You are on page 1of 4

பள்ளிப்போட்டி விளையாட்டு அறிக்கை

முன்னுரை

 தலைப்பு
 இடம்
 தேதி
 எங்கு
 எப்பொழுது
 அதன் நோக்கம்
 சிறப்பு வருகையாளர்

கருத்து 1

 குழுக்களாகப் பிரித்தல்
 பயிற்சியளித்தல்
 அழைப்பிதல் தயாரித்தல்
 பிரமுகர்களை அழைத்தல்
 திடல் அலங்காரம் ( கொடி )
 கூடாரம் அமைத்தல்

கருத்து 2

 அணிவகுப்பு
 உரை ( தலைமையாசிரியர் )
 உறுதிமொழி
 அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தல்

கருத்து 3

 போட்டித் தொடங்குதல்
 நடைபெற்ற போட்டிகள்
 போட்டிகள் முடிந்த நேரம்
 பரிசளிப்பு
 வெற்றியாளர்கள்
 வெற்றி வாகை சூடிய குழு

முடிவு

 சிற்றுண்டி வழங்குதல்
 முடிந்த நேரம்
 தயாரித்தவர்
 கையொப்பம்
 முழுப்பெயர்
 பதவி
 பள்ளிப் பெயர்
 வலப்பக்கம் அறிக்கை தயாரித்த திகதி

மொழியணி

1. உச்சிக் குளிர்தல்
2. உடலினை உறுதி செய்
3. இலைமறைக் காய் போல
பரிசளிப்பு விழாஅறிக்கை
தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

கடந்த 3.11.2012, திங்கள் கிழமையன்று, பள்ளியின் 15-ஆவது


வருடாந்திர பரிசளிப்பு விழா பள்ளி அளவில் சிறப்பாக
கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு மாலை 6.00 மணியிலிருந்து இரவு 9.00
மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வி பள்ளி
மண்டபத்தில்நடைப்பெற்றது.

இந்தப் பரிசளிப்பு விழா ஆண்டு தோறும்நோக்கம் என்னவென்றால்


கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் மிகச் சிறப்பாக ஈடுபட்டு,
உன்னத நிலையை அடையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு
வழங்குவதே ஆகும்.இவ்விழாவை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள்
செய்யப்பட்டது. மேலும், பரிசளிப்பு விழாவையொட்டி மாணவர்கள்
படைப்புகள் செய்வதற்கு ஆசிரியர்கள் பயிற்சிகள் வழங்கினர்.

இவ்விழாவில் அசகான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ


திரு.ஆர்.பெருமாள் அவர்களும், மாவட்ட கல்வி அதிகாரி
அவர்களும்,தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்
சங்கத் தலைவர் மற்றும் பெற்றோர்களும்சிறப்பு வருகையாளராக
கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசு பெறும்
மாணவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டிருந்தினர்.

முதல் அங்கமாக இறைவாழ்த்து பாடப்பட்டது. விழா தொடக்கத்தில்


பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சரோஜினி அவர்கள்
தலைமையுரை ஆற்றினார். அவர் விழாவிற்கு வருகை தந்திருந்த
அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்து, அசகான் சட்டமன்ற
உறுப்பினரான டத்தோ இரா.பெருமாள் அவர்கள் சிறப்புரை ஆற்றி
நிகழ்வை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

சிறப்புரையைத் தொடர்ந்து,மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்


பெற்றது. இதில் பாடல்களுடன் பல்லின மக்களின் கண்கவர் பாரம்பரிய
நடனங்களும் இடம் பெற்றன. மாநில அளவில் வெற்றி பெற்ற
மாணவர்களின் படைப்புகளான பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள்
மனனப் போட்டியும் இடம்பெற்றன. மாணவர்களின் படைப்புகள்
வந்திருந்தோரின் மனதைக் கவர்ந்தன.

தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. கல்வியில் சிறப்பு தேர்ச்சிப்


பெற்றவர்களுக்கும் விளையாட்டுத் துறையில் வெற்றி
வெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கடந்தாண்டு
தலைமை மாணவருக்கும்,யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டன.
மற்றும் இவ்வாண்டுவட்டார, மாநில, தேசிய அளவில் பள்ளியைப்
பிரதிநிதித்து வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்கும் பரிசுகள்
வழங்கப்பட்டன. எல்லா பரிசுகளையும் அசகான் சட்டமன்ற
உறுப்பினரும் சிறப்பு விருந்தினர்களும் வழங்கினர்.பரிசு பெற்ற
மாணவர்கள் மகிழ்ச்சியாய் காணப்பட்டனர்.

இறுதியில்,  அனைவருக்கும் ஒரு சிறிய விருந்து ஏற்பாடு


செய்யப்பட்டது. இவ்விருந்தில் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஏறக்குறைய இரவு9.00 அளவில் இப்பரிசளிப்பு விழா ஒரு நிறைவை
எய்தியது.விருந்திற்குப் பிறகு அனைவரும் மகிழ்சியுடன் வடு

திரும்பினர்.

அறிக்கை தயாரிப்பு,                                                                                                              
7 நவம்பர் 2012
…………………………
( கவிதன் த/பெ மணிவண்ணன் )
செயலாளர்,
தேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழு
தேசிய வகை தமிழ்ப்பள்ளி பத்தாங் மலாக்கா

You might also like