You are on page 1of 3

கோவை :உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கண்காட்சி அரங்கில்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "செம்மொழித் தமிழில்


விண்வெளி' என்ற அரங்கு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கண்காட்சி, பார்வையாளர்களை


வெகுவாக கவர்ந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் முதல், பழங்கால
பொருட்களின் அணிவகுப்பு, அரிய தகவல்கள், படங்கள்,
காணக்கிடைக்காத பழங்கால பொருட்கள் என பிரமிக்க
வைக்கிறது.சிந்துவெளி நாகரிகம் துவங்கி, தமிழ் இனத்தின் வளர்ச்சியைப்
படிப்படியாக வரிசைப்படுத்தி பல அரங்குகள் அமைந்துள்ள நிலையில்,
கடைசி அரங்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்
"செம்மொழித் தமிழில் விண்வெளி' என்ற தலைப்பில் கண்காட்சி அரங்கு
உள்ளது.அரங்கில், நமது நாட்டில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட
"விகாஷ் இன்ஜின்' முதல் "கிரையோஜெனிக்' எஸ்.எல்.வி., -
ஏ.எஸ்.எல்.வி.,- பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., - எல்.வி.எம்., 3
ராக்கெட்களின் மாதிரி வடிவமைப்பும், செயற்கைக்கோள்களான
ஆரியபட்டா முதல் சந்திரயான் -1 வரை அனைத்தின் மாதிரி வடிவமும்
அமைக்கப்பட்டுள்ளது. நிலவு பயணத்தின் வடியோ
ீ காட்சியின்
தமிழாக்கமும் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சந்திரனை தொட்டதை சாதனையாக கூறி வரும் இந்த தலைமுறையிடம்


சங்க காலத்திலேயே தமிழன் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து
விளங்கினர் என்பதை ஆதாரத்துடன், திருநெல்வேலி மகேந்திரபுரியில்
உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு
மைய விஞ்ஞானி கண்ணு தலைமையிலான குழுவினர்
விளக்குகின்றனர்."உலகம் தட்டை வடிவமானது என நம்பப்பட்ட
காலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கோள்கள் வடிவத்தால்
உருண்டையானது என்பதை புறநானூற்றுப்பாடல் "இனிது உருண்ட சுடர்
நேமி முழுதும் ஆண்டார் வழிக்காவல' என தற்கால அறிவியல்
புறப்பாடலை வழிமொழிந்துள்ளது.சூரிய நாயகக் கோட்பாட்டையும் தமிழ்
இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளது, " பூமியை மையமாக வைத்து சூரியனும்
மற்ற கோள்களும் சுற்றி வருவதாக பிற நாட்டினர் நம்பிக்கொண்டிருந்த
முற்காலத்தில், சூரியனை மையமாக வைத்தே பூமியும், பிற கோள்களும்
சுற்றி வருகின்றன என்ற கருத்தை "வானிற விசும்பிற் கோள்மீ ன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயிறு' என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளது.

சூரிய மண்டலத்தை நாம் நெருங்க முடியாது; வெப்பம் சுட்டுவிடும்


என்பதை பரிபாடலிலும், பிரபஞ்ச இயக்கத்தின் தத்துவத்தை கூறும்
வகையில், ஒவ்வொரு அண்டமும் சுழன்று கொண்டிருப்பதுடன், அதில்
உள்ள பொருட்களும் தங்களது உருமாறி, வட்டங்களாக சுழன்று
கொண்டிருக்கின்றன என்பதை, "அண்டப்பகுதியின் உண்டப் பிறக்கம்...
துன்னணுப்புரைய' என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.அணு மற்றும் தொலைபேசி பயன்பாடு இல்லாத
காலத்தில் உருவான சங்ககால இலக்கியங்கள் விவரிக்கின்றன; வான்
பயணம் இல்லாத காலத்திலேயே, சிலப்பதிகாரத்தில் கண்ணகி வான
ஊர்தியில் அழைத்துச் சென்றதாக, "வானவூர்தி ஏறினாள் மாதே' என்ற
பாடலும்; இன்றைய விண் சுற்று நிலையம் குறித்தும்; ஆளற்ற விமானம்
குறித்து, உறையூர் முத்துகண்ணன் சாத்தனார் பாடும் பாடலில்" வலவன்
ஏவா வானவூர்தி' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, கலித்தொகை,


குறுந்தொகை, பட்டினப்பாலை முதலான நூல்களில்
விவரித்துள்ளது.பாரதியின் "வானையளப்போம் கடல் மீ னையளப்போம்,
சந்திர மண்டலத்தை கண்டு தெளிவோம்'; காசி நகர் புலவர் பேசும்
உரைதான் காஞ்சியில் கேட்பதற்கு கருவி செய்வோம்' என்ற பாடல் படி
தற்போது அனைத்தையும் இந்தியர்கள் சாதித்து விட்டதையும், "கனவு
மெய்ப்பட வேண்டும்' என்பதை போல இலக்கியங்களின் கனவை இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நனவாக்கியுள்ளது' என,
பார்வையாளர்களுக்கு விளக்குகின்றனர். சங்கத்தமிழ் முதல் தற்போது
வரை நமது சாதனைகளை விளக்குவதோடு, பிரமாண்டமான ராக்கெட்
மற்றும் செயற்கைக்கோள்களின் மாதிரி வடிவங்கள் பார்வையாளர்களை
வெகுவாக கவர்ந்து வருகின்றன.

You might also like