You are on page 1of 3

காதல்

தலைவியைக் காண்பதற்காககத் தலைவன் வருகிறான். ஆனால் தலைவிக்குப் பதிலாகத் தோழி


வந்திருக்கிறாள்.

தலைவன் - தலைவி என்னைக் காண வரவில்லையா

தோழி - தலைவி இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள்

தலைவன் - தலைவியைக் காண காத்திருந்து எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருப்பினும், என்னுடைய


காதல் உண்மையானது.தலைவி என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நான் மடலேறுவேன். நான்
மடலேறினால் அதனால் எங்கள் இருவருக்கும் பழி வரும். தலைவியைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால்
ஊரில் உள்ளவர்கள் எங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதனால் எங்களுக்குப் பழி வரும்.

தோழி - உம்முடைய காத்திருப்பு நிச்சயம் வீண் போகாது. விரைவில் தலைவி உன்னிடம் வந்து சேர
இறைவன் துணை புரியட்டும்.

நட்பு

சேர, சோழ, பாண்டியன்: தென்னாட்டை நாங்களே ஆழ்வோம். யார் அந்த பாரி? எங்களிடம் மோதி
வென்றுவிடுவானா? அவனை ஒரு கை பார்த்துவிடுகிறோம்.

கபிலர்: பாரி உங்களைப் போல் இயல்பான மன்னனல்ல. அவர் வள்ளல். மக்களின் மனதில்
நிறைந்துள்ளவர். அவரை நீங்கள் மூவர் மட்டுமல்ல. உலகில் எவர் வந்தாலும் வெல்ல முடியாது.
ஏனெனில் அவரிடம் இருப்பதே அவர் மக்களும் அவர் குடியிருக்கும் இந்த பரம்பு மலையும் தான்.
அவரிடம் இருந்த முன்னூறு ஊர்களையும் மக்களுக்குக் கொடுத்து விட்டார்.

சேர சோழ பாண்டியன்: ஓ....அப்படியா? கத்தியால் வெல்ல முடியாவிட்டாலும் புத்தியால் அந்த


பாரியை வெல்லலாம் அல்லவா.

சேர, சோழ, பாண்டியன் சூழ்ச்சி செய்து தன்னைக் கொல்ல போவதை பாரி உணர்ந்தார்.

பாரி: கபிலரே… என் இறுதிக்காலம் நெருங்கி விட்டதை நான் அறிவேன். இதோ என் உயிருக்கு
நிகரான செல்வகுமாரிகளான அங்கவை சங்கவையை என் உயிர் போன பிறகு நீ வளர்த்து ஆளாக்கு.
அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவது என் உயிர் நண்பரான உங்கள்
பொறுப்பாகும் கபிலரே.

கபிலர்: நம் நட்பின் அடையாளமாக இவ்வாக்கைக் காப்பாற்றுவேன்


கொடை
சூழல்: கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் சிறந்த வள்ளல் மட்டும் அல்ல; பெரு வீரன்.
புலவர்களிடையே இருந்து இனிதே பொழுது போக்குபவன். எதைச் செய்தாலும் அதில் ஈடுபட்டு
ஒருமை மனத்தோடு செயல் செய்யும் இயல்புடையவன். சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத்
தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர்.. இப்போது அதியமான் கோட்டை தகடூரில்
உள்ளது. அக்கோட்டை பார்ப்பதற்குப் பெரிதாகவும் அதே சமயம் பிரமாண்டமாகவும் இருக்கும். அங்கு
நடந்த காட்சி இதோ…

ஔவையார்: கொடைகளின் வள்ளலே தாங்கள் நலமாக இருக்கின்றீரா?

அதியமான்: உங்களைக் கண்டதில் எனக்கு என்னுடைய நாள் சிறப்பாகவும் நலமாகவும் இருக்குமே!

ஔவையார்: அப்படியா மகிழ்ச்சி… இருப்பினும் எனக்கு தங்களிடம் இருந்து ஒன்றை


எதிர்ப்பார்க்கின்றேன்…

அதியமான்: என்ன வேண்டும்? மற்ற புலவர்களுக்கே சிறப்பாக எதேனும் கொடுப்பதைக்


கடைப்பிடிப்பவன் நான். உங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் கூடுதலாகக் கொடுக்க வேண்டுமே..

ஔவையார்: அப்படியென்றால் எனக்கு தங்களிடமிருந்து பரிசு வேண்டுமே..

அதியமான்: பரிசா? எல்லோருக்கும் பரிசு தருவதை வழக்கமாக வைத்திருப்பவன் நான். ஆகையால்,


இது பெரிய சிக்கல் இல்லை..

ஔவையார்: சிறப்பு மிக சிறப்பு.. எப்பொழுது எனக்கானப் பரிசை வாங்கிக்கொள்ளலாம்?

அதியமான்: இப்பொழுதே சிறந்த பரிசை என்னால் கொடுக்க முடியும்.. இருப்பினும் நாளை


கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..
ஔவையார்: சரி நாளை வருகிறேன் அதியமான்..

சூழல்: மறுநாள் தனக்கான பரிசை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அரண்மனையைவிட்டு கிளம்பினார்..

அதியமான்: வாருங்கள் ஔவையார் அவர்களே.. உங்களுக்கானப் பரிசை என்னிடமிருந்து பெறுவதில்


இவ்வளவு ஆர்வமா?

ஔவையார்: நிச்சயமாக இருக்காதா? கடையெழு வள்ளல்களில் சிறந்தவர் நீர்.. உங்களீடமிருந்து


பெறுவதற்கு ஆர்வம், ஆசை எல்லாம் கண்டிப்பாக இருக்கும்..

அதியமான்: ஆச்சரியமாக இருக்கிறது.. ஆயினும், உங்களுக்கான பரிசை இன்னும் தயார்நிலையில்


இல்லையே…

ஔவையார்: அதாவது நாளை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுதானே மறைமுகமாக


கூறுகிறீர்களா?
அதியமான்: அவ்வாறு இல்லை. இருப்பினும் என்ன செய்வது?

ஔவையார் மிகுந்த ஏமாற்றத்துடன் அரண்மனையிலிருந்து புறப்பட்டார்..

ஔவையார்: எனக்கான பரிசு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்விதான் என்னுள்


ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆனால், எனக்கு தெரியும் தாமதம் என்பது சிறப்பானதற்கு வழிவகுக்கும்.
ஏனெனில், யானை தன் கொம்புகளிடையே வைத்திருக்கும் உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது
போல் தாமதமானாலும் நிச்சயம் அதியமான் பரிசளிப்பான் என்ற நம்பிக்கை இருக்கின்றது..

இவ்வாறு தன்னை சமாதானபடுத்திக்கொண்டு தனக்கானப் பரிசை மறுநாள் கிடைக்குமென்று தன்


இருப்பிடத்தை நோக்கி அடி வைத்தார்.

You might also like