You are on page 1of 11

அனைவருக்கும் விருவுரையாளர்கள் ஐயா மணியரசங்கும் ஐயை டத்தின்

அல்லிமாலைக்கும் ஐயை திலாகவதிக்கும் எனது முத்தான முதற்கண்


வணக்கத்தை சொத்தாக சமர்ப்பிக்கின்றேன்.இன்று நான் தினகரன் சின்னையா
என் நண்பர்களாகிய திவ்யஸ்ரீ ரகு மற்றும் இளவரசி தமிழ்தாசன் அவர்கள்
இணைந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் BTMB1094 BTMB1114 BTMB1162
யில் உள்ள தலைப்பை ஒட்டி பேச உள்ளோம்.

முதல் நழுவம்
மதுரை நகரில் இருந்து தென்கிழக்கு திசையில் 13 கிலோமீ ட்டர் தூரத்தில்
உள்ள இந்த கீ ழடி பண்டைய காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடமாக
கருதப்படுகிறது.முதற்கட்ட ஆய்வில் கிடைத்ததை விட இரண்டாம் கட்ட
ஆய்வில் பத்துக்கும் மேற்பட்ட சங்க காலக் கட்டிடங்கள்
கண்டுபிடிக்கப்பட்டன.இங்கே கிடைத்த கட்டடங்கள் தமிழர்களின் கட்டக்கலை
நயத்தை நிரூபிக்கும் வகையில் அவர்கள் உபயோகித்த சுட்ட செங்களால்
ஆனா கட்டடங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு

மாற்றி அமைத்துள்ளது. கட்டடக்கலை எனக்கூறப்படும் கட்டடங்களும்

அதனின் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தலும் செயல்முறைத்

திட்டமிலும் உள்ளடக்கிய ஒரு கலையை பயன்படுத்தியே பண்டைய

தமிழர்கள் உலகத்தை திரும்பி பார்க்கும் வகையினில் இங்கிருக்கும்

கட்டடங்களை கட்டியுள்ளனர். ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது

திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது.

இரண்டாவது நழுவம்
தமிழர்களும் சிந்து நாகரிக பகுதியை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற

கூற்றை முன்வைக்கின்றனர் பலர் . இந்தியாவின் வடமேற்கு பகுதியான

சிந்து நதிக்கரையில் வாழ்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது அதற்கு

சான்றாக, தமிழர்களின் திராவிடர்களின் எழுத்துக்கள் இங்கே உள்ள

கல்வெட்டுகளில் தென்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் கட்டிய

பிரம்மாண்டமான கட்டிடங்களும் சிந்துவெளியில் கண்டறியப்பட்டுள்ளது.


ஆரம்பத்தில் ஆற்றங்கரையின் ஓரங்கள் குகைகள் மரத்தடிகள் என்று

வாழ்ந்த மக்கள் இந்த கட்டட கலையின் வளர்ச்சியால், குடிசை மற்றும்

செங்கல் வடுகளில்
ீ வாழ ஆரம்பித்தனர் . நடைப்பாதையில் சுவர்கள்

சந்தைகான இடங்கள் வடுகளுக்கான


ீ தனி இடங்கள் வடிகால் அமைப்புகள்

மேலும், சதுரவடிவிலான கட்டடங்களை இவர்கள் தமிழர் கலைகளான

கட்டக்கலையை கொண்டு மிகச் சிறப்பாக கட்டடங்களை கட்டியுள்ளனர்.

மொஹெஞ்சதாரோ ஹரப்பா பண்டைக்கால நகர பண்பாட்டின் முக்கிய

நகரமாக கருதப்படுகிறது.

மூன்றாம் நழுவம்

தமிழர்களின் பொற்காலம் குறித்த சான்றுகளை கோவில்கள் செப்புப்

பட்டயங்கள் கல்வெட்டுகள் நாணயங்கள் நினைவுச் சின்னங்கள் என

தொல்பொருள் சான்றுகள் கீ ழ் பிரிக்கலாம். மக்கள் விட்டுச் சென்ற

தடயங்களாக கருதப்படும் இது தமிழகத்தின் வரலாற்றுச் சான்றாக

அமைகிறது. இரு வகையாக பகுக்கப்படும் இந்த தொல்பொருள் சான்றுகள்

தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றது . கட்டட

கலைக்கு சான்றாக அமையும் வகையில் தொல்பொருள் சான்றில் உள்ள

தஞ்சை பெரிய கோவில் அமைகின்றது.

