You are on page 1of 5

தமிழும் அறிவியலும்

தமிழும் அறிவியலும்

தமிழ் ஒரு ஆழ்கடல். அதன் படைப்புகளை படித்தறிய பிறவி ஒன்று


போதாது. அக்கடலின் ஒரு சிறுத் துளியை மட்டுமே படித்துவிட்டு, அதன்
சிறப்பில் வியந்து, வியந்ததில் சிலவற்றை மட்டுமே இங்கு
பகிர்ந்துள்ளேன்.

அமுதே தமிழே என்று தமிழைப் போற்றி, வாரி அனைத்து முத்தமிடும்


நமக்கு, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கடமையும் உண்டு!!

‘பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்


இகழ்ச்சிசொலப் பான்மை கேட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்!!’

எனத் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பொறுப்பை நம் தோள்களில்


அன்று ஏற்றிவிட்டுச் சென்றான் மகாக்கவி. தூக்கிச் சுமப்பதும் சுகமாகவே
இருக்கிறது.

தமிழில், தமிழ் இலக்கியங்களில், உள்ளவை ஏராளம். தமிழ் ஒரு


வாழ்வியல் மொழி என்றால் அது பொருந்தும். தமிழ் ஒரு அறிவியல்
சார்ந்த மொழி என்றால் அதுவும் பொருந்தும்!! வாழ்வியல் மொழி
என்பதற்கு ஆதாரங்கள் பல பல. அதற்கு எடுத்துக்காட்டுகள் இனித்
தேவையில்லை!! திருக்குறள் ஒன்று போதும். ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதமாகிவிடும்.

தமிழ் அறிவியல் சார்ந்த மொழியா? தமிழ் இலக்கியங்களில் அறிவியலின்


பதிவுகள் உண்டா? என்றால், ‘ஆமாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லலாம்.
இலக்கியங்களில் மட்டுமல்ல, தமிழ் மொழியே அறிவியல்
அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு மொழி. வியப்பாக உள்ளதல்லவா?

விஞ்ஞானம், விண்ணில் இருக்கும் ஞானம் என்றும் பொருள்


கொள்ளலாமோ?

எங்கும் ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளி அள்ளிக் குடிக்கலாம்;


நம்மிடம் இருக்கும் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை!!

அப்படியென்றால், கொட்டிக்கிடக்கும் ஞானத்தை பார்க்கும் அறிவுதான்


அறிவியலோ?

ஞானம் எங்கும் உள்ளதென்றால், புதிதாக எதையும் கண்டுபிடிப்பதல்ல


விஞ்ஞானம். கண்ணுக்குத் தெரியாமல் அறிவுக்குப் புலப்படாமல்
ஒளிந்திருக்கும் ஒன்றைக் கண்டுப்பிடித்து வெளிக்கொண்டுவருவதே
அறிவியல் எனலாம்.

உதாரணமாக, புவிஈர்ப்பு சக்தி என்பது புதைந்துக் கிடந்த ஒரு ஞானம்.


எங்கும் இருக்கும் புவிஈர்ப்பு சக்த்தியை நியூட்டன் கண்டுப்பிடித்து நமக்குச்
சொன்னான். புவிஈர்ப்பு சக்த்தியை அவன் உருவாக்கவில்லை!!

தமிழ் மொழியின் உருவாக்கமும், அமைப்பும் அறிவியல் தாக்கத்தோடு


இருப்பதும், தமிழ் இலக்கியங்களை அறிவியல் பலவகையில்
சிறபித்திருப்பதும், தமிழ் படைப்புகள் பல விஞ்ஞானத்தின் வெளிப்பாடாய்
அமைந்திருப்பதும், அன்றே நம் தமிழர்களிடம் செழித்திருந்த அறிவியல்
செல்வாக்கை நமக்கு காட்டுகிறது.

தமிழர்களுக்கு எப்படி இந்த விஞ்ஞானம் புலப்பட்டது? சிறப்பு


பள்ளிகளுக்குச் சென்று படித்தார்களா?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாகிய


நம் தமிழ் குடி அன்றுதொட்டே இயற்கையோடு மிக நெருங்கி வாழ்ந்த ஒரு
சமுகம். இயற்கையின் சிறப்பறிந்து, இயற்கையை போற்றி, அதைப்
பாதுகாத்து, இயற்கையை வணங்கி வாழ்ந்த ஒரு இனம் நம் தமிழினம்.
இந்த நெருங்கிய உறவால், எங்கும் கொட்டிகிடக்கும் ஞானத்தை
அவர்களால் எளிதில் பருகமுடிந்தது. நான் முன்பே குறிப்பிட்டதுபோல்,
நம் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை நம்மால் எளிதில்
ஞானத்தை வாங்கிக் கொள்ளமுடியும். கொட்டிகிடக்கும் விஞ்ஞானத்தை
இயற்கையும் அள்ளி அள்ளித் தந்தது. அதை ஆனந்தமாய்
கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள் எனலாம்!!

இன்று, இந்த விஞ்ஞானத்தின் வக்கத்தால்,


ீ (வளர்ச்சியால் அல்ல), உலகம்
சுருங்கி நம் கைக்குள் வந்துவிட்டது ஆனால் முரண்பாடாய் நாம்
இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம்!!

 தமிழ் இலக்கியங்களில் அறிவியல்

இயற்கையோடு நம் தமிழர்கள் எப்படி ஒன்றி வாழ்ந்தார்கள்? இதற்கு


ஆதாரங்கள் ஏராளம்!! தாம் வாழ்ந்த நிலங்களைக்கூட அவற்றின்
தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்
பிரித்தார்கள். இதில் அறிவியல் உள்ளது.

