You are on page 1of 8

குறுந்தொகை 31, ஆதிமந்தியார், மருதத் திணை – தலைவி

சொன்னது

மள்ளர் குழீ இய விழவினானும்,

மகளிர் தழீ இய துணங்கையானும்,

யாண்டும் காணேன் மாண்டக்கோனை,

யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த 5

பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.

(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற


காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை
வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும்
இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என்
கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத்
தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல
இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத்
தோழிக்கு வெளிப்படுத்தியது).

மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனை வரர் ீ கூடியுள்ள


சேரி விழாவின் கண்ணும் மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற
துணங்கைக் கூத்தின் கண்ணும் ஆகிய எவ்விடத்தும்
கண்டேனில்லை; யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே;
என் கையில் உள்ள சங்கை அறுத்துச் செய்து விளங்குகின்ற
வளையல்களை நெகிழச் செய்த பெருமை பொருந்திய தலைவனும்
ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே.

முடிபு: மாண் தக்கோனைக் காணேன்; யானும் ஓர் ஆடுகள மகள்;


குரிசிலும் ஓர் ஆடுகள மகன்.

கருத்து: என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உளன்.


45. மருதம் - தோழி கூற்று
45. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். இவரது இயற்பெயர் வங்கன். இவர்


சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால்
ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில்
ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45),
நற்றிணையில் மூன்று பாடல்களும் (230, 330, 400), புறநானூற்றில்
ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வட்டுக்குச்



சென்ற தலைவன் மீ ண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான்.
ஆகவே, ஒரு பாணனைத் தலைவியிடம் தூதுவனாக அனுப்புகிறான்.
தலைவியும் தோழியும் உரையாடிக்கொண்டிருக்கும் இடத்திற்குத்
தூதுவன் வருகிறான். தலைவன் மீ ண்டும் வரவிரும்புகிறான் என்று
தூதுவன் கூறியதைக் கேட்ட தலைவி, தலைவன் வருவதற்குச்
சம்மதிக்கிறாள். தலைவன் எவ்வளவு கொடுமைகளைச் செய்தாலும்
அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு தலைவன் வரவுக்குத் தலைவி
உடன்பட்டதைக் கண்டு தோழி வியக்கிறாள்.

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி


வாலிழை மகளிர்த் தழீ இய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.

அருஞ்சொற்பொருள்: கடு = விரைவு; வால் = மிகுதி; தழீ இய = தழுவ;


மல்லல் = வளமை; எல் = ஒளி, பெருமை; மறுவரல் = மயக்கம், கலக்கம்;
தெறு = துன்பம் ; திணை = குடி.

உரை: காலையில் எழுந்து, விரைந்து செல்லும் குதிரைகளைத் தேரில்


பூட்டி, மிகுந்த அணிகலன்களை அணிந்த பரத்தையரைத், தழுவும்
பொருட்டு, வளமை பொருந்திய ஊரையுடைய தலைவன் சென்றான்.
அவன், மிகுந்த பெருமைக்குரியவன். அவன் மீ ண்டும் தன்னிடம் வந்தால்
அவனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்றெண்ணி, சிறுவனைப்
பெற்ற தலைவி மனம் கலக்கம் அடைகிறாள். தலைவியின் மனம்
கலங்கக்கூடிய செயலைத் தலைவன் செய்தாலும் அதனை மறந்து
அவனைத் தலைவி ஏற்றுக்கொள்வது துன்பத்திற்குரியதாயினும் அஃது
இந்தக் குடியிற் பிறந்தவர் செய்யும் செயல் போலும்.

விளக்கம்: ”வாலிழை மகளிர்” என்றது மிகுந்த அளவில் அணிகலன்களை


அணிந்து, இயற்கை அழகால் அன்றி, அவர்கள் அணிந்திருக்கும்
அனிகலன்களின் அழகால் ஆண்களை மயக்கும் பரத்தையரைக்
குறிக்கிறது. உயர்ந்த குடியிற் பிறந்த கற்புடைய மகளிர் தம் தலைவர்
கொடுமை புரிந்தாலும் அதனை மறந்து அன்பு பாராட்டுதல் அக்குடிப்
பிறப்பிற்குரிய இயல்பு என்னும் கருத்து குறுந்தொகைப் பாடல்கள் 9
மற்றும் 10 ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

75. மருதம் - தலைவி கூற்று


75. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: படுமரத்து மோசிகீ ரனார். இவரைப் பற்றிய செய்திகளைப்


பாடல் 33 – இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு
வாழ்ந்துவந்தான். ஒருநாள், பாணன் ஒருவன் தலைவியிடம் வந்து,
தலைவன் அவளுடைய இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகக்
கூறினான். அந்தச் செய்தியைக் கேட்ட த் தலைவி பெருமகிழ்ச்சி
அடைந்தாலும், அந்தச் செய்தி உண்மைதானா என்பதைத் தெளிவாகத்
தெரிந்துகொள்ள விரும்புகிறாள்.

