாய்வுத் துறையில்
மலேசியா ஒரு வரலாறு படைத்தது.

அடுத்து 1987 ஆம் ஆண்டு அன்றைய மஇகா தேசியத் தலைவரும்


பொதுப்பணித்துறை அமைச்சருான துன் எஸ்.சாமிவேலு - டாக்டர்
வி. டேவிட் இணைத் தலைவர்களாக கொண்டு 6 ஆவது உலகத்
தமிழாராச்சி மாநாட்டை மலேசியா ஏற்று, நடத்தியது. மலேசியா
ஏற்று நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடாகும்.
மீண்டும் ஒரு முறை கோலாலம்பூரில் நடைபெற்றது.

அன்றைய பிரதமர் துன் முகாதீர் முகமதுவினால் தொடக்கி


வைக்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் திமுக தலைவர்
கலைஞர் மு. கருணாநிதி கலந்து கொண்டது மாநாட்டிற்கு
முத்தாய்ப்பாக அமைந்தது. 20 நாடுகளுக்கு மேற்பட்ட
தமிழறிஞர்கள், இலக்கியாவதிகள், எழுத்தாளர்கள்,
பத்திரிகையாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட பேராளர்கள்
பங்கேற்றனர்.

தொடக்க விழாவில் புத்ரா உலக வாணிப மைய அரங்கத்தில்


உள்ளேயும், வெளியேயும் சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டு
மாநாட்டுக்கு சிறப்பு சேர்த்தனர். கலைஞர் தமக்கே உரிய பாணியில்
நிகழ்த்திய உரை, மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எளிதில்
மறந்து இருக்க முடியாது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலேயே
இன்னமும் பேசப்படும் மாநாடாகவே கோலாலம்பூர் மாநாடு
அமைந்தது.

அடுத்து 2015 ஆம் ஆண்டு ஒன்பதாவது உலகத்தமிழாராய்ச்சி


மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தியது. மாநாட்டின்
ஏற்பாட்டுக்குழுத் தலைவராக உபசரணை நாடு என்ற முறையில்
துன் எஸ். சாமிவேலு முன்நின்று நடத்தினார். துன் சாமிவேலு,
அமைச்சராக இல்லாத நிலையில் தூதர் என்ற பதவியுடன்
நடத்தப்பட்ட இந்த மாநாடு எதிர்பார்த்த அளவிற்கு
சோபிக்கவில்லை. மலாயாப் பல்கலைக்கழகத்தல் அன்றைய
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மாநாட்டை தொடக்கி
வைத்தார்.

இந்திய சமுதாயத்திற்கு தலைமையேற்று இருந்த மஇகா தேசியத்


தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மாநாட்டின் தொடக்க
விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில தலைவர்கள்
மட்டுமே காணப்பட்டனர். கிட்டத்தட்ட மஇகாவினர், துன் சாமிவேலு
கூட்டிய இந்த மாநாட்டை புறக்கணிப்பது போல் இருந்தது.
பிரதான மேடையில் நஜீப்பிற்கு மொழிப் பெயர்த்துக் கூறுவதாக
நினைத்து, அவரின் காலடியிலேயே முட்டிப்போட்டுக்கொண்டு க
ல்வி துணை அமைச்சர் டத்தோ பி. கமலநாதன் விளக்கம் அளித்த
அந்த கண்ராவி காட்சியையும் அன்றுதான் அரங்கேறியது.

மலேசியாவின் இந்த ஒன்பதாவது மாநாடு 6 ஆவது உலகத்


தமிழாராச்ச்சி மாநாட்டைப் போல் எதிர்பார்த்த அளவில்
பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால், மலேசியாவில் உள்ள
அனைத்து தமிழ் அமைப்புகளையும், தமிழ் அறிஞர்களையும்,
எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் ஒன்று திரட்டி,
அவர்களை ஒன்றிணைத்து, ஆடம்பர செலவின்றி கனகச்சிதமாக
அதே வேளையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார் துன்
சாமிவேலு.