புதிய கட்டடப் பொருட்களினாலும் தொழில்நுட்பத்தினாலும் வளர்ச்சிக் கண்ட

தமிழர் கட்டடக்கலை இந்த கோவிலை கட்ட பெரும் உதவியாய் அமைந்தது.

தஞ்சாவூரிலுள்ள உள்ள சோழநாடு காவிரி ஆற்றின் தென்கரையில்

அமைந்துள்ள திருவாச பாடல் பெற்ற சிவன் கோயிலாக கருதப்படும் இது

அற்புதமான கட்டடக்கலையின் அம்சத்தை கொண்ட இந்தியக் கோயில்களில்

ஒன்றாக அமைகின்றது இது கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசர்

முதலாம் இராசராச சோழனால் கட்டுவிட்டப்பட்டது.

நான்காம் நழுவம்
சங்கம், சங்கம் மருவிய இலக்கியம்,பத்தி இலக்கியம் ,சிற்றிலக்கியம் என்று

பல வகைகளாக இலக்கியங்களை பிரிக்கலாம். இந்த வகையான

இலக்கியங்களில் தென்படுகின்ற குறிப்புகள்களை இலக்கியச் சான்றாக

கருதப்படுகிறது. சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை

குண்டலகேசி வளையாபதி சீவக சிந்தாமணியில் ஒரு பெருங்காப்பியம்

ஆகும் . சிலப்பதிகாரத்தின் ஒரு கதாபதிரமான சேரன் செங்குட்டுவன்

கட்டிய மங்கலதேவி கண்ணகி கோயில் இந்த இலக்கியத்தின்

குறிப்பிடப்பட்டுள்ளது.

பெளத்த சமயம் தோன்றுவதற்கு முன் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த

கட்டடக்கலை பௌத சமயம் தலைதூக்கிய பொழுது வளர்ச்சி காணாமல்,

பௌத்த சமயத்தின் வழ்ச்சியின்


ீ பின் வேகமான வளர்ச்சியை காண

ஆரம்பித்தது. இந்த கண்ணகி கோவிலை இரண்டாம் நூற்றாண்டில்

கடினார்கள். வடக்கே படையெடுத்து கங்கை நதியைக் கடந்து பெருமை

கொண்ட அரசன் சேரன் செங்குட்டுவன் கட்டடக்கலையை கொண்டு இந்த

கோவிலை ஆடாம்பரமாக கட்டியுள்ளான்.இந்த கோவில் இன்றும்

நிலைதிருந்து ஆய்வாளர்கள் வியக்கும் வரலாற்று சான்றாக அமைகின்றது.

ஐந்தாம் நழுவம்

தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால்

இயற்றப்பட்டது. கோவலன் மற்றும் மாதவி மகளாக திகழும் மணிமேகலை

தன் தந்தை கோவலனின் மரணத்திற்குப்பின் ஒரு புத்தத் துறவியாக

வளர்க்கிறாள். அமுத சுரபி எனும் உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து

அதிலிருந்து அளவற்ற உணவை ஏழை எளியோருக்கு வழங்கி பசியை

தீர்க்கிறாள். இந்த மணிமேகலை காப்பியத்தில் இடம் பெறுள்ள பாடகளில்

சங்க காலத்தில் உள்ள சிற்பங்களை பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன.

மண்ணிலும் கல்லினும் மரத்தினும் சுமரினும்


கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க (மணி-21; 115-116)

இந்த பாடல் வரியின் மூலம் சங்க காலத்தில் தமிழர்களின் சிற்பக்கலையை

பற்றி நாம் அறியலாம். சங்க காலத்தில் கல், உலோகம், மண், மரம், தந்தம்,

ஆகியவற்றை சிற்பங்களை வடித்து தங்களின் சிற்பக்கலையின் திறமையை

காட்டி உள்ளனர் என்பதை இந்த வரி உணர்த்துகிக்கிறது .

