You are on page 1of 20

விண்வெளி பயணம் கட்டுரை

January 15, 2024 Thamizhsudar கல்வி

இன்றைய தொழில்நுட்ப
யுகத்தில் வாழக்கூடிய
மனிதர்களது வளர்ச்சியானது
பல்வேறு புதிய சாதனைகளை
இந்த உலகிக்கு வழங்கி உள்ளது.

இவ்வாறு அமைந்த
சாதனைகளில் ஒன்றாக இன்று
விண்வெளி தொடர்பான
ஆய்வுகளும், பயணங்களும்
உலகினிடையே
அதிகமாகியுள்ளன. மனிதனுடைய
வளர்ச்சியின் உச்சகட்டமாக
இன்றைய காலங்களில்
மேற்கொள்ளக்கூடிய விண்வெளி
பயணங்கள் அமைந்துள்ளன.

விண்வெளி பயணம் கட்டுரை

முன்னுரை

மனிதனுடைய திறமைக்கும்
அவனுடைய வளர்ச்சிக்கும்
எல்லையில்லை என்பதை
தற்கால விண்வெளி பயணங்கள்
அதிகமாக எமக்கு உணர்த்தி
நிற்கின்றன.

உலகில் காணப்படுகின்ற
ஒவ்வொரு நாடுகளும்
தங்களுடைய உச்சகட்ட
வளர்ச்சியினை பிரபஞ்சத்தில்
காணப்படக்கூடிய ஏனைய
நாடுகளுக்கு உணர்த்துவதற்காக
விண்வெளி பயணங்களை
ஆயுதமாக பயன்படுத்துகின்றன.

அதாவது எல்லை இல்லாத


விண்வெளிக்கு பயணங்கள்
செய்து, புதிய புதிய
கண்டுபிடிப்புகளை உலகுக்கு
கொண்டு வருவதற்கே
ஒவ்வொரு நாடும்
முனைகின்றன.

விண்வெளி என்றால் என்ன?


விண் வெளி என்பது
பிரபஞ்சத்தின் பொருட்கள்
எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய
கிட்ட தட்ட ஒரு வெற்றிடமாகும்.
இங்கு நகர்ந்து செல்லும்
பொருட்களில் நமது பூமியும்
அடங்கும்.

இந்த பரந்த விண் வெளியில்


நடசத்திரங்களும், கிரகங்களும்,
பூமியும் மிகமிக சிறிய
புள்ளிகளாகவே
காணப்படுகின்றன. அதாவது இந்த
விண்வெளி என்பது பரந்த
மற்றும் விசாலமான ஒரு
வெளியாகவே கருதப்படுகின்றது.
விண்வெளி ஆய்வு

விண்வெளி பயணம் என்பது


வானவியல் மற்றும் விண்வெளி
தொழில்நுட்பங்களை
பயன்படுத்தி, புற விண்வெளி
பற்றிய தகவல்களை
அறிவதற்காக
மேற்கொள்ளக்கூடிய ஓர்
பயணமாகும்.

இந்த வகையில் விண்வெளி


ஆய்வுகளுக்காக பயன்படுத்தக்
கூடிய விண்கலன்கள் மனித
விண்கலங்கள் அல்லது இயந்திர
விண்கலங்கள் ஆகிய இரண்டில்
ஒன்றாக காணப்படுகின்றன.
விண்வெளிக்கான ஆய்வுகளுக்கு
ரொக்கெட் பயணங்களை
மேற்கொள்ளுதல் என்பது
இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலிருந்தே
தொடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி பயணங்கள்

1975 ஆம் ஆண்டு


இந்தியாவினுடைய
செயற்கைக்கோளானது
ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட
போதும் 1980 களில் இந்தியாவின்
இஸ்ரோ தன்னுடைய முதல்
உருவாக்கமான ரோகினி
செயற்கைக்கோளை
வெற்றிகரமாக விண்வெளிக்கு
அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து
தங்களுடைய சொந்த
செயற்கைக்கோள்களை
விண்வெளிக்கு அனுப்பக்கூடிய
திறன் கொண்ட நாடுகளில்
இந்தியாவும் இடம் பிடித்துக்
கொண்டது.