கிட்டத்தட்ட மூன்று மாநாடுகளுமே சிறப்பாக நடைபெற்று,


மலேசியா முத்திரைப்பதிக்கும் அளவிற்கு தமது பெயரையும்
தமிழுக்கான மாண்பையும் காப்பாற்றி வைத்திருந்தது எனலாம்.

ஆகக் கடைசியாக ஓம்ஸ் அறவாரியம், மலாயாப் பல்கலைக் கழக


இந்திய ஆய்வியல் துறை ஆதரவோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி
நிறுவனம் ஏற்று நடத்தும் செம்மொழியான தமிழ் மொழியின் 11 ஆவது
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இவ்வாண்டு கடந்த ஜூலை மாதம்
மலேசியாவில் நடத்தப்பட்டது.

கடந்த மாநாட்டின்போதே 11 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஐக்கிய


அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் நடைபெற இருப்பதாஐந்த
நிறுவனத்தின் இந்தியக் கிளை அறிவிப்புன் ஒன்றை
வெளியிட்டிருந்தது. பின்னர், அம்மாநாடு சிங்கப்பூரில் நடைபெற
இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கும்
நடத்தபடவில்லை. பின்னர் அம்மாநாடு சென்னையில் இவ்வாண்டு
ஜூலை 7 ஆம் நாள் நடத்தப்பட்டது.

உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின்


மையப் பொருள் எனக் கூறி. தமிழ்மொழி, இலக்கியம், தமிழர்
பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவை குறித்து இளைஞர்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நட உள்ளதாக
ஊடகங்களில் செய்தி வெளி வந்தது. அம்மாநாடு சென்னை யில்
நடந்தும் முடிந்தது.

இருந்தும் 11 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்று மலாயா


பல்கலைக்கழகத்தில் இன்னொரு மாநாடும் நடத்தப்பட்டது. தடபுடலாக
நடத்தப்பட்டது என்று சொல்வதை விட அவசர அவசரமக
நடத்தப்பட்டது எனலாம்.
உலகத் தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் பாலமாக விளங்கும் இந்த
மாநாட்டில் என்ன தீர்மானம் எடுகப்பட்டது ? அதனை எவ்வாறு
செயல்படுத்த இருக்கிறார்கள் ? இதனால், உலகளாவிய நிலையில்
தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் என்ன நன்மையைக் கொடுக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது என்பது இன்னமும் கேள்விக் குறியாகவே
இருக்கின்றது.

பொதுவாகவே ஒரு மாநாடு நடத்தப்படுவதற்கான நோக்கமும் சில


மாநாடுகளில் அவ்வாண்டுக்கான கருபொருளும் அனைவராலும்
கூர்ந்து கவனிக்கப்படும். ஆனால், இம்முறை கோலாலம்பூரில் நடந்த
மாநாட்டில் என்னதான் நடந்தது எனக் கேட்கும் அளவுக்கு மிகவும்
இரகசியமாகவும் தெளிவில்லாமலும் இருப்பது வேதனைக்குரியதாகும்.

உல்களாவிய நிலையில் நடத்தப்படும் மாநாட்டில் அனைவருக்கும்


பொதுவான தொடர்புடைய தமிழ் மொழி உயர்வுக்கும் உலகத் தமிழர்
நலனுக்குமான விவகாரத்தை பேச வேண்டும். ஆனால், அங்கு
நடந்ததோ மேலும் வேதனைக்குரியதாகும். நாடாளுமன்றத்தில்
விவாதிக்கப்பட வேண்டிய மலேசியா தொடர்புடைய தமிழ்ப்பள்ளிகள்
விவகாரத்தையும் மலேசியாவில் அந்நியத் தொழிலாளர் சிக்கலையும்
அந்த உலகப் பொது மேடையில் விவாதித்திருப்பதை என்னவென்று
சொல்வது ?

மாநாட்டை அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததன் விளைவுதான்


அம்மேடையில் என்ன பேசுவது என்றே தெரியாமல் போனதற்கு
காரணமாக இருக்குமோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

மலேசியா மட்டும் இன்றி கலந்து கொண்ட உலக நாடுகளும்


இவ்விவகாரத்தைதான் உற்று நோக்குவார்கள்.