ஆறாம் நழுவம்

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள்

பல வெளிப்படுத்தி வருகின்றன. சிந்துவெளி நாகரிகம் என்றும் அது

ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி

நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு

முரணாக உள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழர் திராவிடரின் நாகரிக்கமே

என்று இவர் கூறியுள்ளார். இதற்கு,காரணம் தமிழர்களை போலவே

சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் சிற்பம் அமைத்து வணங்கினர்.

சிந்துவெளிப் பண்பாட்டு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஓவியக் கலை மரபில்

உள்ள சிற்பக்கலையில் ஆழ்ந்த அறிவும் திறமையும் கொண்டு விளங்கி

வைக்க அங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் சான்றாக

கருதப்படுகிறது மதகுரு எனக் கூறப்படும் இந்த உருவம் தடித்த உதட்டை

மூக்கும் அடர்ந்த தாடியும் கொண்டது. மொகஞ்சதாரோவில்

கண்டெடுக்கப்பட்ட இந்த உருவம் தமிழரின் கலையான சிற்பக்கலைக்கு

சான்றாக அமைகின்றது.மேலும், உலோகத்திலான பெண் சிலை தொல்லியல்

ஆராய்ச்சி மூலம் கிடைத்துவிட்டது இதன் தோற்றம் கொண்ட அந்த

சிலையை சின்னதாக இருக்கும். இந்த சிலையின் பெயர் “நடனம் மங்கை”

ஆகும்.

ஏழாம் நழுவம்

மாங்குளம் மீ னாட்சிபுரம் கழுகுமலை முதலிய ஊர்களில் கிடைத்த நடுகற்கள்


கல்வெட்டுகள் போன்றவைகள் தொல்பொருள் சான்றுகள் கீ ழ் அடங்கும்.

தமிழர்களின் சிற்பத் திறனின் சான்றாக அமையும் இது சங்கக் காலத்தில்

ஒரு மரபாக இருந்து செதுக்கப்பட்டுள்ளது.

நடுகல் என்பது இறந்தவர்களின் எடுக்கப்படும் ஒரு நினைவு

கல்லாகும்.இதை வரீ கற்கள் என்றும் அழைப்பார்கள். இந்த நடுகல் இடும்

வழக்கம் பொற்காலத்தில் இருந்தே இருந்திரிக்கின்றது. நடுகல் வடிக்க

பயன்படுத்தும் சிற்ப கலையானது பெருமாளும் தெய்வ சிலையை வடிக்கவே

பயன்படுத்தினார் ஆனால் காலப்போக்கில் போர்களில் வரமரணமடைந்த


அரசர்களுக்கும் மக்களுக்கும் படைத் தளபதிக்கும் இந்த சிற்பகலை

நடுக்கற்கலை வடிக்க பயன்படுத்தப்படுத்தினார்கள் .

கழுகுமலை பெயர் காரணம்.

எட்டாம் நழுவம்

5 வகை தொல்பொருள் சான்றுகளில் நாணயங்கள் அடங்கும். அக்காலத்தில்

வணிகம் முதன் முதலாக பண்டமாற்று (barter) முறை செலவாணியை

(currency) பயன்படுத்தினர். பின்னர், உலோகத்தையும் வெள்ளியையும்

சிற்பக்கலையையும் கொண்டு நாணயங்களை உருவாக்கி வணிகம் செய்தனர்.

இந்த நாணயங்கள் வெவ்வேறு காலங்களில் நிலவிய பேரரசுகளின்

பொருளாதார நிலையையும், ஆதிக்கத்தையும் எடுத்து இயம்புவதுடன்

சரியான கருத்துக்களை வழங்குகின்ற காரணத்தால் அவற்றை தொல்பொருள்

சான்றுகள் என்றும் ஒப்பிட்டும் கூறுவர். தமிழர்கள் பண்டைய காலத்தில்

கற்களில் வரைந்து பின் அதில் இருக்கும் வடிவத்தை சிற்பக்கலையை

கொண்டு உளியால் செதுக்கி நாணயத்தை செதுக்கினார்கள்.

அனைவருக்கும் வணக்கம். தமிழ்மொழி ஆய்வில் துறை 2 லிருந்து நான்


திவ்யாஸ்ரீ இரகு.

