You are on page 1of 1

அச்சு, மின்னியல் ஊடகங்கள்வழி பகிரப்படும் தகவல்களால் தமிழ்க் கல்விக்கு ஏற்படும்

நன்மை, தீமைகள்

அச்சு, மின்னியல் ஊடகங்கள்வழி பகிரப்படும் தகவல்கள் தமிழ்க் கல்விக்கு ஏற்படும்


நன்மை என்று பார்த்தோமானால் இன்றைய நவீன காலத்தில் தகவல்கள் யாவும் மின்னியல்
ஊடங்கள்வழியே அதிக அளவில் பகிரப்படுகின்றது. அப்படி இருக்கையில் தமிழ் சார்ந்த
தகவல்கள் புலனம், வலையொலி போன்ற மின்னியல் ஊடகங்களின்வழி
பகிரப்படுவதன்வழி தமிழ்மொழி உலக அளவில் வளர்க்கப்படுகின்றது. அச்சு, மின்னியல்
ஊடங்களில் தமிழ்மொழி அல்லது தமிழ்க் கல்வி தொடர்பான தகவல்கள் பகிரப்படுகின்றன.
தமிழ்மொழி எவ்வாறு வளர்கின்றது என்று பார்க்கும்மொழுது அச்சு, மின்னியல்
ஊடங்களில் தமிழ்மொழி படைப்புகள் வெளியிடப்படுகின்றன. இன்றைய காலத்தில் கவிதை,
சிறுகதை, நாவல் போன்ற தமிழ் இலக்கிய படைப்புகள் அச்சில் மட்டும் வெளியிடப்படாமல்
மின்னியலிலும், மின்நூல்களாகவும் தொகுப்புகளாகவும் வெளியிடப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, மின்னியலில் அதாவது இயங்கலையில் தமிழ் இலக்கிய போட்டிகள்
நடத்துவதோடு அதனை உலக மக்களுக்குத் தெரிவிக்க அச்சு, மின்னியல் ஊடகங்கள்
உதவுகின்றன. இத்தகைய போட்டிகளும் படைப்புகளும் உலக மக்களுக்குக் கொண்டு
சேர்க்க அச்சு, மின்னியல் ஊடகங்கள் உதவுவதால் தமிழ்க் கல்வி உலக அரங்கில் செழித்து
வளர்கின்றது.

அதே வேளையில், அச்சு, மின்னியல் ஊடகங்கள்வழி பகிரப்படும் தகவல்களால்


தமிழ்க் கல்விக்குத் தீமைகளும் ஏற்படுகின்றன. தீமைகள் என்று பார்த்தோமானால் சில
சமயங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. இன்றைய காலத்தில்
தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்ந்துவிட்டது. இருப்பினும், சிலர் இன்றுவரை
தமிழ்ப்பள்ளிகளின் தரங்களைப் பற்றி குறை சொல்லித் தவறான தகவல்கள்
பகிரப்படுவதன்வழி தமிழ்க் கல்வி உயர்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. தவறான தகவல்களை
வாசிக்கும் வாசகர்கள், தமிழ்ப்பள்ளியின் தரத்தில் தயக்கம் கொண்டு தேசிய பள்ளி, சீன
பள்ளிகளக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்பிவிடுகின்றனர்.

ஆக, அனைத்து தரப்பினரும் அச்சு, மின்னியல் ஊடங்களில் தமிழ்மொழி,


தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த உண்மையான தகவல்கள் பகிர்வது அவசியம். இதன்வழி, தமிழ்க்
கல்வியை வரும் தலைமுறையினருக்கு அழியாமல் கொண்டு சேர்க்க முடியும்.

You might also like