எடுத்துக் காட்டுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா,


சிக்காகோவில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழினம்,
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின்
தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து
புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல்
முறையிலும் ஆய்வு செய்தல் எனும் கருபொருளில் நடத்தி
வந்தார்கள். ஆய்வுக் கட்டுரைகளும் இந்தத் தலைப்பைச் சுற்றி பல
ஆக்ககரமானக் கருத்துகளைத் தாங்கி மலர்ந்தன.

மேலும். ‘சொற்குவைத் திட்டம்’ என்ற பெயரில் இணையதளப்


பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களும், தமிழ்
ஆர்வலர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது.

ஆக, இவ்வாறு ஒவ்வொரு மாநாட்டிற்குப் பிறகு அதன்


தீர்மானங்கள் திட்டச் செயலாக்கங்கலாக உருவெடுக்கும் என்பது
நடைமுறை. இந்த முறை கோலாலம்பூரில் நடந்த 11 வது உலகத்
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள்
கொண்டுவரப்பட்டன ? என்பது குறித்து யாரும் விடையறியாக்
கேள்வியாகவே தொடர்கிறது.

ஒரு வேளை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தால், ஏன்


இன்னும் பொது வெளியில் அறிவிக்கப்படாமல் மௌனம்
தொடர்கிறது ? ஏற்பாட்டுக் குழுவினரோ அல்லது அதன் தலைமை
பீடத்தில் அலங்கரிக்கும் மாண்புடைமையாளர்களோ பதில்
சொல்வார்களா ? அல்லது அடுத்த மாநாட்டில் பார்த்துக்
கொள்ளலாம் என கை கழுவி விட்டு உலக நாடுகள் கேவலமாய்
பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்திடுவார்களா ?

சொற்குவைத் திட்டம் 2019

தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் நிரல்படுத்தி. சொற்களின்


இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொறளைப் பதிவு
செய்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம்
கொடுத்தல், புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள்
உறுவாக்கப்பட்டு சொற்குவைத் திட்டம் என்ற பெயரில் இணையத்தளம்ப்
பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழர்களும், தமிழ் ஆர்வலர்களும்
பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. (https://www.sorkuvai.com/)

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள்

எங்கே ? எப்போது ?
1. முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 ஆம் தேதிகளில்
நடத்தப்பட்டது.

2. இரண்டாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டு சனவரி


3-10 ஆம் நாட்களில் சி.என்.அண்ணாத்துரை தலைமையில் தமிழக அரசின்
உதவியுடன் சென்னையில் நடத்தப்பட்டது.
3. மூன்றாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1970 ஆம் ஆண்டு சனவரி
15-18 ஆம் நாட்களில் பாரிசு நகரல் பாரிசு பல்கலைக்கழகத்தில் பேரா. ஜீன்
பிலியோசா நடத்தினார்.

4. நான்காவது மாநாடு நான்கு ஆண்டுகள் கழித்து 1974 ஆம் ஆண்டு சனவரி 3


-9 ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில் திரு
வித்யானந்தன் நடத்தினார்.

5. ஐந்தாவது மாநாடு ஏழு ஆண்டுகள் கழித்து 1981 ஆம் ஆண்டு சனவரி 4-


10 ஆம் நாட்களில் மதுரையில் தமிழக அரசின் .உதவியுடன் நடத்தப்பட்டது.

6. ஆறாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 15-19
ஆம் நாட்களில் கோலாலம்பூரில் நடந்தது.

7. ஏழாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 1-8
ஆம் நாட்களில் ஆப்பிரிக்காவில் மொரீசியசில் நடந்தது.

8. எட்டாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டு சனவரி 1-5
ஆம் நாட்களில் தஞ்சாவூரில் நடந்தது.

9. ஒன்பதாவது மாநாடு இருபது ஆண்டுகள் கழித்து 2015 ஆம் ஆண்டுசனவரி


29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில்
நடைபெற்றது.

10. பத்தாவது மாநாடு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 முதல் 7 வரை


அமெரிக்காவில் சிக்காகோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.

You might also like