ஒன்பதாம் நலுவம்

தொடர்ந்து, நாம் தமிழர்களின் பொற்காலமாகிய சிந்து சமவெளியைப் பற்றிக்

காண்போம். சிந்து சமவெளியில் தான் தமிழர்கள் இருந்தார்கள் என ஐராவதம்

மகாதேவன் தன்னுடைய நிலவியல் ஆராய்ச்சி மூலம் கூறுகிறார். சிந்து

சமவெளியில் கிடைத்த கல்வெட்டுகளில் கிடைத்த சிந்து நாகரிக

எழுத்துக்கள் திராவிட எழுத்துக்கள் வகையைச் சார்ந்தவை என

குறிப்பிட்டுள்ளார். ஹரப்பாவில் உருத்திரன் அல்லது பசுபதி என்ற

முத்திரையில் எழுத்துகள் பொரிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய

கலையான சித்திரக்கலை என்று பார்த்தோமானால்,சித்திரக்கலை

ஓவியக்கலை என்றும் அழைக்கப்படும். ஓவியமும் சிற்பமும் நெருங்கிய

தொடர்புடையது. சித்திரம் என்பது வரைதல் இலக்கியம். தூரிகையால்

வரையப்படுவது சித்திரம். எழுத்துகள் வரைவது சித்திரைக்கலையில்

ஒன்றாகும். உருத்திரன் முத்திரையில் எழுத்துகள் வரையப்பட்டுள்ளன.

பத்தாம் நலுவம்

மேலும், குமரிக்கண்டத்தில் இருந்து வந்தவர்கள் தமிழர்கள் என மடகாஸ்கர்


பகுதி பாலூட்டிகளைப் பற்றிய ஆய்விவை முன்வைத்து ஜெஃப்ரி செய்ண்ட்
ஹில்லேர் 1844 ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, மடகாஸ்கார்
பாலூட்டிகளிடையே ஒற்றுமை இருப்பதே முன்மை காரணம். "நாடக
மகளிர்க்கு நற்கனம் வகுத்த ஓவியச் செந்நூல்" என சிலப்பதிகாரத்தில்
கூறப்படுகின்றது. பல்லவ மன்னன் தக்கண சித்திரம் என்ற ஓவிய நூலுக்கு
அணிந்துரை எழுதியதாகவும் அறிய முடிகிறது. தமிழரின் சித்திரக்கலைகள்
சங்க காலத்திற்குப் பிறகு மன்னர்களைச் சார்ந்தே வளர்ந்து வந்தது. கி.பி 2
ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பனைமலை ஓவியம் அமராவதி சிற்பம்
போலவும் உள்ளதாக அறிஞர்கள் கூறுவர். அதே போல், சேரர், சோழன்,
பாண்டியர்கள், பல்லவர், மதுரைநாயக்கர் ஆகிய அரசர்களால் அவரவர்
காலத்தில் அவர்கள் கட்டிய கோவில்களில் ஓவியங்கள் வரையப்பட்டன.
பதினொன்றாம் நலுவம்

தமிழர்கள் கீ ழடியிலிருது வந்தவர்கள் என கூறப்படுகின்றது. சங்க


இலக்கியமான கலித்தொகையில் சொல்லப்படுவது போன்ற தாயக்கட்டைகள்
இங்கே கிடைத்துள்ளன. சங்க காலத்தையும் கீ ழடியையும் இதை வைத்து
இணைத்து பார்க்க முடியும் என ஆர். பாலகிருஷ்ணன் (ரோஜா முத்தையா
நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத்தின் இயக்குநர்). பண்டைக்கால
மக்கள் தங்களது பேச்சுமொழிக்கு எழுத்துருவாக்கம் தருவதற்கு முன்னர்
தங்களது எண்ணங்களைக் குறியீடுகளாக வடிவமைத்தனர். தமிழி எழுத்து
பொறித்த 70 பானை ஓடுகள் கிடைத்தன. அவற்றில் ஆதன், குவிரன் ஆதன்,
கோதிரம் அருத, சாந்த(ன்) போன்ற பெயர்கள் பொறிக்கபட்டன. எழுத்துகள்
வரைவதும் சித்திரக்கலை ஆகும். தூரிகை கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில்
குகைகளிலும், பாறைகளிலும், மட்பாண்டங்களிலும் சித்திரங்களைக் கிருக்கல்
முறையில் வரைந்தனர். மட்பாண்டங்களில் அக்கால மக்களின் எண்ணங்கள்
குறியீடுகளாகப் பதித்து வைத்தனர். தமிழ் பிராமி எழுத்துகள்
பொறிக்கப்பட்டுள்ளன. அத்தகைய மட்பாண்டங்களின் சில பகுதிகள் கீ ழடியில்
கிடைக்கப் பெற்றன.

