You are on page 1of 2

செந்தமிழே நறுந்தேனே ஜெகம் போற்றும் செம்மொழியே வாழி

முத்தமிழ் சொல்லெடுத்து நற்றமிழ் நெஞ்சங்களுக்குக் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி என் பணிவான
தமிழ் வணக்கம் உரித்தாகுக.

உலகிற்கே நாகரிகத்தையும் வாழ்க்கைப் பண்பாட்டையும் கற்றுத் தந்த எம் இனம்,


தமிழினம், சாதிக்கப் பிறந்தவர்களே. இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை என்பதே என் வாதமாகும்.
தமிழர்கள் உலக நிலப்பரப்பில் படர்ந்து பரவி வாழ்ந்து வருகின்றனர் . கல் தோன்றி மண் தோன்றா
காலத்திற்கு முன்பே தோன்றிய, மூத்த குடிப்பிறப்புக்குச் சொந்தக்காரர்கள். இத்தமிழர்கள்
இப்பூவுலகில் சாதிக்காதது எதுவுமில்லை என்பதற்குப் பல சரித்திரச் சான்றுகள் உண்டு.
தமிழர்களாகிய நாம் அறிவியல், கலை, வாணிகம், சமயம் என்று எல்லாத் துறைகளிலும்
உலகிற்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்நத ் ோம். தமிழர் மரபில் தோன்றிய
அறிஞர்கள், ஞானிகள், சமயக் குரவர்கள், பொருளாதார நிபுணர்கள், மாவீரர்கள் என்று
எல்லாத் துறை வல்லுநர்களையும் கண்ட ஒரே இனம் தமிழ் இனம். அது அதுமட்டுமா 2000
ஆண்டுகளானாலும் இரு வரிகளால் இன்னும் உலகப் பொதுமறையாக ஆட்சி செய்து வரும்
குறளே தமிழர்களின் சாதனைக்குக் கட்டியம் கூறிவருவதை யாராலும் மறுக்க முடியுமா?
உலகையே ஆண்ட இனம். இஃது எத்துணை பேருண்மை என உலகம் அறியும்.

ஆனால், இன்று நமது இனத்தின் நிலையோ முகில் மறைத்த நிலவாய்த் திகழ்கிறது.


நிச்சயம் இது நிரந்தரம் அல்ல. சமூக சீர்கேடுகளால் பொருளாதார மந்த நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ள நம் இனம் சீக்கிரமே மீண்டு வரும். மீண்டும் பல சாதனைகளைத் தமிழர்கள்
கைப்பற்றி உலக நிலையில் முன்னனி வகிப்பர் என்பதற்குப் பல சான்றுகளைக் கூறமுடியும்.
ஆரம்பப்பள்ளி நிலையிலேயே பல அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தந்து உலகிற்குத் தமது
மரபணுவின் மூலம் முத்திரை பதித்த பல மாணவர்களை இம்மலேசிய மண்
சந்தித்துள்ளது..இனியும் சந்திக்கும்.

உலக அரங்கில் கூகல் தலைமை இயக்குநர் சுந்தர் பிச்சை, இந்தியாவை வல்லரசாக்க


துணை நின்ற அணுவியல் விஞ்ஞானி அப்துல் கலாம், சதுரங்கத்தால் உலக அரங்கை நடுங்க
வைக்கும் விஸ்வநாதன் ஆனந்தன், ஆஸ்கார் புகழ் ஏ.ர்.ரஹ்மான், எனச் சாதனைத்
தமிழர்களின் பட்டியலை நீட்டித்துக் கொண்டே போகலாம்.

தமிழ் இளைஞர்களே, இன்று காணும் சற்று சறுக்கிய நிலையை மாற்றும் தலையாய கடமை
உங்களுக்கு உண்டு. 1000 ஆண்டுகளுக்கு முன் கொடி கட்டி வாழ்ந்த தமிழனின்
சாதனைகளைப் போல உங்களாலும் சாதிக்க முடியும்.
தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக
உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்
கிரை யெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று
நினைத்தாயோ? எனப் பாடிய பாட்டன் பாரதியாரின் கூற்றை ஒவ்வொரு இளைஞனும்
உள்வாங்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நெஞ்சில் விதைத்து அதற்கு
உழைப்பை உரமாக்குங்கள். நம் முன்னோர் கண்ட சாதனைகளை விட பன்மடங்கு
சாதனைகளை நாம் அடைவோம். சாதிக்க பிறந்தவர்கள் தமிழர்கள் என நம்புங்கள். வெற்றி
நமதே. வாழ்க வளமுடன்..!!!

You might also like