You are on page 1of 3

வெளிநாட்டில் கல்வி பயில்வதால் ஏற்படும் விளைவுகள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

என்பது பொய்யா மொழிப் புலவரின் கூற்றாகும். கற்றவர்கள், கண்ணுள்ளவர்கள் எனச் சொல்ல


தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகிறது என்பதற்கேற்ப
வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டில் எங்கிருந்தாலும் மாணவர்கள் கல்வி பயில வேண்டும்.
ஏனெனில் அவை மிகவும் அத்தியாவசியமானதாகும். சில மாணவர்கள் எஸ்.பி.எம் அல்லது
எஸ்.டி.பி.எம் சோதனையில் மிகச் சிறப்பான தேர்ச்சி பெறுவதால் வெளிநாட்டில் கல்வி பயில
அரசாங்கத்தின் உதவியுடன் வாய்ப்பு கிட்டும். இவ்வாறு, மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி
பயில்வதால் பல விளைவுகள் விளையவே செய்கின்றன.

முதலாவதாக, மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்வதால் அவர்களுக்கு கிடைக்கும்


நன்மை யாதெனில் உயர்தரக் கல்வியைப் பெறலாம். ஏனெனில், வெளிநாட்டில் இருக்கும் கல்லூரி
அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வியில் புகழ்பெற்ற முனைவர்கள் மாணவர்களுக்குக் கல்வி
போதிப்பர். அதுமட்டுமின்றி, அங்குக் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் உள்நாட்டை ஒப்பிடும்போது
வேறுபட்டிருக்கும். உதாரணத்திற்கு, மாணவர்கள் புத்தகங்கள் எடுத்துவர தேவை இருக்காது ஏனெனில்
அவர்கள் திறன்பேசி, மடிக்கணினி போன்ற நவன
ீ தொழில் நுட்ப சாதனங்களை எடுத்து வந்து ;
ஆசிரியர்கள் போதிக்கும் பொழுது குறிப்பு அல்லது காணொலியை எடுத்துக் கொள்ளலாம். இதனால்,
மாணவர்கள் பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல எளிதாக பாடங்களை மீ ள்பார்வை செய்து
கொள்ளலாம்.பின்னர்,மாணவர்களுக்காக ஆலலை,விண்ணோக்கி, அருகலை மற்றும் அச்சுப்பொறி
போன்றவற்றை ஏற்பாடு செய்து வைத்திருப்பர். இவை மாணவர்களுக்குத் தேவையான நேரங்களில்
கை கொடுக்கும். அதுமட்டுமின்றி, கல்வியில் புலமை பெற மாணவர்களுக்காக பிரத்தியேக வகுப்புகள்
நடைபெறும் மற்றும் பல பயிற்சிகளைக் கொடுத்து அவர்களுக்கு ஆசிரியர்கள்
உதவுவர்.பின்,மாணவர்களின் எதிர்காலத்தின் மீ து அக்கறை செலுத்தி ஆசிரியர்கள் மெழுகுவர்த்தியைப்
போல தங்களின் பங்களிப்பை முழுமனதுடன் கொடுப்பார்கள். இதன்வழி, மாணவர்கள் தங்களின்
கல்வி ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக,மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்வதால் அவர்களின் தன்னம்பிக்கை மிகும்.


ஏனெனில், மாணவர்கள் சுயமாக எல்லா வேலைகளையும் செய்ய பழகிக் கொள்வர். இவ்வாறானது,
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கேற்ப மாணவர்கள் இளமையில் கைக்கொள்ளும் இந்தப்
பழக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் இருந்து வரும். உதாரணத்திற்கு, உள்நாட்டில் கல்வி
பயிலும் மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் படிப்புச் செலவுகளுக்காக பெற்றோர்களை
எதிர்பார்த்து வாழ்வர். ஆனால், வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் பெற்றோர்களுடன் தொடர்பு
கொள்வதற்கே சிரமப்படுவர் ஆதலால், அவர்கள் பகுதி நேரத்தில் வேலைக்குச் செல்வர். இதன் மூலம்,
கிடைக்கும் பணத்தை வைத்து தங்களின் படிப்பு செலவுக்குப் பயன்படுத்திக் கொள்வர் அதனூடே
தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்வர். இவ்வாறு மாணவர்கள் பழகிக் கொள்வதால்
பிற்காலத்தில் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் கூட அவற்றை சுய காலில் எதிர்
நோக்குவர் மற்றும் அதற்கேற்ப வழியை யோசித்து அவற்றைத் தாமாகவே தீர்த்தும் கொள்வார்.
எனவே, 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்று ஒவ்வையாரின்
கூற்றுக்கு ஏற்ப எவ்வளவு கஷ்டங்கள் அல்லது பிச்சை எடுக்கும் நிலைமை வந்தாலும் கூட
மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.