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ


ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

அருஞ்சொற்பொருள்: ஒன்று = உண்மை; தெளிதல் = அறிதல்; நசை =


விருப்பம்; சோணை – பாடலிபுத்திரம் என்னும் ஊருக்கு அருகே இருந்த
ஒரு ஆறு; படிதல் = மூழ்குதல், குளித்தல், அனுபவித்தல்; மலிதல் =
மிகுதல்; பாடலி = பாடலிபுத்திரம் என்னும் நகரம். பெறீஇயர் =
பெறுவாயாக.

உரை: பாண, என் கணவர் வருவதை, நீயே உன் கண்ணால் கண்டாயோ?


அல்லது அவர் வரவைக் கண்டவர்களிடமிருந்து கேட்டறிந்தாயோ?
பிறரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாயானால், யாரிடமிருந்து
தெரிந்துகொண்டாய்? நாங்கள் உண்மையை அறிய விரும்புகிறோம். நீ
சொல்வாயாக; சொன்னால், வெண்மையான கொம்பையுடைய
யானைகள் சோணையாற்றில் மூழ்கி விளையாடும், பொன்மிகுந்த
பாடலிபுத்திர நகரத்தைப் பெறுவாயாக.

விளக்கம்: போருக்குச் சென்ற தலைவன் பாசறையிலிருக்கும் காலத்தில்


பாணனைத் தலைவி தூது விடுதலும், தலைவனும் பாணனைத்
தலைவியிடம் தூது விடுதலும் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் 477, 478
மற்றும் 479 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அது ஒருமரபாக
இருந்ததாகவும் , உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில்
கூறியுள்ளார். அவ்வாறு, தூது சென்ற பாணன், தலைவன் வரவைக்
கூறியதால் தலைவி அவனை வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சோணை என்பது ஒரு ஆறு. அந்த ஆற்றின் வடகரையில், பழங்காலத்தில்


மகத நாட்டின் தலைநகரமாக இருந்த பாடலிபுத்திரம் என்னும் நகரம்
இருந்ததாகத் தெரிகிறது. பாடலிபுத்திரம் பாடலி என்று அழைக்கப்பட்டதும்
அது பொன்னால் சிறப்படைந்திருந்ததும் அகநாநானூறு மற்றும்
பெருங்கதை ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக உ. வே. சாமிநாத
ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

தலைவி "பாடலிபெறீஇயர்" என்று கூறியது அவள் பாணனைப்


பெருஞ்செல்வம் பெறுவாயாக என்று வாழ்த்தியதைக் குறிக்கிறது.

தலைவனுடைய வரவைத் தலைவி பலகாலமாக எதிர்பார்த்து,அவன்


வராததால் ஏமாற்றம் அடைந்திருந்ததால், தலைவன் வருகிறான் என்று
பாணன் சொன்னதை நம்ப முடியாமல், ”நீ கண்டனையோ?, கண்டார்க்
கேட்டனையோ?, யார்வாய்க் கேட்டனையோ? ” என்று கேட்டுத்
தெளிவுபெற விரும்புகிறாள். இவ்வாறு அவள் பலமுறை கேட்பது
கணவன் வரவில் அவளுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது,
மொழிமோ என்பதில், மோ என்பது முன்னிலை அசை.

93. தலைவி கூற்று


93. தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப்


பாடல் 32 – இல் காணலாம்.
தினை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையரோடு சிலகாலம் வாழ்ந்து,
இப்பொழுது மனைவியோடு இல்லறத்தைத் தொடர்வதற்காக
வந்திருக்கிறான். தலைவி மிகுந்த கோபத்தோடு இருக்கிறாள். “அவர்
உன்மீ து மிகுந்த அன்புடையவர். அவரை ஏற்றுக்கொள். வேண்டுமானால்,
கொஞ்சம் ஊடல் செய்து, அதன் பிறகு அவரை ஏற்றுக்கொள்.” என்று
தோழி தலைவியிடம் தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள்.“ ”அவருக்காக
நீ என்னிடம் பரிந்து பேசாதே. எனக்கு அவர்மீ து கோபம்தான் உள்ளதே
தவிர காதல் இல்லை. நான் ஏன் அவரோடு ஊட வேண்டும்?” என்று கூறித்
தலைவி தன் கணவனை ஏற்க மறுக்கிறாள்.