இதன் அடிப்படையில் கல்பனா


சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்,
ராகேஷ் சர்மா போன்ற
உலகறியும் விண்வெளி வீரர்கள்
இந்தியாவின் விண்வெளி சார்
ஆய்வுகளுக்கு பங்காற்றி
உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி


நிலையங்கள்

இந்தியா நாடானது விண்வெளித்


துறையில் பல்வேறு
சாதனைகளை படைக்கும்
நோக்கில் நாட்டின் பல்வேறு
பாகங்களிலும் பல்வேறு
விண்வெளி ஆராய்ச்சி
நிலையங்களை உருவாக்கி
செயற்படுத்திக்
கொண்டிருப்பதனை காணலாம்.

இந்த வகையில் பல்வேறு


விண்வெளி நிலையங்கள்
காணப்பட்டாலும் அவற்றில்
சிறப்பான விண்வெளி ஆய்வு
மையங்களாக இஸ்ரோ
செயற்கைக்கோள் மையம்
மற்றும் மின் ஒளியிலான
அமைப்புகளுக்கான ஆய்வகம்
என்பன பெங்களூரிலும், சதீஷ்
தமான் விண்வெளி மையம்
ஸ்ரீஹரி கோட்டாவிலும், விக்ரம்
சாரா பாய் விண்வெளி மையம்
திருவனந்தபுரத்திலும், தும்பா
ராக்கெட் தளம் கேரளாவிலும்
அமைந்திருப்பதை காணலாம்.

முடிவுரை
விண்வெளி பயணங்கள் என்பது
மிகவும் சாதாரணமான ஒரு
விடயம் அல்ல பல்வேறு மனித
உயிர்களை பணியமாக வைத்தே
இந்த பயணங்கள்
மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வகையில் விண்வெளி


ஆய்வகுக்குச் சென்ற பல
விண்வெளி வீரர்கள் உயிர்
இழந்து உள்ளமையும் நாம்
அறிந்த உண்மையாகும்.

ஆனாலும் இந்த உலகுக்கு புதிய


கண்டுபிடிப்புகளையும்,
விண்வெளி சார் புதிய
தகவல்களையும்
வழங்குவதற்காக இந்த
விண்வெளி பயணங்கள்
மேற்கொள்ளப்படுகின்றமையைக்
காண முடியும்.

விண்வெளியில் இந்திய
சாதனைகள் கட்டுரை
November 23, 2023 Thamizhsudar கல்வி
விண்வெளித் துறையில் சாதனை
படைத்ததொரு நாடாக இந்தியா
திகழ்வது சிறப்பிற்குரியதாகும்.
அந்த வகையில் இன்று பல்வேறு
திறமைகளை தன்னகத்தே
கொண்டு வளர்ந்து வரும் ஓர்
நாடாக இந்தியாவே
காணப்படுகின்றமை
சிறப்பிற்குரியதாகும்.

விண்வெளியில் இந்திய
சாதனைகள் கட்டுரை
இந்தியாவின் விண்வெளி
சாதனைகளானவை 1950
காலப்பகுதிகளில் இருந்தே
ஆரம்பிக்கப்பட்டு வந்தன. அந்த
வகையில் இந்தியாவின்
விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனமான இஸ்ரோ இன்று
பல்வேறுபட்ட சாதனைகளை
கண்டு வருவதானது இந்திய
மண்ணின் பெருமையினையே
எடுத்துக்காட்டுகின்றது.