பன்னிரெண்டாம் நலுவம்

கல்வெட்டுகள் தோன்றிய துவக்கத்தில் அவற்றில் அக்கால மக்களின்

எண்ணங்கள் பதித்து வைத்தனர். காலப்போக்கில், பேரரசர் அசோகரால் கி.மு

மூன்றாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கிர்னார் கல்வெட்டின் மூலம்

மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதை அறிகிறோம். தமிழர்களின்

மரபில் தானியங்கள், கீ ரைகள், காய்கள், கனிகள் என 64 வகை உணவுப்

பொருட்கள் இருக்கின்றன. அதில் நாம் உண்ணும் உணவு திண்ம உணவு,

நீர்ம உணவு என இரண்டு வகைப்படும். காய்கள், பழங்கள், மீ ன், இறைச்சி,

அரிசி, கோதுமை போன்றவை திண்ம உணவுகள். நீர்ம உணவுகளில் தேன்,

பால், இளநீர், பழச்சாறு அடங்கியுள்ளன.

பதிமூன்றாம் நலுவம்
புகார் நகரில் துறவிகள் வாழ்ந்த 'சக்கரவாளக் கோட்டம்' என்னும் மையம்

ஒன்றிருந்ததாக மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"துக்கம் துடைக்கு துகளறு மாதவர்

சக்கரவாளக் கோட்டம் உண்டு"

அம்மையத்தில் மாமுனிவர்களால் மக்களின் துயரங்களும், நோய்களும்

தீர்க்கப்பட்டன. - (மணிமேகலை: 17 : 75-76)

தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவம் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பவும்

அதனால் தோன்றும் பிணிகளுக்குத் தமிழக மண்ணில் விளையும் செடி

கொடிகளையும் வேர்களையும் மருந்தாகத் தருகிறது. இம்மருத்துவத்தில்

உணவும் மருந்தும் ஒன்றாக அமைந்திருக்கின்றன.

பதினான்காம் நலுவம்

வேதங்கள் மூலம் சிந்து சமவெளியில் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற

ஆயுதங்கள் தலைக்கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை

அறியப்படுகின்றது. அங்குத் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.

ஆனால், ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றன. அங்கிருந்த மக்கள்

விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி

இருக்கலாம் என்பது இம்முத்திரையின்வழி தெரிய வருகிறது. ஆயுதங்கள்

மோதிய விளையாட்டுக் கலைகளைப் பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக்

கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை

உள்ளடக்கி உள்ளன. அவற்றுள் வாளும் அடங்கும். சிந்துவெளி மக்கள்

தற்காப்புக்காக வாட்களைப் பயன்படுத்தி இருக்கலாம்.

பதினைந்தாம் நலுவம்

கீ ழடியில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்நாளில் ஆயுதங்கள் பயன்படுத்தி வந்தனர்

என்பது அகழ்வாராய்ச்சி மூலம் நிருபிக்கப்படுள்ளது. கீ ழடி அகழாய்வுகளில்


தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்களோடு அன்றைய

பயன்பாட்டில் இருந்த இரும்பிலான வாள், கொக்கி, ஆணிகள், கத்திகளின்

பாகங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காண இயலாத

இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. அக்கால தமிழர்கள் வாழ்நாளில்

எதிர்கொள்ளும் ஆபத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மெல்

அலகுக் கத்திகள், கிழிப்பான்கள், வாள், கத்திகள் பயன்படுத்தப்பட்டன.

அவ்வாறான ஆயுதங்கள் திறமையாகக் கையாளப்பட்டு பின்பு தற்காப்புக்

கலைகளில் கைத்தேர்ந்தனர். மிருகங்கள், கொள்ளையர்கள்

போன்றவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்து கொள்ள இது உதவியாக

அமைந்தது.