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்


இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.

கொண்டுகூட்டு: தோழி! நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர்


கழியினும் உரையல் ! அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ?
அன்பிலங் கடையே புலவி அஃது எவனோ?

அருஞ்சொற்பொருள்: நன்னலம் = பெண்மை நலம்; தொலைதல் =


கெடுதல்; சாய்தல் = மெலிதல்; கழிதல் = நீங்குதல்; உரையல் =
சொல்லாதே; அத்தன் = தந்தை; புலவி = ஊடல்; கடை = இடம்.
உரை: தோழி, என்னுடைய நல்ல பெண்மை நலம் கெட்டு, உடலழகு
மிகவும் மெலிந்து என் இனிய உயிரே போனாலும் அவரைப் பற்றிப்
பரிவான சொற்களை என்னிடம் சொல்லாதே. என் கணவரை நான்
என்னுடைய தாயைப் போலவும் தந்தையைப் போலவும் மதிக்கிறேன்.
ஆனால், ஒருமனைவிக்கு கணவனிடத்தில் இருக்க வேண்டிய அன்பு (காம
உணர்வு) எனக்கு அவரிடம் இல்லாததால் அவரோடு நான் ஏன் ஊட
வேண்டும்?
சிறப்புக் குறிப்பு: தலைவனிடத்தில் தலைவிக்குக் கோபம் மட்டுமே
உள்ளது. தன் பெற்றோரிடம் மரியாதை உடையவளாக இருப்பதுபோல்
அவனிடமும் பழக விரும்புகிறாள். அவன் அவளைவிட்டுப் பிரிந்து
பரத்தையரோடு வாழ்ந்ததால் அவள் அவன்மீ து கோபமாக இருக்கிறாள்.
“என் கணவரிடம் எனக்குக் காமம் இருந்தால்தானே ஊடவேண்டும் என்ற
எண்ணம் எனக்குத் தோன்றும். எனக்குத்தான் அவரோடு கூட வேண்டும்
என்ற விருப்பமே இல்லயே. நான் ஏன் அவரோடு ஊடவேண்டும்? ” என்று
தலைவி எண்ணுகிறாள்.

நீரும் நிழலது இனிதே; புலவியும்


வழுநர்
ீ கண்ணே இனிது. (குறள் – 1308)

என்ற குறளும்,

ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம்


கூடி முயங்கப் பெறின். (குறள் 1330)

என்ற குறளும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கவை.

354.
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை நோக்கி, “நீ
எம்மைவிரும்பாயாயின் எம்மை எம் தந்தையின் வட்டிற்கு

அழைத்துச் செல்வாயாக” என்று கூறும் வாயிலாகத் தோழி வாயில்
மறுத்தது.)
நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும்
புளிக்கும்
தணந்தனை யாயினெம்
இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை
எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில் 5

நடுங்கஞர் எவ்வம் களைந்த


எம்மே.

- கயத்தூர்கிழார்.

நீரின் கண் நெடுநேரம் விளையாடினால் கண்களும் செந்நிறத்தை


அடையும்; பன்முறை உண்டோரது வாயினிடத்தே தேனும்
புளிப்பையுடைய தாகும்; ஆதலின் நீ எம்மைப் பிரிவை யாயின்
அழகிய தண்ணிய பொய்கையையுடைய எம் தந்தையினது
எம்ஊரின்கண்ணே நஞ்சின்கடுமையையுடைய பாம்புகள் ஓடும்
தெருவில் நீ முன்பு நடுங்குதற்குரிய மிக்க துன்பத்தை நீக்கிய
எம்மை எம்முடைய வட்டிற்கு
ீ அழைத்துச் சென்று விடுவாயாக.

முடிபு: நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; தேனும்


புளிக்கும்;தணந்தனையாயின் எம்மை எம் இல் உய்த்துக்
கொடுமோ.

கருத்து: எம்மை எம் தந்தையின் வட்டிற்கு


ீ அழைத்துச்
செல்வாயாக.

You might also like