முதல் செயற்கை கோள்

விண்வெளியில் இந்தியாவின்
முதற் கட்ட சாதனையானது
1975 ம் ஆண்டு ஏப்ரல் 19 ம் திகதி
இந்தியாவின் வானியல்
அறிஞரான ஆர்யப்பட்டாவின்
பெயரில் ஏவப்பட்டது. இதுவே
இந்தியாவால் ஏவப்பட்ட முதல்
செயற்கை கோளாகும். இது 250
பொறியிலாளர்களை கொண்டு 2
வருட உழைப்பின் பயனாக
வடிவமைக்கப்பட்டதொரு
செயற்கை கோளாக திகழ்ந்தமை
இதன் சிறப்பாக
காணப்படுகின்றது.

நிலவில் தடம் பதித்த


சந்திரயான் – 1
இந்தியாவில் சூழல் மற்றும்
வானிலை, ஒளிபரப்பு, தகவல்
தொடர்பு என்பவற்றை
கண்காணிப்பதற்கு செயற்கை
கோள்கள் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன. அந்த வகையில்
நிலவுக்கு அனுப்பிய செயற்கை
கோளே சந்திரயான் – 1 ஆகும்.

இது 2008 ம் ஆண்டு ஒக்டோபர்


22 ம் திகதி விண்ணில் ஏவப்பட்டு
நிலவின் சுற்றுப் பாதையில்
நிலை நிறுத்தப்பட்டதொரு
கோளாகும். இது 2008 ல் நிலவில்
இறங்கி தனது இந்திய கொடியை
தடம்பதித்து இந்தியாவிற்கு
பெருமை சேர்த்த தொரு
கோளாகும்.

இக்கோளானது சந்திரனில் நீர்


மூலக் கூறுகள்
காணப்படுவதனை
கண்டுபிடித்ததோடு
இந்தியர்களின் திறமையினையும்
எடுத்தியம்புகின்றது.

ஏவுகணை வாகனங்களும்
விண்வெளிப் பயணமும்

இந்தியாவானது விண்வெளித்
துறையில் பல்வேறுபட்ட
வளர்ச்சியினை கண்டு
வருவதோடு அதனுள் ஏவுகணை
வாகனங்களின் வளர்ச்சியும்
ஒன்றாகும். அந்த வகையில்
ஜியோசின்க்ரோனல், சாட்டலைட்
லாஞ்ச் வெஹிக்கின் போன்ற
ஏவுகணை வாகனங்களானது
குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் GSLV மார்க் 3 என்ற


ஏவுகணையானது அதிக
எடையுள்ள சுமைகளை சுமந்து
செல்லக் கூடிய திறமை
கொண்டதொரு ஏவுகணையாகும்.

விண்வெளிப் பயணத்தில்
மனிதர்கள்
இந்திய விண்வெளித் துறையில்
சாதனை படைத்த விண்வெளி
வீரர்களாக ராகேஸ் சர்மா,
கல்பனா சவ்லா, சுனிதா
வில்லியம் போன்றோர்கள்
காணப்படுகின்றனர்.

அந்தவகையில் விண்வெளியில்
முதல் கால் பதித்த இந்தியராக
திகழ்பவர் ராகேஸ் சர்மா ஆவார்.
விண்வெளிக்கு மனிதர்களை
அனுப்பும் ககன்யான்
திட்டமானது இன்று
வரவேற்கத்தக்கதொரு சிறந்த
திட்டமாகவே திகழ்கின்றது.
அதேபோன்று எதிர்வரும்
காலங்களிலும் பல்வேறு
சாதனைகளை
கொண்டமைந்ததொரு நாடாக
இந்தியா திகழ்வதில் எவ்வித
ஐயமுமில்லை.

முடிவுரை

இந்திய நாட்டினுடைய
வளர்ச்சியானது கல்வி, சுகாதாரம்,
தொழில் என வளர்ச்சியடைந்து
காணப்பட்டது போன்று
விண்வெளியிலும் சாதனைகளை
படைத்த ஓர் நாடாக இந்தியா
திகழ்வது சிறப்பிற்குரியதாகும்.
இந்தியாவின் விண்வெளி
சாதனையானது இந்திய நாட்டின்
தனித்துவத்தை எடுத்தியம்பக்
கூடியதாகும்.

You might also like