You are on page 1of 2

பள்ளிக்கூடங்கள் ஆகிவிட்டன கைபேசிகள்

தாய் போற்றி ! தாய் தந்த தமிழே போற்றி! வணக்கம். என் பெயர்


________________________________. நான் தேசிய வகை சிம்பாங் லீமா
தமிழ்ப்பள்ளியில் பயில்கிறேன். நான் ________________ அகவை எய்திய
மாணவன் / மாணவி ஆவேன். அன்பிற்கினிய நடுவர்களே, இன்று நான்
உங்கள் முன் பள்ளிக்கூடங்கள் ஆகிவிட்டன கைபேசிகள் என்ற தலைப்பில்
எனது கருத்துகளைப் பறைசாற்ற வந்துள்ளேன்.

கொரோனா பெருந்தொற்று இன்று உலகையே தன் காலடியில் போட்டு


துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. இக்காலகட்டத்தில் அனைத்து
துறைகளும் முடங்கிக் கிடக்கின்றன என்றால் அது மிகையில்லை.
கல்வித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. நம் நாட்டில் பெருந்தொற்று
ஆரம்பித்தது முதல் நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறவா
நெடுங்கதவாய் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிலேயே முடங்க
வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. மாணவர்களின் கல்வி பெரும்
கேள்விகுறியாகி விட்டது. இதற்கு ஒரே தீர்வு இணயவழிக் கல்வி. இந்த
இணையவழிக் கல்வியில் கைபேசி பெரும் பங்காற்றுகிறது என்றுரைத்தால்
அது மிகையில்லை. நீர் இல்லா நெற்றி பாழ் என்பது முதுமொழி . கைபேசி
இல்லாதான் வாழ்வே பாழ் என்பது புது மொழி. அந்த அளவிற்கு
கைபேசியின் பயன்பாடு இன்று எல்லாத் துறைகளிலும் ஊடுருவியுள்ளது.
அவற்றுள் கல்வித்துறையும் ஒன்றாகும். இன்று மாணவ்ர்கள்
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் கல்வி பயில கைபேசியே உறுதுணயாக
இருக்கின்றது.

இந்தக் கைபேசியானது ஆசிரியர்களுக்கும் மாணவர்க்கும் ஊடே ஓர்


இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது. ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு விட்டுப் போகாமல் இருக்க
துணைபுரிகிறது. மாணவன் வீட்டிலிருந்தபடியே தன் சந்தேகங்களை
ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் வகை செய்கிறது. இஃது
இருவருக்குமிடையிலான உறவை வலுவடையச் செய்கிறது.

பாடங்கள் மட்டுமின்றி இணைப்பாடங்களும் இக்காலகட்டத்தில்


இணையவழி பயிற்றுவிக்கப்படுகின்றன. அவற்றையும் மாணவர்
கைபேசியின் துணை கொண்டே பயில்கின்றனர். மேலும், பள்ளி , மாநில
,தேசிய அளவிலான பல போட்டிகள் இவ்வேளையில் நடத்தப்படுகின்றன .
அதற்கான விதிமுறைகளும் விவரங்களும் கைபேசியில் புலனத்தின்
வாயிலாக மாணவர்க்குப் பகிரப்படுகின்றன. அப்போட்டிகளுக்கு
மாணவர்களை ஆயத்தப்படுத்தும் அனைத்து செயல்பாடுகளும்
கைபேசியின் மூலமாகவே நடைபெறுகின்றன. இதற்குச் சான்றாக
விளங்குவது இந்த மாணவர் முழக்கம் என்றால் இல்லை என்று மறுப்போர்
எவரும் உளரோ?

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்; ஓடமும் ஒரு நாள் வண்டியில்


ஏறும் , என்ற படல் வரிகளுக்கு ஏற்ப பள்ளிக்கூடத்தில் கைபேசி என்பது போய்
இன்று பள்ளிக்கூடங்கள் ஆகிவிட்டன கைபேசிகள் என்று கூறி எனது
உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

You might also like