திசைகள் அறிந்து, வசும்


ீ காற்றின் திசையைக்கொண்டு காற்றின் தன்மை
வேறுபட்டதை அறிந்து, காற்றையும் பிரித்து பெயரிட்டார்கள்!!

ஒவ்வொரு திசையிலிருந்தும் வசும்


ீ காற்றுக்கு அதன் தன்மை மாறுபட்டு
இருந்தது.
தெற்கிலிருந்து வசினால்
ீ தென்றல்
வடக்கிலிருந்து வசினால்
ீ வாடை
மேற்கிலிருந்து வசினால்
ீ கோடை
கிழக்கிலிருந்து வசினால்
ீ கொண்டல் என அழைத்தார்கள்.
இதிலும் அறிவியல் உள்ளது.

அன்று என் பாட்டியும், அம்மாவும் ரசத்திலும், கூட்டிலும் மஞ்சள் பொடி


சேர்த்து சமைத்தார்கள். மிளகும், சீரகமும், வெந்தயமும், சோம்பும் என்
வட்டு
ீ சமையலறையின் அயிந்தரைப்பெட்டியில் குடியுரிமைப் பெற்ற
நிரந்திர வாசிகளாகவே இருந்தன. நல்லெண்ணை, நெய், தேன், இஞ்சி
என்று அனைத்தும் சமையல் அறையை சுதந்திரமாக வலம் வந்தன.
உணவே மருந்தாக வாழ்ந்தார்கள் நம் தமிழ் முன்னோர்கள். இதில்
அறிவியல் உள்ளது.

அப்பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை மேல்நாட்டு ஆய்வுகள்


இன்று நமக்கு எடுத்துச் சொல்லும்போது சற்று வெட்கமாகத்தான் உள்ளது.

உணவில் மட்டுமல்ல, கட்டிடக்கலை, வான சாஸ்த்திரம், இயற்பியல்,


வேதியியல், கணிதவியல் என்று பல அறிவியல் துறைகளில் தமிழர்கள்
முன்னோடிகலாகவே இருந்தார்கள்.

கடும் புயல்களையும், பல நில நடுக்கங்களையும் தாங்கி இன்றும்


கம்பீரமாய் ஓங்கி நிற்கும் நம் கோயில் கோபுரங்களே நம்
கட்டிடக்கலைக்கு சாட்சி!!

கிருஷ்ணாபுரம் கோயிலில், மன்மதசிலையில், மன்மதன்


கையிலிருக்கும் கரும்பின் மேல் பகுதியின் துவாரத்தில் ஒரு ஊசியை
போட்டால், அந்த ஊசி கரும்பின் கீ ழ் பாகம் வழியே வந்து விழுமாம்.
துளைப்பான் அதாவது driller இல்லாத அக்காலத்தில், கல்லில்
செதுக்கப்பட்ட அந்தக் குறுகிய கரும்பில் எப்படி துவாரம் துளைத்திருக்க
முடியும்? எறும்புகள் ஊறி கல் தேயுமா? தேயும்!!

திருக்குறளில் அறிவியலுக்கு ஒரு சான்று

திருக்குறளின் அறத்துப்பாலில், வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வரும்


ஒரு குறள்

‘நெடுங்கடலும் தன்நீ ர்மை குன்றும் தடிந்தெழிலி


தான்நல்கா தாகி விடின்.’

விளக்கம்: ஆவியான கடல்நீர் மேகமாகி, அந்தக்கடலில் மழையாகப்


பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித
சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்த சமுதாயத்திற்கு
பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்!!

இதுவே இக்குறளின் பொருள்.


இதுதானே இன்று நாம் படிக்கும் evaporation, condensation, precipitation என்னும்
water cycle.

ஆவியான கடல்நீர் – evaporation


மேகமாகி – condensation
மழையாகி – precipitation

விஞ்ஞானத்தை வைத்து அறத்தை விளக்குவது ஆச்சரியப்பட


வைக்கிறதல்லவா!!

இந்த அறிவியலை வாழ்வியலோடு இணைத்துச் சொல்ல தமிழால்


மட்டும்தானே முடியும். இது தமிழின் அழகு!! அதன் ஆழம்!! அதன் சிறப்பு!!

அடுத்து கணிதத்தில் ஒரு பாடல்

கிரேக்க நாட்டு கணித மேதை பிதகோரஸ் (Pythagoras)என்பவர் செங்கோண


முக்கோணத்தின் (right angled triangle) கர்ணத்தை , அதாவது hypotenuse
கண்டுபிடிக்க தந்த வழிமுறை இது

It states that the square of the hypotenuse (the side opposite the right angle) is equal to
the sum of the squares of the other two sides.

where c represents the length of the hypotenuse and a and b the lengths of the
triangle’s other two sides.
இந்த தன்மை, கட்டிடக்கலை முதற்கொண்டு பலத் துறைகளில் இன்றும்
பயன்படுத்தப்படுகிறது. அவர் பெயராலேயே இந்தத் தேற்றம் Pythagoras
theorem என அழைக்கப்படுகிறது. இவை நாம் அறிந்ததே.

இதே கர்ணத்தை கணக்கிடும் முறை நம் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றில்


உள்ளது.

‘ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி


கூற்றிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால்
வருவது கர்ணம் தானே

You might also like