You are on page 1of 2

அறம் (நட்பு)

கடந்து அடு தானை மூவிரும் கூடி


உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண் டு; நீ ர் பாடினிர் செலினே
புறநானூறு - 110

சேரன் : அது என்ன அனைவரும் இந்த பாரியை இவ்வளவு புகழ் பேசிக்


கொண்டிருக்கின்றனர். அவன் என்ன அவ்வளவு பெரிய மாமனிதனா?
சோழன் : அவன் எவ்வளவு பெரியவனாகவும் இருந்தாலும் என்னுடன்
ஒப்பிடுகையில் அவன் ஒன்றும் தலைசிறந்தவான் அல்ல. அவன் என் கால் தூசுக்கு
வருவானா?
சேரன் : அவ்வளவு பெரிய பேரும் புகழும் செல்வமும் நிலமும் நிறைந்த
ஒருவனை வீழ்த்தி இந்த உலகத்திற்கு மூவேந்தர்களின் சிறப்பை எடுத்துக்காட்ட
வேண்டும். அவனின் உடமைகள் யாவும் நம்முடையதாக ஆக வேண்டும்.

(மூவேந்தர்கள் கபிலரைச் சந்தித்து பாரியை வள்ளலைப் பற்றித் தூற்றிப்


பேசுகின்றனர்.)
சேரன் : வணக்கம் கபிலர் அவர்களே. என்ன உங்கள் நண்பன் பாரி பற்றி
ஒரே புகழ்ச்சி மழை நாடுதோரும் பரவி வருகின்றது.
சோழன் : யார் அந்த பாரி? அவன் செய்வதோ முட்டாள் தனமான செயல்
ஆனால் ஊர் மக்களோ அவனைப் போற்றுகின்றனர். முல்லை கொடிக்குத் தேரைக்
கொடுத்தனாம் அது என்ன ஒரு புத்திசாலிதனம் அற்ற செயல்.
சேரன் : என்ன நடந்தாலும் பாரி நம்மளவிற்குப் பலமாய்தவன் அல்ல.
அவனின் நிலங்களையும் செல்வங்களைப் பறித்துவிட வேண்டும்.
மூவேந்தர்கள்: என்ன நேர்ந்தாலும் பாரியின் பறம்பு நாட்டை பெறாமல் நாங்கள் ஓய
மாட்டோம்.
கபிலர் : நீங்கள் உங்கள் பெரும்படையுடன் எதிர்த்து நின்று போரிட்டாலும்
பறம்பு நாட்டைப் பெற இயலாது.
சோழன் : என்ன தைரியம் உமக்கு? எங்களைவிட அவன் சக்திவாய்ந்தவன்
என்று கூறுகின்றீர்களா?
கபிலர் : அல்ல. தவறாகப் புரிந்து கொண்டீர்கள். பறம்பு நாட்டில் உள்ள
முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர். இனி என்னைப் போன்ற புலவர்களும்
பாரியும் மட்டுமே மீதம் உள்ளோம். நீங்கள் பரிசிலரைப் போல் வந்து பாடினால்
எஞ்சியுள்ள எங்களையும் பறம்பு மலையையும் பெற்றுக் கொள்ளலாம். போரிட்டு
பெற்றுக் கொள்ள பாரி வள்ளலிடம் எங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. பாரி
வள்ளல் இயற்கையாகவே வள்ளல் மனம் கொண்டவர். அவரைப் போன்ற
மாமனிதரைத் தூற்றிப் பேசுவது தவறு முறையுமில்லை. பாரி வள்ளல் இயல்பாகவே
நற்குணம் கொண்டவர் புகழுக்காக எதையும் செய்தது இல்லை.

You might also like