மூன்றாவதாக, மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்வதால் அவர்களுக்கு நல்ல வேலை


வாய்ப்புக் கிட்டும். ஏனெனில், மாணவர்கள் அங்குப் படித்து பட்டம் பெற்ற பின்; உலக அங்கீ காரச்
சான்றிதழைப் பெறுவர். இச்சான்றிதழை வைத்து அவர்கள் வேலை வாய்ப்பினை தேட போகலாம்
மற்றும் உயர்தர வேலையையும் பெறலாம். மேலும், நல்ல வேலை வாய்ப்புக் கிடைத்தால் சம்பளம்
அதிகமாக கிடைக்கும். இதன் மூலம், தமது தேவைகளையும் அத்தியாவசியத்தையும் பூர்த்தி
செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, நல்ல சம்பளம் பெற்றால் ஆடம்பரமான பொருட்கள் மற்றும்
சொந்த வடு,
ீ வாகனம் போன்றவற்றை வாங்கி தமது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம். எனவே,
தூண்டில் காரனுக்குத் தக்கை மேல் கண் இருப்பது போல மாணவர்கள் நன்றாகப் படித்து நல்ல
வேலை வாய்ப்பு கிடைப்பதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து, ஒரு நாணயத்தில் இரு பக்கங்கள் இருப்பது போல மாணவர்கள் வெளிநாட்டில்


கல்வி பயில்வதால் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. அதாவது, தீமைகள் யாதெனில் மாணவர்கள்
தங்களின் சொந்த கலை மற்றும் கலாச்சாரத்தை மறந்து விடுகின்றனர். எடுத்துக்காட்டாக, தங்களின்
கலை கலாச்சாரத்தைச் சார்ந்த உணவு, உடை மற்றும் பழக்க வழக்கங்கள் அனைத்திலுமே
மேற்கத்திய மோகத்தைத் திணித்துக் கடைபிடிக்கின்றனர். இதுமட்டுமா, ஒரு சில மாணவர்கள் கூடா
நட்பால் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். உதாரணத்திற்கு, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும்
போதை மருந்து உட்கொள்ளுதல் இதனுள் அடங்கும். மாலுமி இல்லாத கப்பல் போல மாணவர்களுக்கு
முறையான வழிகாட்டல் இல்லாததால் இவற்றை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான
பிரச்சினையைக் களைய மாணவர்களுக்கு நல்ல நண்பன் தேவை ஏனெனில்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்பதற்கேற்ப ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டுமல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர்
குற்றம் செய்யும்போது அதை எடுத்துக் காட்டி எடுத்துக்கூறி தீமையை விளக்குவதே ஆகும் என்பது
திருவள்ளுவரின் கூற்றாகும். இதனால், மாணவர்கள் தங்களின் கலை கலாச்சாரத்தை மறப்பது மற்றும்
தகாத செயல்களில் ஈடுபடாமல் இருப்பர்.

மேலும், மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்வதால் செலவுகள் அதிகமாக உள்ளன.


உதாரணத்திற்கு, கல்வி செலவு, இருப்பிடம் மற்றும் உணவு போன்ற செலவுகளை ஈடுகட்ட
வேண்டியுள்ளது. மாணவர்கள் பகுதி நேரத்தில் வேலை செய்து இவ்வாறான செலவுகளைக்
கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடன் வாங்குவதற்கு மற்றும் சொத்தை அடமானம் செய்ய
வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு நிகழ்வதால் மாணவர்கள் வார
இறுதி நாட்களில் கூட முழு நேர வேலைக்குச் செல்கின்றனர். இதனால், மாணவர்களுக்குப்
படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை மற்றும் வேலைப்பளு, அதிக பாடங்கள் மற்றும் நேரத்தைச்
சரியாக வகுக்க முடியாமை போன்ற காரணங்களால் அவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.
எனவே, மனம் உண்டானால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப மாணவர்கள் கல்வியில் சிறந்த
நிலையை அடைவதில் மனமும் கவனமும் முழுமையாகப் பதியுமானால் சவால்களை எதிர்நோக்கும்
வழிமுறைகள் தானாக பிறக்கும்.

இறுதியாக, மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்வதால் நன்மைகளும் தீமைகளும்


விளைகின்றன. ஆனால், தீமைகள் மோசமான சூழ்நிலைகளாக இருந்தாலும் தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியும் இருந்தால் இச்சூழ்நிலைகளை எளிதில் சமாளிக்க முடியும். வெளிநாட்டில் கல்வி
பயில்வதால் மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் பட்டறிவையும் சேர்த்து கொடுக்கின்றது.
மாணவர்கள் பட்டறிவை பெறுவதால் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு


அதாவது உலகப் போக்கு எப்படி இயங்குகிறதோ அந்த உலகத்தோடு பொருந்திய வகையில் தானும்
அதை கடைப்பிடித்து அவ்வாறு நடப்பதற்கான அறிவைக் கொடுக்கும். ஆகையால், மாணவர்களுக்கு
வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கேற்ப
வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ;நழுவ விடக்கூடாது. அதே
சமயம், ஒழுக்கம் , குறிக்கோள் போன்ற நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதிக்க முயல
வேண்டும்.

You might also like