You are on page 1of 2

நான் ஒரு கதைப்புத்தகம்

       அந்த மாணவியின் கைகளில் நான் தவழ்ந்து கொண்டிருந்தேன். அவள் ஒவ்வொரு


பக்கமாக என்னைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னைக் கடையிலிருந்து வாங்கிய
நாள் முதல் அவளுக்கு ஓய்வு நேரங்களில் துணையாக நான் மட்டுமே இருந்தேன்.

      மலேசியாவின் தலை சிறந்த எழுத்தாளரான திரு அருணன் அவர்களின் கற்பனையில் நான்
மலர்ந்தேன். நான் சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் எனப் பெயரிடப்பட்டேன்.என்னுடலில்
மொத்தம் 81 பக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

    ஒரு நாள் அக்கடைக்கு ஒரு மாணவி தன் தாத்தாவுடன் வந்திருந்தாள். அவள் அங்குள்ள
புத்தகங்களை எல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னை வைத்த கண்
வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் இவளாவது என்னை வாங்குவாளா என்ற ஏக்கப்
பெருமூச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் என்னை
எடுத்துச் சென்று அவள் தாத்தாவிடம் என்னை வாங்கித் தருமாறு கேட்டாள். அவள் தாத்தாவும்
அதனை வாங்கித் தந்தார்.

      அன்று முதல் அவள் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள். எனக்கு நெகிழி
அட்டையைப் போட்டு என் அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தாள். ஒரு நாள் அவள் என்னைப்
படித்துக் கொண்டிருக்கும் போது அவள் தாயார் அவளை அழைக்கும் ஓசை கேட்டு
சமையலறைக்கு ஓடினாள். அவ்வேளையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவளது
இளைய தங்கை என்னை நோக்கி வந்தாள்.

     என்னைக் கையில் எடுத்து அவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள். அவள் என்னை
என்ன செய்யப் போகிறாளோ என்று என் உள்ளம் படபடத்தது. நான் என் கண்களை இறுக மூடிக்
கொண்டேன். அப்பொழுது யாரோ என்னைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். “கடவுளே!
கடவுளே!” என்று முணுமுணுத்தேன். அப்பொழுது அம்மாணவியின் குரல் கேட்க மெல்ல கண்
திறந்து பார்ததே
் ன். நல்ல வேலை! எந்த அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் அவள் என்னைத்
தன் தங்கையிடமிருந்து காப்பாற்றிவிட்டாள். அன்று முதல் அவள் என்னை எங்கும் தவறவே
விடுவதில்லை. என்னைப் படித்து முடித்ததுமே மறவாமல் கண்ணாடி பேழைக்குள் வைத்துக்
கண்ணை இமை காப்பது போல் காத்து வருகிறாள்.

நான் ஒரு பாடப்புத்தகம்


Raja Segaran / ஓகஸ்ட் 9, 2014

‘அன்று வள்ளுவன் கையிலே நான் ஓர் எழுத்தோலை, இன்று மாணவன் கையிலே நான் ஒரு
பாடப்புத்தகம்” .ஆம், மாணவர்களே! நான்தான் ஒரு பாடப்புத்தகம். வானவில்லின் ஏழு
வர்ணங்கள்தான் என் முகப்பின் அடையாளங்கள்.
நான் நனிச்சிறந்த ஆசிரியர்களின் எழுத்து வண்ணத்தில் உதித்தேன். என்னுடன் பல
உடன்பிறப்புக்கள் பிறந்தனர். மலேசியாவின் பிரபலமிக்க உமாபதிப்பகம் என்னை அச்சடித்தது.
“தமிழ்மொழி ஆறாம் ஆண்டு” என்று தலைப்பிட்டு என்னை வெளியிட்டனர். என் மேல் ரிம.12.00
விலை அச்சடிக்கப்பட்டிருந்தாலும் மலேசியக்கல்விஅமைச்சால் மாணவர்களுக்கு இலவசமாக
வழங்கப்படுவேன் என்பதை அறிந்தேன்.என் உடன்பிறப்புகள் புடைசூழ என்னை கனவுந்தில்
ஏற்றினர். கருவறையில் காத்திருக்கும் சிசுவைப்போல நாங்கள் கனவுந்தில் அடைக்கப்பட்டோம்.
கனவுந்தின் கும்மிருட்டு என்னைக் கலங்கவைத்தது. ஓடிக்கொண்டிருந்த கனவுந்து திடீரென்று
ஓரிடத்தில் நிற்பதை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு பெட்டியாகக் கீழே எங்களை இறக்கி
வைத்தனர். “ஜாசின் தமிழ்பப் ள்ளி” என்று சுவரில் எழுதப்பட்ட எழுத்துகள் என்னைப் பணிவாய்
வரவேற்றன. ஜாசின் தமிழ்ப்பள்ளியின் கம்பீரமான தோற்றம் என்னை
மகிழ்ச்சிப்படுத்தியது.தமிழில் செப்பிக்கொண்டே என்னைப்பதிவேட்டில் பதிந்தார் ஆசிரியை
திருமதி. வாசுகி.
ஒவ்வொரு மாணவரும் வரிசையில் நின்று பாடப்புத்தகங்களை வாங்கிச்சென்றனர். என்
இளம்தேகத்தை ஒரு கரம் பற்றி நிற்பதை உணர்ந்தேன். முத்துபற்கள் பளிச்சென சிரிக்க,
கரங்கள் இரண்டும் என்னைத் தழுவிப்பார்ப்பது ஆறாம் ஆண்டு மாணவியான தமையந்தி
என்பதை உணர்ந்தேன். அவர்தான் என் எஜமான் என்றுபிறகுதான் தெரியவந்தது. என் மேனிக்கு
மேலாடையாக நெகிழி அட்டையை அணிவித்தாள் மாணவி தமையந்தி. தமிழ்மொழி
தருணத்தின்போது என்னை மறவாமல் பயன்படுத்துவாள். என்னுள் இருக்கும்
கதைகள்,கவிதைகள்,தகவல்களைப்படித்து இன்புறுவாள். என் மேனியின் ஏடுகளை வேகமாக
புரட்டும்பொழுது எனக்கு வலி ஏற்படும்.அதனை நான் அவளுக்காகப் பொறுத்துக்கொள்வேன்.
கண்ணின் இமைக்காப்பதுபோல் என்னை அவள் பார்த்துக்கொள்வாள். என் மேனியில் ஒரு
கிறுக்கல்கள்கூட விழாமல் பாதுகாக்கும் அவளின் அன்பு என்னைச் சில வேளைகளில்
கிரங்கடித்துவிடும்.என்னையும் என் எஜமானையும் எவ்வேளையும் பிரித்துவிடாதே இறைவா
என்று நான் இறைஞ்சும் வேளையில்தான் அந்தத் துயரச் செய்தி என் காதுகளுக்கு எட்டியது.
“யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிந்தவுடன் உங்கள் பாடப்புத்தகங்களை என்னிடம்
ஒப்படைத்துவிடவேண்டும்” என்று ஆசிரியை திருமதி. வாசுகியின் கட்டளை என்னை
நிலைகுழையவைத்தது.
ஓராண்டுக்கு மட்டும்தான் என் எஜமான் என்னைக் குத்தகைக்கு வாங்கியுள்ளார்
என்பதைஉணர்ந்தேன் நான். மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டு வாழும்
நோயாளியைப்போல் என் எஜமானின் குத்தகை முடிவுறும் நாட்களை எண்ணிக்கொண்டு
வாழ்கிறேன்.
ஆக்கம்:ஆசிரியை.வி.தாமரை

You might also like