You are on page 1of 6

மாணவர்களிடையே கைப்பேசி பயன்படுத்துவதால்

ஏற்படும் விளைவுகள்

எங்கும் கைப்பேசி, எதிலும் கைப்பேசி. ஆம், கைப்பேசிப் பயன்படுத்தாதவர்களே


இல்லை என்றால் அது மிகையில்லை. இளம் வயது குழந்தை முதல் பல் போன
தாத்தா வரை அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது கைப்பேசி. கைப்பேசிப்
பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகளைக் காண்போம்.

டெலிப்போன் மணிபோல் சிரிப்பவள் இவளே என்ற பாடலைக் கேட்கும்


போது நம் நினைவுக்கு வருவது கைப்பேசியே. இக்காலத்தில் கைப்பேசி
இல்லாதவர்களே இல்லை எனலாம். இனி, கைப்பேசிப் பயன்படுத்துவதால்
மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகளைக் காண்போம்.

கைக்கு அடக்கமாக இருப்பது கைப்பேசி. அதனால், பெரும்பலோர் அதை


எங்குச் சென்றாலும் ஏந்தி செல்கின்றனர். சிலர் அதைப் பிரிய மனம் இல்லாமல்
அதனுடையே உறங்குகின்றனர். இனி, கைப்பேசிப் பயன்படுத்துவதால்
மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகளைக் காண்போம்.
கைப்பேசி பயன்படுத்துவதால் மாணவர்கள் விரிந்து பரந்து இருக்கும் இந்த
புவியில் தங்களுக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன்
சுலபமாகத் தொடர்பு கொள்ளலாம். இதனால், உறவினர்களை நேரில்
சந்தித்துதான் உரையாடமுடியும் என்ற நிலை மாறி விட்டது. மேலும்,
எந்நேரத்திலும் நண்பர்களுடன் பாடம் தொடர்பாகவும் நட்பு ரீதியாகவும்
கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழல் உள்ளது. இது
மன அழுத்தமின்றி வாழ வழி வகுக்கிறது.
விரல் நுனியில் தேவையான தகவல்களை உடனுக்குடன்
சேகரித்துக் கொள்ள கைப்பேசி மாணவர்களுக்கு உதவுகிறது.
கைப்பேசியில் உள்ள இணையச் சேவை வழி மாணவர்கள்
தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை கூகுளில் தட்டச்சுச் செய்து
களைந்து விட முடிகிறது. இதனால், கல்வியில் அவர்கள் சிறந்து
விளங்கவும் இது ஒரு சிறந்த கருவியாக அமைகிறது.
மாணவர்கள் கைப்பேசிப் பயன்படுத்துவதால் அவர்களுக்குத்
தீய நட்பு ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. தீய நண்பர்களுடன் அளவுக்கு
அதிகமாக உரையாடும் போது தீயப் பழக்கங்கள் மீது மோகம் ஏற்படும்.
இதனால், மாணவர்கள் தகாதச் செயல்களில் ஈடுபட்டு நற்பெயரை இழக்க
நேரிடும். அவர்களின் எதிர்காலமும் பாதிக்கும்.
மாணவர்கள் கைப்பேசிப் பயன்படுத்துவதால் அவர்களின் வாசிப்புப்
பழக்கம் குறைந்து விடுகிறது. வாசிப்பதற்கான நேரத்தை கைப்பேசிப்
பயன்படுத்துவதற்குச் செலவிடுகிறார்கள். இதனால், மாணவர்கள்
மனத்தில் கைப்பேசி மட்டுமே உலகம் என்ற மனபோக்கு உண்டாகிறது.
எனவே, பகுத்தறிவு கொண்ட மாணவர்கள் கடுகளவு ஆன
கைப்பேசியின் தீமைகளை உதறி தள்ளி விட்டு கடல் அளவு ஆன
நன்மைகளை அள்ளி பருகி பயன் அடைய வேண்டும்.

You might also like