பதினாறாம் நலுவம்

சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியத்தின் பிற படைப்புகளில் உள்ள

குறிப்புகள் சிலம்பம் கிமு 4 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில்

நடைமுறையில் இருந்ததைக் காட்டுகிறது. வாய்வழி நாட்டுப்புறக் கதைகள்

சிலம்பத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் அறிவொளி முனிவர்

அகத்தியரிடம் காணலாம். "வெள்ளிமலை செல்லும் வழியில், அகத்த்யர்

தான் சந்தித்த ஒரு வயதான மனிதருடன் இந்து தத்துவத்தைப் பற்றி

விவாதித்தார். அவர் மாறுவேடத்தில் முருகன் கடவுள் என்று கூறினார்.

வயதானவர் குண்டலினி யோகா பற்றியும், உடல் நாடி சேனல்கள் மூலம்

பிராணனை எவ்வாறு கவனம் செலுத்துவது என்பதையும் கற்றுக்

கொடுத்தார்". அகத்தியர் இந்த தியான முறையைப் பின்பற்றினார். இறுதியில்

கடவுளின் போதனைகளின் அடிப்படையில் பனை ஓலைகளில் மூன்று

நூல்களைத் தொகுத்தார். இந்த நூல்களில் ஒன்று கம்பு சூத்ரா ஆகும். இது

வசனத்தில் மேம்பட்ட சண்டைக் கோட்பாடுகளை பதிவு செய்வதாகக்


கூறப்பட்டது. இந்த கவிதைகள் மற்றும் அவர்கள் விவரித்த கலை

ஆகியவை அகத்தியர் அகாரா பள்ளியின் மற்ற சித்தர்களுக்கு

அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டு. இறுதியில் சிலம்பம், சித்த மருத்துவம்

ஆகியவற்றின் அடிப்படையை உருவாக்கியது. சிலம்பம்' என்ற வார்த்தைச்

சிலம்பு என்ற பெயரின் அடியைக் கொண்டது. சிலம்பு என்பது ஒலித்தல்

அல்லது சத்தம் என்பதை குறிக்கும். இயற்கையின் கொடையாக

விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் இடைவிடாது

ஓசையெழுப்பிக்கொண்டிருக்கும் மலையை 'சிலம்பம்' என அழைப்பது

பழந்தமிழ் வழக்கம். இந்த மலைகளை ஆளும் முருகனை 'சிலம்பன்' என

அழைப்பதும் வழக்கம். சிலம்பனாகிய முருகனிடம் இருந்து இந்த கலை

அகத்தியருக்கு கிடைத்தமையாலும், சிலம்பம் சுற்றும் போது எழும்

வச்சொலிகள்
ீ இக்கலையின் ஆதராமக அமைவதாலும் இந்த பழந்தமிழ்

பாரம்பரியம் சிலம்பம் எனப்பட்டது. சிலம்பம் குறித்தான செவிவழி,

இலக்கியவழி செய்திகளுக்கு அமைவாக சிலம்பக்கலையை வடிவமைத்தவர்

தமிழ் குறுமுனியான அகத்தியர். தமிழ் போர் தெய்வமான முருகனிடம்

இருந்து தோன்றிய இந்த சிலம்பக் கலையை முறைப்பட வகுத்தளித்த

அகத்தியர், அதனை 64 ஆயகலைகளுள் ஒன்றாக வரிசைப்படுத்தியுள்ளார்.

சிலம்பம் பற்றிய முதலாவது வரலாற்று ஆதாரமாக தமிழகத்தில்

கண்டறியப்பட்டது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொன்மங்களே. இன்றைய

சிலம்பக்கலையில் பயன்படும் குறுவாள்கள், குத்துமுனைகள் போன்றவை

அவ்வாராய்ச்சியில் கிடைத்தமை மூலம் சிலம்பக்கலை ஏறத்தாழ 3500

ஆண்டுகளுக்கு முன்னரே பூரணமான ஒரு தற்காப்பு போர்கலையாக

வழக்கத்தில் இருந்தமை உறுதியாகிறது. கம்பு வசும்


ீ திறன், காலடி அசைவு,

வேகம் இது மூன்றுமே சிலம்பத்தின் அடிப்படை திறன்கள். இயற்கையின்

சவால்களை எதிர்கொள்ள உருவான இந்த கலையின் அடிப்படைகள் பலதும்

அதே இயற்கையின் சாரமாக உண்டானவையே.

You might also like